பேச்சு:அரிஞ்சய சோழன்

அரிஞ்சய சோழன் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
அரிஞ்சய சோழன் என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
அரிஞ்சய சோழன் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
அரிஞ்சய சோழன் என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
அரிஞ்சய சோழன் தமிழக வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழக வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

அரிஞ்சய சோழன்

தொகு

அரிஞ்சய சோழன் அரிஞ்சய சோழன் இடைக்காலச் சோழர் மரபைச் சேர்ந்தவன். இவன் முதலாம் பராந்தக சோழன்னின் மகன், கண்டராதித்த சோழனின் தம்பியாவான். வடக்கிலும், தெற்கிலும் சோழ நாடு சுருங்கிப் போன ஒரு கால கட்டத்தில் பட்டத்துக்கு வந்த இவன், சோழ நாட்டின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த இராட்டிரகூடர்களை அகற்றுவதற்கு முயன்றான். இம் முயற்சி தோல்வியின் முடிந்து, ஆற்றூர் என்னுமிடத்தில் இறந்தான்.

வீமன் குந்தவையார், கோதைப்பிராட்டியார் என்ற இவனுடைய இரு மனைவியர், இவனுக்குப்பின்னும் உயிர்வாழ்ந்து, இவனது மகனுடைய ஆட்சிக்காலத்தில் பல தானங்களைச் செய்தனர். வீமன் குந்தவை என்பவள் வேங்கிநாட்டு மன்னனாகிய இரண்டாம் வீமன் சாளுக்கியனின் புதல்வி.

956 ஆன் ஆண்டளவில் அரசனான இவனது ஆட்சி மிகக் குறுகிய காலமான சில மாதங்கள் மட்டுமே நிலைத்திருந்தது.

இரண்டாம் அமோகவர்சன்(Amoghavarsha II ஆட்சிக்காலம் 929-930 ) என்பவன் ஒரு இராஷ்டிரகூட மன்னனாவான். இவன் ஓராண்டே மன்னனாக இருந்தான். இவன் இவனது தம்பியான நான்காம் கோவிந்தனால் கொலை செய்யப்பட்டான்.

நான்காம் கோவிந்தன்

தொகு

நான்காம் கோவிந்தன் நான்காம் கோவிந்தன் (Govinda IV ஆட்சிக்காலம் 930-935 ), இவன் இரண்டாம் அமோகவர்சனின் தம்பியாவான். இவன் 930இல் மன்னனானான் என்பது குறித்து சிக்மங்ளூரின் கன்னடப் பதிவுகள் வழியாக தெரிகிறது. இவன் தன் அண்ணனைக் கொன்ற பாவச் செயலால் இவன் மிகவும் செல்வாக்கற்ற மன்னனாக இருந்தான். இவனது ஆட்சிக்காலத்தில் கன்னோஜை இராஷ்டிரகூடர்கள் இழந்தனர். நான்காம் கோவிந்தனைக் கீழைச் சாளுக்கியர் தோற்கடித்து அவனது ஆட்சிப்பகுதிகள் சிலவற்றையும் கைப்பற்றினர். இறுதியாக, இவனது கூட்டமைப்பைச்சேர்ந்தவனும், ஆந்திரத்தின் வேமுலவாட மன்னனுமான அரிகேசரி என்பவன் இவனுக்கு எதிராக 935இல் புரட்சிசெய்து மூன்றாம் அமோகவர்சனை ஆட்சியில் அமரவைத்தான். இந்தத் தகவல்கள் கன்னட கவிஞர் ஆதிகவி பம்பா என்பவரது எழுத்துகளால் தெரியவருகிறது இந்தக் கவிஞர் அரிகேசரியால் ஆதரிக்கப்பட்டவர் ஆவார். நான்காம் கோவிந்தான் சோழர்களுடன் திருமண உறவுவைத்திருந்தான். தனக்கு எதிராக புரட்சி ஏற்பட்டதும் இறுதியில் சோழர்களிடம் அடைக்கலம் சென்றான். நான்காம் கோவிந்தன் கன்னட கவிஞர் ரவிங்கபதா என்பவரை ஆதரித்தான்.

கீழைச் சாளுக்கியர்

தொகு

கீழைச் சாளுக்கியர் கீழைச் சாளுக்கியர் (வேங்கிச் சாளுக்கியர்) என்பவர்கள் தென் இந்தியாவை ஆண்ட அரச மரபினர் ஆவர். இவர்களது அரசு இக்காலத்தைய ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்திருந்தது. இவர்களின் தலைநகரம் வேங்கியாகும். இது தற்காலத்தில் படவேங்கி, சின்ன வேங்கி என்ற பெயரில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் எலுருவுக்கு அருகில் உள்ளது. இந்த அரசு கிபி 1130 வரை 500 ஆண்டுகளுக்கு இருந்தது. பின்பு இது சோழப் பேரரசுடன் இணைந்தது. இணைந்தாலும் வேங்கி அரசை கீழைச் சாளுக்கியர்களே சோழர்களின் பாதுகாப்புடன் கிபி 1189 வரை ஆண்டனர். போசளர்களாலும் தேவகிரி யாதவப் பேரரசுகளாலும் தாக்கப்பட்டு இவ்வரசு வீழ்ந்தது. இவர்கள் தங்கள் தலைநகரை வேங்கியிலிருந்து ராஜமகேந்திரவரமுக்கு (ராஜமுந்திரி) மாற்றினார்கள்.

கீழைச் சாளுக்கியர்கள் வாதாபி வாதாபி (பாதமி) சாளுக்கியர்களுடன் நெருங்கியவர்கள். ஏழாம் நூற்றாண்டில் இரண்டாம் புலிகேசி கங்க மன்னனைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு பல்லவ பேரரசின் மீது படையெடுத்தான். பல்லவ நாட்டை சூறையாடி, முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் வசமிருந்த வேங்கி நாட்டைக் கைப்பற்றி புலிகேசி தன் தம்பியான விட்டுணுவர்தனை அரசனாக்கினான். இந்த விட்டுணுவர்தனின் மரபினரே கீழைச் சாளுக்கியர் எனப் பெயர் பெற்றனர். மேலைச் சாளுக்கியர்களுக்கும் சோழர்களுக்கும் இடையே பல போர்கள் வேங்கி நாட்டுக்காக நடந்தன. கீழைச் சாளுக்கியர்களின் 500 ஆண்டு ஆட்சியில் இப்பகுதி ஒன்றுபடுத்தப்பட்டதுடன் தெலுங்கு பண்பாடு, இலக்கியம், கலை போன்றவை சிறப்பிடம் எய்தியது. இவர்கள் ஆட்சி ஆந்திர வரலாற்றின் பொற்காலம் என போற்றப்படுகிறது.

மூன்றாம் அமோகவர்சன்

தொகு

மூன்றாம் அமோகவர்சன் (Amoghavarsha III ஆட்சிக்காலம் 934–939) இவன் கன்னடத்தில் பத்திகா என்று அழைக்கப்படுகிறான். நாடு கடத்தப்பட்ட நிலையில் இருந்த இவன் மூன்றாம் இந்திரனின் தம்பியாவான். இவன் ஆந்திரத்தின் வேமுலவாட மன்னனான அரிகேசரி என்பவனின் கூட்டமைப்பு படைகளின் உதவியுடன் நான்காம் கோவிந்தனுக்கு எதிராக புரட்சிசெய்து ஆட்சிக்கு வந்தான். இவனது ஆட்சியைப்பற்றி அதிகமாகத் தெரியவில்லை.இவனது வயது முதிர்ச்சியின் காரணமாக நிர்வாகத்தில் ஆர்வம் காட்டாததால் இவனது மகன் மூன்றாம் கிருஷ்ணன் மூன்றாம் கிருஷ்ணன் ஆட்சியைக் கவனித்துவந்தான். அமோகவர்சனின் பட்டத்தரசி குந்தகாதேவி ஆவாள், இவள் காளச்சூரிய மரபின் இளவரசியாவாள். இவனது மகளை மேலைக் கங்கர் மேலைக் கங்கர் மரபின் இரண்டாம் பூதுகனுக்கு மணம் செய்வித்தனர்.

மேலைக் கங்கர்

தொகு

மேலைக் கங்கர்கள் (கன்னடம்) பழங்கால கருநாடகத்தில் இருந்த ஓர் சிறப்பு வாய்ந்த அரசமரபாகும். இது கிபி 350 - 1000 வரை ஆட்சியில் இருந்தது. இதை மேலைக் கங்கர்களின் அரசமரபு என்றும் கூறுவர். கலிங்கத்தை ஆண்ட (தற்கால ஒடிசா) கீழை கங்கர்களிடம் (கிழக்கு கங்கர்கள்) இருந்து வேறுபடுத்துவதற்காக இவர்கள் மேலைக் கங்கர்கள் எனப்படுகின்றனர்.

மேலைக் கங்கர் தோற்றம்

மேலைக் கங்கர்களின் முதல் அரசன் கொங்குனிவர்மன், தாங்கள் இஷ்வாகுவின் பரம்பரையில் (சூரிய வம்சத்தில்), கண்ணுவ கோத்திரத்தில் பிறந்தவன் என்று மாதவவர்மன் தன் செப்பேடுகளில் குறித்துள்ளான். அதுமட்டுமல்லாமல், சமீபத்திய ஆய்வுகள், இந்த யானையை லட்சினையாகவும், சின்னமாகவும் கொண்ட கங்கர் சர்வ நிச்சயமாக வெள்ளாமையை தொழிலாக கொண்ட வேளாண் குடியை சேர்ந்த மண்ணின் மைந்தராக இருப்பது மட்டுமல்லாது, அன்று மைசூர் பகுதிகளிலும், கொங்குநாட்டிலும் பெரும் புகழும் சொல்வாக்கும் பெற்றிருந்த வெள்ளான் குடிகளின் தயவைப்பெற்ற ஒரு சிறு ராஜ்யமாக தொடங்கி, அதே வெள்ளாமையை தொழிலாக கொண்ட வெள்ளான் குடிகளின் ஆதரவோடுதான் அவ்வளவு விரைவில் பெரும் சாம்ராஜ்யமாக உருவெடுத்தனர் என்று குறிப்பிடுகிறார்.

மேலைக்கங்கர் - கீழைக்கங்கர் தொடர்பு

அனந்தவர்மன் சோடகங்கன், கீழைக் கங்கர் பரம்பரையை தோற்றுவித்தவர் என்பதனால், இவரது தந்தை ராஜராஜ கங்கேயன் என்கிற ராஜராஜதேவ கங்கன், நேரடியாக கங்கபாடியை ஆண்ட மேலைக் கங்கர் மரபினர் அல்ல. அப்படி கொள்வது ஒரு மாபெரும் வரலாற்று பிழை. களப்பிரர் காலத்தில், சங்ககால சேரர் வலுக்குன்றியிருந்த வேளையில், சேரரின் இடத்தை நிரப்பிய மேலை கங்கர்களின் கிளையினரான அதிராஜ இந்திரன் எனும் இந்திரவர்மன்என்பவர், 5ஆம் நூற்றாண்டின் இறுதியான 498இல் கலிங்கத்தை ஆண்டுவந்த சோம / சந்திர வம்சத்தை சேர்ந்த பாண்டு / கேசரி மன்னர்களின் கீழ் குறிநில மன்னர்களாக இன்றைய ஸ்ரீகாகுளம் மாவட்டம், விழியநகரம் மாவட்டம் போன்ற கலிங்கத்துக்கு சேர்ந்த ஆந்திரத்தின் பகுதிகளை முக்கலிங்கத்தை தலைநகராகக்கொண்டு ஆண்டு வந்தனர்.

பின்னர் 1038ஆம் ஆண்டில் மேலை கங்கர் கிளையினரான கலிங்கத்தையாலும் குறுநில மன்னன் ஐந்தாம் வஜ்ரஹஸ்தன் சந்திர வம்சத்து பாண்டு மன்னர்களையே வீழ்த்தி, சந்திர வம்சத்து பாண்டு மன்னர்களின் பிரம்மமகேஷ்வரர், மகாராஜாதிராஜன் போன்ற பட்டங்களை சூடிக்கொள்வதுடன்[5], கலிங்க நாடு, ஒட்டிய நாடு என மூன்று நாடுகளாக சிதறியிருந்த கலிங்கதேசத்தை முழுதாக ஆள்வதால் சந்திர வம்சத்து பாண்டு மன்னர்களுக்கே உரியதான திரிக்கலிங்காதிபதி என்ற பட்டத்தை பெருமையுடன் சூட்டிக்கொள்கிறார்.

இவர் கலிங்கத்தை முழுதாக கைவச்சப்படுத்தியிருந்தாலும், எதிரிகள் கலிங்கத்தை பலவாறு பிடிக்க முயன்றனர். அதனால் இவரின் மகன் ராஜராஜ கங்கேயன் என்கிற ராஜராஜதேவ கங்கன் முதலாம் ராஜேந்திர சோழனின் மகளான ராஜசுந்தரி என்கிற சோழ இளவரசியை மணந்து, ராஜராஜ கங்கேயன் இளம் வயதிலேயே இறந்து, அரச வாரிசான அனந்தவர்மன் சோடகங்கன் 5 வயதில் தன் விதவைத்தாயான சோழ இளவரசி அவளது தமையனான வீரராஜேந்திர சோழனை தன் எதிரியான சாளுக்கியரை வீழ்த்தும்படி அழைப்புவிடுக்கும்வரை நீடித்தது. இதன்பின் வீரராஜேந்திர சோழனின் மகனான அதிராஜராஜன் கொல்லப்பட, கீழை சாளுக்கிய விஜயாதித்தன் குலோத்துங்கனாக முடிசூட்டிக்கொண்டதும், கலிங்கத்தின் மீது போர் தொடுத்து, அனந்தவர்மனை தன் முன்னோருக்காக பழிவாங்கினான். இதன் பின் அனந்தவர்மன் சோழ கங்கன் தன் தலைநகரை 1135 இல் கலிங்கநகருக்கு (இன்றைய கட்டாக்) நகருக்கு மாற்றி, தாங்கள் மேலைக்கங்கர்களாக என்று இருந்த அடையாளத்தை துறந்து புதியதொரு சாம்ராஜ்யம் படைத்தார். அதைத்தான் இன்று வரலாற்று ஆய்வாளர்கள் கீழைக் கங்கர் என்று வழங்குகின்றனர்.

மேலைக் கங்கர் - கீழைக் கங்கர்: தொடர்பின் குழப்பங்களும் தெளிவும்

மேலைக் கங்கர்களுக்கும், கீழைக் கங்கர்களுக்கும் இருக்கும் தொடர்பு உறுதிசெய்யப்பட்டிருந்தாலும், சில ஆய்வாளர்கள், கலிங்கத்தை ஆண்ட கங்கர்களே இன்றைய கங்கபாடியின் கோலார் மாவட்டத்தின் குவலாளபுரத்தில் மேற்கு கங்கர் பரம்பரையை தோற்றுவித்தனர் என்று கருதுகிறார்கள் .

இதற்கு காரணம் விழியநகரத்தில் கீழைக் கங்கர்களின் கல்வெட்டு ஒன்று காங்கேயன் என்ற தலைவரின் கால்வழியில் வந்த 18 தலைமுறையினரை (சிதம்பரன் உட்பட) குறிக்கின்றது. இதில் 17ஆவது தலைக்கட்டான கோலாஹலன் என்பவன் பெரிய கங்கபாடி விசையத்தில் கோலாஹலம் என்ற நகரை எழுப்பினான் என்றும், இந்த கோலாஹலனுக்குப்பின் 80 தலைக்கட்டுகள் அந்த கொலாஹல நகரில் அரசாண்டது என்று தெரிவிக்கின்றது. அப்படி 80ஆவது தலைமுறையினன் வீரசிம்மன் ஆவான்.

ஆனால் அதே கல்வெட்டிலேயே இந்த காங்கேயன் பரம்பரையில் 18+80 = 96 தலைமுறைகளுக்கு பின் பிறந்த இந்த வீரசிம்மனின் 5 புதல்வர்களில் மூத்தவனான காமர்ணவனே தன் முடியை, கங்கபாடியை அரசாலும் தகுதியை, தன் தாய்மாமனுக்கு கொடுத்துவிட்டு , தன் 4 இளைய சகோதரர்களுடன் மகேந்திரமலைக்கு சென்று கோகர்ண சுவாமியை வழிபட்டு, காளையை / நந்தியை லட்சினையாகவும், சின்னமாகவும், தன்னாட்சி அதிகாரம் பொருந்திய பேரரசை நிறுவ அதற்கான சின்னங்களையும் பெற்றுக்கொண்டு, கலிங்கத்துக்கு சென்று , பாலாதித்தனை வென்று, தனக்கு கீழ்ப்படிய செய்து, மூன்று கலிங்க நாடுகளையும் வீழ்த்தி, புதிதாக ஒரு கங்கர் பரம்பரையை தோற்றுவித்தான் என்றும், ஜந்தவுரம் என்ற ஊரை (இன்றைய முக்கலிங்கம்) தலைநகராக கொண்டு மூன்று கலிங்கநாடுகளையும் தன் நான்கு தம்பிகளுள் மூவரை மூன்று நாடுகளுக்கும் ஆளுநராகவும், எஞ்சிய ஒருவனான தனர்ணவனை தனக்குப்பின் பட்டத்துக்குரிய ராஜ வாரிசாகவும் தேர்ந்தெடுத்தான் என்றும், இந்த இருவருக்கும் பிறகு 15 தலைமுறை கழித்து பிறந்தவனே வாண அரசர்களின் கிளையான வைதும்பராயர்கள் குலத்து இளவரசி, விண்ணவன் மகாதேவியை மணந்த ஐந்தாம் வஜ்ரஹஸ்தன் என்றும் அதே கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

ஆக, காங்கேயனின் பரம்பரையில் இருந்து வந்த கோலாஹலன் கங்கபாடியில் கோலார், கொள்ளேகாலம் பகுதிகளில் அப்பொழுது ஆதிக்கத்தில் இருந்த பாண அரசர்களை எதிர்த்து ஒடுக்கி, தலைக்காடு, மைசூர் பகுதிகளை அதன்பின்னர்தான் கையகப்படுத்தினார்கள் என்பதும், 11ஆம் நூற்றாண்டு வரை இப்படி சேர்த்த தேசங்களே கங்கவாடி 96000 என்பதும் தெளிவாகிறது . அதன் பின்னரே 81 தலைமுறை / ஆட்சியாளர்கள் கழித்து, மேலைக் கங்கர் மரபில் இருந்து கிளைத்த காமர்னவனும் அவன் தம்பிகளும் கலிங்கத்தை வீழ்த்தி, பாலாதித்தனை கீழ்ப்படியசெய்து, முக்கலிங்கத்தை தலைநகராக கொண்டு மூன்று கலிங்க நாடுகளையும் ஒரே சாம்ராஜ்யமாக ஆள துவங்கியதில் இருந்து பிரிந்து செல்கிறது. அதன் பின்னர் காமர்னவனில் இருந்து 18ஆம் தலைமுறையாக அனந்தவர்மன் சோடகங்கன் காலத்தில் மேலைக்கங்கர் என்ற அடையாளம் மறைந்து கீழைக் கங்கர் என்று என்றும் இல்லாத அளவுக்கு செல்வாக்கு பெற்ற ஒரு பேரரசாக கலிங்கத்து கீழைக் கங்கர் உருபெருகின்றனர்.

கங்கபாடியில் கங்கர் புகும் முன் அவர்கள் எங்கிருந்தனர் என்றும் கோலாஹளனின் பிறப்புக்கு முன்னர் காங்கேயன் பரம்பரை 18 தலைமுறைகள் எங்கு அரசாண்டனர் என்பதும் மிகப்பெரும் கேள்விக்குறி இல்லை எனினும், வரலாற்று ஆய்வாளர்கள் போதிய ஆதாரங்கள் இல்லாததால், காங்கேயனின் பரம்பரை தோன்றியது, இன்றைய கொங்குநாட்டின் காங்கேயத்தில் என்று ஒரு மனதாக ஏற்றுக்கொள்கின்றனர்.

கொத்திக அமோகவர்சன்

தொகு

கொத்திக அமோகவர்சன் (Khottiga Amoghavarsha ஆட்சிக்காலம் 967-972 ) என்பவன் இராஷ்டிரகூடப் பேரரசின் மன்னனாவான். இவனது காலகட்டத்தில் இராஷ்டிரகூடர்களின் செல்வாக்குக் குறையத் தொடங்கியது. பரமரா அரசன் இரண்டாம் சியகா இராஷ்டிரகூடர்கள் மீது போர்தொடுத்தான். இராஷ்டிரகூடர்களின் தலைநகரான மான்யகட்டாவை கொள்ளையிட்டனர். இப்போரில் மன்னன் கொத்திக அமோகவர்சன் இறந்ததாக கருதப்படுகிறது.

இரண்டாம் கர்கன்

தொகு

இரண்டாம் கர்கன் (Karka II ஆட்சிக்காலம் 972-973 ), இவன் இராஷ்டிரகூட மன்னன் கொத்திக அமோகவர்சனுக்குப் பின் அரியணை ஏறினான். இவன் குர்சார், சோழர், பாண்டியர்களுக்கு எதிரான போரில் வெற்றிபெற்றான் . இவனது கூட்டுப்படைகளுடன் சென்ற மேலைக் கங்கர் மன்னன் இரண்டாம் மாறசிம்மன் பல்லவர்களைத் தோற்கடித்தான். ஆனால் பரமரா அரசன் இரண்டாம் சியக்காவினால் தோற்கடிக்கப்பட்டு தலைநகரான மான்யக்டாவில் ஏற்பட்ட கொள்ளையினால் ஏற்பட்ட பலவீனங்களில் இருந்து மீளமுடியவில்லை. இந்நிலையில் சாளுக்கிய மன்னன் இரண்டாம் தைலப்பன் தன் சுயாட்சியை அறிவித்தான். நாட்டில் குழப்பநிலை ஏற்பட்டது. இரண்டாம் கர்கன் கொல்லப்பட்டான்.

மேலிருக்கும் செய்திகள் விக்சனரியில் இடப்பட்டவை. வரலாற்றில் ஆர்வம் உள்ளோர். இதனை சரிபார்த்து கட்டுரை பக்கத்திற்கு மாற்றக் கோருகிறேன். வணக்கம். --உழவன் (உரை) 02:39, 1 பெப்ரவரி 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அரிஞ்சய_சோழன்&oldid=4062392" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அரிஞ்சய சோழன்" page.