பெல்லரைவ் ஓவல் அரங்கம்

(பெல்லரைவு ஓவல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெல்லரைவ் ஓவல் (Bellerive Oval), பரவலாக புரவலர் பெயரால் பிளென்டுஇசுடோன் எரீனா (Blundstone Arena), என அறியப்படும் இந்த விளையாட்டரங்கம் ஆஸ்திரேலியாவின் தாசுமேனியாவின் ஹோபார்ட்டின் கிழக்குக் கடலோரத்தில் கிளாரன்சு நகரின் பெல்லரைவ் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ளது; இங்கு முதன்மையாக துடுப்பாட்டம் மற்றும் ஆத்திரேலியக் காற்பந்தாட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. தாசுமேனியாவில் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளை நடத்தும் ஒரே இடமாக இந்த அரங்கம் விளங்குகின்றது. 16,000 பேர் அமரக்கூடிய இந்த அரங்கத்தில் சாதனை வருகைப்பதிவாக 2003ஆம் ஆண்டில் ஆத்திரேலியா, இங்கிலாந்து ஆட்டத்தின்போது 16,719 பேர் கண்டு களித்தனர்.[1][2][3]

பெல்லரைவ் நீள்வட்ட அரங்கம்
பிளன்டுஇசுடோன் எரீனா

ஆத்திரேலியா எதிர் இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், 2005
இடம் பெல்லரைவ், தாசுமேனியா
அமைவு 42°52′38″S 147°22′25″E / 42.87722°S 147.37361°E / -42.87722; 147.37361
எழும்பச்செயல் ஆரம்பம் 1913
திறவு 1914
உரிமையாளர் கிளாரென்சு நகர மன்றம்
ஆளுனர் தாசுமானிய துடுப்பாட்டச் சங்கம் (TCA)
தரை புற்றரை
கட்டிட விலை அறியப்படவில்லை
கட்டிடக்கலைஞர் பல்வேறு
முன்னாள் பெயர்(கள்) இல்லை
குத்தகை அணி(கள்) தாசுமேனியப் புலிகள் (துடுப்பாட்டம்)
கிளாரென்சு காற்பந்துக் கழகம் (தாசுமானிய காற்பந்து கூட்டிணைவு)
ஓபர்ட்டு அரிகேன்சு (துடுப்பாட்டம்)
வடக்கு மெல்பேர்ன் காற்பந்துக் கழகம் (ஆத்திரேலிய காற்பந்துக் கூட்டிணைவு)
அமரக்கூடிய பேர் 20,000

இது மாநில துடுப்பாட்ட அணிகளின் விளையாட்டரங்கமாக உள்ளது; தாசுமேனியப் புலிகள், ஓபர்ட்டு அரிக்கேன்சு அணிகளின் தாயக அரங்கமாக உள்ளது. இங்கு 1988 முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட ஆட்டங்களும் 1989 முதல் பன்னாட்டுத் தேர்வு ஆட்டங்களும் நடைபெறுகின்றன. $16 மில்லியன் செலவில் மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு 2002 இறுதியில் முடிவுற்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. "The Venue". Blundstone Arena. Archived from the original on 19 March 2017. பார்க்கப்பட்ட நாள் 18 March 2017.
  2. Atkinson, Cody; Lawson, Sean (15 June 2022). "From the SCG to Kardinia Park — do ground sizes contribute to the end result in AFL games?". Australian Broadcasting Corporation. https://www.abc.net.au/news/2022-06-16/cody-and-sean-afl-analysis-how-much-do-ground-sizes-matter/101154950. 
  3. Sri Lanka v New Zealand Benson & Hedges World Series Cup 12 January 1987/88 (2006) Cricinfo பரணிடப்பட்டது 12 மார்ச்சு 2007 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்லரைவ்_ஓவல்_அரங்கம்&oldid=4101048" இலிருந்து மீள்விக்கப்பட்டது