கரூர் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்

தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:12, 14 மே 2007 (UTC)Reply

சான்றுகளுடன் செப்பம் செய்யப்பட வேண்டிய பகுதி

தொகு

2000 ஆண்டு பழமைமிக்கது கரூர்.கரூர் காலப்போக்கில் சேர,சோழ,பாண்டிய,கங்க மன்னர்கள்,விஜய நகர நாயக்கர்கள்,மைசூர் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.

கரூர் பண்டைய காலங்களில் மிகவும் முக்கியமான அயல்நாட்டு வணிகத்தலமாக விளங்கியுள்ளது. அகழ்வாராய்ச்சியின் போது ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆன்பொருணை என்றழைக்கப்பட்ட அமராவதி நதிக்கரையிலேயே வஞ்சி மாநகர் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.மேலும் சேர மன்னன் சேரன் செங்குட்டுவன் வஞ்சி மாநகரை தலைநகராகக் கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. இவ்வஞ்சி மாநகரே கருவூர் என்றழைக்கப்பட்டு கரூர் என தற்காலத்தில் அழைக்கப்படுகிறது. கரு+ஊர் (கருவூர்) என்பது கரூர் என மருவியது.

கரூர் அருகே உள்ள ஆறுநாட்டார் மலையில் கரூரை ஆண்ட சேர மன்னர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு கிடைக்கபெற்றுள்ளது.

பல்வேறு அகழ்வாராய்ச்சிகளின் மூலமும், கல்வெட்டுகளின் மூலமும் கரூர் சங்ககால சேரர்களின் தலைநகராக விளங்கியது நிரூபிக்கபட்டுள்ளது. கரூர் சோழர்களின் தலைநகரமாக விளங்கியுள்ளது. அங்குதான் சோழர்கள் கரூவூலம் வைத்து செயல்பட்டிருக்கின்றனர். --Sengai Podhuvan (பேச்சு) 00:39, 14 சனவரி 2015 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கரூர்&oldid=3866438" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கரூர்" page.