பேச்சு:அக்குரோணி

அக்ரோணி - அக்சௌகினி இரண்டும் ஒன்றா? அல்லது வெவ்வேறா? மகாபாரதத்தின் தமிழ் பதிப்பில் (ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து என எண்ணுகிறேன்) அக்ரோணி என படித்ததாக நினைவு--நந்தகுமார் (பேச்சு) 13:36, 29 சூன் 2014 (UTC)Reply

"அக்குரோணி" என்ற சொல்லை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். இதை எழுதும் போது எனக்கு அது ஞாபகம் வரவில்லை. சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியில் "அக்குரோணி" என்பதற்கு akṣauhiṇi. Army consisting of 21,870 chariots, 21,870 elephants, 65,610 horses, and 109,350 foot-soldiers, according to Skt. authorities, Tamil nikaṇṭus என்று தரப்பட்டுள்ளதால் நீங்கள் சொல்வது சரிதான். இதற்கு இணையாக "அக்கோகிணி", "அக்கோணி" என்னும் சொற்களும் அதிலே காணப்படுகின்றன. ஆனால், செ. அருட்செல்வப் பேரரசனுடைய முழு மகாபாரதம் என்னும் மொழிபெயர்ப்பு நூலில் அதை "அக்‌ஷௌனி" என மொழிபெயர்த்துள்ளார். இதையும் ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் உள்ள உச்சரிப்புக்களையும் பார்த்தபின் "அக்சௌகினி" என்று எழுதினேன். இப்போது சரியான விளக்கம் கிடைத்திருப்பதால் தலைப்பை "அக்குரோணி" என்றே மாற்றிவிடுகிறேன். --- மயூரநாதன் (பேச்சு) 15:40, 29 சூன் 2014 (UTC)Reply
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 17:07, 29 சூன் 2014 (UTC)Reply
👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:09, 29 சூன் 2014 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அக்குரோணி&oldid=1685824" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அக்குரோணி" page.