பேச்சு:கார்போவைதரேட்டு

கார்போவைதரேட்டு என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.


காபோவைதரேட் என்னும் தமிழ்ப்படுத்தல் சரியானதாகத் தெரியவில்லை.
கார்போஹைட்ரேட் (carbohydrate) ஓரளவுக்கேனும் நெருங்கிய தமிழ் உச்சரிப்பாக இருக்கும். இந்தத் தவறுகளை விக்கிப்பீடியாவின் பல இடங்களிலும் காணக்கூடியதாக இருக்கிறது. இது தவறு என்பது போலத்தான் எனக்குத் தெரிகிறது.

கார்போகைட்ரேட் என்றாவது எழுதலாமே.

--Chandravathanaa 15:15, 8 நவம்பர் 2008 (UTC)Reply

Hydrate, Hydragen, Hydrocloric Acid என்பவற்றை இலங்கையில் ஐதரேற்று, ஐதரசன், ஐதரோகுளோரிக் அமிலம் என்றுதான் எழுதுகிறோம் அல்லவா? அதனால் காபோவைதரேற்று என்பது சரி. தவறு அல்ல. ஆனாலும் தமிழ்நாட்டினர் "ற்று" என்பதற்கு வேறு உச்சரிப்புக் கொள்கிறார்கள் என்பதால் "ட்டு" என்று பயன்படுத்தியிருக்கிறேன். ஆங்கிலச் சொற்கள் எல்லாவற்றையுமே ஆங்கிலேயருடைய உச்சரிப்புக்கு நெருக்கமாக எழுதவேண்டும் என்பதில்லை. ஆங்கிலச் சொற்களைத் தமிழ் மொழிக்குப் பொருத்தமாக எழுதுவதுதான் நல்லது. தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய இடங்களில் கிரந்த எழுத்துக்களைத் தவிர்க்கவேண்டும். ஹைட்ரேட், கைட்ரேட் என்பனவெல்லாம் தமிழ் மொழிக்குப் பொருத்தமான பயன்பாடுகள் அல்ல. மயூரநாதன் 17:47, 8 நவம்பர் 2008 (UTC)Reply

இந்தக் கருத்தை முழுமையாகச் சரியென்று ஏற்க முடியவில்லை.
காபன்+ஐதரேற்று என்பதில் எப்படி வை வந்தது?
இந்த வை தான் என்னை இங்கு எழுத வைத்தது.

காபன்+ஐதரேற்று என்றால் காபனைதரேற்று என்றுதானே வரவேண்டும். --Chandravathanaa 22:34, 8 நவம்பர் 2008 (UTC)Reply

"காபன் + ஹைதரேட்டு" எப்படி காபன்ஹைதரேட்டு ஆகாமல் காபோஹைதரேட்டு ஆனது என்று சிந்தித்துப் பாருங்கள். மயூரநாதன் 16:07, 9 நவம்பர் 2008 (UTC)Reply

கார்போஹை'ட்ரேட்டு என்று இருக்க வேண்டும் ஆனால் கிரந்த எழுத்து வேண்டாம் எனில், கார்போஃகைடிரேட்டு என்று கூறலாம் என்று நினைக்கிறேன். எஃகு என்னும் சொல்லில் உள்ள ஒலிப்புதான் இங்கும். அல்லது கார்போஃகைதரேட்டு அல்லது கார்போஃகைடரேட்டு எனலாம். மாவுப்பொருள் என்பது இன்னும் பரவலாக உள்ள பெயர். மாவியம் என்றும் கூறலாம். கரிமத்துக்குக் கார்பன் (carbon) என்று ஆங்கிலவழியே ஒலிபெயர்த்தாலும், தமிழ்வழியும் பொருள் பொருந்தி வருவது அருமை. கார் என்பது தமிழில் கறுப்பு என்னும் பொருள் தரும் சொல். கார்முகில், கார்மேகம், காரி ஆகிய சொற்களை எண்ணிப்பாருங்கள். கார்நிலம் அல்லது காக்கரை என்பது கரிசல் நிலம், கருப்பாக மாறுவதை கார்த்தல் என்றும் கூறுகிறோம்.. இப்படியாக பல சொற்கள் உண்டு. எனவே கார் --> கார்பு, கார்பன் என்று கூட நாம் தமிழ்ச்சொல்லாகக் கொள்ளலாம். கார்போ-ஐதரேட்டு என்றோ கரிமநீரியம் என்றோ கூடக் கூறலாம். என் பரிந்துரை கார்போஃகைடிரேட்டு அல்லது மாவியம் என்பதாகும். இடையில் வரும் டி குற்றியலிகரமாக ஒலிப்பதால் ஒலிப்பும் நெருங்கி வருவதாக உணர்கிறேன். கார்பன் முதலான சொற்களில் வரும் ரகர ஒற்றை (ர்) விலக்கி எழுதுவது தவறு என்பது என் கருத்து. யாழ்ப்பாணத் தமிழர்கள் அவ்வாறு எழுதுகிறார்கள் என்பதனை அறிவேன். அதற்குக் கரணியம், ரகர ஒலிப்பில் முரண்பட்ட கொள்கை இருப்பதால் என்பது என் துணிபு. கார்முகில் என்னும் சொல்லில் உள்ளதுபோலத்தானே கார்போ என்னும் முன்னொட்டுச்சொல் உள்ளது? சார்பு, நேர்பு போன்ற நூற்றுக்கணக்கான சொற்களில் ரகர ஒற்று இடையே வருகின்றது, ஆகவே காபன் என்று எழுதுவது சரியென்று நான் நினைக்கவில்லை. கார்பன் என்று எழுதுவதே நல்லது. பெரும்பானமையானவர்கள் கார்பன் என்று எழுதுவதையும் பார்க்கலாம். --செல்வா 22:57, 11 நவம்பர் 2008 (UTC)Reply

இக்கட்டுரையின் தலைப்பை கார்போஃகைதரேட்டு என்றோ கார்போவைதரேட்டு என்றோ மாறலாமா? கார்போவைதரேட்டு அல்லது கார்போவைதரேட் என்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். --செல்வா 14:05, 22 ஜூலை 2009 (UTC)
இதனை மாவியம் என்று குழப்பம் இல்லாமல் மாற்றலாம். கட்டுரைக்குள் கார்போவைதரேட்டு என்றும் குறிக்கலாம். மாவியம், புரதம், கொழுப்பியம் ஆகிய மூன்றும் மிக அடிப்படையானவை. இவற்றை விரைவில் உறுதி செய்து மேலும் பல தொடர்பான கட்டுரைகள் எழுதுதல் வேண்டும். கொழுப்பியம் என்பதைக் கொழுமியம் என்றும் கூறலாம். கொழு என்பதே அடிப்படை. இதே போல sugar, saccharide என்பதற்கு இனியம் அல்லது இனிப்பியம் எனலாம்.--செல்வா 14:13, 22 ஜூலை 2009 (UTC)

மேலுள்ள உரையாடலின்படி மாவியம் என இக்கட்டுரையின் தலைப்பை மாற்றலாமா? கார்போஃகைதரேட்டு, காபோவைதரேட்டு, கார்போஹைதரேட்டு, கார்போகைதரேட்டு, கார்போ-ஐதரேட்டு, மாவுப்பொருள் ஆகிய வடிவங்களுக்கும் வழிமாற்று தரலாம். யாரும் மறுப்பு சொல்லவிலை என்றால் தலைப்பை மாற்றலாம் என நினைத்துள்ளேன். --செல்வா 23:03, 22 ஜனவரி 2010 (UTC)

கார்பன் என்னும் சொல்லுக்கும் கார் என்னும் தமிழ்ப் பதத்திற்கும் உள்ள தொடர்பை செல்வா குறிப்பிட்டுள்ளது சிறப்பு. அவர் கூறுவது போல ரகர ஒற்றையும் தேவையே. இருப்பினும், காபோ என்றோ கார்போ என்றோ ஓகாரத்துடன் பெயரெச்சத்தை முடித்தல் தமிழ் மரபன்று. உதாரணமாக, இந்தியன் + நாடு என்பதை இந்தியநாடு என்று சேர்ப்பதே தமிழ் மரபு; இந்தியோநாடு என்றல்ல. இந்தியன்+ஜெர்மன் என்பதை Indo-German என்று கூட்டுவது ஆங்கில மரபு; அதையே, இந்திய ஜெர்மானிய என்று எழுதுவது தமிழ் மரபு. இவ்வாறாக, கார்பன் + ஐதரேட்டு என்பதை நாம் கார்பவைதரேட்டு என்று கூட்டுவதே சிறடப்பாக இருக்கும். மாவியம் என்று கொள்வதை விடவும் கார்பவைதரேட்டு என்று ஆங்கிலத்தில் இருந்து ஒரு புதிய சொல்லை, சொற்றொடரைத் தமிழுக்குக் கொன்டு வருதலே சிறப்பாகத் தெரிகிறது.--−முன்நிற்கும் கருத்து Akbmuruhan (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

தலைப்பு தொகு

இதன் தலைப்பு தமிழில் மாப்பொருள் என்றிருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 18:31, 16 செப்டம்பர் 2015 (UTC)

  விருப்பம்--Kanags \உரையாடுக 21:10, 16 செப்டம்பர் 2015 (UTC)
புரதம், கொழுப்பு என்று சொல்வது போல் இதற்கும் வேதிமூலக்கூறைச் சுட்டாத ஒரு பொதுவான பெயர் இருப்பது பயன்பாட்டுக்கும் புரிதலுக்கும் எளிமையாக இருக்கும். செல்வா பரிந்துரைத்துள்ள மாவியம் என்ற பெயர் அறிவியற் பயன்பாட்டுக்கு ஏற்றதாக உள்ளது. பொதுவாக, இயன்ற இடங்களில் பொருள் என்ற விகுதியைத் தவிர்க்கலாம். எரிபொருள் என்பதை விட எரிமம் என்பது சுருக்கமாக இருக்கும்.--இரவி (பேச்சு) 06:29, 17 செப்டம்பர் 2015 (UTC)

நான் மாப்பொருள் என்பதைச் சுட்டக் காரணம் ஏற்கனவே அது இலங்கையில் பயன்பாட்டிலுள்ளமையே. புதிய சொல்லை உருவாக்க முன்னர் ஏற்கனவே உள்ள சொற்களைப் பயன்படுத்துவது கூடிய விளக்கம் கொடுக்குமன்றோ?--பாஹிம் (பேச்சு) 06:47, 17 செப்டம்பர் 2015 (UTC)

மாப்பொருள் என்ற தலைப்பில் starch ஐக் குறித்து வேறொரு கட்டுரை உள்ளது.--Kanags \உரையாடுக 08:44, 17 செப்டம்பர் 2015 (UTC)
மாச்சத்து என பல கட்டுரைகளில் உள்ளது. பெரிய அளவில் நமது உடலுக்குப் பயனாகும் சத்து என்பதாலும், இப்படி பெயர் மாற்றலாம். மாவுப்பொருள்(starch) என பல கட்டுரைகளில் உள்ளது. எனவே, அதற்கும் ஒரு வழிமாற்று, மாப்பொருள் கட்டுரைக்கு வைக்கலாமா?--உழவன் (உரை) 00:15, 7 திசம்பர் 2015 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கார்போவைதரேட்டு&oldid=3400697" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கார்போவைதரேட்டு" page.