பேக்கல் உட்சாஹி

இந்திய எழுத்தாளர்

பேக்கல் உத்சாகி (Bekal Utsahi) என்று பிரபலமாக அறியப்படும் முகம்மது சபி அலிகான் (1 ஜூன் 1924 - 3 டிசம்பர் 2016), ஓர் இந்திய கவிஞரும், எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவர். இவர் இந்திரா காந்திக்கு நெருக்கமான காங்கிரஸ்காரராகவும், மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். பத்மஸ்ரீ மற்றும் யாஷ் பாரதி உட்பட பல தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.[2]

பேக்கல் உத்சாகி
2013இல் உத்சாகி
பிறப்பு(1924-06-01)1 சூன் 1924
பல்ராம்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா
இறப்பு3 திசம்பர் 2016(2016-12-03) (அகவை 92)[1]
புது தில்லி, இந்தியா
கல்லறைபல்ராம்பூர்
தேசியம் இந்தியா
பணிகவிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி
அமைப்பு(கள்)இந்திய தேசிய காங்கிரசு
அறியப்படுவதுதேசிய ஒருமைப்பாடு, கங்கை-யமனை கலாச்சரம்
வாழ்க்கைத்
துணை
சுகாரா பேகம்
விருதுகள்பத்மசிறீ (1976)

ஆரம்பகால வாழ்க்கை தொகு

பேக்கல் உத்சாகி 1 ஜூன் 1924இல் உத்தரப் பிரதேசத்தின் பல்ராம்பூரில் பிறந்தார்.[3] இவரது தந்தையின் பெயர் ஜாபர் கான் லோடி- தாயின் பெயர் பிஸ்மில்லா. பால்ராம்பூரில் உள்ள எஸ்சி கல்லூரியில் உயர்நிலைப் பள்ளியில் தனது ஆரம்ப படிப்பை முடித்தார்.

இவர் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினராக இருந்தார். 1976இல் இலக்கியத்துக்காக பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். 1945இல் தேவாவின் வாரிஸ் அலி ஷா என்ற சூபி துறவி, "பேடம் கயா பேக்கல் ஆயா" என்று மேற்கோள் காட்டினார். அந்த சம்பவத்திற்குப் பிறகு முகமது சபி கான் தனது பெயரை "பேக்கல் வர்சி" என்று மாற்றிக்கொண்டார். ஜவகர்லால் நேரு 1952இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின்போது கோண்டாவுக்கு வந்திருந்தார். அதே நேரத்தில், இவரது "கிசான் பாரத் கா" கவிதையைக் கேட்டு உற்சாகமடைந்து "யே ஹமாரா உத்சாகி ஷயர் ஹை" என்று பாராட்டினார். அதன் பிறகு இவர் இலக்கிய உலகில் பேக்கால் உத்சாகி என்று அழைக்கப்படுகிறார்.

அரசியல் தொகு

உத்சாகி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக ஈடுபட்டார். மேலும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியுடன் மிக நெருக்கமாக இருந்தார். தேசிய ஒருங்கிணைப்புக்கான பங்களிப்பின் காரணமாக இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸால் பரிந்துரைக்கப்பட்டார்.[4] இவர், இந்தியப் பிரதமர் தலைமையில் தேசிய ஒருங்கிணைப்பு மன்றத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.[5]

விருதுகள் தொகு

1976ஆம் ஆண்டில் உத்சாகி பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். இவர் உத்தரப்பிரதேச அரசிடமிருந்து யாஷ் பாரதி விருதைப் பெற்றார்.[6] உருது இலக்கியத்திற்கான சேவைகளுக்காக 2013 ஆம் ஆண்டில் ஷாஹீத் ஷோதா சன்ஸ்தானால் இவருக்கு மாத்தி ரத்தன் சம்மன் வழங்கப்பட்டது.[7]

மேற்கோள்கள் தொகு

  1. Baikal Utsahi, poet, writer and politician, is no more. etemaaddaily.com (3 December 2016)
  2. காங்கிரஸ் முன்னாள் எம்.பி., பிரபல கவிஞர் பேக்கல் உட்சாஹி மரணம். மாலைமலர். 3 டிசம்பர் 2016. https://www.maalaimalar.com/news/national/2016/12/03143224/1054232/Poet-former-MP-Bekal-Utsahi-passes-away.vpf. 
  3. Dikshit, Suryaprasad (2016) (in hi). Awadh Sanskriti Vishwakosh. 2. New Delhi: Vani Prakashan. பக். 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-5229-582-1. https://books.google.com/books?id=TZbQDQAAQBAJ&pg=PA37. 
  4. List of Former Members of Rajya Sabha (Term Wise) பரணிடப்பட்டது 2015-09-26 at the வந்தவழி இயந்திரம். Rajya Sabha Secretariat.
  5. Re-constitution of the National Integration Council பரணிடப்பட்டது 5 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம். Government of India, Ministry of Home Affairs (5 April 2010) . Retrieved on 3 December 2016.
  6. Akhilesh honours 56 achievers with Yash Bharti. Times of India (10 February 2015). Retrieved on 3 December 2016.
  7. "बेकल उत्साही, अष्टभुजा अरुणिमा को मिलेगा माटी रतन सम्मान". Amar Ujala. https://www.amarujala.com/uttar-pradesh/faizabad/Faizabad-70009-126. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேக்கல்_உட்சாஹி&oldid=3252393" இலிருந்து மீள்விக்கப்பட்டது