பேச்சு:அப்பாத்தா

ஆத்தா என்றும் பாட்டியா என்றும் சில இடங்களில் சொல்லுவார்கள். -குறும்பன்

பாட்டி என்பது பொதுப் பெயர். அப்பாயி என்றும் அழைப்பர். தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:11, 14 மே 2013 (UTC)Reply

கொங்கு தமிழில் ஐயம்மா அப்பம்மா என்று அழைத்து கேட்டதில்லை, பாட்டியா என்று அப்பாவின் அம்மாவையும் பாட்டன் என்று அப்பாவின் அப்பாவையும் சில இடங்களில் (கொங்கு பகுதியில்) அழைப்பதை கேட்டுள்ளேன். ஆத்தா என்ற பயன்பாடு கோவை, பொள்ளாட்சி, காங்கேயம், திருப்பூர், கோபி பகுதிகளில் அதிகம் --குறும்பன் (பேச்சு) 17:17, 14 மே 2013 (UTC)Reply

தென்னகத்தில் அப்பாச்சி (அப்பா வழி ஆச்சி), அம்மாச்சி தான். ஆயா என்று சில இடங்களில் அழைப்பதுண்டு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:42, 15 மே 2013 (UTC)Reply

பெத்தவளை அம்மா என்றும், அம்மாவின் அம்மாவை ஆத்தா என்றும்,ஆத்தாளின் அம்மாவை மூத்த ஆத்தா என்றும் தாய் வழி மண உறவு கொள்பவர்கள் இன்றும் (தற்போதைய இராமநாதபுரம்,சிவகங்கை,விருதுநகர்,திருநெல்வேலி,தூத்துக்குடி,ஆகிய மாவட்டங்களில்,இல்லத்துப்பிள்ளை,கொண்டையங் கோட்டை மறவர்,ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர்)அழைப்பதுண்டு. கொங்குப் பகுதியில் அப்பாவின் அம்மாவை அப்பத்தா என்றும்,அப்பாயி என்றும்,அப்பாவின் அப்பாவை அப்பார் என்றும்,அப்பாரின் அப்பாவை அப்பார் அய்யன் என்றும் அழைக்கிறார்கள்.--Yokishivam (பேச்சு) 10:01, 15 மே 2013 (UTC)Reply

அப்பார் அய்யனின் அப்பாவை பாட்டன் என்றும் அழைக்கிறார்கள்.--Yokishivam (பேச்சு) 10:04, 15 மே 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அப்பாத்தா&oldid=1422297" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அப்பாத்தா" page.