பேச்சு:இந்திய மக்கள்

பொருத்தமற்ற படம் எனத் தோன்றினால், பேச்சுப் பக்கத்தின் வாயிலாக கட்டுரையாளருக்கு கருத்தினைத் தெரிவித்தலே முறையானதாகும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:53, 11 திசம்பர் 2016 (UTC)Reply

ஒவ்வொன்றுக்கு கேட்டுக் கொண்டு செய்ய வேண்டும் என் விக்கி அறிவுறுத்தவில்லை. தொகுப்புச் சுருக்கத்தில் காரணம் தெரிவித்துள்ளேன். ஆட்சேபனை என்றால் குறிப்பிட்டவரிடம் காரணம் கேட்கலாம். --AntanO 09:12, 11 திசம்பர் 2016 (UTC)Reply

விக்கி வரையறையிட்டுக் கூறாத எவ்வளவோ நல்ல விசயங்களை நல்லெண்ண அடிப்படையில் இங்கு செய்து வருகிறோம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. கட்டுரையாளர் அண்மைக்காலத்தில் குறிப்பிடத்தக்க அளவில் பணியாற்றி வருபவர். அவருக்கு முறைப்படி தெரிவித்தல் நன்று. எவருக்கும் கரிசனம் காட்ட வேண்டும் எனச் சொல்லவில்லை. உடனடியாக பங்கம் ஏற்படாத ஒரு விசயத்தை தெரிவிக்கலாமே என்பதுதான் எனது நிலைப்பாடு. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:44, 11 திசம்பர் 2016 (UTC)Reply

சொந்தக் கருத்துக்களைவிடுத்து, விக்கி வழிகாட்டல் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி. --AntanO 09:46, 11 திசம்பர் 2016 (UTC)Reply

இது சொந்தக் கருத்தல்ல. விக்கியில் பங்களிக்கும் பலரின் கருத்து. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:55, 11 திசம்பர் 2016 (UTC)Reply

அது விக்கி வழிகாட்டலா? அதைத்தான் கடைப்பிடிக்கச் சொல்லி விதி இருக்கிறதா? --AntanO 09:57, 11 திசம்பர் 2016 (UTC)Reply
விக்கிப்பீடியா:துணிவு கொள் என்பதே இங்கு கேள்விக் குறியாகிறது. --AntanO 09:59, 11 திசம்பர் 2016 (UTC)Reply

துணிவற்று இருங்கள் என்று நான் சொல்லவில்லை. பயனர் நல்லுறவு என்பதையும் கவனிக்கவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:06, 11 திசம்பர் 2016 (UTC)Reply

விக்கிப்பீடியா:நல்லெண்ண நம்பிக்கை எனும் விதி அனைவருக்கும் பொருந்தும். இத்துடன் முடித்துக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:13, 11 திசம்பர் 2016 (UTC)Reply

என் பயனர் பேச்சுப்பக்கத்தில் குறித்த பயனர் விமர்சனம் செய்யும் போது, அவருக்கு இந்த பயனர் நல்லுறவு பற்றிய குறிப்பு உதவியாக இருக்கும். இங்கு பொருத்தமற்றது. நல்லெண்ண நம்பிக்கை நான் செய்த தொகுப்புக்கு வரவில்லையா? --AntanO 10:15, 11 திசம்பர் 2016 (UTC)Reply
இந்தக் கட்டுரையை விக்கித் தரவில் இணைக்கவில்லை என்பதற்கு வார்ப்புரு போடப்படுகிறது. எந்த ஒரு பயனரும் அதைச் செய்திருக்க முடியும். ஆனால் பிரசுரமாகும் பக்கத்தில் கண்ணுக்குத் தெரியாத, தொகுப்புப் பக்கத்தில் மட்டுமே தெரியும் File என்ற ஆங்கில சொல் படிமம் என மாற்றப்பட்டுள்ளது. அதை மாற்றிய பயனர் தரவு இணைப்பையும் கொடுத்திருக்க முடியும். வேறு பயனர்களின் எத்தனையோ கட்டுரைகளை நான் பிழைகள் நீக்கி, சான்று சேர்த்து மேம்படுத்தியிருக்கிறேன்.
ஆங்கில விக்கியில் ஒரு கட்டுரையை, கட்டுரைப் பகுதியை அல்லது படத்தை நீக்குவதானால் வார்ப்புரு இட்டு, எழுதிய பயனரின் பேச்சுப் பக்கத்தில் அது பற்றி எழுதி, அவசியமானால் அது பற்றி உரையாடி அதன் பின் தான் நீக்குகிறார்கள். தமிழ் விக்கியில் அதற்கு வார்ப்புரு கிடையாதா? ஒரு பயனர் ஒன்றை எழுத அல்லது படத்தைத் தேடி எடுத்துச் சேர்க்க எவ்வளவு முயற்சியும், பணமும் செலவிட்டிருப்பார். "செய்பவனுக்குப் பலநாள் வேலை, அடித்து நொறுக்குபவனுக்கு ஒரு நிமிட வேலை" என்பது போல 'பொருத்தமில்லை' எனக் குறிப்பிட்டுவிட்டு படம் நீக்கப்பட்டது. இந்தக் கட்டுரையின் வேறு மொழி இணைப்புகளைப் பார்த்தால் முழுமையாக எழுதப்பட்ட ஏறக்குறைய எல்லா மொழிக் கட்டுரைகளில் இதே போன்ற படம் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக Bahasa Indonesia, இந்தி, உருது, அரபு கட்டுரைகளில் இது போன்ற படம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படம் பொதுவகத்தில் உள்ள படம். அதை இணைப்பதால் தமிழ் விக்கிக்கு என்ன சிக்கல் இருக்கமுடியும் என்பது புரியவில்லை. இந்த நிர்வாகி நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகையில் நான் அவரை விமர்சனம் செய்ததாக ஒரு குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார். மற்ற நிருவாகிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் என்மீது தானே நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவுறுத்தியிருக்கிறார். நான் அதை வரவேற்று என்னை நிரந்தரமாக தடை செய்யும்படி கோரியுள்ளேன். ஏனென்றால் இங்கு பங்களிக்கும் நிலை இருந்தால் மனம் கேளாமல் நான் வந்து பங்களிக்கவே செய்வேன். ஆகவே வர முடியாதபடி தடை விதிக்கட்டும். அவர் தடை விதித்தால் யாரும் அவரைக் கேள்வி கேட்க முடியாதபடி நானே ஒப்புதல் தந்து அவர் நடவடிக்கை எடுக்க உதவியுள்ளேன். --UKSharma3 10:29, 11 திசம்பர் 2016 (UTC)
கட்டுரை வளர்ச்சிக்கு ஆரோக்கியமற்ற உரையாடல். --AntanO 10:44, 11 திசம்பர் 2016 (UTC)Reply

புரிதல்கள்

தொகு

@Selvasivagurunathan m and Uksharma3: //பொருத்தமற்ற படம் எனத் தோன்றினால், பேச்சுப் பக்கத்தின் வாயிலாக கட்டுரையாளருக்கு கருத்தினைத் தெரிவித்தலே முறையானதாகும்// எனில் கட்டுரையில் ஏதேனும் திருத்தம் செய்யுமுன் அந்த கட்டுரையில் பங்களித்தவருக்குச் சொன்ன பின்னரே திருத்த வேண்டும் என்பதாகக் கொள்ளளாமா. இது நடைமுறைக்கு ஏற்புடையதா?

//அதை மாற்றிய பயனர் தரவு இணைப்பையும் கொடுத்திருக்க முடியும்// குதிரையால் போரிலும், உழவிலும், பொதி சுமக்கவும் பங்களிக்க முடியும். எனினும் குதிரை எங்கு பங்களிக்க வேண்டும் என்பது அதன் ஆண்டையைப் பொருத்தது என்ற கருத்தை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

//இந்தக் கட்டுரையின் வேறு மொழி இணைப்புகளைப் பார்த்தால் முழுமையாக எழுதப்பட்ட ஏறக்குறைய எல்லா மொழிக் கட்டுரைகளில் இதே போன்ற படம் சேர்க்கப்பட்டுள்ளது// அது அவர்களின் புரிதலுக்கேற்ப உள்ளதேயன்றி சரியானது என்று ஏற்கமுடியாது.

//அதை இணைப்பதால் தமிழ் விக்கிக்கு என்ன சிக்கல் இருக்கமுடியும் என்பது புரியவில்லை//

  • முதலில் இக்கட்டுரை இந்திய மக்களைப் பற்றியதா, இந்திய வம்சாவழி மக்களைப்பற்றியதா?
  • கட்டுரையின் தற்போதைய உள்ளடக்கத்துக்கும் படத்துக்குமான முரண்பாட்டால் புரிதலில் குழப்பமேற்படலாம். இப்போதுள்ள உள்ளடக்கத்தின்படி இப்பக்கத்தில் முன்பிருந்த படத்திலிருப்போர் பலரை இந்தியர்களாகக் (நாட்டின் குடியுரிமை பெற்றவர்) கருத முடியாது. குறிப்பாக முதல் இரு வரிசைகளிலிருப்போர், மேலும் கல்பனா சாவ்லா இந்தியரா? எனில் விக்கிப்பீடியாவிலேயே முரண்!! காண்க கல்பனா சாவ்லா. பெர்வேஸ் முஷாரஃப் இந்தியரா மன்மோகன் சிங் இந்தியரா? இவற்றிலிருந்து என் போன்றோரின் குழப்பங்களை உணர்ந்துகொள்வீர்கள் என்றெண்ணுகின்றேன்.
  • சச்சின் டெண்டுல்கர் ஏன் இடம்பெற்றார்? ஏன் கபில்தேவ் / அனில் கும்ப்ளே / மகேந்திரசிங் தோனி இடம்பெறவில்லை போன்ற கேள்விகளுக்கு விடையென்ன?

//வேறு பயனர்களின் எத்தனையோ கட்டுரைகளை நான் பிழைகள் நீக்கி, சான்று சேர்த்து மேம்படுத்தியிருக்கிறேன். இங்கு பங்களிக்கும் நிலை இருந்தால் மனம் கேளாமல் நான் வந்து பங்களிக்கவே செய்வேன்// நீங்கள் உண்மையான தன்னார்வலர்!! எல்லா கட்டுரைகளும் எல்லோருக்கும் சொந்தமானது என்பதற்கேற்ப எப்போதும்போல் பங்களிக்க வேண்டுகின்றேன்.

@AntanO: //விக்கி வழிகாட்டல் இருந்தால் தெரிவிக்கவும்// விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகையிலுருப்பதை இங்கு கொண்டுவருவதற்கு மன்னிக்கவும். //நிருவாகிகள் யாரும் நடவடிக்கை எடுக்காவிட்டால் நான் நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் குறிப்பிட்டுக் கொள்கிறேன்// வாத எதிர்வாதத்தில் ஈடுபட்டுள்ள, வழக்கில் தொடர்புள்ள நிருவாகியான தாங்கள் எந்த விதியின்படி எவ்வாறான நடவடிக்கை எடுக்க உள்ளீர்கள் என்றறிய விழைகின்றேன். - ʋɐɾɯɳபேச்சு 14:47, 11 திசம்பர் 2016 (UTC)Reply

@Wwarunn: நீங்கள் கேள்விகளைக் கேட்டிருப்பதால், இங்கு மீண்டும் எழுதுகிறேன்:-
1. எல்லாத் திருத்தங்களையும் கேட்டுச் செய்யுங்கள் எனச் சொல்லவில்லை. இந்தப் படிமத்தைப் பொறுத்தளவில் அன்டனின் நிலைப்பாடு அச்சமயத்தில் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது ஒரு குறிப்பிடத்தக்க முடிவு. இதனை கட்டுரையை உருவாக்கியவருக்குத் தெரிவித்து, தேவைப்பட்டால் உரையாடி அதன்பிறகு செய்யலாமே? சில மணி நேரங்களோ, ஒரு நாளோ பொறுப்பதால் கட்டுரைக்கு எவ்வித பங்கமும் இல்லை. சம்பந்தப்பட்ட இரு பயனர்களும் தினந்தோறும் விக்கியில் பங்களிப்பவர்கள். மேலே குறிப்பிட்டுள்ளபடி, கட்டுரையை உருவாக்கியவர் அண்மைக்காலத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துவருபவர். தமிழ் விக்கியின் சில விதிகள்மீது மாற்றுக் கருத்து கொண்டிருந்தாலும், சிறப்பான பங்களிப்பினை செய்துவருபவர். இவருக்கென்று கட்டுரை இலக்கில்லை. தொகுக்கும் கட்டுரையிலிருந்து சங்கிலித் தொடர் போலச் சென்று, பிற கட்டுரைகளில் மாற்றங்கள் செய்கிறார். தேவைப்படும்போது புதிய கட்டுரைகளை உருவாக்குகிறார். யாருக்கும் கரிசனம் காட்டுங்கள் என்றோ, சலுகை கொடுங்கள் என்றோ சொல்லவில்லை. இதுவொரு தன்னார்வப் பணி. எனவே அலுவலகத்து அதிகாரி போன்று செயல்பட வேண்டியதில்லை. பராமரிப்புப் பணிகளுக்கு நான் எதிரானவன் அன்று. அதே நேரத்தில் அனைத்துப் பயனருக்கும் மரியாதை (dignity) இருக்கிறது.
2. இதுவொரு தன்னார்வப் பணி என்பதால் பயனர் தரவு இணைப்பு குறித்து நான் பேச விரும்பவில்லை.
3. இந்தப் படிமம் விக்கியில் இருக்கலாமா இருக்கக்கூடாதா என்பது குறித்து நான் இன்னும் சிந்திக்கவில்லை. ஆனால் நீங்கள் எழுப்பிய 3 கேள்விகளை கவனிக்கும்போது, இந்தப் படிமத்தைச் சேர்ப்பது / சேர்க்காமல் இருப்பது குறித்த முடிவு குறிப்பிடத்தக்கது என்பதனை நீங்கள் உணர்வீர்கள் என நம்புகிறேன். உரையாடிச் செய்வதுதானே முறை.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:30, 11 திசம்பர் 2016 (UTC)Reply
கவனித்துப் பார்த்ததில் - இவ்வகையான படிமங்களை இணைப்பது குறித்து தனது கருத்தினை அன்டன் ஆலமரத்தடியில் பதிவிட்டதற்கும், irrelevant எனக் குறிப்பிட்டு செய்த தொகுப்பிற்கும் இடையே 5 மணிநேர இடைவெளியே இருந்திருக்கிறது. இந்திய நேரத்தைப் பொறுத்தளவில் நள்ளிரவு 2 மணி - காலை 7 மணி. இதையெல்லாம் எடுத்தெழுதுவது நன்றாக இல்லைதான். என்ன நடந்துள்ளது என்பது உங்களுக்கு முழுமையாகத் தெரியவேண்டும் என்பதுதான் நோக்கம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:49, 11 திசம்பர் 2016 (UTC)Reply

@Wwarunn:, உங்கள் கேள்விக்கு இப்பக்கத்தில் பதிலளிப்பது பொருத்தமற்றதாக உணர்வதால் உங்கள் பேச்சுப் பக்கத்தில் பதில் அளிக்கிறேன்.

செல்வசிவகுருநாதன் என்னைக் குறிப்பிட்டதால் பதில். ஆலமரத்தடியில் பதிவிட்டதற்கும் இக்கட்டுரையில் பதிவிட்டதற்குமிடையில் ஒரு கண்டுபிடிப்புச் செய்துள்ளார். ஆனால், இக்கட்டுரையில் குறிப்பிட்டது 7:20 இற்கு, ஆலமரத்தடியில் பதிவிட்டது 7:29 இற்கு (என் பங்களிப்புத் தொகுப்பைப் பார்க்கவும்). இதற்கு முன் 23 நவம்பர் 2016 அன்று இதை ஒத்த தொகுப்பை சிங்களவர் கட்டுரையில் செய்துள்ளேன். அதன் பிறகும் ஆங்கிலேயர், தமிழர் ஆகிய கட்டுரைகளில் செய்துள்ளேன். இதனை கண்டுபிடிக்கவில்லை அல்லது கண்டுகொள்ளவில்லை. எனவே குறிப்பிட்ட பயனருடன் முரண்படுவதாக என்னைக் காட்ட முயல்வது முறையற்றது. மேலும் சிங்களவர் கட்டுரையில் குறிப்பிட்ட தொகுப்பைச் செய்ய யாரிடம் அனுமதி பெற வேண்டும் அல்லது கலந்துரையாட வேண்டும்? இக்கட்டுரையைத் துவக்கியவர் தமிழ் விக்கிப்பீடியாவில் முக்கியமானவர். அவரிடம் கேட்டிருக்க வேண்டுமா அல்லது அதன் பின் பங்களிப்புச் செய்யத இவர்களில் யாரிடம்? இவர்களும் முக்கியமானவர்களே. முரண்பாடு இருந்தால், கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் உரையாடிச் செய்ய வேண்டும் என்பது ஏற்புடையது. ஆனால் இங்கு முரண்பாடு இல்லாமல் மேற்கொண்ட திருத்தத்திற்கு முன்னறிவிப்புத் தேவையற்றது. மேலும், கட்டுரையைத் துவக்கியவர், பங்களிப்புச் செய்தவர் என யாரும் உரிமை கோர முடியாது. இந்த ஆக்கத்தைச் சேமிப்பதன் மூலம் நீங்கள், பயன்பாட்டு விதிமுறைகளை ஏற்றுக் கொண்டு, CC BY-SA 3.0, GFDL ஆகிய பதிப்புரிமை விதிகளுக்கு உட்பட்டு உங்கள் பங்களிப்புகளைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள மாற்றமின்றி ஒப்புதல் அளிக்கிறீர்கள். அத்துடன், CC BY-SA 3.0 பதிப்புரிமையை இங்குள்ள சுட்டி மூலம் விளங்கிக் கொண்டுள்ளீர்கள் எனவும் உடன்படுகிறீர்கள். என்ற ஒப்புதலை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையை விளங்கிக் கொள்ளாமல், கட்டுரையை உருவாக்கியவருக்குத் தெரிவித்து, தேவைப்பட்டால் உரையாடி அதன்பிறகு செய்யலாம் என்பது CC BY-SA 3.0, GFDL ஆகிய பதிப்புரிமை விதிகளுக்கு முரணானது. --AntanO 02:06, 12 திசம்பர் 2016 (UTC)Reply

//இக்கட்டுரையில் குறிப்பிட்டது 7:20 இற்கு, ஆலமரத்தடியில் பதிவிட்டது 7:29 இற்கு (என் பங்களிப்புத் தொகுப்பைப் பார்க்கவும்). // படம் நீக்கப்பட்ட 'பின்னரே ஆலமரத்தடியில் அது குறித்த கொள்கை பதிவிடப்பட்டது.--UKSharma3 03:19, 12 திசம்பர் 2016 (UTC)

அது கொள்கை அல்ல. --AntanO 03:43, 12 திசம்பர் 2016 (UTC)Reply
@AntanO:
(1) //ஒரு கண்டுபிடிப்புச் செய்துள்ளார்// என்பது போன்ற கேலியும், கிண்டலும் கலந்த எகத்தாளப் பேச்சினைத் தவிர்த்து கண்ணியமாக உரையாடவும். பார்க்க: விக்கிப்பீடியா:கண்ணியம்
(2) //இதனை கண்டுபிடிக்கவில்லை அல்லது கண்டுகொள்ளவில்லை// என குறிப்பிட்டிருக்கிறீர்கள். விக்கிப்பீடியாவில் அன்டன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என 24 மணி நேரமும் கண்காணிப்பதுதான் எனது வேலையா என்ன?
(3) கட்டுரையை உருவாக்கியவர் முக்கியமானவர் என நான் எங்கும் குறிப்பிடவில்லை. சக பயனரின் பதிலுரையை நன்றாக படித்துணர்ந்து அதற்குப் பிறகு பதிலளித்தலே விக்கிப்பீடியா தளத்திற்கு நன்மை தரும்.
(4) எனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துவிட்டேன். போதுமான விளக்கங்களை பட்டியலிட்டுள்ளேன். விக்கிப்பீடியாவில் நான் செய்யவேண்டிய பணிகள் இருக்கின்றன. இந்தப் பக்கத்தில் பேசுவதை இத்தோடு முடித்துக்கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:25, 12 திசம்பர் 2016 (UTC)Reply
இவ்விவாதத்தில் பங்குகொண்ட அனைவருக்கும் ...
ஆலமரத்தடி பதிவு குறித்த நேரத்தை குறிப்பிடுவதில் தவறு செய்துள்ளேன். (ஆலமரத்தடியில் எனக்குத் தெரிந்த நேரம் UTC என்பதனை இப்போதுதான் உணர்ந்தேன்). தவறான தகவலை அறியாமல் எழுதியதற்காக வருந்துகிறேன்; மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:41, 12 திசம்பர் 2016 (UTC)Reply
இந்தக் கண்ணியத்தை என் பேச்சுப் பக்கத்தில் விமர்சனம் செய்தவரிடம் தெரிவித்திருக்கலாம் (தெரிவிப்பது அல்லது தெரிவிக்காமல் விடுவது அவரவர் விருப்பம்) அல்லது நான் எத்தனை மணிக்கு என்ன செய்தேன் என்பதை இங்கு தெரிவிக்கும் முன் யோசித்திருக்கலாம். அது கண்ணியமா? //விக்கிப்பீடியாவில் அன்டன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என 24 மணி நேரமும் கண்காணிப்பதுதான் எனது வேலையா என்ன?// இங்கு படிமத்தை நீக்குகிறேன் என்பதைப் கண்டு, பேச்சைத் தொடந்ததை எந்த வகைக்கும் அடக்குவது? விக்கிப்பீடியாவில் அன்டன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என 24 மணி நேரமும் கண்காணிப்பதுதான் எனது வேலையா என்ன? இப்படிக்குறிப்பிடுவது விக்கிப்பீடியா:கண்ணியம் ஆகவுள்ளதா? பேச்சின் தொடர்ச்சியை விளங்கிக் கொண்டு பேச வேண்டும். யாரையும் 24 மணி நேரமும் கண்காணிக்கச் சொன்னேனா? என்னைப் பற்றி தனி விமர்சனம் செய்யலாம், அதைப்பற்றி முறையிட்டாலும் கண்டு கொள்வதாயில்லை. ஆனால் அதையெல்லாம் பொருத்துக் கொண்டு கண்ணியமாக உரையாட வேண்டுமா? பிரச்சனையை அணுக வேண்டிய வழியைவிட்டுவிட்டு, வேறு வகையில் தீர்வு காண முடிய வேண்டாம், முதலில் ஏற்பட்ட முக்கிய சிக்கலுக்கு வழியைக் காணப்பாருங்கள். --AntanO 04:57, 12 திசம்பர் 2016 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இந்திய_மக்கள்&oldid=2153595" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இந்திய மக்கள்" page.