பேச்சு:அடையாளப்பொருள் நம்பிக்கை
தலைப்பை மாற்றுகிறேன். "போலி பொருள்” என்பது ஒரு நம்பிக்கை மீதான மதிப்பீடாக உள்ளது. fetish என்பதன் facticius வேற்சொல் artificial என்று பொருள் பெறுவதால், “செயற்கை பொருள்” என்பது பொருந்தும்.--சோடாபாட்டில்உரையாடுக 04:39, 3 ஏப்ரல் 2011 (UTC)
- உள்ளடக்கம் நல்ல விடயம். ஆயினும் கட்டுரை தலைப்பு சற்று முரண்பட்டைத் தருகிறது. நமக்கு அப்பாற்பட்ட இன்னும் கண்டறியப்படாத அறிவியலை யாரும் பகுத்தறிவின் பெயரால் மூடநம்பிக்கை என்று கூறிவிடக்கூடாது என்பது என் ஆதங்கம். விடம் உறுஞ்சும் கல், உள்மன அதிர்வுகளை சீர்படுத்தக்கூடிய அரசு, வேம்பு முதலான மரங்களை செயற்கை என்று எப்படி வகைப்படுத்துவது. அப்படியாயின் இயற்கை என்று எதுவுமிருக்காது. அதுவுமின்றி இத்தகைய கண்டடைவுகள் கீழைநாட்டவர்களுக்குரிய புலமைச் சொத்து. பொருட்களின் பெயர்களை மொழிபெயர்ப்பது போல் கருத்தியல்களையும் கொள்கைகளையும் நேரடியாக மொழிபெயர்க்கக் கூடாது என முன்பும் ஒருதடவை சுட்டிக்கட்டியுள்ளேன். ஆகவே வெற்று நம்பிக்கை முதலானவை பொருந்துமா என விவாதிப்போம்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 06:09, 4 ஏப்ரல் 2011 (UTC)
- ஆம் எனக்கும் முரணாகவே படுகிறது. எனினும் “போலி” என்பதை விட “செயற்கை” பரவாயில்லை என நினைக்கிறேன். (மதிப்பீடு இல்லாது உள்ளது). வெறுமனே “பொருள் வழிபாடு” என்று வைக்கலாமா?. வேறு ஏதாவது பொருத்தமான தலைப்பு சொல்லுங்கள். எங்கேனும் மதிப்பீடு போன்ற வாக்கிய அமைப்பு இருந்தாலும் மாற்றி விடுங்கள். வின்சு மிகக்கவனமாகவே உள்ளட்டங்களை எழுதியுள்ளார், தலைப்பைத் தவிர, உள்ளடக்கத்தில் எங்கும் மதிப்பீடாக உள்ளது போல எனக்கு புலப்படவில்லை
- மேலும் இது “கீழை” கருத்தாக்கம் மட்டுமல்ல. உலகெங்கும் இந்த நம்பிக்கைகள் உள்ளன.--சோடாபாட்டில்உரையாடுக 06:06, 4 ஏப்ரல் 2011 (UTC)
- நன்றி சோடாபாட்டில். "பொருள் வழிபாடு" எனும்போது, சக்தி, சடப்பொருள் என்ற பாகுபடுத்தல் மிகைப்பட்டு "அப்படியாயின் சக்தி வழிபாடு?" என்ற கேள்வியைத் தோற்றுவிக்கும். மீண்டும் பொருள் மயக்கம் எழும். "தன்னையறிதல்" எனும் ஆத்மாத்த நிலைக்கு முந்திய அத்தனை புறப்பொருள் வழிபாடுகளும், அதாவது தன்னை மிஞ்சிய புறச்சக்தி உள்ளது என்ற நம்பிக்கை அனைத்தும் இந்த fetish இல் அடங்கும் என்பதே இது குறித்து நான் விளங்கி வைத்திருப்பது. ஆதலால் தான் கீழைத்தேய மெய்யியல் இவற்றை மிஞ்சியது எனும் உணர்வு மேலீட்டால் சற்று உணர்வு பொங்க எழுதிவிட்டேன்.வின்சு பிழைவிட்டதாக கூறவில்லை. மன்னிக்கவும்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 07:33, 4 ஏப்ரல் 2011 (UTC
- இதில் மன்னிக்க என்ன உள்ளது சஞ்சீவி :-). உங்களைப் போன்று சமயம் குறிந்த விசயஞானம் அறிந்தவர்களின் பார்வையும் இம்மாதிரிக் கட்டுரைகளில் படுவதால் இவை மேன்மேலும் வளமை பெறும். --சோடாபாட்டில்உரையாடுக 12:22, 4 ஏப்ரல் 2011 (UTC)
- "அடையாளப்பொருள் வழிபாடு" அல்லது "அஃறிணைப் பொருள் வழிபாடு" பொருந்துமோ ?--மணியன் 12:19, 4 ஏப்ரல் 2011 (UTC)
- “அடையாளப்பொருள் வழிபாடு” அருமையாக உள்ளதாக எனக்குப் படுகிறது. --சோடாபாட்டில்உரையாடுக 12:22, 4 ஏப்ரல் 2011 (UTC)
- "அடையாளப் பொருள் வழிபாடு" பொருத்தமாயுள்ளது.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 17:04, 4 ஏப்ரல் 2011 (UTC)
- உருவவழிபாட்டைத் தான் இந்த சொற்களில் குறிக்கிறீர்களா? இல்லை இது வேறா?-தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:38, 22 அக்டோபர் 2013 (UTC)
- இல்லை. இக்கட்டுரையின் தலைப்பு தவறாக உள்ளது. Fetishism என்பது வழிபாட்டைக்குறிக்காது. Idolatry என்பதும் Fetishism என்பதும் ஒன்றாகாது. ஒரு பொருளுக்கு சக்தி இருப்பதாக நம்பினாலும் அதை வழிபடாததும் Fetishismக்குள் அடங்கும். இது ஒரு நம்பிக்கை சார்ந்த கொள்கையினைக்குறிக்கவே பயன்படுகின்றது. இதற்கு வேறு தகுந்த பெயரிட பரிந்துரைக்கின்றேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 12:42, 22 அக்டோபர் 2013 (UTC)
- உருவவழிபாட்டைத் தான் இந்த சொற்களில் குறிக்கிறீர்களா? இல்லை இது வேறா?-தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:38, 22 அக்டோபர் 2013 (UTC)
- கருத்துக்கு நன்றி மாதரசன். நம்பிக்கை சார்ந்து எழுகின்ற ஒரு வெளிப்பாடுதான் வழிபாடு இல்லையா?--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:00, 25 அக்டோபர் 2013 (UTC)
- சஞ்சீவி சிவகுமார், ஆம். ஆயினும் எல்லா வகை வெளிப்பாடும் வழிபாடு ஆகாதே! ஒரு பொருளுக்கு ஆற்றல் உள்ளது என்பதும், அப்பொருளே கடவுள் என்பதும் வெவ்வேறானவை. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 04:29, 25 அக்டோபர் 2013 (UTC)
- ஆம் அப்படியாயின் கடவுள் நம்பிக்கை என்பதுவும் கடவுள் வழிபாடு என்பதுவும் வேறு வேறு தானே! ஆகவே இங்கு "அடையாளப்பொருள் நம்பிக்கை" எனப் பெயரிடுவது பொருந்துமா?--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:24, 25 அக்டோபர் 2013 (UTC)
- விருப்பம் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 08:39, 25 அக்டோபர் 2013 (UTC)
- அடையாளப்பொருள் நம்பிக்கை என்று மேலே இருவர் அருமையான விளக்கத்தோடு ஒப்புதல் அளித்துள்ளனர். அதனால் கட்டுரை அத்தலைப்புக்கு மாற்றப்பட்டு, தலைப்பு மாற்றுக வார்ப்புரு நீக்கப்படுகிறது--த♥உழவன் (உரை) 03:04, 10 மார்ச் 2017 (UTC)
பெயர்மாற்றப் பரிந்துரை
தொகுஅடையாளப்பொருள் நம்பிக்கை என்பது சொல்லொன்றின் விளக்கம் போலுள்ளது. அதைத் தனியொரு தலைப்பாகக் கொள்ளாமல், Fetishism என்பது போல் ஒருசொல்லால் குறிப்பிடுவதே பொருத்தம். மாய ஆற்றல்கள் வாய்ந்த - ஒரு தெய்வத்தின் பிரதிநிதியாகக் கொள்ளப்படும் பொருட்களை வழிபடுவதே Fetishism என்கின்றது சொற்பிறப்பு அகராதி. தமிழ் மரபில், இத்தகைய மாயத்தெய்வங்கள், "சூர்", "அணங்கு" என்ற பெயர்களால் அழைக்கப்படுவது வழக்கம் என்பதும், அவை உறைவதாகக் கருதி, "அணங்குடை மரபின் கட்டில்", "அணங்குடை நோன்சிலை", "சூருறை குன்று" முதலானவற்றைக் குறிப்பதையும் பழந்தமிழ் இலக்கியங்களில் காணலாம். ஆங்கிலத்தில் "-ism" விகுதி கொண்டவற்றை "-இயம்" என மொழியாக்குவது தமிழ்வழக்கு. சூரியம் அல்லது அணங்கியம் ஆகியவற்றில் ஒன்றை, Fetishism என்ற சொல்லின் மொழியாக்கமாகப் பரிந்துரைக்கிறேன். (அவை சூரியன், இலக்கியம் என்பவற்றோடு குழப்பமேற்படுத்தலாம் என்றால், சூருறையியம் / அணங்குறையியம் / அணங்கிறையியம் என்று ஏதாவதொன்றால் அழைக்கலாம்.) --5anan27 (பேச்சு) 05:48, 10 மார்ச் 2017 (UTC)