பெல்லம்கொண்டா சீனிவாஸ்
பெல்லம்கொண்டா சாய் சீனிவாஸ் (Bellamkonda Sai Sreenivas) (பிறப்பு 3 சனவரி 1993) தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றும் ஓர் இந்திய நடிகராவார். திரைப்பட தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷின் மகனான இவர், அல்லுடு சீனு (2014) என்ற அதிரடி நகைச்சுவைத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இது இவருக்கு சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது.
பெல்லம்கொண்டா சீனிவாஸ் | |
---|---|
2016இல் சீனிவாஸ் | |
பிறப்பு | பெல்லம்கொண்டா சாய் சீனிவாஸ் 3 சனவரி 1993[1] குண்டூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா[1] |
கல்வி | Lee Strasberg Theatre and Film Institute |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2014–தற்போது வரை |
பெற்றோர் | பெல்லம்கொண்டா சுரேஷ் |
தொழில்
தொகுசீனிவாஸ், சமந்தா அக்கினேனியும் பிரகாஷ் ராஜும் முக்கிய வேடத்தில் நடிக்க 2014 ஆம் ஆண்டு வெளிவந்த அல்லுடு சீனு என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[2]
அதே ஆண்டில் ரபாசா என்ற படத்தில் தனது தந்தையுடன் இணைந்து தயாரிப்பாளரானார். ஆனால், இப்படம் வணிக ரீதியில் தோல்வியடைந்தது.[3]
2016 ஆம் ஆண்டில், தமிழில் வெற்றி பெற்ற சுந்தரபாண்டியன் படத்தின் தெலுங்கு மறு ஆக்கமான ஸ்பீடூன்னோடு என்ற படத்தில், சொனரிக்கா பாடோரியா, பிரகாஷ் ராஜ் ஆகியோருடன் நடித்திருந்தார். ரகுல் பிரீத் சிங்கின் இணையாக "ஜெய ஜானகி நாயகா" என்ற படத்திலும், பூஜா ஹெக்டேவுடன் "சாக்ஷியம்" என்ற படத்திலும், காஜல் அகர்வால், மெஹ்ரீன் பிர்சாடா ஆகியோருடன் "கவசம்" என்ற படத்திலும், "சீதா" என்ற படத்திலும் மீண்டும் காஜல் அகர்வாலுக்கு இணையாக இவர் நடித்தார்.[4][5][6][7][8] அனுபமா பரமேசுவரனுடன் இணையாக தமிழில் வெளிவந்த ராட்சசனின் தெலுங்கு மறுஆக்கமான "ராக்ஷாசுடு" படத்திலும் நடித்தார். 2021ஆம் ஆண்டில், இவர் நபா நடேஷ், அனு இம்மானுவேல் ஆகியோருடன் "அல்லுடு ஆதர்ஸ்" என்ற படத்தில் நடித்தார்.[9]
நவம்பர் 2020இல், பெல்லம்கொண்டா தெலுங்குத் திரைப்படமான சத்ரபதி (2005) படத்தின் இந்தி மறுஆக்கத்தில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது, இது இவரது பாலிவுட் அறிமுகமாக இருக்கும். வி.வி விநாயக் இப்படத்தின் இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Happy Birthday Bellamkonda Sai Sreenivas: 5 hit films of the actor that should be in everyone's to-watch list". The Times of India (in ஆங்கிலம்). 2020-01-03. பார்க்கப்பட்ட நாள் 2020-11-25.
- ↑ Tamannaah: Alludu Seenu is a fun-filled entertainer | Telugu Movie News.
- ↑ kavirayani, suresh (5 March 2016). "Bellamkonda's office seized!". Deccan Chronicle.
- ↑ Boyapati Srinu: Bellamkonda Srinivas remaking Sundarapandian | Telugu Movie News.
- ↑ kavirayani, suresh (17 June 2017). "Boyapati Srinivas's film is titled Jaya Janaki Nayaka". Deccan Chronicle.
- ↑ "Saakshyam Movie Review {1.5/5}: A real test of patience and endurance of audience" – via timesofindia.indiatimes.com.
- ↑ Dundoo, Sangeetha Devi (7 December 2018). "'Kavacham' review: Masala-laden armour" – via www.thehindu.com.
- ↑ "Sonu Sood all set for a mighty Tollywood comeback with 'Sita' - Times of India". The Times of India.
- ↑ "Rakshashudu review highlights: A gripping thriller - Times of India". The Times of India.
- ↑ "Kiara Advani to star in 'Chatrapathi' Hindi remake". The News Minute.