பேச்சு:அகனன்
ஆண் ஓரினச்சேர்க்கை என வைக்கலாமே!. - சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு
- நம்பி என்ற சொல்லாடல் தற்போது ஓரளவு பயன்பாட்டில் உள்ளது. பார்க்க http://orinam.net/ta/, http://srishtimadurai.blogspot.ca/2012/09/blog-post_9.html, http://puthu.thinnai.com/?p=1542
--Natkeeran (பேச்சு) 12:38, 24 சூன் 2013 (UTC)
நங்கை, நம்பி என்ற சொற்கள் தமிழில் பிற பொருட்களைத் தருமாறு ஏற்கெனவே இலக்கியங்கிளில் ஆளப்பட்டுள்ளதால் இத்தகைய கலைச்சொல்லாக்கம் தவிர்க்கப்பட வேண்டும். பார்க்க: பேச்சு:நங்கை . எனவே அதிகாரபூர்வ கலைச்சொல்லாக்கம் நிகழும்வரை தலைப்பை ஆண்சேர்க்கையாளர் என மாற்றக் கோருகின்றேன்.--மணியன் (பேச்சு) 00:31, 20 சனவரி 2015 (UTC)
ஆண்விழைவோன்?--AntonTalk 16:52, 20 சனவரி 2015 (UTC)
- பிழையாக இருப்பதைவிட குறிப்பிடத்தக்க தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன். மிகவும் பொருத்தமான சொல் இருப்பின் அதற்கு நகர்த்தலாம். --AntonTalk 17:53, 20 சனவரி 2015 (UTC)
தலைப்பு தொடர்பான உரையாடல்: பேச்சு:பெண்விழைவோள்#நங்கை, நம்பி பயன்பாட்டு எடுத்துக்காட்டுக்கள் --Natkeeran (பேச்சு) 14:37, 19 பெப்ரவரி 2015 (UTC)
நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது
தொகுஇக்கட்டுரைத் தலைப்பு ஒருமித்த உடன்பாடு காணப்படாமலே பழைய தலைப்புக்கு மாற்றப்பட்டதால் "நடுநிலைமை" வார்ப்புரு இடுகிறேன். தலைப்பை மாற்றுக அல்லது உள்ளடக்கத்தை மாற்றுக. பாராமரிப்பு வார்ப்புருவை ஒருமித்த உடன்பாடு காணப்படாமல் நீக்க வேண்டாம். நன்றி. --AntanO 06:07, 8 அக்டோபர் 2016 (UTC)
- அகனன்
- ஒருபாலீர்ப்புள்ள ஆண் என்ற தலைப்பு ஏற்புடையது. ஆண்விழைவோன் என்பது சரியானது. ஆண் ஓரினச்சேர்க்கையாளர் என்பதும் பரவலாக பயன்பாட்டில் உள்ளது. --AntanO 03:33, 9 அக்டோபர் 2016 (UTC)
- @AntanO: இங்கு நடந்த உரையாடலில் இணக்க முடிவு எட்டப்பட்டது என்ற புரிதலின் அடிப்படையிலேயே தொடர்புடைய கட்டுரைகளில் பெயர்களை மாற்றினேன். நன்றி.--இரவி (பேச்சு) 09:13, 17 அக்டோபர் 2016 (UTC)
- வார்ப்புருவை நீக்கயுள்ளேன். ஆனால் அகனன் என்னும் பதம் சரியான பொருள் தருகிறதா எனக் கவனிப்பது வேண்டும் என்பது என் கருத்து. --AntanO 01:15, 18 அக்டோபர் 2016 (UTC)
காப்பிடுக
தொகு- @Kanags, AntanO, Gowtham Sampath, and Arularasan. G:
ஐயா, நிர்வாகியை மட்டும் தொகுக்க அனுமதிக்கும் அளவிற்கு இப்பக்கத்தை காப்பிடுக.--தாமோதரன் (பேச்சு) 16:39, 26 சூன் 2021 (UTC)
விக்கிப்பீடியாவில் பால்ரீதியான பாகுபாடும் ஒடுக்குமுறையும்
தொகுஇப்பக்கத்தை காப்பிடும் அளவுக்கு என்ன விதிமீறல் இங்கிருக்கிறது என்று சுட்டிக்காட்டினால் நன்று. எவ்வித காரணமும் சொல்லப்படாமல் என் தொகுப்புகள் முன்னிலைபடுத்தப்படுகின்றன. விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு மாறான எதுவும் இங்கு சேர்க்கபப்டவில்லை. ஆங்கில விக்கிப்பீடியாவின் கருத்துக்களே மொழி மாற்றப்பட்டுள்ளன. பெரும்பாலும் நடுநிலையான கருத்துக்களே. தமிழ்ச்சூழலிலுள்ள பாற்புதுமையினர் மீதான வெறுப்பை விக்கிப்பீடியா பயனர்கள் வைத்திருப்பது அவர்கள் இஷ்டம். ஆனால் பாற்புதுமையினரின் கட்டுரைகளிலும் உங்கள் அருவருப்பைப் பொழிய வேண்டாம். விக்கிப்பீடியா நிர்வாகிகளே, சகமனித வெறுப்பை வைத்துக்கோண்டு அத்தகையவர்களது திருத்தங்களை அனுமதித்துக்கொண்டு தயவு செய்து விக்கிப்பீடியாவின் ஒரு தூண் நடுநிலை நோக்கு என்று பசப்பு வார்த்தை பேசவேண்டாம். --Tamil.lgbt (பேச்சு) 18:19, 26 சூன் 2021 (UTC)
@Tamil.lgbt: உகவன் என்கிற வார்த்தை எதை குறிக்கிறது?? இந்த வார்த்தையை எங்கிருந்து பெற்றீர்கள் என சற்று விளக்கமாக சொல்லவும்.-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 19:13, 26 சூன் 2021 (UTC)
- ஏதும் விதிமீறல்கள் இருந்தால், அல்லது தகாதவாறு தொகுப்புப்போராட்டம் ஏதும் நடந்தால் காப்பிடலாம். காரணம் ஏதும் தராமல் காப்பில் வைக்கச் சொல்வது ஏன் என்று விளங்கவில்லை. எழுத்தாளர் செயமோகன் பக்கத்தில் உகவர் என்பதை ஆண்டுள்ளனர். பார்க்கவும்: எழுத்தாளர் செயமோகன் பக்கத்தில் உகவர் வாழ்க்கை--செல்வா (பேச்சு) 22:53, 26 சூன் 2021 (UTC)
- @Gowtham Sampath: விக்சனரியில் உகவன் என்னும் சொல்லுக்கு விளக்கம் உள்ளது. அதாவது ஆங்கிலத்தில் gay என்றால் மகிழ்ச்சி என்றிருப்பதுபோல உகப்பு = மகிழ்ச்சி ஏனும் பொருளில் உகவன் ஆளப்படுவதாகப் புரிந்துகொள்ள முடிகின்றது. பார்க்கவும் gay--செல்வா (பேச்சு) 23:04, 26 சூன் 2021 (UTC)
- ஏதும் விதிமீறல்கள் இருந்தால், அல்லது தகாதவாறு தொகுப்புப்போராட்டம் ஏதும் நடந்தால் காப்பிடலாம். காரணம் ஏதும் தராமல் காப்பில் வைக்கச் சொல்வது ஏன் என்று விளங்கவில்லை. எழுத்தாளர் செயமோகன் பக்கத்தில் உகவர் என்பதை ஆண்டுள்ளனர். பார்க்கவும்: எழுத்தாளர் செயமோகன் பக்கத்தில் உகவர் வாழ்க்கை--செல்வா (பேச்சு) 22:53, 26 சூன் 2021 (UTC)
@செல்வா: அண்ணா. இவர் கட்டுரையில் திருத்தம் செய்தது, தவறாக இருப்பதாக தெரியவில்லை, ஆனால் உகவன் என்கிற தலைப்பு, இதற்கு சரியாக இருக்குமா என்பது தான் என் சந்தேகம். நீங்கள் சொல்லுங்கள் அண்ணா, இந்த தலைப்பு சரிதானா என்று??-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 02:56, 27 சூன் 2021 (UTC)
@Gowtham Sampath: விளக்கமாகச் சொல்லும் அளவுக்கு இது ஒன்றும் சிதம்பரரகசியம் அல்ல. கூகுளில் தேடினாலே காட்டும். அப்படித் தேடி, விக்சனரியில் தான் கண்டுபிடித்தேன். மேலே எல்லோரும் விவாதித்துள்ள ஓரினச்சேர்க்கையாளன், ஆண்விழைஆண், ஆண்சேர்க்கையாளன், ஒருபாலீர்ப்புள்ள ஆண் முதலிய பெயர்களைப் போல் உகவன் ஒன்றும் விரசமான அர்த்தம் கொண்டதல்ல. பால்புதுமையினர் காமத்தை மட்டுமல்ல; வாழ்க்கையையே தமது ஒத்த பாலிடம் தான் எதிர்பார்க்கிறார்கள். ஏன் கலவியை மாத்திரம் மையமாக வைத்து கலைச்சொற்கள்? அல்லது நீங்கள் எல்லோரும் பெண்களை மணப்பது வெறும் காமமாட மாத்திரம் தானா? அன்பு, பாசம், ஆதரவு, புரிந்துணர்வு, இதெல்லாம் எதிர்பார்த்து மணப்பதில்லையா? பாவம் உங்கள் மனைவிகள்.
ஓகோ. உகவன் என்ற பெயர் மட்டும் தான் பிரச்னை போல. அதனால் தான் முற்றுமுழுதாக ஆங்கில விக்கிப்பீடியாவை மையமாக வைத்து, தேடித்தேடி உசாத்துணை சேகரித்து விக்கிப்பீடியாக் கட்டுரைகளின் சராசரித் தரத்துக்கு மேலாக நான் பண்படுத்திக்கொண்டிருந்த இந்தக் கட்டுரையை {{@Kanags, AntanO, and Almighty34: என்று வரிசை கட்டி வந்து காரணமே சொல்லாமல் முன்நிலைப்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள். மகிழ்ச்சி.
@செல்வா: புரிதலுக்கு நன்றி. விக்கிப்பீடியா கொள்கைகளுக்கு இணங்கி, பக்கச்சார்பின்றி நடுநிலையாகத் தான் கட்டுரையை தரமுயர்த்திக்கொண்டிருக்கிறேன். அதற்குக் கூட இடமளிக்க மறுக்கிறார்கள் "நல்லவர்கள்". இயற்கை சபித்த பாவிகளை மெய்நிகர் உலகும் வஞ்சிக்கின்றது. தங்களைப்போன்றோரின் கருணை எங்கள் பாலைநிலங்களில் ஊறும் நீர்க்குட்டை. நன்றி. --Tamil.lgbt (பேச்சு) 08:19, 27 சூன் 2021 (UTC)
@Tamil.lgbt: நீங்கள் மேலே எழுதிய எதுவும் சத்தியமாக எனக்கு புரியவில்லை, உங்களுடைய பேச்சு வேறு விதமாக உள்ளது, தயவு செய்து இத்துடன் உங்கள் உரையாடலை நிறுத்திக் கொள்ளவும். நன்றி-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 08:32, 27 சூன் 2021 (UTC)
- @Gowtham Sampath: ஆம். புரியாது. அப்படியே தங்களுக்கு புரியாத - தெரியாத பால் சிறுபான்மையினர் தொடர்பான கட்டுரைகளிலும் நீங்கள் தலையிடாமல் உங்கள் சொந்த வணிகத்தைப் பார்த்துக்கொள்ளச் செல்லலாம். நன்றி. --Tamil.lgbt (பேச்சு) 08:44, 27 சூன் 2021 (UTC)
- As a general rule, talk pages are for discussion related to improving (a) an encyclopedia article in specific ways based on reliable sources or (b) project policies and guidelines. They are not for general discussion about the article topic or unrelated topics, or statements based on your thoughts or feelings. Do not make personal attacks anywhere on Wikipedia. Comment on content, not on the contributor. Derogatory comments about other editors may be removed by any editor. Repeated or egregious personal attacks may lead to sanctions including blocks or even bans. --AntanO (பேச்சு) 09:24, 27 சூன் 2021 (UTC)
- @AntanO: விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு எவ்வித முரணும் அற்ற வகையில் நான் கட்டுரையைத் திருத்திக்கொண்டிருந்த போது
//நிர்வாகியை மட்டும் தொகுக்க அனுமதிக்கும் அளவிற்கு இப்பக்கத்தை காப்பிடுக.// என்று திரு தாமோதரன் கோரியதோ, //தயவு செய்து இத்துடன் உங்கள் உரையாடலை நிறுத்திக் கொள்ளவும். நன்றி// என்று திரு கௌதம் சம்பத் கோரியதோ உங்களுக்கு தனிப்பட்ட தாக்குதலாகத் தெரியவில்லை. கட்டுரையை நகர்த்த முன்பே நான் உசாத்துணைகளுடன் செய்த திருத்தங்களை முன்னிலைப்படுத்தி விட்டு என் பேச்சுப் பக்கத்துக்கு வந்து என் பங்களிப்பு ஆக்கநோக்கில் இல்லை என்று நீங்கள் குறிப்பிட்டதும் தனிப்பட்ட தாக்குதலாக உங்களுக்கு தெரியவில்லை. ஏனெனில் பெயரிலேயே நான் யாரென்ற என் அடையாளத்தை கொண்டிருக்கிறேன். நன்று. என்னால் யாரும் புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.நான் விக்கிப்பீடியாவிற்கு புதியவள். என் முதல் கட்டுரையிலேயே கசப்பான அனுபவங்களை தந்த அனுபவம் வாய்ந்த பதிவர்கள் விக்கிப்பீடியாவின் கொள்கைகளை கடைப்பிடிப்பதில் முன்மாதிரியாக செயற்படலாம்.விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு எல்லா பதிவருக்குமே பொருந்தும் என்று நம்புகிறேன். நன்றி. --Tamil.lgbt (பேச்சு) 11:22, 27 சூன் 2021 (UTC)
தனிப்பட்ட தாக்குதல் எதுவென்று எனக்குத் தெரியும். தயவுசெய்து விக்கிப்பீடியாவில் வழிகாட்டல்களைப் புரிந்து கொண்டு பங்களியுங்கள். உங்களை நீங்களே புதியாள் என்று கருதிவிட்டு, எனக்கு விக்கியின் கொள்கைகள் பற்றி தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டாம். அனுபவம் வாய்ந்த பதிவர்கள் வழிகாட்டகளின்படி பங்களியுங்கள். கட்டுரை பற்றி உரையாடுங்கள். நீங்கள் தொடர்ந்து தேவையற்று உரையாடுவதால் உங்கள் பேச்சுப்பக்கம் செய்தி தெரிவித்துள்ளேன். நன்றி! --AntanO (பேச்சு) 12:27, 27 சூன் 2021 (UTC)
@Gowtham Sampath:, உகவன், உகவர் என்பன சரியான சொற்கள்தாம், பயன்பாட்டிலும் உள்ளன. @Tamil.lgbt:, நீங்கள் தொடர்ந்து பங்களியுங்கள். கட்டுரையின் தலைப்பையும் அதன் கருத்துப்பொருள்களையும் மட்டும் கருத்திட்டு வளர்முகமாக அணுக வேண்டுகின்றேன். கூடிய மட்டிலும் பங்களிப்பவர்கள் தங்களின் தனி உணர்வுகளை அதிகம் காட்டாமல் அல்லது முன்னிறுத்தாமலும், கட்டுரையின் கருத்துப்பொருளை மட்டும் அறிவார்ந்த முறையின் முன்வைத்துப் பேசுவது நல்லது. குறிப்பாக பங்களிப்பவர்களுக்கிடையே இணக்கமாக கூட்டாக உழைக்கும் நல்ல உணர்வு நிலவுமாறு உரையாடல்கள் இருந்தால், நம் ஆக்கப் பணிக்கு பெரிதும் உதவும். கூட்டுப்பணிக்குரிய நட்புணர்வோடு கலந்துரையாட வேண்டுகின்றேன். நன்றி.--செல்வா (பேச்சு) 14:09, 27 சூன் 2021 (UTC)