பேச்சு:அ. தா. பன்னீர்செல்வம்
Untitled
தொகுசர் என்பது பட்டம். அது பெயரின் தலைப்பில் இருப்பது முறையில்லை. --Natkeeran 19:39, 19 ஜனவரி 2009 (UTC)
அன்னாசாமி -- அண்ணாசாமி? எழுத்துப்பிழை என்று கருதுகிறேன். --குறும்பன் 02:23, 20 ஜனவரி 2009 (UTC)
- அன்னாசாமி என்ற பெயரும் புழக்கத்தில் உண்டு. மேலும் இக்கட்டுரை இன்னும் விக்கிப் படுத்தப்பட வேண்டியுள்ளது. மேற்கோள்கள் எதுவும் தரப்படவில்லை.--Kanags \பேச்சு 04:34, 20 ஜனவரி 2009 (UTC)
இந்தக் கட்டுரையின் தலைப்பு தமிழ் விக்கிப்பீடியாவின் விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு முறைக்கு ஏற்றதல்ல. சர் போன்ற பட்டப் பெயர்கள் தலைப்பில் இடம்பெறுவதில்லை. ஏ டி போன்ற ஆங்கில சுருக்கங்களும் சரியல்ல. தமிழில் அழகான பெயர் இருக்க இது தேவையா. --Natkeeran 13:21, 6 பெப்ரவரி 2009 (UTC)
இவர் சுயசரிதை புத்தகத்தில் அன்னாசாமி என்றுதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உரைநடைப்படுத்த முயலுங்கள் அதை விக்கிப்பிடியா தனித்தமிழ் என்ற ஒரு சொல் தேவையில்லை. தமிழ் ஒரே தமிழ் தான். ஏற்கனவே இருந்தவர்கள் வாழ்ந்தவர்களை அவர்களை அப்படி அழைத்தவர்களை நாம் மாற்ற நினைப்பது அவரின் வரலாற்றை மாற்ற நினைப்பது போல் ஆகும் நம்முடையவர்களின் பலரின் பெயர் தமிழ்ப் பெயர் இல்லை அதற்காக நாம் அவர் பெயரை மாற்றுவது முறையாகாதோ அதைபோலத்தான் இதுவும். சர் என்ற பட்டம் அக்காலத்தில் மிக அரிதானவர்கள் வாங்கியதால் அப்படி சொல்லி அழைக்கிறார்கள் அவரை அப்படித்தான் அனைவருக்கும் தெரியும். மேலும் தகவல்களுக்கு பெரியார் வளைத்தளம், மற்றும் புத்தகங்கள் பார்க்கவும் ஆங்கில விக்கிப் பிடியா தளம் சென்று பார்க்கலாம். வரலாற்றை மாற்றுவது முரண்பாடான செயல். --செல்வம் தமிழ் 04:35, 7 பெப்ரவரி 2009 (UTC) ஏ டி என்ற சொல்லால் அவர் பெயர் அழைக்கப்படுகிறது. அவர் வாழ்ந்த காலம் ஆங்கில அரசின் ஆட்சிகாலத்தில். அவர் அறியப்படுதும் இந்த எழுத்துகளில்தான். அ தா என்ற எழுத்து தமிழகத்தில் கொச்சையாக பசன்படுத்தப்படும் வார்த்தைகளோடு பொருத்தி வாசிக்க வாய்ப்புள்ளது. நம்மை கட்டுரை எழுத சொல்லி இந்த மாமேதைகள் கேட்கவில்லை நாம் எழுதித்தான் புகழ் சேரவேண்டும் கட்டாயம் இல்லை பிறகேன் இந்த வீண் முயற்சி. விக்கிப்பிடியாவோ இந்த தளமோ பொறுப்பேற்காது பயனர்களை கை காட்டிவிடும் தமிழ் விக்கிப்பிடியாவுக்கு சொந்தமல்ல.--செல்வம் தமிழ் 06:15, 7 பெப்ரவரி 2009 (UTC)
- சர் என்ற அடைமொழி தலைப்பில் தேவையற்றது. கட்டுரையில் குறிப்பிடலாம். அவ்வாறே ஏனைய விக்கிப்பீடியாக்களிலும் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. மேலும், முதற்பெயர்களையும் தமிழில் எழுதுவதையே இப்போது வழக்காக்கி இருக்கிறோம். அதனால் மீண்டும் அ. தா. பன்னீர்செல்வம் என்ற தலைப்புக்கு மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Kanags \பேச்சு 06:23, 7 பெப்ரவரி 2009 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழில் தான் எழுத முயற்சி செய்கிறோம். தகவல் பகிர்வே எமது நோக்கு. தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழில் பெயர் இடுவதற்கு என்ன தயக்கம். சுயமரியாதைக்காக போராடிய ஒரு நபரின் பெயர் அவர் தாய்மொழியில் இருப்பது தவறா? --Natkeeran 15:20, 7 பெப்ரவரி 2009 (UTC)
சர் என்னும் பட்டத்தை தலைப்பில் இருந்து நீக்கிவிடலாம். கட்டுரையின் உள்அடக்கத்தில் அது இருப்பதே சிறப்பு. அது எப்போது கொடுக்கப்பட்டது போன்ற தகவல்களை சேர்க்கலாம். மேலும் தலைப்பை அ. தா. பன்னீர்செல்வம் என்று மாற்ற பரிந்துரைக்கிறேன். ஏ டி பன்னீர்செல்வம் என்பதை இக்கட்டுரைக்கு மீள் வழி படுத்தலாம். --குறும்பன் 03:17, 9 பெப்ரவரி 2009 (UTC)
- சர் என்னும் பட்டம் ஆங்கில விக்கிப்பீடியாவிலும் கொடுக்கப்பட்டுள்ளது, பெரியார் இணையத்தளத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு அரசியல் பிரமுகர்களுக்கும் ஒரு வட்டம் உள்ளது. இவர் உள் துறை அமைச்சராக பணிபுரிந்தவர் அரசு பதிவேடுகளிலும் அப்படித்தான் இருக்கும். இந்த சர்ச்சைகள் தமிழ் நாட்டுக்காரர்களுக்கு அவ்வளவாக எழுவதில்லை. தமிழகத்தில் உள்ளோர், அறிஞர்கள், ஒரு வேளைப் பயப்படுகிறார்களோ என்னவோ? தமிழகத்தார், தமிழ் பேராசிரியர்கள் அதிகம் பேர் பங்கெடுத்தால் இந்த சர்ச்சைகள் எழாது. பங்கெடுக்காமல் தடுப்பது இது போன்ற சர்ச்சைகளாக கூட இருக்கும். பலருக்கு இப்படி ஒரு இணையதளம் இருப்பது கூடத் தெரியவில்லை. விருப்பமும் காட்டவில்லை. பணி சுமைக் காரணமாகக் கூட இருக்கலாம். பல கட்டுரைகள் முற்றுப்பெறாத முரண்பாடான கட்டுரைகளாகத்தான் உள்ளது. பலருடைய பங்கு தகவல்களைக் கூட்டப் பயன்படவேண்டும். இது என்சைக்ளோ பீடியா. சர்ச்சைபீடியா அல்ல. கட்டுரை எழுதுவதின் நோக்கமே பலர் பங்கெடுப்பது வாசிப்பதில் தான் உள்ளது இல்லையேல் எழுதியவரும் இங்குள்ள ஒரு சில பயனரும் மட்டுமே மட்டுமே மாற்றி மாற்றி வாசித்துக் கொண்டிருக்கமுடியும். கொஞ்சநாளில் தளத்தைப் பார்ப்பதை வெறுத்துவிடுவர். கட்டுரை எழுத ஆர்வம் ஒன்றும் இல்லை எனக்கு வேண்டிய தகவல் ஆங்கிலத்தில் இருந்தது
தமிழில் இல்லை. நான் அறிந்ததை குக்கிராமத்தில் இருக்கும் என் தமிழ் மாணவருக்கு எட்டவேண்டும், தேர்வுக்கு பயன்படவேண்டும் அவ்வளவுதான். ஒவ்வொரு கட்டுரையும் எவ்வளவு பேர் பார்த்தனர் என்ற தகவல் இருந்தால் இன்னும் வளரிச்சிகூட்ட அதிகம் பேர் முனையலாம்.[செல்வம் தமிழ்--செல்வம் தமிழ் 05:14, 9 பெப்ரவரி 2009 (UTC)
http://en.wikipedia.org/wiki/Justice_Party_(India) இந்த தளத்திலும் உள்ளது இன்னும் பிற தளத்திலும் உள்ளது. அதேபோல் சர் பி டி தியாகராய செட்டி என்ற பெயரில் தான் குறிப்பிட்டுள்ளனர் இந்த காலகட்டத்தில் சாதிப்பெயரை நீக்க சட்டம் கொண்டுவரப்படவில்லை.அரசாங்கப்பதிவேடுகளில் அப்படித்தான் இருக்கும். தவிர இது வரலாறு என்பதால் அப்படியே குறிப்பிட்டுள்ளனர். தமிழில் விக்கி தலைப்பில் ராஜகோபாலாச்சாரி என்பதில் சாதிப்பெயர் உள்ளது நீக்கவேண்டிய அவசியம் இல்லை. செல்வம் தமிழ்--செல்வம் தமிழ் 09:41, 9 பெப்ரவரி 2009 (UTC)
- செல்வம், தலைப்புக் குறித்து இங்குள்ள உரையாடல்களை நீங்கள் சரிவர விளங்கிக் கொள்ளவில்லைப் போலத் தெரிகிறது. தலைப்பில் மட்டும் தான் "சர்" என்ற அடைமொழி தேவையில்லை என்கிறோம், கட்டுரையினுள்ளே சர் என்று அழைப்பதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. நீங்கள் தந்துள்ள ஆங்கில விக்கிக் கட்டுரையைப் பாருங்கள். அங்கு யாருக்காவது சர் என்ற தலைப்பில் கட்டுரை உள்ளதா? சர் பி. டி. தியாகராசச் செட்டி கட்டுரையை ஆங்கில விக்கியில் தேடிப் பாருங்கள் புரியும். இது குறித்து மேலும் உரையாட விரும்பவில்லை. வேறு யாராவது ஆட்சேபனை கிளப்பாதவிடத்து தலைப்பை தலைப்பை மீண்டும் மாற்றுவதாக உள்ளேன். நன்றி.--Kanags \பேச்சு 09:59, 9 பெப்ரவரி 2009 (UTC)
நான் உங்களை மாற்றவேண்டாம் என்று சொல்வில்லை அது உங்கள் விருப்பம். மாற்றுவது நான் மாற்றமாட்டேன் என்றுதான் சொன்னேன். அந்த தலைப்பு இன்னும் ஆங்கிலத்தில் எழுதப்படவில்லை ஆனால் சர் என்ற பெயரோடு இருக்கிறாதா அவ்வளவுதான் நீங்கள் கேட்டகேள்விக்கு சரியான பதில் கொடுத்துவிட்டேன். மாற்றுவது மாற்றாது உங்கள் விருப்பம் என்க்கு எதிலுமே ஆட்சேபணை இல்லை. யாரும் மருப்பு தெரிவிக்க மாட்டார்கள் பலருக்கு அவர் யார் என்று தெரியாது, பார்த்தால்தானே.--செல்வம் தமிழ் 10:19, 9 பெப்ரவரி 2009 (UTC)
- பார்க்க: Sir P. Theagaroya Chetty.--Kanags \பேச்சு 10:25, 9 பெப்ரவரி 2009 (UTC)
- பார்க்க: Sir C V Raman ஆங்கில விக்கியில் தலைப்பில் பட்டம் போட விடமாட்டார்கள், செல்வம் தவறாக புரிந்து கொண்டார் போலிருக்கிறது, தமிழ் விக்கியிலும் தலைப்பில் பட்டம் போட கூடாது என்பது கொள்கை முடிவு --குறும்பன் 02:48, 10 பெப்ரவரி 2009 (UTC)
புனித வளனார் கல்லூரி, நாகை
தொகுஇந்தக் கட்டுரையின் எழுதப்படாத இணைப்புகளை உருவாக்க நாகை புனித வளனார் கல்லூரி குறித்துத் தேடினேன். இணையத்தில் கிடைக்கவில்லை. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள்/தெரிந்தவர்கள் ஓர் குறுங்கட்டுரையைத் தொடங்கினால் நலம்.--மணியன் 02:10, 22 செப்டெம்பர் 2010 (UTC)
புனித வளனார் கல்லூரி என்பதே சரி. இதை ஆங்கிலத்தில் செயின்ட் ஜோசப் என்று கூறுவார்கள். --இளங்குமரன் 03:15, 22 செப்டெம்பர் 2010 (UTC)இளங்குமரன்--இளங்குமரன் 03:15, 22 செப்டெம்பர் 2010 (UTC)
- கட்டுரையைத் திருத்தியமைக்கு நன்றி இளங்குமரன்.நான் நாகையில் புனித வளனார் கல்லூரி அல்லது செயின்ட் ஜோசப்கல்லூரியைத் தான் தேடினேன். அவர்களுக்கு இணையதளம் இல்லை போலுள்ளது. ஆகவேதான் அறிந்தவர்கள் எழுதச்சொன்னேன். தகவல் பிழையாக இருப்பின் கட்டுரையிலும் மாற்றம் செய்தல் வேண்டும்.--மணியன் 12:03, 22 செப்டெம்பர் 2010 (UTC)அக்காலத்தில் திருச்சியில் தான் புனித வளனார் கல்லூரி இருந்ததாகத் தெரிகிறது.--மணியன் 12:05, 22 செப்டெம்பர் 2010 (UTC)