பேச்சு:இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்

இக்கட்டுரைத் தலைப்பு தவறென நினைக்கிறேன். ஏனெனில், தமிழகம் என்பது தனி நாடல்ல. தமிழகத்துக்கென்று தனியான விடுதலைப் போராட்டம் இருந்ததா?--பாஹிம் (பேச்சு) 12:05, 7 மே 2012 (UTC)Reply

இக்கட்டுரையை ஒரு பட்டியலாக அல்லாமல் "இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்" என்று தலைப்பிட்டு பொதுவான ஒரு அறிமுகத்துடன் ஆரம்பித்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களைப் பட்டியல் படுத்தலாம்.--Kanags \உரையாடுக 12:17, 7 மே 2012 (UTC)Reply
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள் என்று தலைப்பு இட்டால் பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.karthim02
கனக்ஸ், குறிப்பிடுவது போல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள் எனும் தலைப்பிட்டு சிறிய அறிமுக உரையிடலாம். அதன் பிறகு உள் தலைப்புகளில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி என மாநிலம் வாரியாகவும் பிரிக்கலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:08, 7 மே 2012 (UTC)Reply

தமிழர்கள் என்று குறிப்பிடப்பட்டால் ஜான்சி ராணி படை இக்கட்டுரையையும் கவனிக்கவும். மேலும் பாளையக்காரர்கள் பற்றி இக்கட்டுரையில் காணோமே.?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:44, 8 மே 2012 (UTC)Reply

தகவல் தேவை தொகு

//ஆனால் 1749 முதல் 1753 வரை திருச்சியில் நடைபெற்ற பெரும் போரில் கர்நாடகம், தஞ்சாவூர், மைசூர் ஆகிய நாடுகளின் படைகள் ஒன்று சேர்ந்து எதிர்த்த போதும் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டது. //

கட்டுரையில் மேலுள்ள வாக்கியத்திற்கான போர் எங்கே எப்போது எவரெபரால் நடத்தப்பட்டது எனக் கூற இயலுமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:35, 18 மே 2012 (UTC)Reply

நன்றி தென்காசி: இது கர்நாடகப் போர்களைக் குறிக்கும். கட்டுரையில் இது பற்றிய தகவல்களைச் சேர்க்கிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:32, 19 மே 2012 (UTC)Reply

வீரன் மாவீரன் என்ற அடைமொழிகள் அவசியம்தானா? தொகு

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விடுதலை வீரர்கள் என்ற பகுதியின் கீழிருக்கும் பட்டியலில் சிலருக்கு வீரன் மாவீரன் என்றெல்லாம் அடைமொழிகள் கொடுக்கப்பட்டிருகின்றவே. இவை அவசியம் தானா என்று அலோசிக்கவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:29, 13 செப்டம்பர் 2013 (UTC)

கு. காமராசர் தொகு

வரிசை எண்(147 ) இறுதியில் குறிப்பிடப் பட்டுள்ள 'காமராசர் ' ஏற்கனவே, வரிசை எண் 72ல் குறிப்பிடப்பட்டுள்ளார் . எனவே , நீக்கம் செய்துள்ளேன். Helppublic (பேச்சு) 09:14, 29 சூன் 2020 (UTC)Reply

Return to "இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்" page.