பேச்சு:இந்தோனேசியா

இந்தோனேசியா எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia



இந்தோனேசியா உலகின் மிகப் பெரிய முஸ்லிம் நாடு என்பதே சரியாகும். இங்கு கட்டுரையில் இது உலகிலேயே முஸ்லிம்கள் கூடிய நாடு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில் முஸ்லிம்களின் தொகை மிகக் கூடிய நாடு இந்தியா என்றே பல்வேறு தரவுகளும் கூறுவதைப் படித்திருக்கிறேன். தயவு செய்து அதனை மீண்டும் ஒரு முறை சரிபார்க்கவும்.--Fahimrazick 14:57, 3 செப்டெம்பர் 2010 (UTC)Reply

ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள இந்தப்பக்கத்தின்படி இந்தியாவின் முசுலிம் மக்கள்தொகை 160,945,000 மற்றும் இந்தோனேசியாவினது 202,867,000 ஆகும்.ஆகவே குறிப்பிட்டபடி இந்தோனேசியா உலகின் முஸ்லிம்கள் மிகக் கூடிய நாடு என்பதில் தவறில்லை.அதே விக்கியின் இந்தப் பட்டியலின்படி முசுலிம் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் முதலிடம் வகிப்பது இந்தோனேசியா ஆகும்.இதனை கடைசிநேரத் தரவுகளுடன் சரிபார்த்தல் அவசியமானது.--மணியன் 15:16, 3 செப்டெம்பர் 2010 (UTC)Reply

கட்டுரையில் இந்தோனேசியாவில் இஸ்லாம் சுமாத்திராவின் வட பகுதியிலேயே முதலில் பரவியது என்றுள்ளது. அது அச்சே சுல்தானகம் என்று குறிப்பிடப்படுகிறது. ஆயினும், களிமந்தானிலேயே முதன் முதலில் இஸ்லாம் பரவியதாக இந்தோனேசியாவில் பரவலான நம்பிக்கை நிலவுகிறது.--பாஹிம் (பேச்சு) 03:19, 18 சனவரி 2015 (UTC)Reply

இருக்கும் ஆவணங்கள் இந்தோனேசியாவில் வட சுமத்திராவிலேயே இசுலாம் முதலில் பரவியதாக தெரிவிக்கின்றன. [1] களிமந்தானிலேயே முதன் முதலில் இசுலாம் பரவியதாக ஆவணங்கள் இருந்தால் அதையும் தெரிவிக்கலாம்--குறும்பன் (பேச்சு) 16:10, 18 சனவரி 2015 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இந்தோனேசியா&oldid=1790456" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இந்தோனேசியா" page.