விக்கிப்பீடியா பேச்சு:பிற மூலங்களிலிருந்து, பனுவல்களைப் படியெடுத்தல்

பகுப்பு பேச்சு:பதிப்புரிமை மீறியிருக்கக்கூடிய கட்டுரைகள்‎ என்பதன் படி, நமது தமிழ் விக்கிப்மீடியர்களுக்கு, இந்த வழிகாட்டல் பக்கம் மிகவும் அவசியாகிறது என எண்ணுகிறேன். எனவே, இப்பக்கத்தினை பிற மொழியினர் அவர்களின் சமூகத்திற்கு ஒப்ப உருவாக்கியது போல, நாம் நமது தமிழ் விக்கிமீடியர்களின் கருத்துக்கு ஒப்ப(consensus) வாக்குகளை இட்டு உருவாக்குவோம். இப்பக்கத்தினை விக்கித்தரவுடன் இணைத்துள்ளேன். இப்பக்கம் போன்று, இந்திய மொழிகளில் மலையாள மொழியினர் முதலில் உருவாக்கியுள்ளனர். நாம் இந்திய மொழிகளில் இரண்டாவதாக இதனை உருவாக்க முனைகிறோம்.--உழவன் (உரை) 01:23, 19 திசம்பர் 2016 (UTC)Reply

தமிழக அரசாணை தொகு

படிமம்:GoTN Tamil Development Departments order on creative commons cc by sa.pdf என்ற தமிழக அரசாணைப்படி(அரசாணை எண்: 453/எஸ்/2016 நாள்:17.5.2016), தமிழக கல்வி வளங்கள் பொதுஉரிமத்தில் வழங்கப்படுவதாகத் தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக இரண்டாம் பக்கக்கூறான 4அ II என்பதனைக் காணவும். அதன்படி, தமிழ்நாடு பாடநூல் கழகம் வழங்கும் நூல்களை, நம் கட்டுரைகளின் பனுவல் வளரச்சிக்கு மட்டும் பயன்படுத்த இயலும். நாம் பயன்படுத்தலாமா?

மாதிரிபக்கங்கள்:உருளைக் கிழங்கு குடும்பம், ஆமணக்குக் குடும்பம்.

ஆதரவு தொகு

  1. --உழவன் (உரை) 01:50, 19 திசம்பர் 2016 (UTC)Reply
  2. --நந்தகுமார் (பேச்சு) 04:56, 19 திசம்பர் 2016 (UTC)Reply

நடுநிலை தொகு

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:26, 19 திசம்பர் 2016 (UTC)Reply

எதிர்ப்பு தொகு

கருத்து தொகு

  • இந்த ஆணையின் அடிப்படையில் தொடரும் முன் சற்று கவனமும் பொறுமையும் தேவை. சட்டம்/ஆணையைப் பல்வேறு வகையிலும் புரிந்துணரலாம். ஆணையின் இரண்டாம் பக்கம் பகுதி 4 ஆ ".... படைப்பாக்கப் பொதும உரிமத்தின் (Creative Commons CC BY SA) கீழ் வெளியிடலாம்" என்கிறது. வெளியிடப்படுகிறது என்று அறுதியிட்டுக் கூறவில்லை. இதனை நிறுவனங்களுக்கான அறிவுறுத்தலாகவும் பார்க்க இயலும். பகுதி 4 இ இறுதியில் பின்வருமாறு வருகிறது: "இவையனைத்தும் தமிழக அரசு/ தமிழ் வளர்ச்சித் துறை/ தமிழ்ப் பல்கலைக்கழகம்/ தமிழ் இணையக் கல்விக் கழக இணையத்தளங்களில் உடனுக்குடன் வெளியிடுவதற்கு ஆணை வெளியிடப்படுதல் வேண்டும்." என்கிறது. நேரடியாக விக்கிப்பீடியா போன்ற நிறுவனங்கள் வெளியிடலாமா என்பது தெளிவாக இல்லை. எனவே, இந்த ஆணை குறித்த பரவலான விழிப்புணர்வும் ஆக்கங்கள் முதன்முறையாக தமிழ் இணையக் கல்விக்கழகம் போன்ற அரசு நிறுவனத்தின் ஊடாக முறையான கட்டற்ற உரிம அறிவிப்போடு வெளியாவது நன்று. அதற்கான முயற்சிகளை எடுப்போம். படைப்பாக்கப் பொதும உரிமம் என்பது தமிழ் விக்கிக்கு மட்டும் செல்லுபடியாகக் கூடிய வகையில் நாமே வகுக்கும் விதியோ வழிமுறையோ அன்று. தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியாகும் உரை தகுந்த மூலம், உரிம ஆவணத்துடன் பிற மொழிகளிலும் பயன்படுத்தச் செல்லுபடியாவதாக இருக்க வேண்டும். --இரவி (பேச்சு) 10:54, 19 திசம்பர் 2016 (UTC)Reply
  • இந்த ஆவணத்தைப் பெற்றவர் பரிதி. அவரின் கருத்தினையும் இடக் கோருவேன்.--உழவன் (உரை) 12:12, 19 திசம்பர் 2016 (UTC)Reply

பல நாட்டவரின் கூட்டுழைப்பால், நூலகத் திட்டம் வளர்ந்து வருகிறது. அங்கு பதிப்புரிமையுள்ள நூலகளை பதிவிறக்கம் செய்ய இயலாது எடுத்துக்காட்டாக,இந்நூலைக் காணவும். உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு பயன்படும் வகையில் பல நூல்களை பதிவிறக்கம் செய்யலாம். (எ.கா.) பதிப்புரிமை சரிபார்க்கபட்ட நூல்எனவே, அத்தகைய நூல்களைக் கொண்டு, தமிழ் விக்கியில் கட்டுரைகள் எழுதலாமென்று எண்ணுகிறேன். இதனால் பலரும் ஈடுபட்டு, நமது தமிழ் திட்டம் வளரும் என்றே எண்ணுகிறேன். இத்தகைய அணுகுமுறையை நாம் பின்பற்றலாமா?--உழவன் (உரை) 01:09, 25 திசம்பர் 2016 (UTC)Reply

இங்கிருந்து நூலைத் தரவிறக்கிப் பார்த்தேன். நூலின் ஆசிரியர் செல்லவேலுக்கு பதிப்புரிமை உள்ளதாகவே ஒளிவருடப்பட்ட நூல் சொல்கிறது. பக்கத்தின் வேறெந்த பகுதியிலும் கட்டற்ற உரிம அறிவிப்பு தென்படவில்லை. நூலகம் திட்ட நண்பர்கள் உரிய பதிப்புரிமை மாற்ற அறிவிப்புகளைப் பெற்ற பிறகே தளத்தில் நூல்களை வெளியிடுகிறார்கள் என்பதை அறிவேன். ஆனால், அது உலகில் உள்ள அனைவருக்கும் புலப்படும் வகையில் நூலுக்கான விக்கிப்பக்கத்தில் தமிழ்/ஆங்கிலம் இரு மொழிகளில் குறிப்பிடுவது நன்று. ஆசிரியர் கையெழுத்து இட்டுத் தந்த பதிப்புரிமை மாற்ற அறிவிப்பையும் நூலிலும் விக்கிப்பக்கத்திலும் இணைப்பது நன்று. அவ்வாறு செய்யாத வரை, எது முறையான பதிப்புரிமை உள்ள மூலம் என்பதில் குழப்பமும் தயக்கமும் நிலவும்.--இரவி (பேச்சு) 06:22, 26 திசம்பர் 2016 (UTC)Reply

இந்த நூல்களை மேற்கோள்களாகக் காட்டி விக்கியில் கட்டுரைகள் எழுதுவதில் என்ன தடை உண்டு?--Kanags \உரையாடுக 07:18, 26 திசம்பர் 2016 (UTC)Reply
எந்த நம்பகமான மூலத்தையும் மேற்கோள் காட்டலாம். இந்த உரையாடல் பக்கம் கட்டற்ற ஆக்கங்களின் உள்ளடக்கங்களை விக்கிப்பீடியா கட்டுரைகளில் நகல் எடுப்பதைப் பற்றிப் பேசுகிறது. அவ்வாறு பயன்படுத்தும் போது மூல ஆவணத்தில் உரிம அறிவிப்புகள் தெளிவாக இருப்பது அவசியம். --இரவி (பேச்சு) 08:02, 26 திசம்பர் 2016 (UTC)Reply

தமிழ்ப்பெருங்களஞ்சியத் திட்டம் தொகு

தமிழ்ப்பெருங்களஞ்சியத் திட்டம் நிகழும் இணையமானது, பொதுமங்கள் உரிமத்தோடு கிடைக்கிறது. [தொடர்பிழந்த இணைப்பு]அதன் பனுவல்களைப் பயன்படுத்தி , இத்திட்டத்தனை, பெருமளவில் வளர்க்கலாம். நம்மில் பலர் தட்டச்சு செய்ய நேரமில்லா சூழ்நிலை இருப்பதால், அப்பனுவல்களைக் கொண்டு கட்டுரைகளை இங்கு விக்கிநுட்பத்தோடு விரிவாக்கலாம். எடுத்துக்காட்டு : தடப்பந்து--உழவன் (உரை) 08:04, 3 சனவரி 2017 (UTC)Reply

@Ravidreams: மேற்கூறியதில் உங்களின் கருத்தறிய ஆவல்--உழவன் (உரை) 13:44, 12 சனவரி 2017 (UTC)Reply
@Info-farmer:, தமிழ்ப்பெருங்களஞ்சியத் திட்டம் தெளிவாக கட்டற்ற காப்புரிமத்தின் கீழ் ஆக்கங்களை வெளியிடுவதால், அதன் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தலாம். அதே வேளை, அத்தளத்தில் விக்கிப்பீடியாவில் உள்ளது போல் காப்புரிமை, சான்றுகள் முதலியவற்றை உறுதிப்படுத்தி வெளியிடும் தரக் கண்காணிப்பு முறை இல்லாததால், சற்று கவனத்துடனே அதன் ஆக்கங்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டுக்கு, இந்தக் கட்டுரையை

[தொடர்பிழந்த இணைப்பு] எழுதியவர் உண்மையிலேயே சொந்தமாக எழுதினார் அல்லது இன்னொரு கட்டற்ற ஆக்கத்தில் இருந்து படியெடுத்தார் என்பதையும் தரவுகள் உண்மை என்பதையும் அதற்கான சான்றுகள் என்ன என்பதையும் எப்படி அறிவது? எனவே, எங்கிருந்து கொணரப்படும் கட்டற்ற ஆக்கம் என்றாலும் அதனை வழமையான விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு முறைகள், எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்டு இடுவது நன்று. அப்படியே படியெடுத்து இடுவது வரவேற்கத்தக்கது அன்று. இன்னொன்று, இவ்வாறு கொணரப்படும் ஆக்கங்களை மூலமாக மட்டும் குறிப்பிட்டால் போதுமானது. வெளியிணைப்புகளில் தரும் இணைப்புகள் கூடுதல் தகவலை அறியும் வண்ணம் இருக்க வேண்டும். நமது முதன்மைக் கட்டுரையை விட குறைவான தகவலைக் கொண்டிருப்பதால் பயன் இல்லை. --இரவி (பேச்சு) 13:53, 12 சனவரி 2017 (UTC)Reply

மூலம் பற்றி அறிவது இங்கேயும் கடினமாகவே உள்ளது. ஆனால், அப்படியே நகல் எடுத்ததும் இல்லை. பனுவலில் 30% தவிர, மற்றவை வளர்த்தெடுக்கப்பட்டவையே. இவ்வாறு ஒப்பிடாமல், பதிப்புரிமை மீறல் என்று தவறாக, பிறர் புரிந்து கொள்ளா வண்ணம் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதில் தான் தெளிவை எதிர்பார்க்கிறேன். இது பற்றி இந்தியச் சட்டம் கூறுவதையும் கருத்தில் கொள்ள முயலுகிறேன்.--உழவன் (உரை) 14:01, 12 சனவரி 2017 (UTC)Reply

வேங்கைத் திட்டம் 2.0 நடப்பில் பதிப்புரிமை தொகு

பேச்சு:உளநோய் மருத்துவம் என்பதில், படியெடுத்து கட்டுரையெழுதுதல் குறித்த உரையாடல் உள்ளது.--உழவன் (உரை) 08:23, 6 நவம்பர் 2019 (UTC)Reply

வணக்கம் உழவன். தாங்கள் பல கட்டுரைகளில் தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட கலைக்களஞ்சியத்தின் தரவுகளை பயன்படுத்தியுள்ளீர்கள்.
உதாரணம் -உளநோய் மருத்துவம் , உளநிலைப் பகுப்பாய்வு ,உருது கவிஞர் இக் கடிதத்தின் மூலம் அவை CC-BY-SA என்கிற உரிமையில் உள்ளன . பொதுவாக இது தவரில்லை . காண்க : 1911 ஆம் ஆண்டு பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் இருந்து படியெடுத்தல்.ஆனால் , Template:EB1911 என்பதைப் போல் ஒரு வார்ப்புரு உருவாக்கினால் மேலும் நலம் என்று எண்ணுகிறேன்.--Commons sibi (பேச்சு) 12:22, 6 நவம்பர் 2019 (UTC)Reply
நன்றி, சிபி(@Commons sibi:). உருவாக்குவது எளிது. ஆனால், அதன் தரவுகளை நீக்கப் பரிந்துரைத்துள்ளனர். தற்போது அதுகுறித்த உங்கள் கருத்தினையும் அப்பக்கத்தில் கண்டேன். இது அக்கலைக்களஞ்சியங்களை, மேன்மை படுத்தும் அடுத்தகட்ட நகர்வு என்பதால், அவ்வுரையாடலில் கலந்து கொண்டமைக்கு நன்றி.ஏறத்தாழ இலட்சம் தலைப்புகளில் பல்வேறு கலைக்களஞ்சியங்கள் அரசு தரப்பில் தரப்பட்டுள்ளன. அவற்றை தற்போது பட வடிவில் ஒவ்வொன்றாக தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் உருவாக்கி வருகின்றனர். --உழவன் (உரை) 12:54, 6 நவம்பர் 2019 (UTC)Reply
Return to the project page "பிற மூலங்களிலிருந்து, பனுவல்களைப் படியெடுத்தல்".