பேச்சு:இலக்குக் கவனிப்பாளர்

இழப்புக் காப்பாளர் தொகு

மூன்று குச்சங்களுக்கும் இரு மரத்துண்டுகளும் கொண்டு அமைக்கப்படுவது தான் இழப்பு (Wicket). எனவே Wicket-keeper என்பதை இழப்புக் காப்பாளர் என்று அழைக்க வேண்டும். AakashAH120 (பேச்சு) 03:02, 24 சூலை 2019 (UTC)Reply

@AntanO, AakashAH120, Fahimrazick, and Kanags: ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டும் நீங்கள் கலந்துரையாடல் இன்றி தலைப்பினை மாற்றம் செய்வது ஏன். நீங்கள் மேலே கூறியது சரியெனில் காப்பாளர் என்பவர் அவரைக் காக்கும் பணி அல்லவா செய்ய வேண்டும். பிறகு ஏன் அவரினை ஆட்டம் இழக்கச் செய்கிறார் (கேட்ச்/ஸ்டம்பிங் செய்கிறார்)

//அழைக்க வேண்டும்// அழைக்கலாமா? என்று கேட்டிருக்க வேண்டும். இங்கு நமது தனிப்பட்ட விருப்பத்தினை விட கருத்து ஒற்றுமையே முக்கியம். தங்களது சரியெனப் பட்டதும் உடனே மாற்றம் செய்வது ஏன்? நீங்கள் தலைப்பு மாற்றிய பிறகு எத்தனை குச்சக் காப்பாளர் கட்டுரைகளில் அதனை இழப்புக் காப்பாளர் என மாற்றியுள்ளீர்கள்? தங்களிடம் இருந்து தகுந்த பதிலை எதிர்பார்க்கிறேன். நன்றிஸ்ரீ (talk) 14:21, 6 ஆகத்து 2019 (UTC)Reply

என் தவறை ஒப்புக்கொள்கிறேன். ஆனாவ் தங்கள் மீதும் தவறு உள்ளது என்று கருதுகிறேன். தங்கள் கருத்தை முன்பே கூறியிருந்தால் அவசரப்பட்டு தலைப்பை மாற்றியிருக்க மாட்டேன். நான் தலைப்பை மாற்றக்கோரிய போது இங்கு தாங்கள் உட்பட எந்த பயனரும் தங்கள் கருத்துக்களை எடுத்துரைக்கவில்லை. ஆனால் தலைப்பை மாற்றிய உடனேயே கருத்துகள் வெளிப்படுகின்றன. இதுதான் எனக்கு வருத்தமாக உள்ளது. தவிர தங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். எனவே wicket-keeper என்பதை இழப்பு கவனிப்பாளர் என்று அழைக்கலாமா?. AakashAH120 (பேச்சு) 01:05, 21 ஆகத்து 2019 (UTC)Reply

//தங்கள் கருத்தை முன்பே கூறியிருந்தால் அவசரப்பட்டு தலைப்பை மாற்றியிருக்க மாட்டேன். நான் தலைப்பை மாற்றக்கோரிய போது இங்கு தாங்கள் உட்பட எந்த பயனரும் தங்கள் கருத்துக்களை எடுத்துரைக்கவில்லை. ஆனால் தலைப்பை மாற்றிய உடனேயே கருத்துகள் வெளிப்படுகின்றன.// இந்தக் கட்டுரை எனது கவனிப்புப் பட்டியலில் இல்லை. நீங்கள் தலைப்பு மாற்றியதனை அண்மைய மாற்றங்களில் இருந்து தான் தெரிந்துகொண்டேன். நீங்கள் ping செய்தால் தான் அது மற்றவருக்குத் தெரிய வரும் . விக்சனரியில் இதற்கு இலக்கு முனைக் காப்பாளர் என பொருள் கூறியுள்ளது. நன்றி ஸ்ரீ (talk) 13:39, 22 ஆகத்து 2019 (UTC)Reply

@ஞா. ஸ்ரீதர்:, keeping என்றால் கவனிப்பு என்று பொருள். இழப்புக்கு பின்பு கவனத்துடன் இருந்து பந்தைத் தடுப்பதும் மட்டையாளரை ஆட்டமிழக்கச் செய்வதும் wicket-keeperஇன் பணி. பொதுவாக இவர் மற்ற வீரர்களை விட சற்று கூடுதல் கவனத்துடன் இருப்பார். எனவே இழப்பு கவனிப்பாளர் என்பதே பொருத்தமாக இருக்கும். தவிர இலக்கு என்ற சொல் குறித்து ஏற்கனவே இப்பக்கத்தில் என் கருத்துக்களைத் தெரிவித்துள்ளேன். AakashAH120 (பேச்சு) 02:31, 23 ஆகத்து 2019 (UTC)Reply

ஆகாஷ், நீங்கள் பல கட்டுரைகளின் தலைப்புக்களை உங்களுக்கு நினைத்தவாறெல்லாம் மாற்றிக் கொண்டிருப்பது தவறு. இங்கே நீங்கள் கருத்துக்கூறிய அவசரத்தில் ஏனைய பயனர்களும் கருத்துக் கூற வேண்டுமென்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் அதற்காக நேரமெடுத்துக் கொண்டிருக்கலாம். மற்றவர்களுக்கு வேறு வேலைகள் இருக்கலாம். நானும் சில நாட்களில் விக்கிப்பீடியாப் பக்கமே வருவதில்லை. இருக்கும் ஏனைய தேவைகளையும் கிடைக்கும் நேரத்தையும் பொறுத்து விக்கிப்பீடியப் பங்களிப்பு பயனருக்குப் பயனர் வேறு படுகிறது. விக்கெட்டு என்பதை இழப்பு என எடுத்துக் கொண்டால், இழப்புக் கவனிப்பாளர் என்று நீங்கள் இப்போது பரிந்துரைத்திருப்பது பொருத்தமாகவே படுகிறது. நீங்களே முன்னுக்குப் பின் முரணாக வாதிட்டுக் கொண்டிருக்கக் கூடாது. ஒருமுறை உங்களுக்குச் சரியென்று பட்டது மறு முறை உங்களுக்கே பிழையென்று படுகிறது. அதனாலேயே தக்க உரையாடலின்றித் தலைப்புக்களை மாற்றுவதைத் தவிர்க்கக் கோருகிறோம். இது போன்று பரவலாகத் தெரிந்த தலைப்புக்கள் அல்லது பெயர்கள் விடயத்தில் மிகக் கவனமாக இருந்தாக வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 06:37, 23 ஆகத்து 2019 (UTC)Reply

தங்கள் அறிவுரைக்கு நன்றி. இனி கவனத்துடன் இருக்கிறேன். AakashAH120 (பேச்சு) 14:31, 23 ஆகத்து 2019 (UTC)Reply
நீண்டகாலமாகப் பயன்பாட்டில் இருந்து வந்த சொல் உரையாடல் எதுவுமின்றித் தன்னிச்சையாக மாற்றப்பட்டிருக்கிறது. தலைப்பை மீண்டும் மாற்றியுள்ளேன்.--Kanags \உரையாடுக 08:55, 7 ஆகத்து 2019 (UTC)Reply

தலைப்பு பரிந்துரை தொகு

விக்கெட் என்பதற்கு திட்டிவாசல் என்று விக்சனரியில் பொருள் தரப்பட்டுள்ளது. திட்டி என்பது பலரும் கேள்விப்படாத சொல்லாக இருப்பதால் புரிந்துகொள்வதில் சிரமம் நேரிடும். எனவே அனைவருக்கும் தெரிந்த இழப்பு என்ற சொல்லில் குறிக்கலாம். அதுபோல் keeperக்கு கவனிப்பாளர் என்று விக்சனரியில் உள்ளது. எனவே இழப்புக் கவனிப்பாளர் என்று தலைப்பை மாற்றியுள்ளேன். Selva15469 (பேச்சு) 10:55, 4 திசம்பர் 2019 (UTC)Reply
இழப்பை விட இலக்குக் கவனிப்பாளர் என்பது பொருத்தமாக இருக்கும். இலக்கை நோக்கி வீசப்பட்ட பந்து என்று சொல்வது பொருந்துகிறது. இழப்பை நோக்கி வீசப்பட்ட பந்து பொருந்தவில்லை. --கி.மூர்த்தி (பேச்சு) 14:09, 20 சனவரி 2020 (UTC)Reply
துடுப்பாட்டத்தில் இலக்கு என்பது நாம் எடுக்க வேண்டிய ஓட்டங்களையும் குறிக்கிறது அல்லவா?ஸ்ரீ (✉) 14:29, 20 சனவரி 2020 (UTC)Reply
அதை ஓட்டங்கள் இலக்கு என்ற பொருளில் பேச்சு வழக்காக ஓட்ட இலக்கு எனலாம். 287 என்ற ஓட்ட இலக்கை எதிர்கொண்டு விளையாடி இந்திய அணி நேற்று வெற்றி பெற்றது. target = இலக்கு அல்லவா. loss = இழப்பு --கி.மூர்த்தி (பேச்சு) 15:16, 20 சனவரி 2020 (UTC)Reply
ஆம். ஆனால் இலக்கு என்பது குழப்பம் ஏற்படுத்தியதாலும் இழப்பு என்பது ஒரே பொருளையும் பொருத்தமாகப் பட்டதனாலும் இந்தச் சொல்லைத் தேர்வு செய்தோம். ஆனால் காப்பாளர் என்பது தவறு . ஏனெனில் இவர் அவரை வீழ்த்தும் பணியினைத் தான் செய்வார். @Selva15469: தங்களது கருத்துக்களை தெரிவிக்கவும். loss என்பது துடுப்பாட்டத்தில் தோல்வி என்பதையே குறிக்கும் நன்றி ஸ்ரீ (✉) 15:57, 20 சனவரி 2020 (UTC)Reply
வானொலியில் வர்ணனை கேட்கும் காலத்திலேயே வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் அழகாகச் சொல்வார். இரண்டாவது பந்து இலக்கை நோக்கி நேராக வீசப்பட்டுள்ளது. மட்டையில் படாமல் கால் காப்பில் பட்ட பந்து கால் திசையில் ஓடி ஒரு ஓட்டத்தை பெற்றுத் தந்தது. இலக்கை (target) நோக்கி சுடுதல். இலக்கை நோக்கி (Goal post) பந்தை உதைத்தார். எல்லாம் பொருத்தமாக வருகிறது. எனது விருப்பம் இலக்கு என்பதே--கி.மூர்த்தி (பேச்சு) 16:18, 20 சனவரி 2020 (UTC)Reply

இலக்கு கவனிப்பாளர் என வைக்கலாமா?. ஸ்ரீ (✉) 16:32, 20 சனவரி 2020 (UTC)Reply

எனது பரிந்துரை அதுதான். ஒருமித்த முடிவு கிடைத்தபின் ஏற்கலாம். --கி.மூர்த்தி (பேச்சு) 16:42, 20 சனவரி 2020 (UTC)Reply

ஒரு வாரம் பார்த்துவிட்டு எதிர்கருத்து இல்லை எனில் தலைப்பை மாற்றலாம் ஸ்ரீ (✉) 16:48, 20 சனவரி 2020 (UTC)Reply

@கி.மூர்த்தி:, இலக்கு குறித்த தங்கள் விளக்கத்திற்கு நன்றி. தங்கள் கருத்தை ஏற்று இதன் தலைப்பை இலக்கு கவனிப்பாளர் என்று நகர்த்தும் முடிவை ஆமோதிக்கிறேன். ஆனால் இலக்கு என்பது கருவியை மட்டுமே குறிக்கும். அதுதவிர மற்ற இடங்களில் இலக்கு என்று பயன்படுத்துவது பொருந்தாது என்று கருதுகிறேன். எ-டு

  • He took 3 wickets
    • அவர் 3 இலக்குகளைக் கைப்பற்றினார் N
    • அவர் 3 மட்டையாளர்களை வீழ்த்தினார் Y
  • His team won by 5 wickets
    • அவரது அணி 5 இலக்குகளால் வென்றது N
    • அவரது அணி 5 இழப்புகளால் வென்றது Y

இவ்வாறு இடத்திற்கேற்றவாறு சொற்களைப் பயன்படுத்தினால் குழப்பம் நேராது; பொருளும் எளிதில் விளங்கும். இத்துடன் ஏற்கனவே உள்ள இழப்பு (துடுப்பாட்டம்) என்ற தலைப்பையும் இலக்கு (துடுப்பாட்டம்) என்று நகர்த்துவது நன்று. இதுதவிர இழப்பு வீச்சு, இழப்புத் தாக்குதல் ஆகிய இரு பக்கங்களையும் உருவாக்கியவர் என்ற அடிப்படையில் நானே நகர்த்திவிடுகிறேன். Selva15469 (பேச்சு) 14:01, 22 சனவரி 2020 (UTC)Reply

நன்றி!

அவர் மூன்று முறை இலக்குகளை கைப்பற்றினார். அவரது அணி 5 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. என்றால் பொருந்தும் என நினைக்கிறேன். --கி.மூர்த்தி (பேச்சு) 14:17, 22 சனவரி 2020 (UTC)Reply

5 மட்டையாளர்களை வீழ்த்தினார், 5 இழப்புகளால் வெற்றி பெற்றது என்பதே சரியாகத் தோன்றுகிறது. இதில் ஏன் தங்களுக்கு உடன்பாடு இல்லை? Selva15469 (பேச்சு) 14:23, 22 சனவரி 2020 (UTC)Reply
Return to "இலக்குக் கவனிப்பாளர்" page.