115.241.106.233 என்ற ஐ.பி முகவரி கொண்ட பயனரால் கட்டுரைப் பகுதியில் செய்யப்பட்ட பின்வரும் திருத்தம் இங்கு நகர்த்தப்பட்டு கட்டுரை மீளமைக்கப்படுகிறது:

"திஸா என்ற பெயர் கொண்ட பிரமி எழுத்தில் மண்பானைஓடு கீழடியில் கிடைக்கப்பெற்றுள்ளது.

பேரரசன் அசோகன் (சார்லஸ் ஆலன்) புத்தகத்தில் பக்கம் 188,189 இரண்டு பக்கங்களில் இரண்டு பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

1. அசோகரது ஞான குரு மொகாலி புட்டா திஸா என குறிப்பிடப்பட்டுள்ளது. 2. இலங்கையின் ஒரு பகுதியை ஆண்ட அரசன் முட்டாசிவோ அவர்களின் 2வது மகன் பெயர் தேவனன் பியாதிஸே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு கிடைத்துள்ள ஒரு சிறு துண்டில் கிடைக்கப்பபெற்ற அந்த திஸா என்று சொல்லப்படுகிற எழுத்திற்கு முன்பு ஏதேனும் இருந்திருக்கலாம். அப்படி இருந்திருந்தால் அவருடைய முழுப் பெயர் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். மீண்டும் இந்த ஆய்வை தொடர்ந்தால் சிறப்பாக இருக்கும். இந்த திஸா என்ற பெயர் பெரும்பாலும் புத்த மதத்தை தழுவியவர்களாக இருக்க கூடும். தமிழகத்தில் புத்த மதம் பரவியவிதம் குறித்து அறிந்து கொள்ள இந்த ஆய்வு முக்கியமாக அமையலாம். தமிழக அரசும், மத்திய அரசும் ஆவண செய்ய வேண்டும்."

படங்கள் தொகு

என் அம்மா இன்று இவ்வகழ்வாய்வு மையத்துக்கு தங்கள் பள்ளிக்குழந்தைகளை அழைத்துச்சென்றார். அப்போது எடுத்த படங்களை கிரியேட்டிவு காமன்சு பகிர்வுரிமையில் வெளியிட்டுள்ளார். கட்டுரையில் பயன்படுத்திக்கொள்வோம். -- சுந்தர் \பேச்சு 14:17, 14 செப்டம்பர் 2015 (UTC)

மேலும் விபரங்கள் - உறை கிணறு என்றால் என்ன? தொகு

இக் கட்டுரையில் கூறப்பட்ட உறை கிணறு, பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நான்கு வகை செங்கற்கள், பல்வேறு வகை மண்பாண்டங்கள், அணிகலன்கள், கருவிகள், கட்டித்தொகுதிகள் பற்றி மேலும் விபரங்கள் இணைத்தால் இந்தக் கட்டுரை சிறபாக வளரும். உறை கிணறு என்றால் என்ன? --Natkeeran (பேச்சு) 13:53, 3 சூன் 2016 (UTC)Reply

இங்கு பார்க்கவும்.--நந்தகுமார் (பேச்சு) 14:04, 3 சூன் 2016 (UTC)Reply

11 அக்டோபர் 2016 தொகு

வணக்கம். 11 அக்டோபர் 2016 அன்று குழுவாக தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டு கீழடி சென்றுவந்தோம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சிலவற்றைத் தெரிவு செய்து கட்டுரையில் இணைத்துள்ளேன். விதிகள் அனுமதிப்பின் ஏற்கவேண்டுகிறேன். மேற்கொண்டு விவரம் கிடைக்கும்போது பதிவில் சேர்ப்பேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:28, 18 அக்டோபர் 2016 (UTC)Reply

சாளுவன்குப்பத்து செங்கல் தொகு

கீழடி அகழ்வாராய்வுக் கட்டடங்களில் காணப்பெறும் செங்கற்களைப் பார்க்கும்போது இதே வகையிலான செங்கற்கள் ஆழிப்பேரலையால் வெளிக்கொணரப்பட்ட சாளுவன்குப்பத்து சங்ககால முருகன் கோவிலில் ( https://ta.wikipedia.org/s/k04 ) பார்த்ததாக நினைவு.


அகழ்வாராய்ச்சி செப்டம்பர் 2015-இல் நிறைவடையப் போகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2017 என்பது தவறாக 2015 என எழுதப்பட்டுவிட்டதா இல்லை 2015-இலேயே நிறைவுற திட்டம் இருந்ததா? அகழ்வாராய்ச்சி எப்போது தொடங்கியது என்பதையும் கட்டுரையில் குறிக்கலாம்.

நன்றி தொகு

இந்தக் கட்டுரையை உருவாக்கி வளர்த்து வந்த அத்தனை தமிழ் விக்கிப்பீடியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். கட்டுரையை அவ்வப்போது வரும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களைக் கொண்டு மேம்படுத்தி வர அனைவரும் இக்கட்டுரையைக் கவனிப்போம். --TNSE Mahalingam VNR (பேச்சு) 10:56, 22 செப்டம்பர் 2019 (UTC)

'கீழடி அருங்காட்சியகம்' அடிக்கல் நாட்டப்படுதல். தொகு

'கீழடி அருங்காட்சியகம்' மிகப் பிரம்மாண்டமான முறையில் அமைவதற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டியுள்ளார். Helppublic (பேச்சு) 03:01, 21 சூலை 2020 (UTC)Reply

Return to "கீழடி அகழாய்வு மையம்" page.