பேச்சு:ஊர்
ஊர் என்ற சொல் தெனிந்தியா முதல் வட இந்தியா வரை பயனில் இருக்கிறது. கோயமுத்தூர்,திருப்பூர், ஜெய்பூர்,கான்பூர். ஊர் அடிப்படையில் எந்த மொழி சொல் என ஆராய வேண்டும். ஊர் என்ற சொல்லின் எட்டிமாலாஜி ஆராயப்பட வேண்டும். தமிழாக இருக்கும் பட்சத்தில் வட இந்தியாவில் எப்படி பயன்பாட்டிற்கு வந்தது என்று ஆராய வேண்டும். ஆர்யன் மைக்ரேஷன் தியரிக்கு உதவியாக இருக்கும்.
பொருள்
தொகுஊர் என்றால் கிராமம் என்று பொருளன்று. ஊர் என்பது கிராமம், நகரம், மாநகரம் என்ற பல்வேறு வகைகளையும் குறிக்கும் பொதுச் சொல்.--பாஹிம் (பேச்சு) 01:54, 3 மார்ச் 2015 (UTC)
- பாகிம், கிராமம் என்பதும் தமிழ்ச் சொல் அல்ல. தற்போதைய வழக்கில் ஊர் என்றே கிராமங்களை அழைக்கிறார்கள். இலக்கியங்களில் நகரங்களுக்கு பட்டினம், பட்டணம் (துறைமுகத்துடன் கூடியது??) என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டன. ஊர், நகரம், மாநகரம் என்ற வழக்கையே விக்கியில் பயன்படுத்துவது நல்லது.--Kanags \உரையாடுக 07:22, 3 மார்ச் 2015 (UTC)
- தமிழக அரசு சிறுகிராமங்களைக் குறிக்க சிற்றூர் எனப் பயன்படுத்துகின்றது. கிராமப் பஞ்சாயத்தை ஊராட்சி என்று அழைக்கின்றது.
- வலவு தளத்தில்:
- சேரிக்குப் பெரிது சிற்றூர்,
- தென்னை மாசூழ்ந் திருக்கும்;
- தேர்ஒன்று, கோயில் ஒன்று
- சேர்ந்து ஓர் வீதி, ஓட்டிக்
- கூரைகள், கூண்டு வண்டி
- கொட்டில்சேர் வீதி ஐந்தே; ஊர் இது; நாட்டார்க் கெல்லாம்
- உயிர் தரும் உணவின் ஊற்று.
--மணியன் (பேச்சு) 10:50, 3 மார்ச் 2015 (UTC)
கிராமம் என்பது தமிழ்ச் சொல்லல்ல என்பதில் மறுப்பில்லை. என் கருத்தும் அதுவே. ஆயினும் ஊர் என்ற சொல்லுக்குப் பொருள் கிராமம் என்பதைத்தான் ஏற்க மறுக்கிறேன். நியூயோர்க்கையோ இலண்டனையோ பாரிசையோ சொந்த இடமாகக் கொண்டோரிடம் வினவினாலும் "உங்களது சொந்த ஊர் எது" என்று கேட்காமல் வேறெப்படிக் கேட்பதாம்? இங்கே ஊர் என்பதன் பொருள் கிராமங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படுவதில்லை என்பதையே குறிப்பிடுகிறேன். ஊர் என்பதில் கிராமம், நகரம் (பட்டினம்) போன்ற பலவும் அடங்கும்.--பாஹிம் (பேச்சு) 13:39, 3 மார்ச் 2015 (UTC)
நகரம் என்பதைக் குறிக்கும் பட்டினம் என்ற சொல் தற்போதும் பயன்படுத்தப்படுகிறது. எ.கா. திருகோணமலை பட்டினமும் சூழலும் (Trincomalee Town and Environment) என்பது உத்தியோகபூர்வப் பெயராகும்.--பாஹிம் (பேச்சு) 13:41, 3 மார்ச் 2015 (UTC)
- தமிழ்ப் பேரகராதி ஊர் என்பதற்குக் கிராமம், நகரம் எல்லாவற்றையும் குறிக்கும் என்று தரப்பட்டிருப்பது உண்மைதான். இது பொது வழக்கில் ஊர் என்பதை எல்லாவற்றுக்கும் பயன்படுத்துவதன் விளைவு தான். "உங்கள் ஊர் எது?" என்பது போன்ற வழக்குகள் நகரங்கள் அதிகம் உருவாகியிராத காலத்தின் தொடர்ச்சி என்றுதான் கொள்ளவேண்டும். தஞ்சாவூர் போன்ற நகரப் பெயர்களும் அவை நகரமாவதற்கு முந்திய பெயரின் தொடர்ச்சிதான். நகரங்கள் தமிழர் பகுதிகளில் வளர்ச்சியடையத் தொடங்கிய பின்னர் அவற்றைக் குறிப்பாகச் சொல்லும்போது ஊர் என்று சொல்வதில்லை. சிலப்பதிகாரம் பூம்புகாரை நகர் என்றே குறிப்பிடுகிறது. பட்டினம் என்பது துறைமுக நகரைக் குறிக்கிறது. எல்லா நகரும் பட்டினம் அல்ல. தற்காலத்தில், village, town, city போன்றவற்றை வேறுபடுத்தித் தமிழில் குறிப்பிட வேண்டிய தேவை ஏற்பட்ட பின்னர், ஊர் என்னும் சொல் village என்பதைக் குறிக்கவே பயன்படுகிறது. -- மயூரநாதன் (பேச்சு) 17:04, 3 மார்ச் 2015 (UTC)