பேச்சு:உளநோய் மருத்துவம்
இக்கட்டுரை விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 மூலம் உருவாக்கப்பட்டது . |
நீக்கல் பரிந்துரை
தொகுஇக்கட்டுரை இலிருந்து வரிக்கு வரி பிரதி எடுக்கப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 07:18, 6 நவம்பர் 2019 (UTC)
- தங்களது வார்ப்புருவினைக் கண்டேன். அதனை நீக்குக. காரணம் யாதெனில், கட்டுரையின் பனுவல் காப்புரிமையின் கீழ் வராது. காண்கமேலும், விக்கிப்பீடியா பேச்சு:பிற மூலங்களிலிருந்து, பனுவல்களைப் படியெடுத்தல்என்பதில் உங்கள் எண்ணங்களை இடக் கோருகிறேன்.--த♥உழவன் (உரை) 07:34, 6 நவம்பர் 2019 (UTC)
- அதாவது, இவ்வாறான கட்டுரையை எவ்வித மாற்றமும் இன்றி விக்கிப்பீடியாவில் மறுபதிப்பிடலாம் என்கிறீர்களா? விளங்கவில்லை.--Kanags \உரையாடுக 07:40, 6 நவம்பர் 2019 (UTC)
- காப்புரிமை உள்ளது என்று அறிவித்திருப்பது பொருத்தமாகாது.அதனை அவ்வுரிமம் மறுக்கிறது. போட்டி நடைபெறும் காலம் என்பதால், எத்தகைய மாற்றங்கள் வேண்டும் என்று கூறினால் அவற்றினையும் இணைத்து உருவாக்க முயற்சிப்பேன். கூகுள் உருவாக்கிய தானியக்க கட்டுரைகளை விட, சொற்றொடர் பிழை இல்லாவைகளாக உருவாக்கவேன் என உறுதி கூறுகிறேன். ஏனெனில் தட்டச்சு செய்த சரிபார்த்தே பதிவேற்றுகிறேன் --த♥உழவன் (உரை) 07:48, 6 நவம்பர் 2019 (UTC)
- நான் கூற வந்தது வேறு. சொற்றொடர் பிழை இல்லாமல் எழுதுவது வேறு. அதனை அனைவருமே கவனத்தில் கொள்ளல் வேண்டும். ஆனால், ஒரு கட்டுரையை (காப்புரிமை இல்லாததாக இருந்தாலும்) அதனை வரிக்கு வரி இங்கே பிரதி பண்ணி எழுதுவது ஏற்றுக்கொள்ளப்படலாமா?--Kanags \உரையாடுக 07:53, 6 நவம்பர் 2019 (UTC)
- காப்புரிமை உள்ளது என்று அறிவித்திருப்பது பொருத்தமாகாது.அதனை அவ்வுரிமம் மறுக்கிறது. போட்டி நடைபெறும் காலம் என்பதால், எத்தகைய மாற்றங்கள் வேண்டும் என்று கூறினால் அவற்றினையும் இணைத்து உருவாக்க முயற்சிப்பேன். கூகுள் உருவாக்கிய தானியக்க கட்டுரைகளை விட, சொற்றொடர் பிழை இல்லாவைகளாக உருவாக்கவேன் என உறுதி கூறுகிறேன். ஏனெனில் தட்டச்சு செய்த சரிபார்த்தே பதிவேற்றுகிறேன் --த♥உழவன் (உரை) 07:48, 6 நவம்பர் 2019 (UTC)
- அதாவது, இவ்வாறான கட்டுரையை எவ்வித மாற்றமும் இன்றி விக்கிப்பீடியாவில் மறுபதிப்பிடலாம் என்கிறீர்களா? விளங்கவில்லை.--Kanags \உரையாடுக 07:40, 6 நவம்பர் 2019 (UTC)
பதிப்புரிமை, எழுத்துநடை என்று இரு கருத்துருக்களை, இங்கு எடுத்துக் கூறுகிறீர்கள். எனவே, முதலில் காப்புரிமை இல்லை என்ற நிலையில் தொடர்ந்து அறிவிப்பு இட்டிருப்பது, எப்படி பொருத்தமாகும்? மற்றொன்று, கட்டற்ற உரிமத்தின் படி படியிடலாம். அது தான் (CC-BY-SA). ஏனெனில், ஒரே கருத்துருவை வெவ்வேறு சொற்களால் எழுதுவதும் அதே பொருளைத் தான் தரும். உங்களுகுக இன்னும் ஐயம் இருப்பின், யாரேனும் புரிந்துணர்வை,. நமக்குள் ஏற்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.வணக்கம்.--த♥உழவன் (உரை) 08:21, 6 நவம்பர் 2019 (UTC)
- வேறு பொருத்தமான வார்ப்புரு கிடைக்காததால், அதனைச் சேர்த்தேன். ஆனாலும் அதுவும் பொருத்தமானதாகத் தெரிகிறது. மற்றும்படி, கட்டற்ற உரிமத்தின்கீழ் படியிடலாம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.--Kanags \உரையாடுக 08:57, 6 நவம்பர் 2019 (UTC)
- பொருத்தமான வார்ப்புருவை உருவாக்கி இடுங்கள். இவ்வளவு அனுபவமும், பங்களிப்பும் உள்ள நீங்கள் ஒரு தவறான வார்ப்புருவை இடுதல் சரியல்ல. பழைய கலைக்களஞ்சிய நடையில் இருக்கிறது. அல்லது விக்கியாக்கம் தேவை என உருவாக்கி இடுங்கள். எனது உழைப்பு ஒரு புறம் இருக்கட்டும். பல அறிஞர்கள், பத்தாண்டுகள் உழைத்த, தனித்தனி உழைப்பே, பதிப்புரிமை என்று தரம் தாழ்த்துவதால் என்ன பயன்? நம் மொழிக்கு பல செய்யவேண்டியுள்ளது. நீங்களே பொருத்தமான வார்ப்புருவை இடத்தவறினால், மற்றவருக்கு அது நல்ல வழிகாட்டலாக இருக்குமா?--த♥உழவன் (உரை) 10:03, 6 நவம்பர் 2019 (UTC)
- வேறு பொருத்தமான வார்ப்புரு கிடைக்காததால், அதனைச் சேர்த்தேன். ஆனாலும் அதுவும் பொருத்தமானதாகத் தெரிகிறது. மற்றும்படி, கட்டற்ற உரிமத்தின்கீழ் படியிடலாம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.--Kanags \உரையாடுக 08:57, 6 நவம்பர் 2019 (UTC)
- நீக்கப் பரிந்துரைத்துள்ளேன்.--Kanags \உரையாடுக 10:12, 6 நவம்பர் 2019 (UTC)
- நீக்கல் பரிந்துரை பொருத்தமற்றது. CC-BY-SA உள்ளடக்கங்களை அப்படியே படி இடலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. விக்கியாக்கம் தேவை என்றால் அந்த வார்ப்புரு மட்டும் இடலாம். --இரவி (பேச்சு) 11:46, 6 நவம்பர் 2019 (UTC)
CC BY-SA 4.0
தொகு- @Ravidreams: //CC-BY-SA உள்ளடக்கங்களை அப்படியே படி இடலாம்.// Wikipedia accepts text available under CC BY-SA versions 1.0, 2.0, 2.5, 3.0, but not version 4.0.--Kanags \உரையாடுக 07:18, 7 நவம்பர் 2019 (UTC)
- பார்க்க : 1911 ஆம் ஆண்டு பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் இருந்து படியெடுத்தல்.
நம் உரையாடலுக்குத் தேவைப்படும் பகுதிகளாக நான் கருதுபவையை மட்டும் பதிவு செய்கிறேன் .
- Starting in 2006, much of the still-useful text in the 1911 Encyclopaedia was adapted and absorbed into Wikipedia.
- If an article contains text copied from the Eleventh edition of the Encyclopaedia Britannica, suitable attribution must be provided
- Attributing EB1911 articles என்கிற உபதலைப்பு
- Check list என்கிற உபதலைப்பு--Commons sibi (பேச்சு) 11:55, 6 நவம்பர் 2019 (UTC)
- இந்த கலைக்களஞ்சிய கட்டுரைகளை நீக்கக்கூடாது. விக்கியாக்கம் செய்தால் போதும். இது போல இன்னுமுள்ள கலைக்களஞ்சிய கட்டுரைகளைக் கொண்டு விக்கிபீடியாவில் குறைந்த முயற்சியியல் மேலும் பல கட்டுரைகளை உருவாக்கவேண்டும். ஏனென்றால் இவை பல தமிழரிஞர்களின் கூட்டு முயற்சியால் உருவானவை--அருளரசன் (பேச்சு) 13:13, 6 நவம்பர் 2019 (UTC)
- @Arularasan. G: பல கட்டுரைகளை உருவாக்கலாம். ஆனால் அவை அனைத்தும் (விக்கி) கலைக்களஞ்சிய நடையில் எழுதப்பட வேண்டும். Open Source ஆக இருந்தால் அதனை அப்படியே படி எடுத்து இங்கு இடலாம் என எண்ணக்கூடாது. அதனைத்தான் தகவலுழவன் செய்துள்ளார்.--Kanags \உரையாடுக 07:24, 7 நவம்பர் 2019 (UTC)
- வரிக்குவரி படியெடுக்கப்பட்டுள்ளது. விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும், மேற்கோள்கள் தகுந்த முறையில் தரப்பட வேண்டும். Commons sibi மேலே தந்துள்ள இணைப்பில் தரப்பட்ட படி, மேற்கோள்கள் தரப்பட வேண்டும். இதனைப் போட்டி நடுவர்கள் கவனிக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 06:55, 7 நவம்பர் 2019 (UTC)
- நானே இன்று அதிகாலையே பவுண்டன் கருவியில் நீக்கியுள்ளேன். தரம் உயர்த்த குறிப்புகளைத் தந்தால் மேம்படுத்த இயலும். விக்கி என்பது பலரும் தரத்தை உயர்த்தும் பகுதியென்றே நான் எண்ணுகிறேன்.அக்கலைகளஞ்சியம் முழுவதும் நூலோதி என்று உள்ளது. அதாவது ஒரு கட்டுரை எந்தெந்த நூல்களை வைத்து உருவாக்கப்பட்டது என்பதற்கான நூற்பட்டியல் அதனை இணைத்தால் நீங்கள் மன நிறைவு கொள்வீர்களா? அங்குள்ள தரம் அப்படி. அதற்கு நான் என்ன செய்ய இயலும். நான் இங்கு ஆய்வு கட்டுரைகளை எழுத அழுத்தம் கொடுப்பதாக உணருகிறேன். பல வழிகாட்டுதல்களளை பல ஆண்டுகள் தந்துள்ளீர்கள் என்பதால் உங்களது வழிகாட்டல்களை எதிர்பார்க்கிறேன். --த♥உழவன் (உரை) 07:40, 7 நவம்பர் 2019 (UTC)
@Kanags: Wikipedia accepts text available under CC BY-SA versions 1.0, 2.0, 2.5, 3.0, but not version 4.0 - இது எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினால் உதவும்.
@Info-farmer: படி எடுத்து இட்ட பிறகு, தமிழ் விக்கிப்பீடியாவின் வழக்கமான எதிர்பார்ப்புகளான மேற்கோள், ஆதாரங்கள் சேர்த்தல், விக்கியாக்கம், இந்தக் காலத்துக்கு ஏற்ப இற்றை, நடை மாற்றம் ஆகியவை பொருந்தும். எனவே, படியெடுப்பதோடு நின்று விடாமல், ஒவ்வொரு கட்டுரையிலும் கூடுதல் உழைப்பைச் செலுத்துமாறு வேண்டுகிறேன். சிபி கூறியுள்ள வழிகாட்டல்களையும் பாருங்கள். நன்றி --இரவி (பேச்சு) 08:32, 7 நவம்பர் 2019 (UTC)
- ஆம். இரவி ஒரு மேற்கோள். சில விக்கியாக்கம் செய்யப்பட்டே இக்கட்டுரை உள்ளது. இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. இனி, என்னால் இயன்ற அளவு காலத்துக்கு ஒப்ப இற்றைப்படுத்துகிறேன். முழுமையாக அனைத்து பங்களிப்புகளையும் ஒருவரே செய்ய வற்புறுத்தும் சூழ்நிலைக்கு என்னைத்தள்ளிக் கொள்ள விரும்பவில்லை. இந்த கட்டுரையை மேம்படுத்திக்காட்டினால் அதனை மாதிரிக் கொண்டு, அதிக கட்டுரைகளை உருவாக்க விரும்புகிறேன்.--த♥உழவன் (உரை) 09:00, 7 நவம்பர் 2019 (UTC)
- @Ravidreams: Adding open license text to Wikipedia --Kanags \உரையாடுக 09:21, 7 நவம்பர் 2019 (UTC)
- சரி. பார்க்க - தமிழ் வளர்ச்சிக் கழகம் அளித்த கடிதம். இங்கு உரையாடப்படும் கலைக்களஞ்சியங்கள் CC-BY-SA 3.0 வில் தான் வெளியிடப்பட்டுள்ளன. எனவே, அவற்றைப் படி எடுப்பதில் ஏதும் சிக்கல் இல்லை. படி எடுத்தல் தொடர்பான இந்த CC நுணுக்கத்தைக் கவனத்தில் கொண்டு வந்தமைக்கு நன்றி. --இரவி (பேச்சு) 09:52, 7 நவம்பர் 2019 (UTC)
- @Ravidreams: Adding open license text to Wikipedia --Kanags \உரையாடுக 09:21, 7 நவம்பர் 2019 (UTC)
- @Kanags: மேலே தகவல் உழவன் வேண்டிய படி, ஒன்றிரண்டு கட்டுரைகளை நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் செப்பமிட்டுக் காட்டினால், அவரும் அதைப் பின்பற்ற உதவியாக இருக்கும். நன்றி. --இரவி (பேச்சு) 09:54, 7 நவம்பர் 2019 (UTC)
- நன்றி இரவி, கட்டுரையை ஓரளவு திருத்த முடியும்.--Kanags \உரையாடுக 10:10, 7 நவம்பர் 2019 (UTC)
உளச்சுகாதாரம் கட்டுரையை நீங்கள் வழிகாட்டியபடி மேம்படுத்தி, நீங்கள் இட்ட வார்ப்புருக்களை எடுத்துள்ளேன். எனினும், இக்கட்டுரையை நீங்கள் திருத்தினால் மேலும் கற்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இதனை மாதிரியாகக் கொண்டு அக்கலைக்களஞ்சியக் கட்டுரைகளை, பலருடன் இணைந்து மேம்படுத்துவேன்.--த♥உழவன் (உரை) 15:25, 11 நவம்பர் 2019 (UTC)
பக்க மேம்பாடு
தொகுமருத்துவத்துறையில் கனகு(kanags) இருப்பதால், அவரின் ஆற்றல், இக்கட்டுரை மேம்பாட்டிற்கு பயனாகும் என்ற எண்ணத்தால் காத்திருந்தேன். ஆனால், அவருக்கு பணியடர்வு இருக்காலம். போட்டி முடியும் காலம் என்பதால், விக்கிப்பீடியர் வாட்சுஅப் குழுவில் பின்னூட்டம் பெற்று, நானே ஓரளவு இணையத்தில் பல பக்கங்களை படித்த பின்பு ஏற்பட்ட ஓரளவு மனத்தெளிவால், இக்கட்டுரயைச் சீர்படுத்தியுள்ளேன். விக்கியென்றாலே, இணைந்து, இசைந்து பணியாற்ற வேண்டும் என்பதாலும், நான் கற்றது கை மண் அளவு என்பதாலும், இதனை பிறரும் மேம்படுத்தக் கேட்டுக் கொள்கிறேன்.--த♥உழவன் (உரை) 02:58, 5 சனவரி 2020 (UTC)