பேச்சு:இந்தியத் தங்க மாங்குயில்
செல்வா, நீங்கள் இந்த மாங்குயில் என்ற பெயரை எங்கிருந்து பெற்றீர்கள்? இலங்கையில் இதற்குரிய பொதுப் பெயர் மாம்பழத்தி என்பதாகும்.--பாஹிம் 09:00, 22 ஆகத்து 2011 (UTC)
- மாங்குயில் என்பது தமிழக வழக்கு. முனைவர் ரத்தினத்தின் தமிழ்ப் பறவை பெயர்கள் நூலில் உள்ளது.
பிற மொழி இணைப்பு
தொகுஇந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படும் மாங்குயில் உள்ளினம் Indian golden oriole எனப்படும் Oriolus kundoo. முன்பு Eurasian golden oriole எனப்படும் Oriolus oriolus-இன் உள்ளினமாகக் கருதப்பட்டு வந்த இது, தற்போது தனி இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது[1]. எனவே, இப்பக்கத்தின் (கட்டுரையின்) பிற விக்கியிணைப்புகள் மாற்றப்பட வேண்டும். --PARITHIMATHI (பேச்சு) 02:39, 5 திசம்பர் 2021 (UTC)
- மாங்குயில் என்ற இப்பக்கம் ஆங்கில இணைப்பான Eurasian golden oriole பக்கத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது (Indian golden oriole)(ஓரியோலசு குண்டூ) என்ற ஆங்கிலப் பக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இச்செயலானது இந்தியத் தங்க மாங்குயில் என்ற பக்கத்தினை இன்று நான் தொகுத்தப் பின்னர் தமிழ் பக்கத்திலிருந்த ஆங்கில இணைப்பினை நீக்கிவிட்டு, மாங்குயில் என்பதற்கு Indian golden oriole இணைப்பினை வழங்கியிருப்பது வருந்தத்தக்கது. --சத்திரத்தான் (பேச்சு) 08:44, 5 திசம்பர் 2021 (UTC)
தலைப்பு குறித்து
தொகுIndian golden oriole (Oriolus kundoo) என்பது தான் மாங்குயில். நேரடி மொழிபெயர்ப்பைத் தவிர்க்கவும். இந்தத் தலைப்பை நீக்கிவிட்டு, இதிலுள்ள தகவல்களை ஏற்கனவே உள்ள மாங்குயில் பக்கத்தில் உள்ளடக்கம் செய்யவும்.--PARITHIMATHI (பேச்சு) 08:11, 5 திசம்பர் 2021 (UTC)
- Indian golden oriole (Oriolus kundoo) என்பது தான் மாங்குயில் என்று எந்த அடிப்படையில் கூறுகின்றீர்கள் எனத் தெரியவில்லை. விலங்கியல் கட்டுரைகளை விலங்கியல் படிக்காதவர்கள் (குறிப்பாக வகைப்பாட்டியல்) தொகுப்பதால் வரும் விளைவுகள் இது. தாங்கள் முன்பு மேற்கோள் காட்டிய ரத்தனம் அவர்களின் புத்தகத்தினை உதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில் இந்த புத்தகத்தில் மாங்குயில் என்றப் பொதுப் பெயரினை Oriolus oriolus, Oriolus chinensis, Oriolus xanthornus என்ற மூன்று சிற்றினங்களுக்கும் வழங்கியுள்ளார். இச்சிற்றினங்களை அவற்றின் பிற பெயருடன் தங்கநிற மாம்பழக் குயில், கரும்பிடறி, கருப்புத்தலை மஞ்சள் குருவி என்றுதான் வேறுபடுத்தமுடியும். Oriolus kundoo என்ற சிற்றினம் குறித்த விவரம் தமிழில் பறவைப் பெயர்கள் புத்தகத்தில் இடம்பெறவில்லை. --சத்திரத்தான் (பேச்சு) 10:58, 5 திசம்பர் 2021 (UTC)
- தமிழ்நாட்டில் அதிகம் காணப்படும் (வலசை வரும்) Oriolus வகை பறவை மாங்குயில் என்றே தமிழகத்தில் அழைக்கப்பட்டு வருகிறது (இன்றும் பலரால் அவ்வாறே அழைக்கப்படுகின்றது); 2005 வரை Oriolus oriolus என்ற விலங்கியல் பெயரில் அழைக்கப்பட்ட இனப்பறவையின் உள்ளினமாக இது (அதாவது, மாங்குயில்) கருதப்பட்டு வந்தது. பாமெலா ராஸ்முசனும் ஜான் ஆன்டர்டனும் இணைந்து எழுதிய Birds of South Asia என்ற நூலில் முதன்முதலாக மாங்குயில் தனி இனமாக, அதாவது Oriolus kundoo (Indian golden oriole), என வகைப்படுத்தப்பட்டது. 2010-ஆம் ஆண்டில் மூலக்கூறுத் தொகுதி பரிணாம மரபியல் (molecular phylogenetic study) ஆய்வு மூலம் இது தனி இனமென உறுதி செய்யப்பட்டது[2]. எனவே, 2002-ல் வெளிவந்த க. ரத்னம் (தமிழ்நாட்டுப் பறவைகள்) நூலில் Oriolus oriolus என்றே உள்ளதில் வியப்பில்லை[3]. ஆனால், 2021ல் வெளியிடப்பட்ட இந்நூலில்[4] Indian golden oriole (Oriolus kundoo) மாங்குயில் என்றே (எந்தவிதப் பெயரடையுமின்றி) குறிப்பிடப்பட்டுள்ளது. நேரடி மொழிபெயர்ப்பை ஏன் தவிர்க்க வேண்டும் எனில், தமிழில் அதற்கான சொல் இல்லை என்று ஒத்துக்கொள்வதற்கு சமம் (தமிழிலேயே வளம் இல்லை என்று கூட சொல்ல முற்படுவார்கள் பிறர்). இது குறித்து (நேரடி மொழிபெயர்ப்பு), பறவையியல் ஆர்வலர்களும் பறவை நோக்கல் களத்திலுள்ளவர்களும் பல தருணங்களில் வருத்தப்படுவதுண்டு. இது தவிர, விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஆதாரம் தான் சரியான முறையில் தர வேண்டுமே தவிர, துறை விற்பன்னராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.--PARITHIMATHI (பேச்சு) 14:14, 5 திசம்பர் 2021 (UTC)
- இந்தியத் தங்க மாங்குயில் இங்கிலாந்தினைச் சார்ந்த இயற்கை ஆர்வலர் வில்லியம் ஹென்றி சைக்சு என்பவரால் 1832இல் விவரிக்கப்பட்டது. இதற்கு ஓரியோலசு குண்டூ என்ற இருசொல் பெயர் வழங்கப்பட்டது.[5] ஆரம்பத்தில் ஒரு தனி இனமாக விவரிக்கப்பட்டாலும், இந்திய தங்க மாங்குயில் பொதுவாக யூரேசிய தங்க மாங்குயிலின் துணையினமாகக் கருதப்பட்டது. 2005ஆம் ஆண்டில், பறவையியல் வல்லுநர்களான பமீலா ராசுமுசென் மற்றும் ஜான் ஆண்டர்டன் ஆகியோர் தெற்காசியாவில் பறவைகள் நூலில் உருவவியல், இறகுகள், அழைப்புகள் மற்றும் இரண்டு வகைகளும் ஒன்றோடொன்று சேராததின் அடிப்படையில் இரண்டு வகைகளையும் தனித்தனி இனங்களாகக் கருத முடிவு செய்தனர். இந்த கருத்திற்கான ஆதரவு 2010இல் வெளியிடப்பட்ட மூலக்கூறு தொகுதி வகைப்பாடு ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டது.[6] மேலும் பெரும்பாலான பறவையியலாளர்கள் இப்போது இந்தியத் தங்க மாங்குயிலைத் தனிச் சிற்றினமாகக் கருதுகின்றனர்.[7]--சத்திரத்தான் (பேச்சு) 14:41, 5 திசம்பர் 2021 (UTC)
- Indian golden oriole (Oriolus kundoo) என்பது தான் மாங்குயில் என்று எந்த அடிப்படையில் கூறுகின்றீர்கள் எனத் தெரியவில்லை. விலங்கியல் கட்டுரைகளை விலங்கியல் படிக்காதவர்கள் (குறிப்பாக வகைப்பாட்டியல்) தொகுப்பதால் வரும் விளைவுகள் இது. தாங்கள் முன்பு மேற்கோள் காட்டிய ரத்தனம் அவர்களின் புத்தகத்தினை உதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில் இந்த புத்தகத்தில் மாங்குயில் என்றப் பொதுப் பெயரினை Oriolus oriolus, Oriolus chinensis, Oriolus xanthornus என்ற மூன்று சிற்றினங்களுக்கும் வழங்கியுள்ளார். இச்சிற்றினங்களை அவற்றின் பிற பெயருடன் தங்கநிற மாம்பழக் குயில், கரும்பிடறி, கருப்புத்தலை மஞ்சள் குருவி என்றுதான் வேறுபடுத்தமுடியும். Oriolus kundoo என்ற சிற்றினம் குறித்த விவரம் தமிழில் பறவைப் பெயர்கள் புத்தகத்தில் இடம்பெறவில்லை. --சத்திரத்தான் (பேச்சு) 10:58, 5 திசம்பர் 2021 (UTC)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Indian Golden Oriole | Manja Kili | Oriolus kundoo | Eurasian Golden Oriole | മഞ്ഞക്കിളി | Wildlife". youtube.com. பார்க்கப்பட்ட நாள் 05 Dec 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Indian golden oriole -- Taxonomy and systematics". en.wikipedia.org. பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2021.
- ↑ க. ரத்னம் (2002). தமிழ்நாட்டுப் பறவைகள். பக். 159 (316)
- ↑ தமிழ்நாடு வனத்துறை – இராமநாதபுரம் வனஉயிரின கோட்டம். இராமநாதபுரம் மாவட்டப் பறவைகள். பக். 169
- ↑ William Henry Sykes (1832). "60. Oriolus kundoo". Proceedings of the Committee of Science and Correspondence of the Zoological Society of London (2): 87. https://biodiversitylibrary.org/page/26730762.
- ↑ Jønsson, K.A.; Bowie, R.C.K.; Moyle, R.G.; Irestedt, M.; Christidis, L.; Norman, J.A.; Fjeldså, J. (2010). "Phylogeny and biogeography of Oriolidae (Aves: Passeriformes)". Ecography 33 (2): 232–241. doi:10.1111/j.1600-0587.2010.06167.x.
- ↑ Lepage, Denis. "Indian Golden-Oriole Oriolus kundoo Sykes, 1832". Avibase. பார்க்கப்பட்ட நாள் 20 December 2017.