பேச்சு:இளவரசன்-திவ்யா கலப்புத் திருமண சர்ச்சை

நத்தம் காலனி, நாயக்கன் கொட்டாய் இரண்டும் ஓரே இடத்தைக் குறிக்கின்றனவா? -- மாகிர் (பேச்சு) 15:29, 8 சூலை 2013 (UTC)Reply

நாயக்கன்கொட்டாயை சேர்ந்த பகுதி நத்தம் காலனி. நத்தம் காலனியில் தான் வீடுகள் தீக்கரையாக்கப்பட்டன நாயக்கன்கொட்டாயில் அல்ல. --குறும்பன் (பேச்சு) 09:08, 14 சூலை 2013 (UTC)Reply

இளவரசன் மரணம் நிகழ்ந்தது என்று? தொகு

இளவரசன் மரணம் எனும் பகுதியின் //கீழ் என்று பேட்டியளித்த மறுநாள் .... அன்று இளவரசன் தர்மபுரி // இதென்ன மறுநாள்... அன்று. கட்டுரையை தெளிவுசெய்ய வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:15, 11 சூலை 2013 (UTC)Reply

திருமணம் தொகு

திருமணம் எந்த தேதியில் நடந்தது என்று குறிப்பிடப் படவேண்டும். இளவரசன் மரணத்திற்கு முற்பட்ட நிகழ்வுகளையும் குறிப்பிடவேண்டும் --குறும்பன் (பேச்சு) 15:34, 12 சூலை 2013 (UTC)Reply

  • மகாபலிபுரம் வன்னியர் மாநாடு, இராமதாஸ், பாமக கட்சியினர் மீதான கைது நடவடிக்கை மற்றும் வழக்குகள் போன்றவை இக்கட்டுரைக்கு தொடர்பு அற்றவை என்பதால் நீக்குகிறேன்.--குறும்பன் (பேச்சு) 05:10, 13 சூலை 2013 (UTC)Reply
நன்றி குறும்பன், மரக்காணம் கலவரம் கட்டுரையில் இத்தலைப்புகள் இருக்கவேண்டும். --மாகிர் (பேச்சு) 06:59, 13 சூலை 2013 (UTC)Reply

நியுஇண்டியன்எக்ஸ்பிசில் திருமணம் அக்டோபர் 18, 2012 [1] நடந்தது என்றும் மங்களூரியன் என்ற தளத்தில் ஆகஸ்ட் [2]என்றும் உள்ளது. --குறும்பன் (பேச்சு) 07:17, 13 சூலை 2013 (UTC)Reply

இந்தியா டுடே அக்டோபர் 14, 2012[3] என்கிறது. --குறும்பன் (பேச்சு) 07:26, 13 சூலை 2013 (UTC)Reply

தலைப்பு மாற்றம் தொகு

திருமணம் என்று கூறினாலே போதும். கலப்புத் திருமணம் என்பது சாதியப் பார்வையில் வருவது. சர்ச்சை என்று கூறுவதும் பொருத்தமாக இல்லை. சிக்கல் என்று கூறலாம்.--இரவி (பேச்சு) 06:18, 13 சூலை 2013 (UTC)Reply

இத்திருமணத்திற்குப் பிந்தைய நிகழ்வுகள் சாதிக்கலவரமாக உருவெடுத்ததால், சம்பவங்களின் முக்கிய விடயமாக "கலப்பு" இருப்பதாலும் தலைப்பில் கலப்பு இருப்பதில் தவறில்லை. வெறும் திருமண சிக்கல் என்றால், சாதாரண குடும்ப பிரச்சினையால் திருமண சிக்கல், அல்லது இதற்கு முன்பு இருவரும் நட்சத்திரங்களாக அறியப்பட்டிருந்தனர் போன்று ஆகிவிடும் என்பது எனது கருத்து. கலப்பு இச்சிக்கலின் தனித்தன்மையை குறிக்கிறது. சாதியப் பார்வையை பொருட்படுத்தவேண்டியதில்லை. --மாகிர் (பேச்சு) 06:54, 13 சூலை 2013 (UTC)Reply

இரவி கூறுவது சரிதான். இருந்தாலும் இன்றைய சமூக நிலையில் கலப்புத் திருமணம் என்பதே குறிப்பிடுதன்மை பெற்றுவிடுகிறது. அதைத் தலைப்பிலேயே குறிப்பிட வேண்டியதில்லை என்றாலும், பெரிய இடரில்லை. சிக்கல் என மாற்றலாம். சர்ச்சை எனும் சொல் சர்ச்சா எனும் வடமொழிச் சொல்லுடன் தொடர்புடையது. இது காட்டமான, நேரெதிர் வாய்ச்சண்டையையோ வாதத்தையோ குறிக்கும் சொல்லாகும். -- சுந்தர் \பேச்சு 07:53, 13 சூலை 2013 (UTC)Reply

இதை இளவரசன்-திவ்யா திருமண(கலப்பு) சிக்கல் எனலாமா? கலப்பு என்பது வரவேண்டும் இல்லாவிட்டால் திருமண சிக்கலுக்கு ஏன் கட்டுரை என்று தோன்றும். கலப்பு திருமணம் என்பதை விட திருமணம் (கலப்பு) என்பது பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன்.--குறும்பன் (பேச்சு) 11:49, 13 சூலை 2013 (UTC)Reply
சாதிகள் உள்ளன, கலக்கக்கூடாது என்ற நிலையில் இருந்து தான் கலப்பு என்ற சொல்லும் வருகிறது. எனவே, இது நடுநிலை நோக்கு அன்று. மனிதனும் விலங்கும் திருமணம் செய்தால் தான் கலப்புத் திருமணம் என்று பெரியார் கூறியுள்ளார் :). அதே வேளை, வெறும் திருமணம் என்றால் வழக்கமான இல்லறச் சிக்கல் போன்ற தொனியும் வருகிறது தான். இறைமறுப்பு என்று சொல்வது போல் சாதிமறுப்புத் திருமணம் என்று சொல்லலாமா? சாதி வேறுபாட்டை மறுத்துத் தான் அவர்கள் திருமணம் புரிந்தனர் என்பதால் இது தொடர்புடையவர்கள் பார்வையில் இருந்து சரியான நோக்காக இருக்கும். சர்ச்சை வட மொழி என்பதால் மாற்றக் கோரவில்லை. அது controversy என்ற பொருள் தருகிறது. இங்கு அப்படி எதுவும் இல்லை. issue, problem என்பதற்கு ஈடாக சிக்கல் என்ற சொல்லைப் பரிந்துரைத்தேன். இளவரசன் - திவ்யா சாதி மறுப்புத் திருமணச் சிக்கல் என்பது எனது பரிந்துரை.--இரவி (பேச்சு) 13:09, 13 சூலை 2013 (UTC)Reply

’சாதி மறுப்பு’ என்பது பொருந்தாது. பொதுவாக வெவேறு சாதியைச் சேர்ந்த இருவர் தங்களது திருமணம் என்ற ஒரு விஷயத்தில் சாதி வேறுபாட்டை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் சாதிகளை எதிர்க்கும் நோக்கில் திருமணம் செய்து கொள்கின்றனர் என்று சொல்ல முடியாது. அதனால் ’கலப்புத் திருமணம்’ என்பதைச் ’சாதிக் கலப்புத் திருமணம்’ எனலாம். --Booradleyp1 (பேச்சு) 14:29, 13 சூலை 2013 (UTC)   விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:00, 13 சூலை 2013 (UTC)Reply

தாங்கள் கூறுவது உண்மையே அத்திருமணம் சாதியை மறுத்து நிகழ்ந்தல்ல,. அனேக இடங்களில் நிகழும் கலப்பு சாதி திருமணங்களில் பிறக்கும் குழந்தைகள் சலுக்கைக்கு உகந்த பெற்றோரின் சாதியை ஏற்கின்றன. பெற்றோர் இருவரின் சாதியுமே சலுகைக்கு உதவாது போது அவை சமூக சூழலில் உயர்ந்தது என்று கருததக்க சாதியாக பதியப்படுகின்றன. இல்லையென்றால் இருசாதியும் இணைந்த புதிய சாதி உருவெடுத்திருக்கும்,. அந்நிலை உருவாக்கப்படுவதேயில்லை. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:05, 13 சூலை 2013 (UTC)Reply
இந்தச் சிக்கலைப் பற்றிச் சொல்லவில்லை, ஆனால் தகவலுக்காக ஒன்று. தமிழ்நாட்டில் கலப்புச்சாதி எனப் பதிய முடியும் என்று படித்திருக்கிறேன். அவர்களுக்குச் சிறப்பு இட ஒதுக்கீடும் உண்டு. -- சுந்தர் \பேச்சு 18:06, 13 சூலை 2013 (UTC) இப்போது அந்தச் சிறப்பு ஒதுக்கீடு இல்லை போலத் தெரிகிறது. -- சுந்தர் \பேச்சு 04:15, 14 சூலை 2013 (UTC)Reply

இளவரசன்-திவ்யா சாதியிடைத் திருமணச் சிக்கல் என்பது பொருத்தமாக இருக்குமா? இது inter-caste marriage என்பதை ஒத்து வரும். மேலை பூராடுலியும் செகதீசுவரனும் கூறிய கருத்துகளுக்கு விரிவான மறுமொழியைப் பின்னர் தருகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 05:10, 14 சூலை 2013 (UTC)Reply

பூராடுலி, நான் சாதி எதிர்ப்புத் திருமணம் என்று கூறவில்லை. மறுப்புக்கும் எதிர்ப்புக்கும் நுணுக்கமான வேறுபாடு உண்டு. இருவேறு சாதியியினர் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளும் போது அங்கு சாதி ஒரு பொருட்டு இல்லை. ஆனால், சாதி வேறுபாட்டின் காரணமாக உயிர் முதற்கொண்டு பலவற்றை பணயம் வைத்துச் செய்யும் திருமணம், சாதியை மறுத்துச் செய்யும் திருமணம் தான்.

//அதனால் ’கலப்புத் திருமணம்’ என்பதைச் ’சாதிக் கலப்புத் திருமணம்’ எனலாம்.// இதே கலப்பு என்ற சொல் இரு வேறு நாட்டவர் (எ.கா. இந்தியர் + அமெரிக்கர்) திருமணம் செய்யும் போது வருவதில்லை. கலப்பு என்ற சொல்லே கலக்கக்கூடாது என்ற ஒரு பக்க நோக்கில் இருந்து வருவது தான்.

செகதீசுவரன், சாதி என்பது சான்றிதழில் உள்ள ஒரு சொல்லோ கண்ணுக்கு தெரியாத அரக்கனோ அன்று. நாட்டுப்புறத்தில் சாதி(சனம்) என்று குறிப்பிடப்படுவது தாய் வழி தந்தை வழியாக பல ஊர்களில் தொடர்பு கொண்டிருக்கும் உறவினர்களைத் தான். காதலர்களுக்குப் பிரச்சினை வருவதும் இந்த உறவினர்களால் தான். காதலுக்குத் தாய் தந்தை ஆதரவு இருந்தால் குடும்பம் மொத்தமாகச் சேர்ந்து இந்த உறவுகளைப் புறக்கணித்து விட்டுச் சமூகத் தனிமையில் வாழலாம். பெற்றோர் ஆதரவும் இல்லாவிட்டால் ஓடி ஒளிய வேண்டியது தான். சாதி எதிர்ப்பு என்பது சுவரொட்டி அடித்து விளம்பரப்படுத்தி செய்யும் திருமணங்கள் அன்று. இது போல் நிகழும் ஒவ்வொரு திருமணமும் சாதி மறுப்பு / எதிர்ப்புத் திருமணம் தான்.

இட ஒதுக்கீடு என்பது அரசமைப்புச் சட்டம் தரும் உரிமை. சலுகை அன்று. பட்டியல் வகுப்பினருக்குள் (SC) கூட பல்வேறு அடுக்குச் சாதிகள் உள்ளன. ஒரு சாதியில் இருந்து இன்னொரு சாதிக்குப் பெண் கொடுப்பதில்லை. இந்தப் பிரிவுக்குள்ளே கூட சாதி மாறித் திருமணம் செய்பவர்கள் தங்கள் சாதி அடையாளத்தைத் துறந்து விட்டு பொதுப்பிரிவில் போட்டியிட வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? இதன் மூலம் சமூக நீதியின் நோக்கம் நிறைவு பெறும் என்று எண்ணுகிறீர்களா? இதே போலத் தான் MBC, BC என்று பல்வேறு வகுப்புகளுக்குள் நடக்கும் காதல் திருமணங்களும். இங்கு சாதி வெறியும் வேறுபாடு காட்டுவதும் தான் பிரச்சினை. இட ஒதுக்கீடு அன்று.

காதல் திருமணம் செய்யும் இருவர் குழந்தைக்கு எந்தச் சாதியைப் பதிகின்றனர் என்ற தங்கள் புரிதலுக்கும் வேறு கோணம் உள்ளது. சாதியில் எது ஒடுக்கப்பட்டது, ஒடுக்கப்படாதது என்பதை விடுத்து தந்தை வழிச் சாதியாக குழந்தையைப் பதிவது உண்டு. ஒடுக்கப்பட்ட சாதியாகவே இருந்தாலும், வளரும் குழந்தைக்குச் சமூகச் சிக்கல்கள் வரக்கூடாது என்று ஒடுக்கப்படாத சாதியாகப் பதிந்து கொள்வதும் உண்டு. எனவே, இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் உயர்வு தாழ்வு அடிப்படையிலும் மட்டுமே சாதிகள் தொடர்கின்றன என்பது முழுமையான நோக்கு அன்று. நேரம் கிடைத்தால் http://greatertamil.com/Dynamics_Of_Reservation.ppt படித்துப் பாருங்கள். --இரவி (பேச்சு) 14:37, 17 சூலை 2013 (UTC)Reply

மோதல் தொகு

//7.11.2012 அன்று இந்த இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு, // என்று கட்டுரையில் கூறப்பட்டுள்ளது . இது மோதலா , வன்முறையா அல்லது தாக்குதலா ? --Commons sibi (பேச்சு) 07:50, 19 ஆகத்து 2014 (UTC)Reply

Return to "இளவரசன்-திவ்யா கலப்புத் திருமண சர்ச்சை" page.