பொருள் விளங்கும் தமிழ் பெயர்

தொகு

காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட மதிப்பு (காற்.பி.ம.) கோப்பு என்பது ஆங்கிலத்தில், கணினித் துறையினர் பயன்படுத்தும் CSV file என்பதன் பொருத்தமான தமிழ் மொழி பெயர்ப்பாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். இந்த கருத்து ஏற்றுக்கொள்ள தகுந்ததா என்பது குறித்து கருத்தை பிற பயனர்கள் தெரிவித்தல் உதவியாக இருக்கும்.
@Info-farmer:
ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 13:10, 6 திசம்பர் 2023 (UTC)Reply

தெளிவாக ஆங்கில அஃகுப்பெயருக்குரிய விளக்கம், கட்டுரையிலேயே உள்ளது. குழப்பம் வேண்டாம். காற்புள்ளி இல்லாமலேயே இதனைப் பயன்படுத்தலாம். ஒரு கோப்பின் தரவுகள், ஒரு குறியீட்டால், அணியணியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு அணி என்பது ஒரு குறிப்பிட்ட விதியின்/வகையின் கீழ் என அறிந்து கொள்க. உழவன் (உரை) 04:13, 8 திசம்பர் 2023 (UTC)Reply
விளக்கத்துக்கு மிக்க நன்றி. முதன்முதலில் CSV என்ற சுருக்கத்தையும் அதன் முழு விளக்கத்தையும் பெரும்பாலானவர்களைப் போல நானும் ஆங்கிலத்திலேயே கற்றதால், அதன் நேரடி தமிழ் மொழிமாற்றம் எளிதில் புரியும்படியாக இருக்கும் என்று கருதியதால் தான் நான் அவ்வாறு மொழிப் பெயர்ப்பு செய்தேன். அணித்தரவு என்ற சொல் ஆங்கிலத்தில் array என்ற பொருளையும் குறிக்குமாதலால் குழப்பத்துக்கு இடமளிக்காமல் இருக்கும் எனவும் நினைத்தே சொல்லுக்குச் சொல் ஆங்கிலத்திலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட மதிப்பு என்ற சொற்றொடரை பயன்படுத்தினேன். எப்படியும் அணித்தரவுக்கோப்பு என்பதை நீங்களும் கலந்தாலோசித்த பின்னரே முடிவு செய்திருப்பீர்கள், ஆகவே அவ்வாறே தொடர்ந்து பயன்படுத்துவோமாக. ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 13:38, 8 திசம்பர் 2023 (UTC)Reply
பயனர்:Sundar உடன் மின்னஞ்சல் வழியே 2018 ஆம் ஆண்டு மின்னஞ்சல் வழியே உரையாடிய போது, இச்சொல்லினை அவரிடம் இருந்து பெற்றேன். உழவன் (உரை) 03:20, 13 திசம்பர் 2023 (UTC)Reply
நல்லது, தமிழ் மொழிக்கு மிகவும் பொருத்தமானதொரு தலைப்பு தான் அணித்தரவுக்கோப்பு என்பதில் சிறிதும் ஐயமில்லை. இருப்பினும், நமது குறிக்கோள் மக்கள் எளிதில் புரிந்துகொண்டு பயனடைய வேண்டும் என்பதாலும், பெரும்பாலானவர்கள் இந்த தலைப்பை முதன்முதலாக கேட்டு புரிந்துகொண்டது ஆங்கில மொழியிலிருந்து என்பதாலும் அதே சொற்றொடரை எளிதாக தமிழுக்கு மொழிமாற்றம் செய்வது நல்லது என்ற அடிப்படையிலேயே நான் அவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்திருந்தேன்.
ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 07:20, 13 திசம்பர் 2023 (UTC)Reply
குறிப்புக்கு நன்றி, தகவலுழவன்.
உங்கள் நோக்கம் புரிகிறது, @Sree1959:. ஆனால் மதிப்பு என்பதைக் காட்டிலும் பொருத்தமான சொல்லைப் பயன்படுத்தவேண்டும். பிரிக்கப்பட்ட என்பதைக் காட்டிலும் தமிழியல்பான பிரித்த என்றே பயன்படுத்தலாம். இந்நாளில் பிரிக்கும் பிரிப்பான் காற்புள்ளியாகவோ வேறு எதுவுமாகவோ இருக்கலாம். நாங்கள் Ctrl-A முதலியவற்றையுங்கூடப் பயன்படுத்தியிருக்கிறோம். அனைத்துக்கும் பொதுவாக இருந்தால் நல்லது. -- சுந்தர் \பேச்சு 00:29, 14 திசம்பர் 2023 (UTC)Reply
Return to "அணித்தரவுக்கோப்பு" page.