குங்குமப்பூ எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

சோடாபாட்டில் குறிப்புகள்

தொகு

பொதுவாக: முன்பை விட அதிக அளவில் தொடர் ஆங்கில வாசகங்களை பிரித்து சிறு வாக்கியங்களாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் சில இடங்களில் டூல்கிட்டின் அதே அபத்த வார்த்தை வரிசை பயன்படுத்தப்படுள்ளது. மேலும் இடம் சார் மொழிபெயர்ப்புகளில் பல சொதப்புகின்றன. ஆங்கில FA எழுதுவோர் உயர்ரக ஆங்கிலம் பயன்படுத்துவோர் (brilliant prose வேண்டுமென்பது FA எழுத ஒரு விதி) அதைத் தமிழில் மாற்றும் போது ஒன்றுக்கு இரண்டு முறை நன்கு படித்து மாற்ற வேண்டும். இல்லையெனில் அர்த்தம் மாறுகிறது. பழைய கூகுள் கட்டுரைகளிலிருந்து தரத்தில் நல்ல முன்னேற்றம் தெரிந்தாலும் பொதுவெளிக்கு மாற்றுமளவுக்கு இது தரமாக இல்லை என்பது என் கருத்து. கட்டுரையின் “வரலாறு” பகுதியை மட்டும் வாசித்து கீழே என் குறிப்புகளைக் கொடுத்துள்ளேன். இன்னும் மொழிபெயர்ப்புப் பிழைகள் /எழுத்துப்பிழைகள்/ தகவல் பிழைகள் பல உள்ளன. ஒவ்வொரு வரியாக மூலத்துடன் ஒப்பிடாமல், தவறு இருப்பதைக் கண்டுபிடிக்க முடியாத தவறுகள் பல உள்ளன. இந்த நிலையில் இக்கட்டுரையை பொதுவெளிக்கு நகர்த்தக் கூடாது.

விக்கியாக்கம்

தொகு
  • குங்குமப்பூ(ஒலிப்பு: /ˈsæfrɒn/) என்று வந்துள்ளது. அப்படியே டூல்கிட்டிலிருந்து மொழிபெயர்க்கும் போது இதை கவனியுங்கள். ஒலிப்புக் குறியீடு ஆங்கில வார்த்தைக்கானது. தமிழ்க்கட்டுரையில் ”குங்குமப்பூ” என்பதன் ஒலிப்புக் குறியீடாக ”ˈsæfrɒn” என்பதை கொடுக்கலாமா. ஒன்று ஆங்கில ஒலிப்பினை எடுத்து விடுங்கள். அல்லது அது எதற்கான ஒலிப்புக் குறியீடோ அந்த அங்கில சொல்லையும் அடைப்புகளுள் கொடுங்கள்.
  • தகவற் சட்டமும் மொழிபெயர்க்க / எழுத்துப்பெயர்க்கப் பட வேண்டும்
  • சில இடங்களில் உள்ளிணைப்பு அடைப்புகள் தவறான இடங்களில் விழுகின்றன அல்லது முறிந்த இணைப்புகளை உருவாக்குகின்றன. (the square braces are placed in odd places) டூல்கிட் வழுவா என்று தெரியவில்லை.
  • {{main}} மற்றும் {{also}} இணைப்புகள் சிவப்பிணைப்புகளாக இருந்தால் அவற்றை நீக்கி விடுங்கள்

வரலாறு பகுதி

தொகு
  • பிழை:

Thus, a sterile mutant form of C. cartwrightianus, C. sativus, emerged in late Bronze Age Crete

=

ஆகவே, குரோகஸ் கார்ட்ரைட்டியானஸ் , குரோகஸ் சட்டைவஸ் ஆகியவற்றின் மலடான மறுவடிவம் வெண்கலக் கால க்ரீட்டில் (Bronze Age Crete) உருவானது

இது தவறு. C. sativus என்பது C. cartwrightianus என்பதன் மலடான் மறுவடிவம். ஆங்கில விக்கி FA எழுதுவோர் complex english sentences with commas பயன்படுத்தவர். கொஞ்சம், கவனமாக நிறுத்திப் படித்து மாற்றுங்கள்.

  • இடம் சார் மொழிபெயர்ப்பு சில இடங்களில் தேவை. remedies என்பது “நிவர்த்திகள்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ”மருந்துகள்” என்று வர வேண்டும். மேலும் சில இடங்களில் தமிழாக்கம் வேண்டும் எ. கா: பாடி வாஷ்கள்
  • ritually offered to divinities = வணங்கத்தக்கவர்களுக்கு சமயச்சடங்குகளாக வழங்கப்பட்டன; இது தெய்வங்களுக்கு சமயச்சடங்குகளில் படைக்கப்பட்டன் என்று வரவேண்டும்.
  • பிழை: melancholy. = துக்கக்குடிவெறி அல்ல. வெறும் துக்கம் மட்டுமே.
  • பிழை: Alexander's asian campaigns = மகா அலெக்சாந்தரின் ஆசிய பிரச்சாரங்களின் என்று மாறியுள்ளது. தேர்தலில் campaign செய்தால் அது பிரச்சாரம். அலெக்சாந்தர் ஆசியாவில் செயதது war campaign. போர் அல்லது போர் தொடர் என்றிருக்க வேண்டும்.
  • பிழை Kashmiri and Chinese accounts =காஷ்மீரி மற்றும் சீனக் கணக்குகள்; இங்கு account என்பது கணிக்கியல் விஷயமல்ல. குறிப்புகள், ஆவணங்கள் என்ற பொருளில் வரும்.
  • attributing it to either Persian transplantation of saffron corms to stock new gardens and parks[38] or to a Persian invasion and colonization of Kashmir

=

இது புதிய தோட்டங்கள் மற்றும் பூங்காக்களைப் பயிரிடுவதற்கு குங்குமப்பூ தண்டுக்கிழங்குகளின் பாரசீக நாற்றுநடலை அல்லது காஷ்மீரில் பாரசீகர்களின் உள்நுழைதலையும் குடியேற்றத்தையும் தெரிவிக்கிறது

இதனை பிரித்து விளக்க வேண்டும்

  • ஆங்கில தொடர் வாக்கிய கமாக்களை கவனிக்க வேண்டுமென்பதற்கு இன்னொரு எ. கா

However, the robes were not dyed with costly saffron but turmeric, a less expensive dye, or jackfruit. ஆனால் குறைந்த செலவான மஞ்சள் அல்லது பலாப்பழம் போன்றவற்றால் சாயமிடப்பட்டது

ஆங்கிலத்தில் மஞ்சள் மட்டும் தான் விலை குறைவான சாயமெனப்படுகிறது, பலாப்பழத்தின் விலை பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லை turmeric, a less expensive dye, என்று இரு கால்புள்ளிகளை எப்படி பயன்படுத்தியுள்ளார்கள் என்பதை கவனியுங்கள். தமிழில் மாற்றும் போதும் இந்த நுட்பம் தொலைந்து போய் பலாப்பழமும் குறைந்த விலைப் பொருளாகி விட்டது.

  • இது "ஞாழல் பூ"(தமிழ்: ஞாழல் பூ)

இதைப்பற்றி நான் சொல்லவே வேண்டாம். டூல்கிட் வெளியிடுவதை கொஞ்சம் கவனியுங்கள்.

  • இன்னொரு இடம்சார் மொழிபெயர்ப்புத் தவறு. Traditionally attributed என்றால் ”பாரம்பரியமாக உரிமைப்பட்டதாக” அல்ல. இது எழுத்தாளர் attribution, அந்த புத்தகத்தை அவர் எழுதியதாகப் பொதுவாகக் கருதப்படுகிறதென்று பொருள்.
  • Yet around the 3rd century AD, the Chinese were referring to saffron as having a Kashmiri provenance. இதை இன்னமும் கிட்டத்தட்ட கி.பி 3 ஆம் நூற்றாண்டளவில் என்று மாற்றியுள்ளீர்கள். இந்த yet காலச் சார்பில் இங்கு பயன்படுத்தப்படவில்லை. ”ஆனாலும்/எனினும்” என்ற காரியச்சார்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • to aromatise wine should be வைனுக்கு நறுமணமூட்ட and not நறுமணமூட்டப்பட்ட வைனுக்கு .
  • Minoans portrayed saffron in their palace frescoes by 1500–1600 BC, showing saffron's use as a therapeutic drug. என்பது

கி.மு 1500-1600 காலப்பகுதிக்குள், மினோவர்கள்[[]] தமது மாளிகைச் சுவரோவியங்களில் குங்குமப்பூவைச் சித்தரித்தார்கள். இது குணப்படுத்தும் மருந்தாக குங்குமப்பூவின் பயனைக் காண்பிக்கின்றது.

இது தவறான அர்த்தத்தை தருகிறது. மினோவர்கள் மாளிகைச் சுவர்களில் குங்குமப்பூ ஓவியம் வரைந்தது குங்குமப்பூவின் மருத்தவப்பயனைக் காட்டவில்லை. குங்குமப்பூ மருந்தாகப் பயன்படும் காட்சிகளை மினோவர்கள் ஓவியமாக சுவர்களில் வரைந்துள்ளார்க்கள் என்பது பொருள்.

  • bewitched என்றால் மதிமயக்கப்பட்டு என்று பொருள்; கவர்ச்சியூட்டப்பட்டு என்று மாற்றப்பட்டுள்ளது.

மேலும் இங்கு சொல்லப்படும் குரோகசும், ஸ்மிலாக்சும் மனிதர்கள். கிரேக்கத் தொன்மவியலில், குரோக்ஸ் என்னும் மனிதன் மந்திரத்தால் குங்குமப்பூச் செடியாக மாற்றப்பட்டான் என்று குறிப்பிடப்படுள்ளது என்பது பொருள். ஆனால் அதை

குரோகஸ் கவர்ச்சியூட்டப்பட்டு உண்மையான சாஃப்ரன் குரோகஸிற்கு மாற்றப்படுகிறது என்று இது கூறுகிறது.

என்று எழுதவதன் மூலம் உண்மையான பொருள் தொலைந்துள்ளது.

  • ஹெல்லனிஸ்டிக் எகிப்தில் என்பதில் ”இஸ்டிக்” என்பது ஆங்கில விகுதி, ஹெல்லனஸ்தீய அல்லது கிரேக்க எகிப்து என்று மாற்றப்படவேண்டும்
  • fabric dye எப்படி புடவைச் சாயமாகும். புடவை மட்டுமா fabric?. டூல்கிட்டில் இந்திய context வார்த்தைகள் என்று ஏதேனும் செட்டிங் உள்ளதோ?
  • mithridatium என்பது புராணக் கதைச் சிகிச்சையல்ல. இது நான்காம் மிதிரிடேட்டீஸ் மன்னால் உருவாக்கப்பட்ட விஷமுறிவு மருந்து. ஆங்கிலத்தில் உள்ளிணைப்புகளை அவற்றின் முதல்வரிகளைத் தாண்டிப் படியுங்கள். semi-mythical remedy என்று அக்கட்டுரையின் முதல் வரியில் உள்ளதை இப்படி மாற்றியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். இதனால் இப்படி ஒரு தவறான மொழிபெயர்ப்பு உருவாகியுள்ளது.
  • குங்குமப்பூவின் மீது ரோமானியர்கள் கொண்ட காதல் அத்தகையது. ரோமானிய குடியேற்றவாசிகள் தென் காலில் (southern Gaul) குடியேறியபோது தம்முடன் குங்குமப்பூவையும் எடுத்துச் சென்றனர்.

இங்கும் அர்த்தம் மாறியுள்ளது. romans love for saffron is indicated by their taking it to gaul. இங்கு romans loved saffron that much. they took it to gaul என்று பிரிப்பதால் பொருள் மாறியுள்ளது. இங்கே “அத்தகையது” என்ற qualifier முன்வரும் வாக்கியத்தைக் குறிக்கிறது. பின்வரும் வாக்கியத்தை குறிக்கவேண்டும். எ. கா.

  • குங்குமப்பூவின் மீது ரோமானியர்கள் கொண்ட காதல் அதிகமானது. - ரோமானிய குடியேற்றவாசிகள் தென் காலில் (southern Gaul) குடியேறியபோது கூட தம்முடன் குங்குமப்பூவையும் எடுத்துச் சென்றனர்.

  • Competing theories என்றால் வாதிடக்கூடிய கோட்பாடுகள் என்பது நன்றாக இல்லை. வேறுசில கோட்பாடுகள் /மாறுபட்ட கோட்பாடுகள் என வர வேண்டும்.
  • plummetted = ”திடீரென்று குறைந்தது” என்பது பிழை. இங்கு plummet என்பது காலச்சார்பில் பயன்படுத்தப்படவில்லை, அளவுச் சார்பில் பயன்படுத்தப்படுள்ளது. ”வெகுவாகக் குறைந்தது” என்று வர வேண்டும்
  • பிழை:

The conflict and resulting fear of rampant saffron piracy spurred significant saffron cultivation in Basel, which grew prosperous

==

மூர்க்கத்தனமான குங்குமப்பூக் கடற்கொள்ளையின் சண்டை மற்றும் இதன் விளைவாக வந்த பயம் ஆகியவை செழித்தோங்கி வளர்ந்த பேசல் நகரில் குறிப்பிடத்தக்க குங்குமப்பூப் பயிர் செய்கையை மந்தமாக்கியது

மீண்டுமொருமுறை படித்துப் பாருங்கள். அப்படியே உல்டாவான மொழிபெயர்ப்பு இது. சரியான பொருள்:

இப்போரும் அதன் பின் கடற்கொள்ளை அதிகமாகும் என்று எழுந்த அச்சமும், பேசல் நகரில் குங்குமப்பூ பயிரிடுதலை அதிகப்படுத்தின. இதனால் பேசல் நகர் செழித்தது

  • epidemic levels of saffron adulteration = குங்குமப்பூ கலப்படத்தின் பெருவாரியான அளவுகள்

டூல்கிட்டின் ஜுனூன் தமிழ்

இங்கு, குங்குமப்பூ கலப்படத்தின் பெருவாரியான அளவுகள் சாஃரான்ஸ்சு (Safranschou ) குறியீட்டைக் கொண்டுவந்தது. இதன்கீழ், குங்குமப்பூக் கலப்படத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனையும் கொடுக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.

இங்கே code என்பது சட்டத்தைக் குறிக்கிறது. குறியீடு என்பது தவறு. மேலும் இந்த வாக்கியங்களில் அர்த்தம் புரிந்தாலும், இன்னும் தெளிவாக எழுதப்பட வேண்டும். விகுதி இலக்கணப்பிழையும் உள்ளது. கலப்பத்தை தூக்கிலிட முடியாது, கலப்படக் காரர்களைத் தான் இடமுடியும்.

  • இதன் புதிய சிறப்புத் தன்மையான பயிருக்காகப் பெயரிடப்பட்ட சாஃப்ரன் வால்டன் நகரின் எசெக்ஸ் நகரமானது இங்கிலாந்தில் முதன்மையாக குங்குமப்பூ பயிரிட்டு வணிகம் செய்யும் மையமாக எழுச்சியுற்றது

மீண்டும் டூல்கிட்டின் ஜுனூன் தமிழ். தயவு செய்து ஆங்கிலத் தொடர் வாக்கியங்களைப் பிரித்து எழுதுங்கள்

  • குங்குமப்பூ தண்டுக்கிழங்குகளைக் கொண்டிருக்கும் தண்டுடன் ஸ்வெங்ஃபெல்டர் தேவாலய (Schwenkfelder Church) குடிபெயர்வாளர்கள் ஐரோப்பாவிலிருந்து வெளியேறியபோது, ஐரோப்பியர்கள் குங்குமப்பூவை அமெரிக்காவுக்குக் கொண்டு வந்தார்கள்.

இதுவும் தான்.

  • விகுதிப் பிழை: கரீபியன் பகுதிகளிலான ஸ்பானிஷ் குடியேற்றங்கள் இந்த புதிய அமெரிக்க குங்குமப்பூவை பெருமளவை வாங்கினார்கள்
  • commodities exchange என்றால் பண்டச் சந்தை. stock exchange போல. ”சரக்குகள் பரிமாற்றத்தில்” என்பது literal and wrong translation
  • high demand ensured that saffron's list price on the Philadelphia commodities exchange was set equal to that of gold என்பது தவறாக

குங்குமப்பூவின் பட்டியல் விலையானது தங்கத்துக்கு நிகராக அமைக்கப்பட்டிருந்ததால் அதிக கிராக்கியையும் உறுதிப்படுத்தியது

என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதிக கிராக்கியால் விலை தங்கத்துக்கு நிகரானது. தங்கத்துக்கு நிகரான விலை வைத்ததால் கிராக்கி அதிகமாக வில்லை.

--சோடாபாட்டில் 07:58, 17 நவம்பர் 2010 (UTC)Reply

வணிகமும் பயனும் பகுதி

தொகு
  • அளவைகளுக்கு மெட்ரிக் அளவைகளை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது. ஆ. விக்கியில் பழைய அளவை முறைகளையும் (அமெரிக்காவில் அவை பயன்படுவதால்) சேர்த்து இடுவது வழக்கம். இங்கு மெட்ரிக் அளவைகளை ம்ட்டும் இட்டால் போதும்
  • Common saffron substitutes include = பொதுவான குங்குமப்பூ மாற்றுப்பொருள்கள் ....ஆகியவற்றை உள்ளடக்கும் என்று தவறாக மற்றப்பட்டுள்ளது. இந்த "include" என்பது பட்டியலில் உள்ளன எனற அர்த்ததில் வரும் “include". இங்கு contents of the saffron substitute என்ற பொருளில் மாற்றப்பட்டுள்ளது. பின்வருமாறு மொழி பெயர்க்கவேண்டும்

குசம்பப்பூ (கார்தாமஸ் டிங்டோரியஸ்-Carthamus tinctorius - இது பெரும்பாலும் "போர்ச்சுகீஸ் குங்குமப்பூ" அல்லது "açafrão" என விற்கப்படும்), அனாட்டோ (annatto) மற்றும் மஞ்சள் (குர்குமா லாங்கா -Curcuma longa ) ஆகியவை குங்குமப்பூவுக்கு மாற்றுப்பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன

  • Medicinally, saffron has a long history as part of traditional healing; =

மருத்துவ ரீதியாக, பாரம்பரிய நோய் தீர்க்கும் பகுதியாக குங்குமப்பூ நீண்ட வரலாற்றை உடையது. என்று மாறியுள்ளது. again this is a literal translation. the meaning it should convey is மருத்தவத்துறையில், பாரம்பரிய மருத்துவ முறைகளில் வெகுகாலமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

  • fabric dye = புடைவைச் சாயம்??
  • in decreasing order of production = உற்பத்தியின் அடிப்படையில் இறங்கு வரிசையிலுள்ள (இது சரியாக இல்லை, எனக்கும் பொருத்தமான மாற்றுச் சொல் தோன்ற வில்லை)
  • Iran with its cultivation of different varieties,=தனது வேறுபட்ட வகையான பயிர் செய்கையைக் கொண்ட ஈரான் நாடு. Again literal translation. this should be பல்வேறு குங்குமப்பூ வகைகளைப் பயிரிடும் ஈரான் நாடு

பெயர் வரலாறு பகுதி

தொகு
  • saffron என்ற ஆங்கிலச் சொல்லானது 12 ஆம் நூற்றாண்டின் பழைய பிரான்சியச் சொல்லான safran என்பதிலிருந்து உருவான இலத்தீன் சொல்லான safranum என்பதிலிருந்து தோன்றியதாகும்.

இது தவறு. latin -> old french -> English. இது தான் வரிசை. முன்னால் மொழிபெயர்ப்பு சரியாக இருந்தது. இப்போது உரை திருத்தப்பட்டபின் அர்த்தம் மாறிவிட்டது.

தலைப்பில் என்ன பிழை?

தொகு

ஏன் இக்கட்டுரையின் தலைப்பு "பயனர்:Rexani/குங்குமப்பூச் செடி" என்றவாறு உள்ளது? மாற்றம் தேவை என எண்ணுகிறேன்... இப்படிக்கு உங்கள் அன்புள்ள விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 08:58, 17 நவம்பர் 2010 (UTC)Reply

சூர்யா, இது கூகுள் மொழி பெயர்ப்புத் திட்டத்தால் உருவாகிய கட்டுரை. இனி இப்படி உருவாக்கும் கட்டுரைகளை பொதுவெளியில் போடாமல் மொழிபெயர்ப்பாளரின் பெயர்வெளியில் தான் இட வேண்டும், விக்கி சமூகம் தரமாக உள்ளது என்று ஒப்பினால் தான் பொதுவெளிக்கு நகர்த்த வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். இங்கே உள்ள உரையாடல்களை- விக்கிப்பீடியா பேச்சு:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு படித்துப் பாருங்கள்--சோடாபாட்டில் 09:34, 17 நவம்பர் 2010 (UTC)Reply


தங்கள் விளக்கத்திற்கு நன்றி சோடாபாட்டில். நான் கூகுள் திட்டம் பக்கம் இனி வரமாட்டேன். இனி நான் விக்கியில் கட்டுரை எழுதுவதிலேயே முனைப்பு காட்டுகிறேன். தவறாக முதல்வரியை யாருடைய அனுமதியுமின்றி நீக்கியதற்கு வருந்துகிறேன். இனிமேல் விக்கியின் நற்பழக்கவழக்கங்களுக்கு மாற்றாக எச்செயலிலும் ஈடுபடமாட்டேன் என உறுதியளிக்கிறான் இச்சிறுவன். உங்கள் அன்புள்ள விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 11:47, 18 நவம்பர் 2010 (UTC)Reply

இதற்கெல்லாம் என்ன மன்னிப்பு. :-). தாராளமாக இந்தப்பக்கம் வாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நம்மில் பலரது கருத்துகளும் பங்களிப்பும் இத்திட்டத்துக்குத் தேவை.--சோடாபாட்டில் 13:27, 18 நவம்பர் 2010 (UTC)Reply

திருத்தம் செய்யப்படும்..

தொகு

கட்டுரையில் உள்ள பிழைகளைத் திருத்தி அதன் தரத்தை மேம்படுத்தும் பணி தொடங்கியாயிற்று.. கருத்துகளுக்கு நன்றி..!

அன்புடன் --சாந்த குமார் 12:22, 17 நவம்பர் 2010 (UTC)Reply

பாலா, மிகப் பொறுமையாகவும் அருமையாகவும், தேவைப்படும் மாற்றங்களை எழுதி உள்ளீர்கள். நன்றி.

சாந்தகுமார், திருத்த முனைவதற்கு நன்றி. இவை குறிப்பிட்ட கட்டுரையில் மட்டும் நேரும் கவனக் குறைவான பிழைகள் அல்ல. மொழிபெயர்ப்பாளரின் திறன் / புரிதல் சார்ந்து வரும் பிழைகள். உங்கள் ஒட்டு மொத்த அணியின் திறனை மேம்படுத்தத் தேவைப்படும் நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்--இரவி 19:54, 17 நவம்பர் 2010 (UTC)Reply

சாந்தகுமார்,

இரவியின் கருத்தோடு ஒப்புகிறேன். நீங்கள் மாற்றங்கள் செய்வதற்கு நன்றி. ஆனால் இதனை உருவாக்கியவர் Rexani தானே. அவரல்லவா இந்தக் கருத்துகளை உள்வாங்க வேண்டும்.? அவர் கட்டுரையைத் தரவேற்றியபின் காணோம்?. --சோடாபாட்டில் 13:30, 18 நவம்பர் 2010 (UTC)Reply

திருத்தங்கள்

தொகு
  • ஆங்கில/பிறமொழிச் சொற்களைத் தமிழில் ஒலிபெயர்த்து எழுதுங்கள். crocus என்பது குரோக்கசு என்று க் இடையே வந்து வல்லின ஒலி தர வேண்டும். கடைசி எழுத்து S என இருந்தாலும், இலத்தீன் மொழியில் ஒரு சொல் முடியும் பொழுது இருக்க வேண்டிய வடிவங்கள் போல் தமிழிலும் உண்டு. குற்றியலுகர சு என்னும் எழுத்து ஏறத்தாழ S என்னும் ஒலிப்பையே தரும். தமிழ் மொழி கிரேக்கம், இலத்தீன் போன்ற செம்மொழி, ஆகவே அதன் முறைமைகளைப் பின்பற்றுவதும் தேவை. தாவரவியலில் புகழ்பெற்ற லின்னேயசு என்னும் சுவீடிய அறிஞரின் பெயர் Carl Linnæus (முழுப்பெயர் Carl Nilsson Linnæus) ஆனால் அவருடைய இலத்தீன் பெயரைப் பின்வருமாறு எழுதுகின்றனர், "Latinized as Carolus Linnæus" இவரை சுவீடிய பெரியோர்களில் ஒருவராக பெருமைப்படுத்திய பின்னர் இவர் பெயர் Carl von Linné எனப்பட்டது. இது இலத்தீனில் "Latinized as Carolus a Linné" எனப்படுகின்றது. இது போலவே தமிழில் எழுதும்பொழுது தமிழ்ப்படுத்தி எழுதுவது முறை. உரோமன்/இலத்தீன் எழுத்துகளில் தாவரங்களின் பெயர் இருப்பதால் எதற்கு எது என்னும் ஈடுகோள்கள் உறுதிப்படும். --செல்வா 02:44, 18 நவம்பர் 2010 (UTC)Reply
  • மண்கள் என்பது சரியானதாக இல்லை மண்வகைகள் என்று திருத்தியுள்ளேன்.
  • France = பிரான்சு, ஆங்கிலத்தில் French (Français) = பிரான்சியம்; Spain (España, pronounced [esˈpaɲa]) = எசுப்பானியா (இது ஆங்கிலத்தில்தான் Spain, அவர்கள் தங்கள் நாட்டை España எசுப்பான்யா என்கிறார்கள், இதனைத் தமிழில் எசுப்பானியா என்று விக்கியில் எழுதுகிறோம்). எசுப்பானியம், எசுப்பானியா மொழி = Español (Spanish). மூல மொழிக்கு கூடியமட்டிலும் நெருக்கமான முறையில் இங்கே தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதப் பரிந்துரைக்கப்படுகின்றது.--செல்வா 02:53, 18 நவம்பர் 2010 (UTC)Reply

கட்டுரைபற்றிய சில கருத்துக்கள் - கலை

தொகு

கூகிள் திட்டத்தில் முன்னர் மொழி பெயர்க்கப்பட்ட கட்டுரைகளுடன் பார்க்கையில், இந்தக் கட்டுரையில் அதிக முன்னேற்றம் தெரிகின்றது. ஓரளவு நல்ல நடையில் எழுதப்பட்டுள்ளது. அளவுக்கதிகமான, பொருத்தமற்ற சிவப்பு இணைப்புக்கள் இல்லை. ஆனாலும் பல தவறான வசனங்களும், புரியாத வசனங்களும் இருக்கவே செய்கின்றன. /உயிரியல் பகுதியைப் பார்த்தேன். அங்கு எனக்குத் தோன்றிய சிலவற்றை கூறுகின்றேன்.

  • ஓரளவு இலகுவான தமிழில் இருத்தல் நலம்.

எ.கா.:-Unknown to wild என்பதற்கு, ’காட்டில் காணப்படாத’ என்று சொல்லலாம். அதனை ’காட்டில் அடையாளம் காணப்படாத’ என்று சொல்ல வேண்டியதில்லை.

  • சில வசனக்களில், சரியான அர்த்தம் இல்லை.

எ.கா.:-

1. The saffron crocus resulted when C. cartwrightianus was subjected to extensive artificial selection by growers seeking longer stigmas. என்பது ஆரம்பத்தில் எப்படி C. cartwrightianus இலிருந்து Safron crocus உருவானது என்பதைக் குறிப்பது. அதாவது இறந்த காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டியது. அதாவது விவசாயிகளின் அதிகப்படியான செயற்கைத் தேர்வினாலேயே, குறிப்பிட்ட அந்த இனம் உருவாகியது.

2. A corm survives for one season, reproducing via this division into up to ten "cormlets" that yield new plants.[9] என்பது ”ஒரு தண்டுக்கிழங்கு இந்த பிரிவால் புதிய தாவரங்களை உருவாக்கும் பத்து வரையிலான "தண்டுக்கிழங்குப் பிரிவுகளை" இனம்பெருக்குகின்ற ஒரு பருவத்துக்கு வாழும்.[9]” என்று எழுதப்பட்டிருக்கிறது. அந்த வசனம் புரியக் கூடியதாகவோ, சரியானதாகவும் இல்லை.

3. shrouded in a dense mat of parallel fibers என்பது இவை ஒருபோக்கான நார்களின் அடர்த்தியான விரிப்பில் பரப்பப்பட்டிருக்கும் என்றுள்ளது. உண்மையில் தண்டுக் கிழங்குகள் அப்படியான ஒரு நார்த்தன்மையான அமைப்பால் மூடப்பட்டிருக்கும் என்பதே சரி.

4. North American chaparral, என்பது வட அமெரிக்க புதர் என்றுள்ளது. புதர் என்ற பெயர்ச்சொல் பொருந்தி வரவில்லை. புதர்நிலம் என்றே பொருள் கொள்கின்றது.

எனவே ஒரு வசனத்தை மொழிமாற்றம் செய்த பின்னர், உடனேயே மொழி பெயர்ப்பவர்கள் எழுதப்பட்ட வசனத்தை புரிகின்றதா என்று ஒரு தடவை சரி பார்க்கலாம்.

  • சரியான சொற்களா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுதல் நல்லது. தமிழ் விக்சனரியிலும் அறிவியற் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களைப் பெறலாம்.

எ.கா. Autumn = இலையுதிர்காலம்தானே? ஆனால் முது வேனிற்காலம் என்றுள்ளது.

................................................................................................................................................

மேலேயுள்ள கருத்துக்கள் நான் நேற்றே பார்த்துவிட்டு குறித்து வைத்திருந்த கருத்துக்கள். அவற்றை இங்கே போட்ட பின்னர் பார்க்கும்போது, ஏற்கனவே கட்டுரை திருத்தப்பட்டிருப்பது தெரிகின்றது. ஆனாலும் மேலும் சில விடயங்களைக் குறிப்பிட விரும்புகின்றேன்.

  • (Crocus cartwrightianus) என்ற வகையின் மலட்டு வடிவ முத்தொகுதி வடிவமாகும் என்பதை, '(Crocus cartwrightianus( என்ற மலட்டு வடிவ மும்மடிய நிலையாகும்' என்று கூறலாம்.
  • நீளமான சூலகமுடிகளை எதிர்பார்க்கும் பயிர்த்தொழிலாளர்கள் குரோக்கசு கார்ட்ரைட்டியன்சு (cartwrightianus) செடியை மிகப்பரந்த செயற்கைத் தேர்வு முறைக்கு உட்படுத்தி சாஃப்ரன் குரோக்கசு செடியை உருவாக்குகின்றனர். பயிர்த் தொழிலாளர்கள் திட்டமிட்டு உருவாக்கும் இனமல்ல என்றே நினைக்கிறேன். அவர்கள் நீளமான சூலக முடிகளை எதிர்பார்த்து செய்த செயற்கைத் தேர்வில் உருவாகிய இனமே அது.

நாமும் எழுதும்போது, மொழிமாற்றம் செய்யும்போது பிழைகள் விடுவதற்கான சந்தர்ப்பங்கள் வரத்தான் செய்யும். இருந்தாலும், கொஞ்சம் அதிகப்படியான அவதானத்துடன் வசனங்கள் புரிகின்றதா என்பதையும், கலைச் சொற்கள் சரியானவையா என்பதையும் முடிந்தளவில் உறுதிப்படுத்திக் கொண்டு செய்தால் மிகச் சிறந்த கட்டுரைகள் கிடைக்கும். நன்றி--கலை 22:09, 18 நவம்பர் 2010 (UTC)Reply

கருத்துகளுக்கும் பரிந்துரைகளுக்கும் நன்றி கலை, நீளமான சூலக முடிகளை எதிர்பார்த்து செய்த செயற்கைத் தேர்வில் உருவாகிய இனமே அது என்ற வாக்கியம் திருத்தப்பட்டது, மலட்டு வடிவ மும்மடிய நிலை என்பதை விட கட்டுரையில் உள்ளதே சரியாக இருக்கும் என்பது என் கருத்து, ஏனெனில் அது அந்த தாவரத்தின் ஒரு மாறுபட்ட வடிவம் (அதாவது தொகுதி என்பது குரோமோசோம்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது), நிலை அல்ல எனக் கருதுகிறேன்.. கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.

- அன்புடன் --சாந்த குமார் 04:36, 19 நவம்பர் 2010 (UTC)Reply

கட்டுரை திருத்தப்பட்டது.. -அன்புடன் --சாந்த குமார் 11:37, 19 நவம்பர் 2010 (UTC)Reply

வணக்கம் சாந்தகுமார்! மரபியலில் நிறப்புரிகளின் (குரோமோசோம்களின்) எண்ணிக்கை இரு மடங்காகும்போது இருமடியம் எனவும், மும்மடங்காகும்போது மும்மடியம் என்றும் குறிப்பிடப்படுவதே வழமை என நினைக்கின்றேன். மடங்குகளைக் குறிப்பதால் தொகுதி என்பதைக் காட்டிலும், மடிய நிலை, அல்லது மடிய எண்ணிக்கை என்பதே பொருத்தம் என்பது எனது கருத்து. அகரமுதலியிலும், மரபியலில் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் triploid க்கு மரபியல் சொல் தரப்படவில்லை. இந்தப் பக்கங்களையும் பாருங்கள். Haploid, Diploid, Triploid இது எனது கருத்து மட்டுமே.--கலை 01:02, 20 நவம்பர் 2010 (UTC)Reply
சாந்த குமார்,
இன்னும் நான் மேற்சொன்னவற்றுள் சில திருத்தப்படாமல் உள்ளன (எ.கா தங்க விலை நிகர் பிழை, சொற் பிறப்பியல் பிழை). இன்னொரு முறை சரி பாருங்கள்.--சோடாபாட்டில் 06:08, 21 நவம்பர் 2010 (UTC)Reply

ஏற்றுக்கொள்கிறேன் கலை, திருத்தப்பட்டது. சோடாபாட்டில், தங்க விலை பிழை திருத்தப்பட்டது. சொற் பிறப்பியல் பிழை என்னவென்று புரியவில்லை...

அன்புடன் --சாந்த குமார் 04:30, 22 நவம்பர் 2010 (UTC)Reply

>>saffron என்ற ஆங்கிலச் சொல்லானது 12 ஆம் நூற்றாண்டின் பழைய பிரான்சியச் சொல்லான safran என்பதிலிருந்து உருவான இலத்தீன் சொல்லான safranum என்பதிலிருந்து தோன்றியதாகும்.
இது பிழை. வரிசை latin -> old french -> english. இப்போதிருக்கும் தமிழாக்கம் old french ->latin ->english என்றுள்ளது.--சோடாபாட்டில் 04:28, 23 நவம்பர் 2010 (UTC)Reply

நன்றி சோடாபாட்டில், திருத்தப்பட்டது.. அன்புடன் --சாந்த குமார் 08:40, 23 நவம்பர் 2010 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குங்குமப்பூ&oldid=1525061" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "குங்குமப்பூ" page.