பேச்சு:இராஜஹிய விக்கிரமய
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
silent film என்பதற்கு “ஊமைப் படம்” என்று எழுதலாமா? தியடோர் பாஸ்கரன் “சலனப் படம்” என்று அவரது நூல்களில் மொழி பெயர்த்துள்ளார்.--சோடாபாட்டில்உரையாடுக 07:19, 19 சனவரி 2011 (UTC)
- சோடாபாட்டில் “ஊமைப் படம்”, “சலனப் படம்” என்ற இருவார்த்தைப் பதங்ககளும் பாவிக்கப்படுகின்றன. இதில் மிகவும் சரியானது எது என என்னால் தீர்மானிக்க முடியவில்லை --P.M.Puniyameen 07:30, 19 சனவரி 2011 (UTC)
- எனக்கும் குழப்பமாக உள்ளது. இந்தப் படங்களில் பின்னணி இசை உண்டா? உண்டெனில் ”ஊமை” என்பதே சரி. (ஊமை என்பது வார்த்தை/மொழியற்ற என்று பொருள் கொள்வோமெனில்). சலனம் என்பது எத்தகு ஓசையும் இல்லாது என்று பொருளாகி விடுகிறது. பழைய ஆங்கில silent film களில் (சார்லி சாப்ளின் படங்கள் போல) பின்னணி இசை கேட்டுள்ளேன்.இந்திய/இலங்கைப் படங்களில் உள்ளதா என்று தேடிப் பார்க்க வேண்டும்--சோடாபாட்டில்உரையாடுக 07:37, 19 சனவரி 2011 (UTC)
ஊமைப் படம் என்று தான் பேச்சு புழக்கத்தில் உள்ளது. எனது அப்பரின் காலத்தவர் முதல் அப்படித்தான் அழைக்கின்றனர்.--HK Arun 07:42, 19 சனவரி 2011 (UTC)
- தேடிப் பார்ப்போம். உறுதிப்படுத்திய பின்பு மாற்றிவிடுவோம் --P.M.Puniyameen 07:51, 19 சனவரி 2011 (UTC)
- ஊமைப்படம் என்பது வழக்கில் இருப்பினும் அது ஊமைகளாக உள்ள கதாபாத்திரங்கள் நடித்தப் படம் என்று பொருள் தரலாம்.மௌனப்படம் என்பது சரியாக இருக்குமா எனவும் பார்க்கலாம்.--மணியன் 07:58, 19 சனவரி 2011 (UTC)
மனிதரின் பேச முடியாத தன்மையையே ஊமை என அழைக்கப்படுகிறது. பேச முடியாதவனை ""ஊமையர்" அல்லது "ஊமையன்" என்று அழைக்கப்படுகிறது. அவ்வாறே சினிமா துறையும் பேச முடியாத நிலையில் இருந்தக் காலத்து படங்களையே ஊமைப்படம் என்று அழைக்கப்பட்டது. மௌனம் என்பது பேச முடிந்தும் பேசாத நிலையை வெளிப்படுத்துவது. இரண்டு சொல்லாடல்களுக்கும் இடையில் பாரிய வேறுப்பாடு உண்டு.
- ஊமை = பேசமுடியாதத் தன்மை
- மௌனம் = பேச முடிந்தும் பேசாமல் (அமைதியாக) இருக்கும் நிலை --HK Arun 08:51, 19 சனவரி 2011 (UTC)
- ”பேச முடியாத நிலையில் இருந்தக் காலத்து படங்களையே ஊமைப்படம் என்று அழைக்கப்பட்டது” பொதுவாக இது சரியெனினும், ஒலிப்பதிவு தொழில்நுட்பம் பரவி பேசும் படங்கள் வந்த பின்னரும் பல பேசா படங்கள் எடுக்கப்பட்டன - ஒலிப்பதிவுக்கு செலவு அதிகம் என்பதாலும், திரையரங்குகளில் ஒலிக்கருவிகள் பொருத்த ஏற்பட்ட தாமதத்தாலும். (1935 வரை இந்தியாவில் ஊமைப்படங்கள் எடுக்கப்பட்டன). மேலும் 1980களில் ”பேசும் படம்” என்ற தலைபில் கமல் ஹாசன் ஒரு ஊமைப்படத்தில் நடித்துள்ளார்.--சோடாபாட்டில்உரையாடுக 09:17, 19 சனவரி 2011 (UTC)