விக்கிப்பீடியா பேச்சு:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு
ஏகப்பட்ட சிகப்பு இணைப்புகள்
தொகுதமிழில் பல கட்டுரைகள் இல்லாததால் ஏகப்பட்ட சிகப்பு இணைப்புகளைக் காண உவப்பாக இருக்காது. இவ்வாறுதான் நாம் புதிய கட்டுரைகளை உருவாக்க முடியும் என்பது என் கருத்து. சிகப்பு இணைப்புகள் மூலம் நாம் கட்டுரைகளை உருவாக்க ஒரு உந்துதல் பெறுகிறோம். Vatsan34 14:06, 8 அக்டோபர் 2009 (UTC)
- சிகப்பு இணைப்புகள் உந்துதல் அளிக்கும் என்பது உண்மை தான். ஆனால், அளவுக்கு மிஞ்சினால் வாசிப்பெளிமையைக் குறைக்கலாம். தமிழ் விக்கியில் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்க வேண்டிய கட்டுரைகளுக்கு மட்டும் சிகப்பு இணைப்புகள் தரலாம்--ரவி 15:33, 8 அக்டோபர் 2009 (UTC)
- அப்படியானால் தமிழ் சார்ந்த கட்டுரைகள் மட்டுமே இருத்தல் அவசியமா? நாம் அலாஸ்காவின் நிலநடுக்கம் பற்றி தமிழில் அறிய வேண்டுமானால் என்ன செய்வது? நீங்கள் சொல்வது போல் கட்டுரை உருவாக்கிய பின் அதற்கு வேறொரு கட்டுரையில் இணைப்பு கொடுக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து! Vatsan34 15:47, 8 அக்டோபர் 2009 (UTC)
கண்டிப்பாக நாம் உலகளாவிய தகவல்களைச் சேர்க்கவேண்டும். ஆனால், சில தலைப்புகள் குறித்து உடனடியாக நாம் எழுத வாய்ப்புகள் குறைவு. அத்தகைய தலைப்புகளுக்கு சிகப்பு இணைப்புகளைத் தவிர்க்கலாமே என்பதே என் வேண்டுகோள். வேண்டுகோள் மட்டுமே :) எடுத்துக்காட்டுக்கு, மந்தநிலை கட்டுரையில் ஏராளமான சிகப்பு இணைப்புகள் உள்ளன. இவற்றை எழுதக் கூடிய பொருளாதார வல்லுனர்களோ அமெரிக்கப் பங்களிப்பாளர்களோ நம்மிடம் குறைவு. அப்படியே இருந்தாலும் தமிழ் விக்கியில் உள்ள குறைவான பங்களிப்பாளர்களைக் கருத்தில் கொண்டு நாம் சில முன்னுரிமைகளை வகுத்துள்ளோம். அறிவியல், வரலாறு, இந்தியா, தமிழ்நாடு போன்ற தலைப்புகளில் எண்ணற்ற அடிப்படைக் கட்டுரைகளே இயற்றப்படாமல் உள்ளன. எந்தக் கட்டுரை அதிகம் பேருக்குப் பயன்படும் என்று பார்த்து இயற்றலாம். நன்றி--ரவி 18:25, 8 அக்டோபர் 2009 (UTC)
கூகுள்-மொழிப்பெயர்ப்பு மென்கலக்கருவி
தொகுநானும் இந்த கூகுள்-மொழிப்பெயர்ப்பு மென்கலக்கருவியைப் பயன்படுத்திப் பார்த்தேன். மொழிபெயர்ப்பு ஆகவில்லை. காட்டாக budget என்ற கட்டுரையை மொழிபெயர்க்க கொடுத்தேன். ஆனால் ஆங்கிலத்திலேயேதான் வருகிறது. என்ன செய்வது?--Ragunathan 08:10, 28 ஆகஸ்ட் 2009 (UTC) |செல்வா]] 02:15, 2 அக்டோபர் 2009 (UTC)
கூகிள்வழி தமிழாக்கிய கட்டுரைகள்
தொகுஇன்றும் சில புதிய கூகிள்வழி தமிழாக்கிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பொதுவில் நன்றாக உள்ளன. நல்ல முயற்சி இவ்வழியைக் கையாள்வதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் நீளமான கட்டுரைகளை எழுதக்கூடிய வாய்ப்புக்கள் கூடியுள்ளன. ஆனால், ஒரு பிரச்சினை என்னவெனில், இதுவரை இவ்வாறு எழுதப்பட்டுள்ள கட்டுரைகளில் பல ஏற்கெனவே உள்ள தலைப்புக்களில் உள்ளவை. குறித்த பயனர் அல்லது பயனர்கள் தம்மை வெளிக்காட்டிக் கொள்வார்களேயானால், ஒருங்கிணைந்து செய்வதற்கு வசதியாக இருக்கும். அவர்களும் இல்லாத கட்டுரைகளாகப் பார்த்து மொழிபெயர்ப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறாக ஏற்கெனவே உள்ள தலைப்புக்களில் கட்டுரைகள் வரும்போது அவற்றைப் பழைய கட்டுரையுடன் சேர்த்துவிடுவதுதான் முறையாக இருக்கும் என்பது எனது கருத்து. இக் கட்டுரைகளை எழுதும் பயனர்கள் தயவு செய்து பிற பயனர்களுடனும் ஒத்துழைத்துக் கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மயூரநாதன் 08:57, 3 அக்டோபர் 2009 (UTC)
- விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கம் பக்கத்தில் இது குறித்த வழிகாட்டுக் குறிப்புகளைச் சேர்த்தால் இத்தகைய பங்களிப்பாளர்களுக்கு உதவும்--ரவி 11:36, 5 அக்டோபர் 2009 (UTC)
கூகுள் வழி வரும் கட்டுரைகள் எண்ணிக்கை கூடி வருகிறது. இவர்கள் எல்லாருமே சொல்லி வைத்தாற்போல்:
- நேரடியாக விக்கியில் பங்களிப்பதில்லை.
- பிற பங்களிப்பாளர்களுடன் தொடர்பு கொள்வதில்லை
- பெரிய, முழுமையான கட்டுரைகளை ஒரே மூச்சில் எழுதுகிறார்கள்
இவர்களை எப்படி தொடர்பு கொண்டு நெறிப்படுத்துவது எனப் புரியவில்லை :( இவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்த குழுவினரா, ஏதும் ஆய்வுக்காக இப்படிச் செய்கிறார்களா என புரியவில்லை. சுந்தர், மற்ற விக்கிகளில் இது போன்ற பிரச்சினை உண்டா? இவர்களைத் தொடர்பு கொள்ள ஏதாவது வழி உண்டா?--ரவி 16:08, 29 அக்டோபர் 2009 (UTC)
கூகுளிடம் முன் வைத்த வழிமுறைகள்
தொகுhttp://markmail.org/message/aollhjr4kqiwgnv2
1. Google should appoint one coordinator each for every Indian language wiki where they contribute articles. This coordinator should be available to reach by mail and be adequately responsive (Say, once a week at least). He will take feedback from the wiki community and pass it to the paid contributors.
2. If Googe policy allows, they should know us the time frame and scale of this operation so we can plan accordingly.
3. Google should not translate existing articles because they are over riding previous contributions.
4. Each Wiki can submit a list of needed articles and the translators can consider giving priority from them.
5. Each Wiki can draft an essential Manual of Style which the translators shall follow.
6. Based on the responses for above, we shall periodically re-evaluate how we can continue to cooperate with Google.
கூகுள் தந்த பதில்
தொகு1. Yes, we will appoint a co-ordinator for each language from our side. They would be accessible over email, and would respond in a timely manner. We would also require one moderator per language from the wikipedia community, so that we can co-ordinate incase of any issues.
2. We typically do about a few hundred articles/month across all indian languages such as Hindi, Tamil, Gujarati, Bengali, Telgu and Kannada. The number of articles varies as per the length of each article. For each language, I would put the number as 2000 words translated/day.
For 3) and 4) I propose the following process. a) Today we decide the list of articles to be translated based on top search terms in indic languages. Lets say there is a term 'Swine Flu', that is being searched in Indic languages but there is no good indian language article on wikipedia. Incase there is good corresponding article in english, we pick that up for translation. b) We will continue to keep this list of articles to translate and pass it for a quick check with appointed wiki moderator for each language. c) Wiki moderators can review this list and add articles that they prefer to get translated d) Once the list converges, we will start translating them.
After we go through this process, I dont expect the translated articles to be reverted by the moderators on wiki. Also, note that the timeline in which this list of articles will be translated, will be decided by Google. Hope that works for you. Incase some articles have changed by user contributions between the time when the list was approved and when we translated, we would do a check with the appointed wiki moderator to resolve.
5. Yes, please send the manual of style to the appointed co-ordinator from our side and they will make sure the translators are aware of the guidelines
6. Based on the responses for above, we shall periodically re-evaluate how we can continue the wiki translations :) Today we face a lot of resistance from the bengali moderators and have stopped translating articles in Bengali. It would be great if this process/consensus is set in place in discussion with wiki moderators across languages.
அடுத்த கட்டம்:
தொகு1. கூகுள் திட்டத்துக்கான தமிழ் விக்கி ஒருங்கிணைப்பாளராக சுந்தரை முன்மொழிகிறேன். சுந்தர் இது போன்ற நிறுவனங்களுக்கு இடையேயும் பன்மொழி விக்கிகளிடையே உறவாடுவதிலும் அனுபவம் உள்ளவர். பெங்களூரில் இருப்பதால் கூகுள், மற்ற விக்கி நண்பர்களை நேரடியாகப் பார்த்து உரையாடவும் முடியும்.
2. எத்தனை மாதங்களுக்கான திட்டம்? குறிப்பாக தமிழுக்கு எத்தனைக் கட்டுரைகள் என்று கேட்டுப் பார்க்கலாம். ஆனால், இது அவ்வளவு முக்கியம் இல்லை.
3. 4. இந்தியாவில் இருந்து அதிகம் தேடப்படும் தலைப்புகள் குறித்த கட்டுரை உருவாக்கத்தில் ஒரு ஏரணம் உள்ளது. தமிழ் எழுத்துகளில் தேடப்படும் சொற்கள், சிங்கை, மலேசியா, இலங்கையில் இருந்து வரும் தேடல் தரவுகளும் கிடைத்துப் பயன்படுமா என பார்க்கலாம். நமக்குத் தேவைப்படும் கட்டுரைகள் என்று பொதுவாக ஒரு பட்டியல் அளிக்கலாம்.
எனினும், எல்லா கட்டுரைகளும் வளர்முக மாற்றங்களுக்கு உட்பட்டதே எனத் தெளிவாக எடுத்துரைக்கலாம்.
5. நடைக்கையேடு மிகச் சுருக்கமாகவும் முக்கியமானவற்றை மட்டும் சுட்டிக் காட்டுவதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், பின்பற்றுவது சாத்தியம் இல்லை.
5.1 - நல்ல தமிழ்ச் சொற்கள் பயன்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் கலைச்சொல் ஒத்தாசைப் பக்கத்தில் அவர்கள் உதவி நாடலாம்.
5.2 - அவர்கள் இணைப்பு, பகுப்பு கொடுப்பதையே அறவே விட்டு விடலாம். பெரும்பாலும் சிகப்பு இணைப்புகள். நாமே ஒரு முறை உரை திருத்தி தேவையான உள் இணைப்புகள் தரலாம்.
இன்னும் சில முக்கியமான நடைக்கையேட்டுப் பரிந்துரைகள் தேவை.
இந்த ஒருங்கிணைப்பின் நோக்கம், முதற்கட்டமாக சில குறைந்தபட்ச எதிர்ப்பார்ப்புகளோடு ஒரு புரிந்துணர்வு உருவாக்குவது. அதன் பிறகு கூடுதல் தேவைகளத் தெரியப்படுத்தலாம்.--ரவி 00:27, 18 பெப்ரவரி 2010 (UTC)
Natkeeran's Comments
தொகு- Google's translation initiative, and the willingness to co-operate and work with the local wikis is greatly appreciated.
- Only through communication, co-ordination, and co-operation the translation process will be successful.
- It is important to select qualified translators, and they must be familiar with wiki editing and policies, or be given wiki training.
- The quality of the translation is critical. Poor translations negatively impact the wiki and the language. Quality of the translation is more important than the quantity of the articles that get translated.
- Search term popularity is not a good enough criteria for topic selection. Many articles that have been translated into Tamil so far are about Hollywood, Bollywood and Pop stars. This does not contribute to the depth or diversity of the articles.
- It would be helpful, if the translators are able to respond to reasonable questions or comments..
--Natkeeran 02:10, 18 பெப்ரவரி 2010 (UTC)
Karthick's Comments
தொகுIt is a good initiative for the indic wikis. All the comments given here are in a positive node to take advantage of google translation to develop Tamil wiki.My comments for this project is below,
- ONLY the list of articles given by the moderators should be translated, otherwise we will end up in getting articles only about cinema, cricket or articles on recent happening (with poor quality).
- Google SHOULD NOT give any links in the article. Most of their articles are with RED links, which makes no sense :( (for both the reader and article)
- They should work closely with the moderators for translation of TECHNICAL TERMS.
- All the translators SHOULD provide their contact details in their user page. It will help the contributors to contact them immediately in case of notifying about major revision or related stuff.
--கார்த்திக் 06:12, 18 பெப்ரவரி 2010 (UTC)
மணியன்
தொகுகூகுளின் பதில் த.விக்கியாளர்களுடான புரிந்துணர்வை கூடுதலாக்கும் என நம்பிக்கைக் கொடுக்கிறது.
- தற்போது காணும் அவர்களது பொதுவான குறைகள்:
- மொழிபெயர்ப்பின் தரக்குறைவு
- சிவப்பு இணைப்புகள் (தவறான செயல்முறை,தேவையற்ற இணைப்புகள்,எழுத்துப்பிழை)
- இல்லாத வார்ப்புருக்கள்
- தேவையற்ற பகுப்புகள்
- தரவேற்றப்படாத படிமங்கள்
இவற்றினால் கட்டுரையின் காட்சிப்படுத்தல் விரும்பத் தக்கதாக இல்லை;படிப்பவர்களுக்கும் ஆயாசத்தை ஏற்படுத்துகின்றன.
- உள்ளடக்கத்தைப் பொருத்தவரை மேலே குறிப்பிட்டவாறு திரைப்பட மற்றும் மக்களிசை கலைஞர்கள் பக்கங்களே கூடுதலாக உள்ளன. இலத்திரனியல் கட்டுரைகளும் ஆங்கிலப் பெயர்களுடனே வெளியிடப்படுகின்றன. த.வியில் ஏற்கெனவே உள்ள மொழிபெயர்ப்புடன் மாறுபட்ட மொழிபெயர்ப்புகளும் மாறுபட்ட மொழிநடையும் பயன்படுத்தப்படுகின்றன.
இரவி முன்மொழிந்த வழிமுறைகள் இவற்றை தவிர்த்திட உதவும் என நம்புகிறேன். கூடுதலாக கூகுள் பயனர்களுக்கு நாம் ஒருமுறை பயிலரங்கு நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் செயலாக்கத்தை அவ்வப்போது கண்காணிக்க மாதமொரு அல்லது காலாண்டுக்கொரு ஒருங்கிணைப்பு சந்திப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறேன். ---மணியன் 08:58, 18 பெப்ரவரி 2010 (UTC)
செல்வா
தொகு- தமிழ் விக்கிப்பீடியாவுடன் கூகுள் நிறுவனம் தம் கருத்துகளை வளர்முகமாக பரிமாறிக் கொள்ள வருவது கண்டு மகிழ்ச்சி.
- ஏற்கனவே மேலே பயனர்கள் கூறிய கருத்துகளை கூகுள் உள்வாங்கிச் செயல்பட்டால் பெரும் முன்னேற்றம் இருக்கும் என நம்புகிறேன். நற்கீரன் கூறிய ஒரு கருத்தை நானும் இரட்டிப்பாக வலியுறுத்த விரும்புகின்றேன்.(The quality of the translation is critical. Poor translations negatively impact the wiki and the language. Quality of the translation is more important than the quantity of the articles that get translated.).
- கூகுள் நிறுவனம் பணம் கொடுத்து மொழிபெயர்ப்பதால் அதன் நிறுவனத் தேவைகள் பற்பல இருக்கக்கூடும், அவற்றுள் அவர்களின் ஆய்வுகளுக்கான எழுத்து வழக்கு சேகரிப்பு, தானியங்கியாய் மொழிபெயர்த்தல், மொழித் தொகுப்பு போன்ற பற்பல இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் எதுவாயினும், தரமுடன் மொழி பெயர்ப்பு செய்வது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நற்பயன் தருவது போலவே அவர்களுக்கும் பயனுடையதாக அமையும் என்று நினைக்கின்றேன்.
- கூகுள் நிறுவனம் இப்படி முன்வந்து செய்வதற்கு அவர்களுக்கு என் நன்றி.
--செல்வா 23:44, 21 பெப்ரவரி 2010 (UTC)
கூகுள் தொடர்பாளர்
தொகுகூகுள் தரப்பில் ஒரு தொடர்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். நம் தரப்பில் இதுவரை முறையாக எவரையும் தேர்ந்தெடுக்கவில்லை என்பதால் இப்போதைக்கு நானே தொடர்பாளராகத் தொடர்கிறேன். பிறகு தேவையென்றால் மாற்றிக் கொள்ளலாம். மேலே பங்களிப்பாளர்கள் தந்துள்ள பரிந்துரைகளைப் பட்டியலிட்டு, தேவை/பயன் முன்னுரிமை அடிப்படையில் கூகுள் நிறுவனத்தாரிடம் முன் வைப்போம். -- சுந்தர் \பேச்சு 04:40, 19 பெப்ரவரி 2010 (UTC)
- சுந்தர் நீங்கள் தொடர்பாளாராக இருப்பது நன்று. நன்றி. --Natkeeran 04:44, 19 பெப்ரவரி 2010 (UTC)
- நீங்கள் தொடர்பாளராக இருப்பதை நானும் வழிமொழிகிறேன். பிற அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கும் உங்கள் பணிக்கு நன்றி. --மணியன் 05:04, 19 பெப்ரவரி 2010 (UTC)
- சுந்தர் கூகுள் தொடர்பாளராக இருப்பதை முழு மனதுடன் நானும் வழிமொழிகிறேன்.--செல்வா 18:34, 21 பெப்ரவரி 2010 (UTC)
மேற்கண்டபடி, தமிழ் விக்கியின் கூகுள் தொடர்பாளராக சுந்தர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவருக்கு உதவப் போய் நானும் முழு நேர தொடர்புப் பணிகளில் ஈடுபட்டு விட்டேன் :) தற்போது சோடா பாட்டில் இத்திட்டத்தின் ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபாடு காட்டுவதால் அவரும் ஒரு தொடர்பாளராக முறைப்படி கூகுளுக்குத் தெரிவிப்பது நன்றாக இருக்கும். தயவு செய்து, இதில் யாருக்கேனும் மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கவும். நன்றி--இரவி 08:08, 16 செப்டெம்பர் 2010 (UTC)
- ஆம், அவரை நானும் வழிமொழிகிறேன். ஒருவேளை கூகுள் இருவர் போதும் என்று கருதினால் நான் விலகிக் கொள்கிறேன். இதனால் பொறுப்புகள் பகிரப்படும். -- சுந்தர் \பேச்சு 09:08, 16 செப்டெம்பர் 2010 (UTC)
சுந்தர், கூகுளுடன் மட்டுமல்ல எந்த ஒரு வெளிநிறுவனத்துடனும் நம்மில் இருந்து யார், எத்தனை பேர், எப்படி தொடர்பு கொள்கிறோம் என்பது நமது முடிவே :) நடைமுறை காரணங்களை ஒட்டி இரண்டு பேர் ஈடுபடுவது சிறந்தது என்பதாலேயே நான் உதவியாக இருந்தேன். என்னுடைய பொறுப்பையும் யாராவது ஏற்க முன்வந்தால் நானும் விலகிக் கொள்ள விரும்புகிறேன். எப்படியும் தமிழ் விக்கியில் திறந்த முறையில் உரையாடிச் செயல்படுகிறோம் என்பதால் நல்ல தொடர்பாடல் திறனும் diplomacyயும் (தமிழில் என்ன?) உள்ள எவரும் தொடர்பாளராகச் செயற்படலாம். புதிய தொடர்பாளர்கள் நல்ல முறையில் வெளிநிறுவனங்களுடன் அறிமுகமான பிறகு பழைய தொடர்பாளர்கள் விலகிக் கொள்ளலாம். இதனால், தொடர்ச்சியும் பொறுப்பு கை மாறுவதும் சுமுகமாக இருக்கும்--இரவி 10:03, 16 செப்டெம்பர் 2010 (UTC)
தேவைப்படும் கட்டுரைகள்
தொகுதேவைப்படும் கட்டுரைகள் பக்கத்தில் முதற்கட்டமாக ஒரு 50-100 கட்டுரைகளாவது சேர்த்தால் கூகுளிடம் அளிக்கலாம். மிக முக்கியமான அடிப்படைத் தலைப்புகளை இதில் தருவது நன்றாக இருக்கும். --ரவி 07:28, 19 பெப்ரவரி 2010 (UTC)
- விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்-2 என்னும் பக்கத்தில் உள்ள கட்டுரைகளில் இன்னும் எழுதப்படாதவற்றை முதல் கட்டமாகச் செய்யலாம். இப்பக்கத்தில் உள்ள சிவப்பு இணைப்புகள் உள்ளவை எல்லாம் உண்மையிலேயே இன்னும் எழுதப்படாதவையா அல்லது எழுத்துப்பிழையாலோ பிற தலைப்புகளில் உள்ளதாலோ சிவப்பு எழுத்தில் உள்ளன்வா என்று உறுதிப்படுத்திக்கொள்வது வேண்டும்.
--செல்வா 18:39, 21 பெப்ரவரி 2010 (UTC)
முதற்கட்ட வேண்டல்கள்
தொகுஇதுவரை நடைபெற்ற உரையாடல்களை அடுத்து சில முதற்கட்ட பரிந்துரைகள். சுந்தர் வெட்டி ஒட்ட அனுப்ப வசதியாக ஆங்கிலத்தில் :) அடைப்புக்குறிக்குள் உள்ள குறிப்புகள் நமது புரிதலுக்காக.--ரவி 19:16, 19 பெப்ரவரி 2010 (UTC)
Article Topics
1. Please send us the list of articles waiting to be translated.
(கட்டுரைப் பட்டியல் கிடைத்த பின் அவற்றில் மிகவும் தேவையற்றவற்றை நீக்கி அவர்களுக்கு அனுப்பலாம். பட்டியலை முழுக்க நிராகரிக்க முடியாது. கூடவே, நமக்குத் தேவைப்படும் கட்டுரைப் பட்டியலை விரிவாக உருவாக்கி அனுப்பி வைக்கலாம். இந்தச் செயற்பாடுகளில் சற்று வேகம் தேவை. அதிகம் உரையாடாமல் ஓரிருவரிடம் இப்பொறுப்பைக் கொடுக்கலாம்.) (பார்க்கவும்: விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்-2, நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்)
2. We will send a list of needed articles in Tamil Wiki. These are some must have articles prescribed to be present in all language wikis. You can choose future articles for translations from this also. Not just the popular search terms. The list will try to include topics with diversity across various fields like science, technology, history, current affairs etc.,
Manual of style
1. Please do not provide internal links for other articles. Please do not add categories. We will take care to give these links. External links, Image links and template links are fine.
(தேவையான வார்ப்புரு உருவாக்கம், படம் சேர்ப்பில் நாம் பொறுப்பேற்றுச் செயற்படலாம் என நினைக்கிறேன். எடுத்தவுடன், முழுமையான விக்கியாக்கம் எதிர்ப்பார்ப்பது அவர்களுக்கும் சிரமமாக இருக்கலாம்.)
2. Please use good Tamil words wherever possible. You can refer http://ta.wiktionary.org for glossary help. You can also request help at http://ta.wikipedia.org/wiki/Wp:word-help--ரவி 13:08, 19 பெப்ரவரி 2010 (UTC)
Coordination
2. Translators shall include their contact mail id in their user profile page. More bio info is welcome if their company policy allows.
3. A meet up can be arranged for Wikipedians and translators can be arranged. This will be very helpful to clear mutual questions and impart needed wiki skills. This can also be done virtually (ex: a conference call through Skype)
கட்டுரைத் தெரிவுக் குழு
தொகுகூகுள் பரிந்துரைக்கும் கட்டுரைகளில் தேவை இல்லாதவற்றை நீக்கவும், நம் சார்பில் சில கட்டுரைத் தலைப்புகளை முன்வைக்கவும் ஒரு சிறு குழு அமைத்துச் செயல்படுவது நன்று. இது இருவர் அல்லது மூவர் குழுவாக அமைந்து பெரிய உரையாடலின்றி உடனடி முடிவுகளை எடுக்க வல்லதாக இருக்க வேண்டும். மாதம் / இரு மாதம் ஒரு முறை குழுவைச் சுழற்சி முறையில் மாற்றிச் சுமையைப் பகிரலாம். குழுவின் முடிவுகளைச் சுந்தருக்கு அனுப்பினால் அவர் கூகுளுக்கு முன் அனுப்புவார்.
குழுவில் பணியாற்ற விருப்பமுள்ளவர் பெயர்கள்:
- ரவி --ரவி 19:17, 19 பெப்ரவரி 2010 (UTC)
- குறும்பன் --குறும்பன் 21:18, 22 பெப்ரவரி 2010 (UTC)
- அராபத் ரியாத் --Arafat 05:15, 23 பெப்ரவரி 2010 (UTC)
- கார்த்திக்--கார்த்திக் 06:59, 23 பெப்ரவரி 2010 (UTC)
- கலை --கலை 09:07, 23 பெப்ரவரி 2010 (UTC)
கூகுள் கட்டுரைத் தலைப்புகள் ஒப்புதல் அளித்தல்
தொகுமுதற்கட்டமாக, அடுத்து மொழிபெயர்க்க இருக்கும் 75 கட்டுரைகளின் தலைப்புகளை கூகுளில் இருந்து அளித்து இருந்தார்கள். ( கட்டுரைத் தலைப்புகள் பட்டியல் ) இதனை குறும்பன், கலை, கார்த்திக்பாலா ஆகியோர் சரி பார்த்து 47 கட்டுரைகளுக்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ளார்கள். மூவரும் ஒப்புதல் தந்த கட்டுரைகள் மட்டுமே மொழிபெயர்க்க அனுப்பி உள்ளோம். அடுத்து கூகுள் அனுப்பி வைக்கக் கூடிய கட்டுரைத் தலைப்புகளை இதே முறையில் ஒப்புதல் அளிக்கலாம். கட்டுரைத் தெரிவுக் குழுவில் உதவ விருப்பமுள்ளவர்கள் தெரிவிக்கவும். நன்றி--ரவி 18:05, 5 மார்ச் 2010 (UTC)
- ரவி. இவ்வாறு பட்டியல் வாங்கும் பொழுது , அவர்கள் இதற்கு தமிழில் தலைப்பு எவ்வாறு பெயரிட உள்ளனர் என்பதையும் தந்தளித்தால் நன்று . ஏனென்றால் , இவ்வாறு ஒப்புதல் செய்யும் பொழுது , கட்டுரையின் தலைப்பையும் ஒப்புதல் அளிப்பது நல்லது . இதனால் வழி மாற்ற வேண்டிய , சொல் பற்றிய உரையாடல்கள் போன்றவற்றை தவிர்க்கலாம் . நன்றி --இராஜ்குமார் 08:50, 9 ஏப்ரல் 2010 (UTC)
மெய்யியல் நோக்கு
தொகுஇதுவரை கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் தொடர்பில் மொழிபெயர்ப்பின் தரம், கட்டுரைத் தெரிவுகள், செயற்படும் முறை மேம்பாடுகள் குறித்தே கூடுதலாக உரையாடியுள்ளோம். எனினும், இத்திட்டம் குறித்த மெய்யியல் நோக்கும் தேவை என்று தோன்றுகிறது.
1. நாம் அனைவருமே வாழ்க்கைத் தேவைகளுக்கு, முதன்மை ஈடுபாடுகளின் காரணமாக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளோம். கிடைக்கும் நேரத்திலேயே ஆர்வத்தின் பேரில் விக்கியில் ஈடுபடுகிறோம். ஒருவேளை, முதன்மை ஈடுபாடு விக்கி வளர்ச்சியாக இருந்து, அதற்குப் போதுமான ஊதியமும் கிடைத்தால் நம்மில் சிலர் இன்னும் கூடுதல் நேரமாகவோ முழு நேரமாகவோ கூட விக்கியில் பணியாற்றலாம். எனவே, மேலோட்டமாகப் பார்த்தால், பணம் பெற்றுக் கொண்டு விக்கியில் பங்களிப்பது தவறெனச் சொல்ல இயலாது. பிற்காலத்தில், விக்கி சாரா நிறுவனம் ஒன்று தேர்ந்தெடுத்த விக்கிப் பங்களிப்பாளர்களுக்கு உதவித் தொகை வழங்குவது கூட சாத்தியமே. ஆனால், தொழில்முறையில் விக்கியில் தமிழாக்கம் செய்யும் கூகுள் மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பணமே முதன்மை நோக்கமாக இருக்கும் என்று கருதலாமா? இது சரியா? (குறிப்பு: பணம் பெற்றுக் கொண்டு தொகுப்பது (நல்ல தொகுப்பே என்றாலும்) ஆங்கில விக்கியில் தடை செய்யப்பட்டுள்ளது.)
2. இது வரை (தமிழ்) விக்கிப்பீடியர்கள் என்பவர்கள் ஒற்றைச் சமூகமாக இருந்து வருகின்றனர். இப்போது விக்கிப்பீடியர்கள் X கூகுள் மொழிபெயர்ப்பாளர்கள் என்ற பாகுபாடு வருவது சரியா? தொலைநோக்கில் இந்தப் பாகுபாடு சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
3. கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டத்தால் விக்கிக்குக் கூடுதல் நன்மையா? கூகுளுக்குக் கூடுதல் நன்மையா? இறுதியாக, தமிழுக்காவது கூடுதல் நன்மை என்று வைத்துக்கொண்டாலும், இந்தக் கூட்டுறவின் சமநிலை என்ன? திட்டத்தின் கட்டுப்பாடு யாரிடம் உள்ளது? விக்கியிடம் முழுக் கட்டுப்பாடு இருந்தும் நாம் இன்னும் அதனைச் செயற்படுத்தவில்லை. கூகுளோ நாமாக வினவி அறியும் வரை தன் திட்டம் குறித்து கமுக்கமாக இருந்தது.
4. விக்கிப்பீடியர்கள் விக்கிப்பீடியா சமூக நெறிமுறைகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டு தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் பங்களிக்கிறார்கள். கூகுள் மொழிபெயர்ப்பாளர்களுக்கு இந்த சொந்த விருப்பு உறுதிப்படுத்தப்படுகிறதா? (அவர்கள் தேர்ந்தெடுக்கும் கட்டுரைத் தெரிவுகள், மொழிபெயர்க்கும் கருவி, எழுத்து நடை)
5. கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி பயன்படுத்துவது தவறில்லை. ஆனால், அக்கருவியின் குறைபாடு கட்டுரையின் தரத்தைக் கெடுப்பதும் அதனைச் சீர் செய்யாமல் தொடர்ந்து ஒரே விதமான தவறுகளை இழைத்துக் கொண்டே இருப்பதும் சரி இல்லை. இது வரை நாம் பேச்சுப் பக்கங்களில் சுட்டிக் காட்டிய குறைகளை மட்டும் சீர்படுத்தி உள்ளார்களே தவிர, மற்ற நூற்றுக்கணக்கான கட்டுரைகளைத் தாங்களே மீளப் படித்து சீர் செய்கிறார்கள் இல்லை.
6. ஆங்கில விக்கி கட்டுரைகள் சிலவற்றில் நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சமயம், பண்பாடு, மொழி சார் கட்டுரைகளில். சிலவற்றில் தகவல் பிழை இருக்கலாம். எல்லா கட்டுரைகளையும் ஆங்கில விக்கியில் இருந்து மொழிபெயர்க்க வேண்டும் என்ற காரணத்தால் இந்தப் பிழைகள் தமிழுக்கும் வருவது சரியா? தொழில்முறை மொழிபெயர்ப்பாளர் இந்தப் பிழைகளை உணர்ந்து தவிர்த்து மொழிபெயர்ப்பார் என்று எதிர்பார்க்க இயலாது. அவரது நிருவாகமும் அதற்கு இடம் தராது. இதுவே, விக்கிப்பீடியர் ஒருவர் தாமாக ஆர்வம் / துறை அறிவு காரணமாக மொழிபெயர்த்தால் இப்பிழைகளைக் களைய வாய்ப்புண்டு.
7. ஆங்கிலத்தின் மொழி நடை வேறு, தமிழின் மொழி நடை வேறு. ஆங்கிலக் கட்டுரைகளை வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல் அப்படியே மொழிபெயர்ப்பதால் இயல்பான தமிழ் நடை கெடுகிறது. நூற்றுக் கணக்கான கட்டுரைகள் இத்தகைய வறட்டு நடையில் அமைவது கவலைக்குரியது. பிழைகள் விடுவது தவறில்லை. ஆனால், அந்தப் பிழைகளை அறிந்து திருத்தித் தொடரும் வேகத்தில் செயற்பாடுகள் இருக்க வேண்டும். கடந்த 6 ஆண்டுகளாகத் தமிழ் விக்கியில் மிகக் கவனமாக தமிழ் நடை குறித்த கொள்கை, விழிப்போடு பணியாற்றி வந்துள்ளோம். கூகுள் கட்டுரைகளில் இதனை உறுதிப்படுத்த வழியில்லை. வணிக ஊடகங்கள் தமிழ் நலன் கருதாது செயல்படுவதற்கு மாற்றாக தமிழ் விக்கியின் செயல்பாடுகள் பாராட்டப்பட்டன. கூகுள் கட்டுரைகள் இந்தச் சீர்நிலையைக் குலைக்குமா?
8. தமிழ், தகவல், கட்டுரைகள் ஆகியவற்றுக்கும் மேலாக ஒத்த கருத்துள்ளவர்கள் தோழமையுடன் சேர்ந்து இயங்கும் விக்கியின் சூழலே பெரிதும் வியந்து போற்றப்பட்டு வந்திருக்கின்றது. இந்த ஒத்தியங்கும் சூழல் கூகுள் திட்டத்தில் இல்லை. கிட்டத்தட்ட வெளியாட்கள் போன்ற நிலையே இருக்கிறது.
பயனர் -> பயனர் ஊடாட்டம் போய் பயனர் -> கூகுள் ஒருங்கிணைப்பாளர் - > மொழிபெயர்ப்பு நிறுவன ஒருங்கிணைப்பாளர் என்ற உறவு முறை வந்திருக்கிறது. இது உவப்பாக இல்லை. தோழமையுடன் குறிப்பிட்டுச் சரி செய்யும் நிலை போய் முறையிடும் நிலை வந்துள்ளது.
தற்போது ஓரிருவர் கூகுள் திட்டத்தில் இருந்து கூடிச் செயல்படுவது போல ஒவ்வொரு கூகுள் பங்களிப்பாளரும் செயல்படும் நிலை வருமானால் நன்று.
9. இப்படி ஒரு திட்டம் இயங்குகிறது என கூகுள் ஏன் வெளிப்படையாக அறிவிக்கவில்லை? இத்தகைய திட்டம் குறித்து விக்கிமீடியா நிறுவனம் அறியுமா? அதன் கருத்து என்ன? நான் அறிந்தவரை, கூகுள் " உள்ளடக்கம் எதையும் தானே உருவாக்குவதில்லை. பயனர்கள் உருவாக்கும் உள்ளடக்கத்தையே சேகரித்து ஒருங்கிணைத்துத் தருகிறோம்" என்றுச் செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்தத் திட்டம் கூகுளே உள்ளடக்கத்தை உருவாக்கும் ஒரு திட்டமே. கூகுள் நால் போன்ற திட்டங்கள் விக்கிப்பீடியாவுக்குப் போட்டியாகப் பார்க்கப்பட்டது. (குறிப்பு: முதலில் மாசில்லா பயர்பாக்சை ஆதரித்த கூகுள் பிறகு அதன் அடிப்படையில் குரோம் என்ற தனது சொந்த விளைப்பை வெளியிட்டது. தற்போது விக்கிமீடியா நிறுவனத்துக்கு கூகுள் 2 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கி உள்ளது).
தமிழ் விக்கிக்கு கூகுள் நல்லது செய்வது போன்று மேம்போக்காகத் தோன்றினாலும், கூகுளும் விக்கிப்பீடியாவும் இணையத்தில் மிகவும் சக்தி வாய்ந்த தனித்தனி நிறுவனங்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும் (போட்டி நிறுவனம் என்று கருத இயலாவிட்டாலும்.
அனைவரின் கருத்தும் அறிந்த பிறகு என் கருத்துகளைத் தொடர்கிறேன். நன்றி--ரவி 19:59, 17 ஏப்ரல் 2010 (UTC)
awb கொண்டு வார்ப்புரு இடல்
தொகுகூகுள் பங்களிப்பாளர் உருவாக்கும் கட்டுரைகளில் தானியக்கமாக {{கூகுள் தமிழாக்கக் கட்டுரை}} இட இயலுமா? AWB?--ரவி 11:32, 20 ஏப்ரல் 2010 (UTC)
தானியங்கி வழியாக இணைப்பை நீக்குதல்
தொகுபேச்சு:திரிச்சூர் பூரம்- இங்கு நான் கூறியபடி நிரல் எழுதியுள்ளேன். இதன் வழியாக ஒரு கட்டுரையில் '|' பயன்படுத்தாத அனைத்து இனைப்புகளையும் தன்னியக்கமாக நீக்க முடியும். இங்கு சோதனைத் தொகுப்பைச் செய்துள்ளேன். கட்டுரை உள்ளதா எனப் பார்த்து இணைப்பை நீக்குவது பற்றி எண்ணிப் பார்க்கிறேன். இந்தத் தானியங்கிப் பணிக்கு ஒப்புதல் உண்டென்றால் எந்தெந்த கட்டுரைகளில் செய்ய வேண்டும் என்று கூறுங்கள், செயல்படுத்தி விடுகிறேன். -- சுந்தர் \பேச்சு 11:04, 15 ஜூன் 2010 (UTC)
- சுந்தர், நீங்க ஒரு வித்தைக்காரர் :) தாராளமாக இந்தத் தானியங்கியை இயக்கலாம். கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் பகுப்பில் உள்ளவற்றைச் சரி செய்ய வேண்டும்.--ரவி 11:23, 15 ஜூன் 2010 (UTC)
கூகுளுடன் நாளைய சந்திப்பு
தொகுகூகுள் தரப்பில் பன்னாட்டு அதிகாரிகளும் விக்கிமேனியா வழியாக நமது சிக்கல்களை ஓரளவு புரிந்து கொண்டுள்ளனர். இது குறித்து மேலும் புரிந்து கொள்ளும் வண்ணம் பெங்களூரில் நாளை (14-07-2010 இந்திய நேரம் மாலை) ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தெலுங்கு விக்கியர் அருச்சுனாவையும் இரவியையும் என்னையும் அழைத்தனர். இரவியால் வர இயலாததால் நான் மட்டும் கலந்து கொள்ள உள்ளேன். இதில் நாம் குறிப்பிட வேண்டிய தலையான ஐந்து விசயங்களை பட்டியலிட்டுக் கொண்டால் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் அனைவரின் உள்ளீட்டையும் எதிர்நோக்குகிறேன். -- சுந்தர் \பேச்சு 11:39, 13 ஜூலை 2010 (UTC)
- பிஷாகா தத்தா கலந்துகொள்ளவில்லையா? அவரும் கலந்து கொள்ள விரும்பியதாகத் தெரிந்தது.
- விக்கிமேனியாவில் கிடைத்த பின்னூட்டங்களை வைத்துப் பார்க்கும்போது விக்கிப்பீடியா சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தேவையான தலைப்புக்களை மட்டுமே மொழி பெயர்க்கவேண்டும் என்ற நமது நிலைப்பாடுக்கு ஆதரவாக இருந்தது தெரிந்தது. கூகிளைச் சேர்ந்த மைக்கேலும், ஜெனிபரும் கூட இதனை ஏற்றுக்கொண்டதாகவே தெரிகிறது. எனவே முறையாக இதனை நடைமுறைப் படுத்துவதற்கு வழிமுறைகளை வகுக்க வேண்டும்.
- அடுத்ததாக, ஏற்கெனவே இருக்கும் தலைப்புக்களில் கட்டுரைகளை மொழி பெயர்க்காமல் இருப்பது. இது தொடர்பிலான நியாயத்தையும் அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். இதையும் சரியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டும்.
- மிக நீண்ட கட்டுரைகளை மொழி பெயர்ப்பதிலும் பார்க்க சிறிய பல கட்டுரைகளை மொழிபெயர்ப்பது நன்மை தருமா எனக் கேட்டனர். இது தொடர்பிலும் சிந்திக்கலாம்.
- -- மயூரநாதன் 13:08, 13 ஜூலை 2010 (UTC)
மயூரநாதன், ஒரு கலைக்களஞ்சியத்தின் நோக்கமும் கூகுள் போன்ற நிறுவனத்தின் முன்னுரிமைகளும் மாறுபடும். அதிகம் தேடப்படும் சொற்களை முன்னிறுத்தி கூகுள் செயல்படுகிறது. தேவையும் வழங்கலும் (supply and demand) போல் இதில் ஒரு நியாயம் உண்டு. அவர்களுக்கு வணிகப் பலன்களும் உண்டு. யாருமே தேடாத சொற்களை நாங்கள் ஏன் முன்னுரிமை கொடுத்து எழுத வேண்டும் என்ற வாதம் வரலாம். இவ்வாறு கட்டுரைகள் மொழிபெயர்க்க பட்ட பின் கூகுள் இந்தியத் தளத்தின் வரவுகள் எந்த அளவு கூடுகின்றன என்று கூட அவர்கள் அளந்ததாக கேள்வி. இது போல் அவர்களிடம் பல தரவுகள் இருக்கலாம். இயன்ற அளவு அவர்கள் அதை நம்மிடம் தனிப்பட்ட முறையிலேனும் பகிர்ந்து கொண்டால் நாம் நல்ல கருத்துகளைத் தர முடியும். Translation memoryக்கு பல்வேறு அறிவுப் புலங்களில் இருந்தும் சொற்கள் சேர வேண்டும். இந்தக் காரணத்தைச் சுட்டி, தேடப்படாத ஆனால் அதிக முக்கியத்துவம் வாய்ந்த கலைக்களஞ்சியத் தலைப்புகளைச் சுட்டி எழுதச் சொல்லலாம்.
சில முக்கியமற்ற தலைப்புகளில் மிக நீளமாக எழுதுகிறார்கள். ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு இது சரி. தமிழுக்கு, இது அவ்வளவு தேவை இல்லை. பெரும்பாலான ஆங்கிலக் கட்டுரைகளில் கூட முதல் ஓரிரு பந்தி மட்டுமே புரிதலுக்காக படிக்கிறேன். எனவே, பல சிறிய கட்டுரைகள் எழுதலாமா என்ற உங்கள் ஆலோசனை மிகவும் அருமை. இதனை வலியுறுத்தலாம். விகடன் மொழிபெயர்த்த பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் போல அடிப்படைக் களஞ்சியம் ஒன்றை உருவாக்க உதவும். கட்டுரைகளைக் கண்காணித்துத் திருத்துவதும் இலகுவாக இருக்கும். பெரிய கட்டுரைகளைப் பார்த்தாலே மலைப்பு தட்டுகிறது. எப்படியும் மூன்று மில்லியன் சொற்கள், இத்தனை நூறு கட்டுரைகள் என்று தான் எண்ணுகிறார்கள். எனவே, முதற்கட்டமாக குறைந்த அளவிலான கட்டுரைகள் போதும். சிறிய கட்டுரைகளாக இருந்தால், சமூகமும் சற்று முயற்சி எடுத்து அதன் போக்கில் விரிவாக்க முயலும்.
ஏற்கனவே உள்ள கட்டுரைகளை அழித்து விட்டு எழுதும் பிரச்சினை இப்போது அவ்வளவு இல்லை.
தலைப்பு வாரி தமிழாக்கங்கள் கோரலாம். நாடுகள், பறவைகள், விலங்குகள், இனங்கள், மொழிகள் என்று ஒவ்வொரு தலைப்பிலும் நல்ல தரத்திலான சில கட்டுரைகள் கேட்கலாம். செப்பனிட்டுப் புத்தக வடிவில் வெளியிடலாம். இதற்கான தமிழாக்கங்களைச் சிறப்பு அனுபவம் வாய்ந்த தமிழாக்க நிறுவனங்களுக்கு அளிக்கலாம். --ரவி 13:34, 13 ஜூலை 2010 (UTC)
- பன்னாட்டு கூகுள் தலைவர்களே நமக்குத் தேவைப்படும் தலைப்புகளைக் குறித்த நிலைப்பாட்டிற்கு ஆதரவு வழங்க தயாராக உள்ளநிலையில் அதனை வலியுறுத்துவதே த.வி க்கு வளமை சேர்க்கும்.மயூரநாதன் மேலும் கூறுவதுபோல சிறிய பல கட்டுரைகளை இட்டு இரவி விரும்பும் ஓர் அடிப்படைக் களஞ்சியத்தை உருவாக்குவதற்கு எனக்கும் உடன்பாடு உண்டு.Simple Wiki கட்டுரைகளை மொழிமாற்றம் செய்ய விரும்பினார்களேயானால் கூட நல்லது.கூகுள் தேடும் தலைப்புகளும் நாம் விரும்பும் தலைப்புகளும் இணைகின்ற பரப்பில் உள்ளனவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கலாம்.
(இரவல் கணிணி மற்றும் இணையநேரம் என்னால் தொடர்ந்து பங்குபெற தடையாயுள்ளது.மன்னிக்க)--மணியன் 15:42, 13 ஜூலை 2010 (UTC)
ரவி, ஆங்கிலத்தில் தேடும் தலைப்புக்களை வைத்துத்தான் அவர்கள் தலைப்புக்களைத் தெரிகிறார்கள். தமிழில் வாசிக்க விரும்புபவர்கள் இத்தலைப்புக்களைத் தேடுவார்கள் என்று சொல்வதற்கு இல்லை. அவர்கள் தமிழ் நாட்டிலிருந்து எவ்வளவு தேடல்கள் வருகின்றன என்று கணித்தார்களா அல்லது முழு இந்தியாவையுமே ஒட்டுமொத்தமாகக் கவனத்துக்கு எடுத்தார்களா தெரியவில்லை. ஒட்டு மொத்தமாக எடுத்தால் "கரிஷ்மா கபூர்" போன்ற தலைப்புக்களில் அதிக தேடல்கள் வரும் ஆனால் தமிழ் நாட்டை மட்டும் எடுத்தால் இந்த நிலைமை இருக்காது. ஆங்கிலம் மூலம் தேடுகின்ற தலைப்புக்கள் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதில் உள்ள குறைபாடுகள் பற்றி நான் மைக்கேல், ஜெனிபர் ஆகியோருடன் பேசும்போது எடுத்துச் சொன்னேன். அவர்கள் அதன் பொருந்தாமை பற்றி அறிந்திருக்கிறார்கள். தமிழ் மூலம் தேடுவது குறித்த புள்ளி விபரங்கள் இல்லை அதனால்தான் இவ்வாறு செய்யவேண்டி இருக்கிறது என்றார்கள். தலைப்புக்களைத் தெரிவு செய்வதில் வேறு வழிமுறைகளை கவனத்தில் கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. நாங்கள் எங்களுடைய தேவையை வலியுறுத்துவோம். நாங்களே எனது கோரிக்கைகளின் தீவிரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டியதில்லை.
உண்மை சொன்னார்களோ ஒப்புக்குச் சொன்னார்களோ சிறிய விக்கிகள் வளர உதவுவது தான் தமது முக்கிய நோக்கம் என்றார்கள். அப்படியானால் எல்லா விக்கிகளிலும் இருக்க வேண்டிய தலைப்புக்களின் பட்டியலில் இருந்து தமிழில் இல்லாததை முதலில் மொழி பெயர்க்கலாமே என்றேன். கொள்கையளவில் ஒத்துக் கொண்டார்கள்.
சிறிய கட்டுரைகளை மொழிபெயர்ப்பது குறித்த முன்வைப்பு ஜெனிபருடையது. எனவே அதனைச் செய்யும்படி வலியுறுத்தலாம்.
ஏற்கெனவே இருக்கும் கட்டுரைகள் தமிழாக்கக் கட்டுரைகளால் தன்னியக்கமாகவே அழிக்கப்படும் நிலை இப்போது இல்லையா? நான் கவனிக்கவில்லை. ஆனால், இது பற்றி நான் குறிப்பிட்டபோது அதனை மைக்கேலும், ஜெனிபரும் ஒத்துக்கொண்டார்கள். இந்த நிலையை மாற்ற முயல்வதாகச் சொன்னார்கள்.
தனித்தனியாக வசனங்கள் மொழிபெயர்ப்பதற்காக மென்பொருளினால் வழங்கப்படும் குறைபாட்டைத் திருத்தியிருப்பதாகவும், இப்பொழுது வேண்டுமானால் முழுப் பந்தியையுமே பார்க்கமுடியும் என்றும் மைக்கேல் எடுத்துக் காட்டினார். இது நாம் இது தொடர்பான பிரச்சினைகளை எடுத்துக் காட்டியதன் விளைவே என்று எண்ணுகிறேன். எனவே எமக்கு என்ன நல்லதோ அதனைத் தயங்காமல் வலியுறுத்தலாம்.
-- மயூரநாதன் 16:02, 13 ஜூலை 2010 (UTC)
மயூரநாதன், கண்டிப்பாக நமது அனைத்து தேவைகளையும் வலியுறுத்தலாம். இது குறித்து முடிவெடுக்கக்கூடிய அனைவரும் நாளை இருப்பர் என்பதால் இது ஒரு நல்ல வாய்ப்பு. முன்பு நம்மைக் கலந்து கொள்ளாமல் மொழிபெயர்த்த போது ஏற்கனவே இருந்த கட்டுரைகளை அகற்றி விட்டு ஏற்றினார்கள். குறுங்கட்டுரையாக இருந்தால் நீக்கலாம் தானே என்ற தவறான புரிதல் தான் காரணம். குறுங்கட்டுரையாக இருந்தாலும் நீக்காதீர்கள் என்று பல முறை சுட்டியுள்ளோம். அண்மைக்காலமாக, நாம் ஒப்புதல் கொடுக்கும் தலைப்புகளை மட்டும் தான் தமிழாக்குகிறார்கள். இவ்வாறு ஒப்புதல் கொடுக்கும் போதே அவை தமிழ் விக்கியில் இல்லை என்பதைச் சரி பார்த்துத் தான் தருகிறோம் (அதையும் மீறிய தவறுகள் இருக்கலாம்).
சிறிய கட்டுரைகள் என்று நான் குறிப்பிடுவது ஆங்கிலத்தில் சிறிதாக இருக்கும் கட்டுரைகளோ Simple விக்கி கட்டுரைகளோ அல்ல. ஆங்கில விக்கியில் ஒரு கட்டுரை பெரிதாக இருந்தாலும் கூட அவற்றின் முதல் இரு பந்திகள் அளவில் தமிழாக்கினால் போதும். நாமே ஒரு கட்டுரை எழுத முனைந்தாலும் இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் முனைவோம் அல்லவா? ஆங்கில விக்கி அளவுக்கு simple விக்கி தரம், தகவல் சரி பார்ப்பு இருக்காது என்பதால் அதனை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதில் உடன்பாடில்லை.
கூகுளின் முதன்மை நோக்கம் விக்கியை வளர்ப்பது அல்ல :) http://www.guardian.co.uk/technology/blog/2010/feb/18/wikipedia-google பார்க்கலாம்.
ஆனால், இத்திட்டம் மூலம் விக்கிகள் வளர்ந்தால் அதனால் கூகுளுக்குப் பல நன்மைகள் உள்ளன. மொழிபெயர்ப்புக் கருவி உருவாக்கம் என்பது அதன் ஒரு பகுதி தான். விக்கிக்கு ஊறு விளைவிக்காமல் இரு பக்க நல் விளைவுகளை ஏற்படுத்தும் வரை, கூகுளின் முதன்மை நோக்கத்தைக் குறித்து நாம் அலட்டத் தேவை இல்லை.
அவர்கள் இந்தியா முழுமைக்குமான தேடல்களில் இருந்து தான் தரவுகளை எடுக்கிறார்கள். தமிழ் வழித் தேடல் தரவு இல்லை என்பது வியப்பளிக்கிறது. ஒருவேளை, கூகுளின் தமிழ் இடைமுகப்பு ஊடாகச் செய்யப்படும் தேடல்களைக் கருத்தில் எடுக்கலாம். தமிழ் இடைமுகப்பைத் தமிழர்கள் மட்டும் தான் பயன்படுத்துவார்கள் என்பதால் இவர்கள் தேடல் ஓரளவு துல்லியம் தரலாம்--ரவி 16:27, 13 ஜூலை 2010 (UTC)
- பெரும்பாலான கருத்துகளை மேலே கூறியவர்கள் கூறிவிட்டார்கள். கூகுளுடைய உள்நோக்கம் எதுவாயினும், நம் விக்கியின் குறிக்கோள்கள், தேவைகள், திட்டங்கள் பற்றி அறிந்து அவர்களும் ஒத்து உழைப்பதன் மூலம் அவர்களும் பயன்பெறலாம். கட்ட்டுரையின் அளவு சிறியதாக இருக்கவேண்டும் என்னும் கருத்து தேவை இல்லை (மிக நீளமாக இருக்கவேண்டாம். ஒரு 50 கிலோ பை'ட் முதல்
100 கிலோ பை'ட்டுக்குள் இருந்தால் தவறில்லை. கேளிக்கைக் கலைஞர்களைப் பற்றிய கட்டுரைகள் குறுங்கட்டுரையாக (~ 10 கி.பை'ட்) இருந்தாலே போதுமானது. அதுபோலவே வணிக நிறுவனங்களைப் பற்றிய கட்டுரைகளும் சுருக்கமாக இருந்தாலே போதும் (20-30 கி.பை'). எல்லா விக்கிகளிலும் இருக்க வேண்டிய கட்டுரைகளில், இன்னும் தமிழ்ழில் இல்லாத கட்டுரைகளை உருவாக்கச்சொல்லலாம். மருந்துகள், நோய்கள், நகரங்கள், நோபல் பரிசு பெற்றவர்கள், விளையாட்டுகள், விலங்குகள், மீன்கள், செடிகொடிகள், மொழியியல், என்று ஏராளமாக உள்ளன. ஆனால் நமக்குப் பயனுடையதை அவர்கள் ஏன் உருவாக்க வேண்டும் என்பதனையும் நாம் எடுத்து கூறுதல் நல்லது (பல தலைப்புகளில், பல விதமான சூழல்களில், சொற்களும் சொற்றொடர்களும் வரும்- இதனால் இம்மொழிபெயர்ப்புகள் அவர்களின் தானியங்கி மொழிபெயர்ப்பு அல்லது கணிப்பிய மொழியியல் (computational linguistics) பணிகளுக்கு உதவக்கூடும். பன்முக சூழல்களில் பயன்பாடு தெளிவடையக்கூடும்..இப்படி..). மொழி பெயர்ப்பின் தரம், மொழி மரபுகளையும் பழக்கங்களையும் மதித்து மொழி பெயர்க்கச் சொல்லவேண்டும். நாமும் நடைக்கையேடு ஒன்றை இன்னும் விரிவாகவும், யாரும் சட்டென்று பார்த்து பயன் பெறுமாறும் உருவாக்க வேண்டும் (ஏற்கனவே உள்ள கையேடுகளை அறிவேன்). மிக மிக முக்கியமான பணிகளில் இதுவும் ஒன்று. --செல்வா 17:34, 13 ஜூலை 2010 (UTC)
- பல கூகிள் பயனர்கள் தற்போது சிறப்பாக பங்களிப்புச் செய்கிறார்கள். எழுதப்பட்ட கட்டுரைகளைத் திருக்துகிறார்கள். பொது கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்கிறார்கள். இது சிறந்த முன்னேற்றம். நாம் வரவேற்கிறோம்.
- கூகிளின் திட்டத்தை நாம் பொதுவாக வரவேற்கிறோம், அது தமிழ் விக்கிக்கு சிறந்த பயனை தர வேண்டும் என்பதே எமது நோக்கம்.
- ஆழமான கட்டுரைகளை மொழி பெயர்பதை வர வேற்க வேண்டும். ஆனால் தலைப்புகள் தெரிவில்தான் கவனம் வேண்டும். அண்டம் பற்றிய கட்டுரை ஆழமாக அமைய வேண்டும். பாப் பாடகர் பற்றிய கட்டுரை சுருக்கமாக அமையலாம்.
- ஏற்கனவே பல தலைப்புகள் பட்டியல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் மேலும் தெரிவுகள் செய்து பரிந்துரைக்கலாம்.
- ஏற்கனவே ஓரளவு வளர்ந்து இருக்கும் கட்டுரைகளை, முற்றிலும் மீண்டும் மாற்றி அமைப்பதை தவிர்க்க வேண்டும்.
--Natkeeran 01:18, 14 ஜூலை 2010 (UTC)
தற்போது பொதுவாக கட்டுரைத் தலைப்புகளுக்கு ஒப்புதல் தருகிறோம். வேண்டுமானால், இனி இவற்றை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து ஒன்றை முழுமையாகவும் மற்றதைச் சுருக்கமாகவும் எழுதுமாறு கேட்கலாம் (பாப் பாடகர்கள், இந்திப் படங்கள், நிகழ்பட விளையாட்டுகள் போன்றவை...)--ரவி 05:40, 14 ஜூலை 2010 (UTC)
சுந்தர், மகேசுவரி பல வார்ப்புருக்களைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறார். இதை ஒழுங்குபடுத்துவது, என்னென்ன வார்ப்புருக்களை உருவாக்குவது என்பது குறித்தும் ஆலோசியுங்கள். கூடவே, பயனர்:Tamil sarva என்னும் கூகுள் பங்களிப்பாளர் தனது சொந்த ஆர்வத்தில் சில கட்டுரைகள் உருவாக்குவது போன்ற நல்ல விளைவுகளையும் சுட்டிக் காட்டுங்கள்--ரவி 05:49, 14 ஜூலை 2010 (UTC)
- மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பின்னூட்டங்களையும் உள்வாங்கிக் கொண்டு தக்க முறையில் அவர்களிடம் எடுத்துச் சொல்லுவேன். இதன் வழியாக நன்மைகள் விளையும் என நம்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 08:32, 14 ஜூலை 2010 (UTC)
சூலை 14 சந்திப்புக் குறிப்புகள்
தொகுசந்திப்பு பொதுவாக நன்றாக அமைந்தது. சென்ற தொலைபேசி உரையாடல் போல் இல்லாமல் நட்புடன் நடந்தது. கூகுள் தரப்பில் மைக்கேல் கால்வேசு, டி'ம்பிள் பா'த்ரா, சுனில், சித்தார்த்து, ரிச்சா, மகேசுவரி ஆகியோர் பங்கற்றனர். இவர்களுடன் நானும் தெலுங்கு விக்கியர் அருச்சுனாவும் கலந்து கொண்டோம்.
- கட்டுரை அளவையும் விரித்தாளில் தந்து நாம் முடிவு செய்ய உதவுவதாகச் சொன்னார்கள்.
- என் கோரிக்கைப்படி, நம்மிடம் தலைப்புகளைத் தெரிவு செய்யும் பொருட்டு பகிர்ந்து வரும் விரித்தாளில், நாம் பொருத்தமான தமிழ்த்தலைப்பைப் பரிந்துரைக்க ஏற்பாடு.
- சில கட்டுரைகளைச் சுருக்கமாகவும் வேறு சிலவற்றை முழுநீளத்துக்கும் மொழிபெயர்ப்பது நடைமுறைக்கு ஒவ்வாது என்று அவர்கள் கருதுகின்றனர். அவ்வாறான கட்டுரைகள் இருந்தால் அக்கட்டுரைகளைத் தெரிவில் இருந்து நீக்குவதற்கு உடன்படுகின்றனர்.
- நாம் விரும்பும் கட்டுரைகளையும் அந்த விரித்தாளில் சேர்க்கலாம் என்று ஒப்புக் கொண்டனர்.
- இதுவரை 3 மில்லியன் சொற்கள் ஏற்றப்பட்டுள்ளனவாம்.
- 3 மாதங்களில் ~480 கட்டுரைகள் என்ற விரைவில் இப்பணி நடைபெறுகிறது.
- இது பல ஆண்டுகளுக்குத் தொடர வாய்ப்புள்ளது என்றாலும் உறுதியாகக் கூற இயலாது என்றனர். (கொசுறு: கூகுளின் நற்பணி அமைப்பு (Google.org) பணம் தராமல் தன்னார்வலர்களைக் கொண்டு இதே போன்ற திட்டத்தைத் தொடங்கவுள்ளது போலத் தெரிகிறது.)
- அருச்சுனா தனியே கேட்ட கேள்வி: த.வி. மொத்த சொற்கள் 6.5 மில்லியன், கூகுள் 3 மில்லியன் என்றால் கணக்கு இடிக்கிறது. நாம் நமது மொத்த சொற்கள் கணக்கைச் சரி பார்க்க வேண்டும். கூகுள் எண்ணிக்கை ஆங்கிலச் சொற்கள் என்றாலும் ஓரளவு ஒத்திசைவு இருக்க வேண்டும்.
- பயனர் பேச்சுப் பக்கங்களையாவது நாளொருமுறை பார்க்க அறிவுறுத்துகிறோம் என்றனர்.
- கூகுள் வார்ப்புருவை அவர்கள் கருவி வழியாகச் சேர்க்க ஒப்புகை. ஆனால் எல்லா விக்கிக்களும் பொதுவான ஒரு வார்ப்புருவைத் தந்தால் நல்லது என்றனர். நான், அவர்களுக்கு ஆங்கிலத்தில் தந்து இங்கு வழிமாற்றிக் கொள்ள முடியும் என்றேன்.
- மூன்றடுக்குப் பின்னூட்ட முறையை நான் பரிந்துரைத்தேன்: கட்டுரைப் பேச்சுப் பக்கங்கள், பயனர் பேச்சுப் பக்கங்கள், கூகுள் விரித்தாள் + கூகுள் மொழிபெயர்ப்பாளர் குழு மடலுக்கு மதிப்பீட்டுரை. கொள்கை அளவில் ஒப்புக் கொண்டனர். மிக மோசமான மொழிபெயர்ப்பாளர்கள் நீக்கப்படுவார்கள்.
- கட்டுரைத் தெரிவு தரவு அடிப்படையில் இருக்க வேண்டுமென விரும்புகின்றனர். சில தரவுகளை நம்மிடம் பகிர்வார்கள்.
- இந்திக்கு அடுத்த படியாக இந்தியாவில் இருந்து தமிழிலேயே மிகுதியான தேடல்கள் வருகின்றனவாம்.
- மகேசுவரியிடமும் தனியே சிறிது நேரம் உரையாடினேன். வார்ப்புருப் பதிவேற்றம் முடியும் நிலையில் உள்ளதாம். இருந்தாலும் சிறிய தொகுப்புகளாகக் குறிக்கவும், மாகிர் ஆலமரத்தடியில் தெரிவித்த சிக்கலையும் தெரிவித்துள்ளேன்.
- ஆகத்து 15-ல் அவர்கள் வளர்த்தெடுத்த கட்டுரைகள் பற்றிய தரவுகளை நமக்கு அனுப்புவார்கள். நடவடிக்கை எடுக்கப்படாத கட்டுரைகளை நீக்காமல் தனிப் பெயர்வெளிக்கோ பதிவேற்றியவரின் பயனர் பக்கத்துக்கோ நகர்த்துமாறு வேண்டினர்.
- தெலுங்குக்கு இப்போதைக்கு ஒருங்கிணைப்பாளர் முழு நேரமாக இல்லையாம். (அங்கு 350+ கட்டுரைகள் ஏற்றப்பட்டுள்ளதாக அருச்சுனா சொல்கிறார்.) ஆகத்து 15-க்குப் பின்னர் நம் உதவியுடன் செம்மைப்படுத்திய முறைமையை மற்ற விக்கிகளுக்குக் கொண்டு செல்வார்கள். அப்போது அடுத்த சந்திப்பு இருக்கக்கூடும்.
- நாம் தந்த தானியங்கி சிவப்பு நீக்கம் மிகவும் பயனளிப்பதாகச் சொன்னார்கள். அரபு விக்கியிலோ வேறு விக்கியிலோ கூட இதே சிக்கல் ஏற்பட்டதாம்.
- வரிக்கு வரி மொழிபெயர்க்கப்பட்டது அவர்கள் translation memory-க்காகத் தானாம். இப்போது பத்திக்குப் பத்தி என்று மாற்ற வசதி செய்யப்பட்டுள்ளதாம்.
தொடர்ந்து இவர்களுடன் ஒருங்கிணைந்து நமது விக்கியின் தரம் கெடாமல் கட்டுரைகளை வளர்த்தெடுக்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 13:21, 15 ஜூலை 2010 (UTC)
- மிக நேர்த்தியான நிகழ்வுப் பதிவு, சுந்தர்! நன்றி.--செல்வா 16:07, 15 ஜூலை 2010 (UTC)
- சூன் 2009 இல் தமிழில் 3.6 மில்லியன் சொற்கள் இருந்தன. மே 2010 இல் 8.6 (6.5 மில்லியன் அல்ல) மில்லியன் சொற்கள் உள்ளன. எனவே இக் காலப் பகுதியில் 5.0 மில்லியன் சொற்கள் தமிழ் விக்கியில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் 3.0 மில்லியன் கூகிள் மொழிபெயர்ப்பின் வழி சேர்க்கப்பட்டது என்கிறார்கள். கூகிளின் கணக்கு மொழி பெயர்க்கப்பட்ட அளவைக் குறிக்கிறதேயன்றி இவை எல்லாமே விக்கிகளில் சேர்க்கப்பட்டிருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்று மைக்கேல் சொன்னதாக ஞாபகம். மயூரநாதன் 19:27, 15 ஜூலை 2010 (UTC)
- ஆங்கில வழி, இந்திய தரவுகளை வைத்து தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கட்டுரைத் தலைப்புகளைத் தேர்வு செய்வது பொருத்தமற்றது. மயூரநாதனின் இது பற்றிய கருத்தோடு ஒத்துப் போகிறேன். ஆழமான கட்டுரைகள் தேவை, முக்கியமான தலைப்புகளில். இது கூகிள் திட்டத்துக்குரிய வேண்டுகோள், தனிப் பயன்ர்களுக்கானது அல்ல. --Natkeeran 01:05, 16 ஜூலை 2010 (UTC)
- ஊட்டத்துக்கு நன்றி, செல்வா. தகவலுக்கு நன்றி, மயூரநாதன். அருச்சுனாவுக்குத் தெரிவித்து விடலாம்.
- நற்கீரன், இந்தச் சிக்கலை ஓரளவுக்குத் தீர்க்கும் வண்ணம் அவர்கள் நாம் விரும்பும் கட்டுரைகளையும் இணைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளனர். மீடியாவிக்கித் தேடல் தரவுகளைக் கொண்டும் நம் பரிந்துரைகளைச் செய்யலாம். கட்டாயம் இருக்க வேண்டிய கட்டுரைகளின் பட்டியலில் இருந்தும் தருவோம். -- சுந்தர் \பேச்சு 03:37, 16 ஜூலை 2010 (UTC)
சுந்தர், உங்கள் தனி வாழ்க்கை நெருக்கடிகளுக்கு இடையே தான் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டீர்கள். அதற்கு முதலில் நன்றி.
தமிழ் விக்கிப்பீடியாவில் தேடப்படும் சொற்கள் குறித்த தரவு இருக்கும் எனில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்கு முன்னுரிமை கொடுத்து கட்டுரைகள் உருவாக்கலாம்.
தற்போது தமிழ் விக்கியில் இருக்கும் 8.5 மில்லியின் சொற்களில் கூகுள் தந்தது 3 மில்லியன் என்றால் நிலைமை மிகவும் கவலைக்கிடம். ஏறத்தாழ் 35% வீதம் கூகுளின் பங்களிப்பு. 3 மாதத்துக்கு 480 கட்டுரைகள் என்ற வேகத்தில் அவர்கள் சென்றால் கூடிய விரைவில் சமூகத்தின் பங்களிப்புகள் விழுக்காட்டில் குறையும். 35% கூகுள் பங்களிப்பு என்று எண்ணுவதை விட 35% பக்கங்கள் கவலைக்குரியனவாக உள்ளன என்பதே அச்சமாக உள்ளது. ஒரு கலைக்களஞ்சியத்தின் நம்பகத் தன்மை, அதனைப் பற்றிய மனத்தோற்றத்தை இது வெகுவாகப் பாதிக்கும். குறிப்பில்வழிப் பக்கங்களில் அடுத்தடுத்து நிரோ உருவாக்கிய திரைப்படப் பக்கங்கள் வந்தாலே தமிழ் விக்கி முழுக்க இது தான் இருக்கிறதா என்ற தோற்றம் உள்ளதை அறிவீர்கள். (இது நிரோவின் தப்பு அல்ல. எடுத்துக்காட்டுக்குச் சொல்கிறேன்). அதே போல் கூகுள் தேடல் மூலமாகவோ தமிழ் விக்கி உலாவல் மூலமோ கூடுதலாக கூகுள் பக்கங்களைப் பார்க்கும் ஒருவர் அதன் வழியாகவே தமிழ் விக்கியைப் புரிந்து கொள்ளக்கூடும். கூகுள் திட்டத்தால் வரக்கூடிய தவறான எண்ணம் மற்ற பங்களிப்பாளர்களின் உழைப்பின் மதிப்பை நீர்த்துப் போகச் செய்து விடும்.
இது வரை மிகவும் பொறுமையாக இத்திட்டத்தை அணுகி அவர்களுக்குப் போதுமான நேரம் கொடுத்துள்ளோம். இனி நாம் விக்கியின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு தேவையான உறுதியான முடிவுகளை எடுப்பது நல்லது.
ஆகத்து 15க்குப் பிறகு திருத்தப்படா கட்டுரைகளைத் தனிப்பெயர்வெளிக்கோ பயனர் பக்கத்துக்கோ நகர்த்துவதில் பொருளே இல்லை. ஏற்கனவே பிழையாக உருவான கட்டுரைகளை ஒதுக்கி வைத்து விட்டு மேலும் மேலும் அதே பிழைகளோடு கட்டுரைகள் உருவாக்குவதில் யாருக்கு என்ன நன்மை? புதுக்கட்டுரைகளை முழுக்க நிறுத்தி விட்டு திருத்துவதில் நடைமுறைச் சிக்கல் என்பதாலேயே இது வரை புதுக்கட்டுரைகளை ஏற்ற அனுமதித்தோம். ஆகத்து 15க்குப் பிறகு, இருக்கிற கட்டுரைகளைத் திருத்தாமல் புதிய கட்டுரைகளைச் சேர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
ஆகத்து 15க்குள் அவர்கள் எல்லா கட்டுரைகளையும் திருத்தி முடித்தால் கூட, அதனை முறையாக மதிப்பிட்டுத் தரவுகள் அடிப்படையிலான முடிவுகள் எடுப்பதற்கு நமக்கு நேரம் வேண்டும். இந்த தர மதிப்பீட்டுப் பணிக்கு குறைந்தது 2 மாதங்கள் தேவைப்படும். எனவே, இந்தக் காலத்தில் புதுக்கட்டுரையாக்கப் பணிகள் நடக்காமல் இருப்பது நல்லது.
3 மாதத்துக்கு 480 கட்டுரைகள் என்பதெல்லாம் கூகுளின் திட்ட இலக்குகள். அதற்காக நமது விக்கியைப் பாழ்படுத்த முடியாது. நாம் அவசரப்பட்டோ கண்மூடித்தனமான இலக்குகள் வைத்தோ செயல்படுவதற்குத் தேவை இல்லை. இனி நமது தேவைகள் என்ன என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டு அதற்கு கூகுள் உடன்பட்டாலே மட்டுமே தொடர வேண்டும். கூகுள் ஒரு பெரிய bulldozer போல் வந்து சமூகத்தின் உழைப்பை வீணாக்கிக் கொண்டிருக்கிறது. இது சரி இல்லை--ரவி 05:33, 16 ஜூலை 2010 (UTC)
- ரவி, கூகிளின் 3.0 மில்லியன் சொற்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இல்லை. ஆனாலும் கூகிள் வழியாக பெருமளவு சொற்கள் தமிழில் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பதில் ஐயமில்லை. 1.0 மெ.பை அளவு கொண்ட கட்டுரை ஒவ்வொன்றிலும் ஏறத்தாழ 6,000 சொற்கள் (தமிழில்) இருக்கும். எனவே இந்த அளவுள்ள 500 கட்டுரைகள் இருந்தால் 3.0 மில்லியன் சொற்கள் வந்துவிடும். மைக்கேல் என்னுடன் பேசும்போது கூகிள் திட்டத்தின் கீழ் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுச் சேர்க்கப்பட்ட சொற்களின் எண்ணிக்கை பற்றிய தரவுகளைக் காட்டினார். இதன்படி பல பிற மொழி விக்கிகளோடு ஒப்பிடும்போது தமிழில் மிகவும் அதிகமான சொற்கள் சேர்க்கப்பட்டிருப்பதையும் கவனிக்க முடிந்தது. மைக்கேல் கூட அப்போது தான் இதனைக் கவனித்ததாகவும், தமிழில் எப்படி இவ்வளவு சொற்கள் சேர்க்கப்பட்டன என்றும் ஆச்சரியப்பட்டார். மொழிபெயர்த்த கட்டுரைகள் எல்லாமே ஏற்கெனவே விக்கியில் ஏற்றப்படாமல் இருக்கக்கூடும் எனவும் அப்போது தான் அவர் தெரிவித்ததாக ஞாபகம்.
- ரவி எடுத்துக் காட்டியதுபோல் கணிய அடிப்படையில் விக்கி சமூகத்தின் பங்களிப்பு விழுக்காட்டளவில் குறையும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு விக்கிப் பயனர்களின் ஆர்வத்தைக் குறைத்து அவர்களின் பங்களிப்பைக் குறைத்துவிடும் வாய்ப்புக்களும் உண்டு. எடுத்துக்காட்டாக, கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் பயனர்களுடைய கட்டுரைகளை அழித்துக்கொண்டிருந்த போது ஒரு பயனர் (யார் என்று ஞாபகம் இல்லை) தான் எழுதுவதைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டதாகக் குறிப்பிட்டார். இந்த எடுத்துக்காட்டை நான் மைக்கேலுக்கும் தெரிவித்தேன். மலையாள விக்கிப்பீடியர்களுடன் பேசும்போது அவர்களும் கூகிள் கட்டுரைகள் விக்கி சமூகம் வளர்வதைப் பாதிக்கும் என்றே பெரிதும் பயப்படுகிறார்கள். எனவே கூகிள் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் குறுகியகால, நீண்டகாலத் தாக்கங்களைச் சரியாக மதிப்பிட்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.
- -- மயூரநாதன் 06:22, 16 ஜூலை 2010 (UTC)
மயூரநாதன், ஓரளவு பெரிய கட்டுரைகளிலேயே 3000+ சொற்கள் இருந்துள்ளதைக் கண்டுள்ளேன். கூகுள் திட்டம் மூலம் இதுவரை 1000+ கட்டுரைகள் ஏற்றப்பட்டுள்ளன. எனவே, 3 மில்லியன் சொற்கள் என்பது சாத்தியமே. திட்டத்தின் தொடக்கத்தில் உருவான கட்டுரைகள் பல இன்னும் பதிவேற்றப்படாமல் உள்ளதாக மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் அறிந்தேன். தற்போதும் இந்நிலை தொடர்கிறதா தெரியவில்லை. எப்படி இருந்தாலும், கூடிய விரைவில் கூகுள் சொற்களின் விழுக்காடு உயர்ந்து கொண்டே போகும் என்பதில் ஐயம் இல்லை. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் 100ல் ஒரு பங்கு மட்டுமே என்ற அளவில் கூட பிழை இருந்தால் வாங்குபவர்கள் ஒப்புக் கொள்வார்களா? அதே தரத்தை நாம் எட்ட முனைய எண்ணும் போது, 35% கூகுள் பங்களிப்பின் தரத்தால் எழும் நம்பகத்தன்மை இழப்பு கவலைக்குரிய ஒன்று. விக்கி சமூகத்தின் மனநிலையிலும் செயல்பாட்டிலும் இது விரும்பத் தகா மாற்றத்தைக் கொண்டு வரும் என்றே எதிர்பார்க்கிறேன். இது வரை எங்கு பிழை கண்டாலும் திருத்தும் எனக்கே கூகுள் கட்டுரையில் ஏன் என் நேரத்தை வீணாக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. --ரவி 06:37, 16 ஜூலை 2010 (UTC)
- தரம் சிறப்பாக இருந்தால், பல்வகைத் தன்மை இருந்தால், தமிழ் சூழலைப் புரிந்து கொண்டு இயங்கினால். கூகிளின் பங்களிப்பின் விழுக்காடு பற்றி நாம் கவலைப்படுத் தேவையில்லை. அவர்களை எமக்குச் சாதகமான வளமாகவே கருத வேண்டும். --Natkeeran 23:17, 16 ஜூலை 2010 (UTC)
கூகிள் வலைப்பதிவில்
தொகுகூகிளின் வலைப்பதிவில் இத்திட்டம் தொடர்பான அறிவித்தல் --ஜெ.மயூரேசன் 10:32, 15 ஜூலை 2010 (UTC)
சுவாகிலி விக்கியில் கூகுள் திட்டம் பற்றிய அனுபவம்
தொகுhttp://muddybtz.blog.com/2010/07/16/what-happened-on-the-google-challenge-the-swahili-wikipedia/ --ரவி 20:29, 16 ஜூலை 2010 (UTC)
தர மதிப்பீட்டு
தொகுஆகஸ்டு 2010ல் நடந்த கூகுள் கட்டுரைகளுக்கான தர மதிப்பீடும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும்
அடுத்த கட்ட நடவடிக்கை
தொகுகூகுள் கட்டுரைகளைத் திருத்தி முடிப்பதற்கான கெடு ஆகத்து 15 (இன்னும் 27 நாட்கள்) அன்று முடிகிறது. கூகுள் தந்துள்ள தரவுகளின் படி இது வரை உருவாக்கிய 1123 கட்டுரைகளில் 159 கட்டுரைகள் மட்டுமே திருத்தப்பட்டுள்ளன. இது வெறும் 14% மட்டுமே. இகட்டுரைகளின் திருத்தம் கூட முழு நிறைவு அளிப்பதாக இல்லை. ஆகத்து 15க்குள் திருத்தி முடியா கட்டுரைகளை வேறு பெயர் வெளிக்கு நகர்த்தி விட்டுத் திட்டத்தைத் தொடரும் நோக்கில் கூகுள் இருப்பதாகவே சுந்தரின் சந்திப்பு மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. இருக்கிற கட்டுரைகளைத் திருத்தி முடிக்க முனையாமல் அதே பிழைகளோடு மேலும் புதிய கட்டுரைகளை உருவாக்குவதால் யாருக்கும் பயன் இல்லை. தமிழ் விக்கியின் தரத்தை நீர்த்துப் போகச் செய்வதாகவும் தமிழ் விக்கி சமூகத்தின் கவனத்தையும் உழைப்பையும் வீணாக்குவதாகவே அமையும். ஏற்கனவே கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் கூகுளுக்கு வழங்கியுள்ளோம். எனவே, அடுத்த கட்ட நடவடிக்கையாக பின்வருவனவற்றைப் பரிந்துரைக்கிறேன்:
1. ஆகத்து 15, 2010க்குப் பிறகு புதிய கட்டுரைகளைக் கூகுள் பதிவேற்றக் கூடாது.
2. கட்டுரைகளைத் திருத்தி முடிப்பதற்கான காலம் அக்டோபர் 15, 2010 வரை நீட்டிக்கப்படும்.
3. இருக்கிற கூகுள் கட்டுரைகளின் தரத்தை முறைப்படி மதிப்பீடு செய்வதற்கான பணியை நாம் ஆகத்து 15, 2010 முதல் அக்டோபர் 15, 2010 வரை மேற்கொள்ள வேண்டும். எழுத்துப் பிழைகள், சொற்றொடர் அமைப்புகள், கலைச்சொல் தேர்வுகள், நிறுத்தற்குறிகள், எளிதில் படித்துப் புரிந்து கொள்ளக்கூடியமை போன்ற பல்வேறு அடிப்படைகளில் மதிப்பிட வேண்டும். இதற்கான வழிமுறைகளை நாம் வகுக்கத் தொடங்க வேண்டும்.
4. மேற்கண்ட செயல்பாடுகளின் அடிப்படையில் உரையாடி திட்டத்தைத் தொடர்வதா வேண்டாமா என்ற இறுதி முடிவை நவம்பர் 1, 2010 அன்று எடுக்க வேண்டும்--ரவி 15:33, 18 ஜூலை 2010 (UTC)
இது சரியான நடைமுறையாக இருக்கும் என நினைக்கின்றேன். என் உடன்பாட்டைத் தெரிவிக்கின்றேன். கூகுள் மொழிபெயர்ப்பாளர்களுக்கு நம்மிடம் கேள்விகள் கேட்கவும், அவர்கள் நோக்கில் இடர்ப்பாடுகள் ஏதும் இருப்பினும், அவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் ஒரு பக்கம் ஒதுக்கலாம் என நினைக்கின்றேன். நம் குறிக்கோள் தக்க தரத்துடன் கட்டுரைகள் அமைய வேண்டும். விக்கியின் சீரான, ஆற்றொழுக்கான வளர்ச்சியை நீர்த்துப்போகும்படியான செயல்களை தடுப்பது அல்லது சீர்திருத்துவது ஆகியவையே. --செல்வா 16:50, 18 ஜூலை 2010 (UTC)
- ரவி, நீங்கள் கொடுத்துள்ள நடைமுறை மிகவும் சரியானதாக இருக்கிறது. போதுமான நேரம் கொடுக்கப்பட்டுள்ளது அவர்களையும் சிந்தித்து செயல்பட வைக்கலாம்! --கார்த்திக் 18:46, 18 ஜூலை 2010 (UTC)
- Hi Ravi. Such harsh positioning is not necessary. We can ask perhaps upto 40 % of the essays to be reviewed. Assuming, they have improved their process, we should allow for new articles. --Natkeeran 13:04, 19 ஜூலை 2010 (UTC)
- இரவி, வெருமனே சிகப்பு இனைப்புகள், படிம இனைப்புகள், வார்ப்புருக்கள் அகியவற்றை மட்டுமே சரி செய்துவிட்டு "கட்டுரை சரி செய்யப்பட்டது" என கூறுவதை எவ்வாரு ஏற்பது? நடை சீர்படுத்தப்பட வேண்டும் என்பதுதானே நமது முக்கிய எதிர்பார்ப்பு. அதற்கான முயற்சிகள் எதுவுமே மேற்கொள்ளப்படாத நிலையில், மேற்கண்ட முடிவுகளை அப்படியே நடைமுறைப் படுத்துவது சரியானதே.--அராபத்* عرفات 15:41, 19 ஜூலை 2010 (UTC)
- ஆரம்பத்தில் இரவியின் நிலைப்பாடு மோசமாகத் தெரிந்தாலும் சுவாலி மொழி பயனர்களின் அனுபவம் திகிலூட்டுகின்றுது.--ஜெ.மயூரேசன் 11:14, 22 ஜூலை 2010 (UTC)
நற்கீரன், ஏறத்தாழ 3 மாத காலத்தில் 159 கட்டுரைகளே திருத்தி உள்ளார்கள். ஆனால், இதே 3 மாத காலத்தில் 480 கட்டுரைகளை உருவாக்குவதை இலக்காக கொண்டுள்ளார்கள். இதே விகிதத்தில் சென்றால் நாளடைவில் அது பெரும் விழுக்காடு திருத்தப்படாத கட்டுரைகளைக் குவித்து விடும். இருக்கிற கட்டுரைகளைத் திருத்தாமல் புதிய கட்டுரைகளை உருவாக்குவதில் விக்கியின் நலன் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. உங்கள் அணுமுறை மிகவும் கனிவாக இருந்தாலும் தமிழ் விக்கியின் தரத்தை விட்டுக் கொடுப்பதாகவே அமையும். ஒரு வேளை, 40% கட்டுரைகளையாவது திருத்தும் வரை புதிய கட்டுரைகளை ஏற்றக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்தால் உங்களுக்கு ஏற்பா?
மயூரேசன், கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக பல பொறுமையாக வழிமுறைகளைக் கையாண்ட பிறகே சற்று இறுக்கமான முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது. எந்தெந்த இடங்களில் எனது நிலைப்பாடு மோசமாக இருந்தது என்று குறிப்பிட்டால் திருத்திக் கொள்கிறேன். எனது நிலைப்பாடு எவ்வாறாக இருந்தாலும் இது வரை தமிழ் விக்கி சமூகம் ஒரு மனதாக எடுக்கும் முடிவுகளையே கூகுளிடம் தெரிவித்து வருகிறோம். சுவாகிலி விக்கியை விட தமிழ் விக்கியில் செயல்படும் கூகுளின் திட்டம் பெரியது. மாறுபட்டது. தொடர்ந்து வருகிறது. அங்கு ஒரு போட்டியை அறிவித்து சில பொதுமக்கள் கூகுள் கருவியைக் கொண்டு மொழிபெயர்த்தனர். ஆனால், இங்கு தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பணம் தந்து பெரும் எண்ணிக்கையில் கட்டுரைகளை உருவாக்குகின்றனர். எனவே, தீமையானாலும் நன்மையானாலும் அது சுவாகிலி விக்கியை விட பல மடங்காக அமையும். --ரவி 16:52, 25 ஜூலை 2010 (UTC)
- ரவி, எந்த எந்தக் கட்டுரைகள் மிக மோசமாக உள்ளன, எவை இடை நிலைப்பட்டவை, எவை நல்ல கட்டுரைகள் என்ற மதிப்பீட்டை நாம் செய்ய வேண்டும். அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் நாம் மிக மோசமான கட்டுரைகளைத் திருத்தக் கேக்கலாம், அல்லது நீக்கலாம். கூகிள் பயனர்களிடம் பங்களிப்புகளில் பல்வேறு தர நிலைகள் உள்ளன. எல்லோரையும் ஒரே நிலையில் மதிப்பிடுவது, சிறப்பாக பங்களிப்பவர்களுக்கு நியாயம் அற்றது. --Natkeeran 17:02, 25 ஜூலை 2010 (UTC)
நற்கீரன், கூகுளின் அனைத்துக் கட்டுரைகளிலும் எழுத்துப் பிழைகள், நிறுத்தற்குறிப் பிழைகள் போன்ற சில அடிப்படைப் பிரச்சினைகள் உள்ளன. எனவே, அனைத்துக் கட்டுரைகளும் திருத்தப்பட வேண்டியது முக்கியம். திருத்தப்படாத (அல்லது நீக்கப்படாத) வரை தேங்கிக் கிடக்கும் கட்டுரைகள் தமிழ் விக்கியின் தரத்தைக் குறைக்கின்றன என்பதே பிரச்சினை. கூகுள் பங்களிப்பாளர்கள் பல்வேறு தரநிலைகளில் உள்ளனர் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், கூகுளே கூட இப்படி தனிப்பங்களிப்பாளர் அளவிலோ தனியொரு மொழிபெயர்ப்பு நிறுவன அளவிலோ நமது பார்வைகளை முன்வைப்பதில் பெரிய ஈடுபாடு காட்டவில்லை. சில விசயங்களுக்குக் கூகுளின் தகவல் பாதுகாப்பு முறைமைகள் இடம் அளிக்காது என்கிறார்கள். பத்து கூகுள் பங்களிப்பாளர்களில் இருவர் மட்டும் நன்றாகப் பங்களிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த இருவரை மட்டும் தொடர அனுமதித்தாலும் எஞ்சிய எட்டு பேர் விட்டுச் சென்ற திருத்தப் பணிச்சுமையை அவர்களால் தாங்க இயலாது. அதே வேளை, மூன்று மாதத்துக்கு இத்தனை கட்டுரைகள் என்பது போன்று கூகுள் வைத்துள்ள இலக்குகளையும் அவர்களால் அடைய இயலாது. திரும்பவும் சோதனை முறையில் பல மொழிபெயர்ப்பாளர்களை ஈடுபடுத்துதல், அவர்களை நாம் தரம் பிரித்தல் என்று இன்னொரு சுழற்சி வர வேண்டும். ஏற்கனவே ஒரே பயனர் கணக்கில் இருந்து பலரின் மொழிபெயர்ப்புகளை ஏற்றி வந்தது போன்ற பிரச்சினைகள் இல்லாமலும் கவனிக்க வேண்டும்.
உங்கள் கருத்துகளை நான் புரிந்து கொண்ட வகையில் நான் பின்வரும் வழிமுறையை முன்வைக்கிறேன்:
1. இது வரை திருத்தியுள்ள 160+ கட்டுரைகளைத் தரம் பிரித்து மதிப்பிடுவோம்.
2. இதில் நல்ல தரத்தில் உள்ள கட்டுரைகளில் திருத்தங்களை மேற்கொண்டோரை மட்டும் தனியாக ஒரு பயனர் பகுப்பில் இடுவோம்.
3. 40% கட்டுரைகள் வரையாவது திருத்தங்களை முடித்த பிறகு, மேற்கண்ட பகுப்பில் உள்ள பயனர்கள் மட்டும் மீண்டும் புதிய கட்டுரைகளைப் பதிவேற்றத் தொடங்கலாம். அதற்குப் பிறகும் அவர்கள் தொடர்ந்தும் திருத்தங்களில் ஈடுபட வேண்டும்.
இந்த வழிமுறை உங்களுக்கு ஏற்புடையதா? ஏற்பில்லை எனில் செயற்படுத்தத்தக்க ஒரு மாற்று வழிமுறையை முன்வைத்தீர்கள் எனில் தொடர்ந்து உரையாடி முடிவெடுக்க உதவும். நன்றி--ரவி 18:45, 25 ஜூலை 2010 (UTC)
- ரவி, கூகிள் உள்ளிட்ட மொத்த கட்டுரைகளையும் ஒரு மேலோட்டமான மதிப்பீட்டை முன்வைப்பது எமது கடமை. இதை நாம் விரைவாகச் செய்யலாம். 500 கட்டுரைகள் என்றால் 10 ஆகப் பிரித்து, ஒவ்வொருவரும் 50 கட்டுரைகள் எடுத்தால், ஒரு இரு கிழமைகளுக்குள் செய்யலாம். நாம் துல்லியமான தரவுகளுடன் கூகிளை அணுகுவது எமக்குப் பலம் சேர்க்கும். எல்லாம் சரியில்லை என்று கூறுவது பொறுப்பற்றதாக தெரிகிறது. --Natkeeran 19:04, 25 ஜூலை 2010 (UTC)
நற்கீரன், திருத்தப்பட்டுள்ள 160+ கட்டுரைகளே கூகுள் கட்டுரைகளில் ஆகச் சிறந்தவையாக இருக்க வாய்ப்புண்டு. எனவே, இவற்றை மட்டும் மதிப்பிடுவது நமக்கு வேலைப்பளுவைக் குறைக்கும். அதே வேளை, இத்திட்டத்தின் ஆகக் கூடிய பயனையும் அளப்பதாக இருக்கும். கூகுளின் 1000+ கட்டுரைகளையும் மதிப்பிடுவது என்றால், அது கூகுளுக்கு இன்னும் பாதகமான முடிவுகளையே தரும். வழமையான விக்கி மதிப்பீட்டுப் பணி என்றால் 1000+ கட்டுரைகளையும் மதிப்பிட வேண்டும். ஒரு செயற்பாட்டு முடிவுக்காக என்பதால், random sampling முறையில் முடிவுகளைப் பெறுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறையே.--ரவி 19:21, 25 ஜூலை 2010 (UTC)
- குறிப்பிட்ட விழுக்காட்டுக் கட்டுரைகள் (20-40%) படு மோசமாக இருக்கின்றது என்பது உண்மையே. எனினும் அதை விட கூடிய விழுக்காட்டின் தரம் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய தரமாக உள்ளன. ஆங்கில விக்கியிலேயே சில ஆழமான கட்டுரைகள் மிக மோசமாக எழுதப்பட்டுள்ளன. அப்படியே இங்கு மொழி பெயர்ப்பதால், அதன் தரக் குறைவும் இங்கு பிரதிபலிக்கிறது. எனவே அதை கூகிளின் குறையாக முற்றிம் கூற முடியாது. அவர்களை Featured Ariticles கூட மொழிபெயர்க்க பரிந்துரைக்கலாம். முதலில் நாம் 160+ திரத்தப்பட்டவற்றையும் அதே அளவு திருத்தப்பட்டாத கட்டுரைகளையும் மதிப்பீடு செய்யலாம். --Natkeeran 19:50, 25 ஜூலை 2010 (UTC)
சரி, நற்கீரன். உங்கள் பரிந்துரையைக் கருத்தில் கொண்டு மதிப்பீட்டுக்கான முன்மொழிவை இட்டுள்ளேன். தேவைப்படும் மாற்றங்களைத் தெரிவித்தால் மதிப்பீட்டுப் பணியை உடன் துவங்கலாம்--ரவி 13:58, 28 ஜூலை 2010 (UTC)
செப்டம்பர் 24, 2010 சந்திப்பு
தொகுசெப்டம்பர் 24, 2010 அன்று கூகுள் செயலதிகாரிகளுடன் பெங்களூரில் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. கலந்து கொண்டவர்கள்: இரவி மற்றும் அராபத். சோடாபாட்டில் தொலைபேசி மூலம் கலந்து கொண்டார்.
சந்திப்பின் விளைவுகள்
தொகுஇந்த சந்திப்பில் இரவியும், அராபத்தும், நேரடியாகக் கலந்து கொண்டனர். சோடாபாட்டில் தொலைபேசி மூலம் கலந்து கொண்டார். விக்கி சமூகத்தின் முடிவுகளையும் எண்ணங்களையும் தெளிவாக கூகுள் செயலதிகாரிகளுடம் சொல்லி விட்டோம். நாம் அவர்களுக்கு கொடுத்த தெரிவுகளில் Plan Aக்கு உட்பட்டு திட்டத்தைத் தொடர ஒப்புக்கொண்டுள்ளனர். சந்திப்பில் எடுத்த முடிவுகள் பின்வருமாறு
திட்டம் இரு வழிகளில் தொடரும்
1)முதல் வழி:
- அடுத்த கட்டத்தில் 25 புதிய கட்டுரைகள் மட்டுமே உருவாக்கப்படும்.
- அவை குறிப்பிட்ட மொழிபெயர்ப்பாளர்களின் பயனர் வெளியில் மட்டுமே பதிவேற்றப்படும்.
- நாமதை மதிப்பீடு செய்து நமக்கு ஏற்புடையதாக இருந்தால் பொதுவெளிக்கு அவை நகர்த்தப்படும். கட்டுரை இன்னும் மேம்படுத்தப் பட வேண்டும் என நாம் விரும்பினால், மறுபடியும் அது கூகுளால் மேம்படுத்தப்படும். குறைந்த பட்சம் 80% தரத்தை எட்டும் வரை.
- கட்டுரைத் தலைப்புகள் நாமே தெரிவு செய்து கொடுக்கலாம்(கூகுளும் இந்தியாவிலிருந்து அதிகம் தேடப்பபடும் சொற்களை உடைய ஒரு பட்டியலை நமக்கு அளிக்கும். அதிலிருந்தும் நாம் தேர்வு செய்யலாம், அல்லது நாமாக வேறு தலைப்புகளைச் சேர்க்கலாம். ஆங்கில விக்கியிலுள்ள் த.விக்கிக்கு பொருத்தமான FA/GA கட்டுரைகளைத் தேர்வு செய்து தருவதாகக் கூறியிருக்கிறோம்)
2)இரண்டாம் வழி:
- இது ஏற்கனவே உருவாக்கப்பட்ட 1000+ கட்டுரைகளின் திருத்தம் பற்றியது.
- முதல் கட்டமாக ஐந்து மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு ஆளுக்கு ஐந்து கட்டுரைகளை திருத்தச் சொல்வதாக கூகுள் ஒப்புக்கொண்டுள்ளது. *நாம் மேலே மதிப்பீடு செய்த கட்டுரைகளில் மிகக் குறைந்த மதிப்பெண் வாங்கிய 25 கட்டுரைகளை முதல் கட்டமாக திருத்த சொல்லியிருக்கிறோம்.
- இத்திருத்தங்களைக் கண்காணித்து, மொழிபெயர்ப்பாளர்களை வழிநடத்துவது விக்கி சமூகத்தின் பொறுப்பு.
மேற்சொன்ன இரண்டிற்கும் இப்போதுள்ள மொழிபெயர்ப்பாளர்களுள் சிறந்தவர்கள் என்று நாம் அடையாளம் காட்டுபவர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவர். அடுத்த இரு வாரங்களுள் நமக்கு ஏற்புடைய மொழிபெயர்ப்பாளர்கள் பட்டியலை நாம் கூகுளுக்கு அளிக்க வேண்டும்.
மேற்சொன்ன இரு வழிகளிலும், விக்கி சமூகம் திருப்தி அடைந்தால் திட்டம் விரிவுபடுத்தப்படும். எப்போது, எத்தனை போன்ற கேள்விகளுக்கு அடுத்த கட்ட மதிப்பீட்டின் இறுதியில் முடிவெடுக்கப்படும்.
நாம் உடனே செய்ய வேண்டியது:
1) சிறந்த மொழிபெயர்ப்பாளர்களை இனங்காணுவது
2) 25 புதிய கட்டுரைகளுக்கான தலைப்புப் பட்டியலை தயார் செய்ய வேண்டியது.
--சோடாபாட்டில் 11:56, 24 செப்டெம்பர் 2010 (UTC)
--அராபத்* عرفات 08:09, 25 செப்டெம்பர் 2010 (UTC)
பி.கு: இரவி, அராபத் - மேற்சொன்னதில் பிழைகள்/மாற்றங்கள் இருப்பின் மாற்றி விடுங்கள்--சோடாபாட்டில் 11:56, 24 செப்டெம்பர் 2010 (UTC)
சிறிது மாற்றியுள்ளேன்--அராபத்* عرفات 08:09, 25 செப்டெம்பர் 2010 (UTC)
சிறந்த மொழிபெயர்ப்பாளர்களை இனங்காணல்
தொகுபுதிய கட்டுரைகளை உருவாக்க, ஏற்கனவே உள்ள கட்டுரைகளைத் திருத்த சிறந்த மொழிபெயர்ப்பாளர்களை இனங்காண வேண்டியுள்ளது. சோடாபாட்டிலின் குறிப்பில் 5 மொழிபெயர்ப்பாளர்கள் எனக் கூறி இருந்தார். எனினும், இது எடுத்துக்காட்டுக்காக சுட்டப்பட்ட ஒரு எண்ணிக்கையே. கூடுதல் எண்ணிக்கையில் நல்ல மொழிபெயர்ப்பாளர்களை இனங்காண முடிந்தால் தாராளமாகச் செய்யலாம். மொழிபெயர்ப்பாளர்களின் வேலை வாய்ப்பையும் பாதிக்கக்கூடிய முடிவு என்பதால் இயன்றவரை புறவயமாகச் செய்ய வேண்டும். அதே வேளை 2 வார காலத்துக்குள் இந்த முடிவை எடுக்க வேண்டும். இதற்கு என்ன வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்று அறிய விரும்புகிறேன்--இரவி 08:34, 28 செப்டெம்பர் 2010 (UTC)
- மதிப்பீட்டில் நலல் மதிப்பெண்கள் வாங்கிய கட்டுரைகளை எழுதியவர்களிலிருந்து தொடங்கலாம்--சோடாபாட்டில் 08:37, 28 செப்டெம்பர் 2010 (UTC)
சோடாபாட்டில், கிட்டத்தட்ட 30+ கட்டுரையாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரது கட்டுரைகளும் மேற்கண்ட தர மதிப்பீட்டில் சரி விகிதத்தில் வந்திருக்க வாய்ப்பில்லை. இது மொழிபெயர்ப்பாளர்களின் பணி தொடர்பான மதிப்பீடு என்பதால் எழுந்தமானமாக சிலரை மட்டும் மதிப்பிட முடியாது. ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரின் ஒரு சில கட்டுரைகளையாவது மதிப்பிட வேண்டும். எனக்குத் தோன்றும் வழிமுறை:
- தொடக்கத்தில் பணியில் இருந்த சில மொழிபெயர்ப்பாளர்கள் இப்போது இல்லாமல் இருக்கலாம்.
- ஒரே மொழிபெயர்ப்பாளரே ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளில் செயல்பட்டுள்ளார்கள்.
எனவே, எந்தெந்த மொழிபெயர்ப்பாளர்களை மதிப்பிட வேண்டும் என்ற பட்டியலை மொழிபெயர்ப்பு நிறுவனங்களே அளிப்பது நன்று. அவர்களே ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளருக்கும் அவரது ஆகச் சிறந்த கட்டுரை என்று ஒன்றைப் பரிந்துரைக்கலாம். மேலும் 2 கட்டுரைகளை நாம் எழுந்தமானமாக தேர்ந்தெடுத்து ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு குறைந்தது 3 கட்டுரைகளையாவது மதிப்பிட வேண்டும்.
இந்த மூன்று கட்டுரைகளையும் இரண்டு நடுவர்கள் மதிப்பிடலாம். நன்று / வேண்டாம் என்ற இரண்டு மதிப்பீடுகள் மட்டும் போதும்., 1 / 0 போல். மூன்று கட்டுரைகள் x 2 நடுவர்கள் மதிப்பீட்டில் குறைந்தது 4 அல்லது 5 நன்றுகள் பெறுவோரை மட்டும் தொடரச் சொல்லலாம்.
இதன்மூலம் இயன்றளவு புறவயமாக கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பதையும், மதிப்பிடுவதையும் உறுதி செய்ய முடியும்.
2 வாரத்துக்குள் பணி முடிக்க வேண்டியமை, போதிய தன்னார்வலர்கள் / நடுவர்கள் இல்லாவிட்டால், ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு ஒரு நடுவர் மட்டும் மதிப்பிடுவதையும் எண்ணிப் பார்க்கலாம்.
பி.கு: எழுதியது ஒருவர், திருத்தியவர் ஒருவர் என்றால் அதற்கான மதிப்பு யாருக்குச் செல்ல வேண்டும்? முதலில் எழுதியவர்களை விட குறைவான மொழிபெயர்ப்பாளர்களே திருத்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். --இரவி 10:59, 29 செப்டெம்பர் 2010 (UTC)
- நிறுவன வளம் திட்டமிடல் - நல்ல கட்டுரை - சில ஆங்கில குறுக்கங்களின் பயன்படுத்தலை தவிரித்து --Natkeeran 03:16, 30 செப்டெம்பர் 2010 (UTC)
- பூமி - நல்ல கட்டுரை - புரியும்படியாக இருக்கிறது (டூல்கிட் கொடுக்கும் ஜுனூன் தமிழை பெரும்பாலும் மாற்றி எழுதியுள்ளார்)--சோடாபாட்டில் 05:49, 30 செப்டெம்பர் 2010 (UTC)
கட்டுரைகளில் தரம் விரும்பத்தக்க அளவில் இல்லாததற்கு 1) மொழிபெயர்ப்பாளர்களின் திறனின்மை, 2) இலக்கை முடிக்க வேண்டிய பணிச்சுமை அழுத்தம், 3) விக்கிப்பீடியாவின் நடை மற்றும் தர நிலையைப் பற்றிய விழிப்புணர்வு இன்மை ஆகிய இவையே காரணம் எனக் கருதுகிறேன்.
மேலும் 8 மாத காலத்தில் மொழிபெயர்ப்பு செய்த கட்டுரைகளை 3 அல்லது 4 மாத காலத்தில் (மீண்டும் அதே இலக்குப் பணிச்சுமையுடன்) திருத்த முயற்சித்ததால் அதுவும் திருப்திகரமான விளைவுகளைக் கொடுக்காமல் போயிருக்கலாம்.
எனது கருத்து என்னவெனில், இத்தனை சிக்கல்களுக்கு இடையில் செய்த பழைய கட்டுரைகளைக் கொண்டு சிறந்த மொழிபெயர்ப்பாளர்களை அடையாளம் காண்பதை விட, புதிய கட்டுரைகளைச் செய்ய வைத்து அவற்றின் தரத்தை வைத்து புதிய சிறந்த மொழிபெயர்ப்பாளர்களை இனங்காணலாம் என்பது.
தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற அக்கறையில் ஆரம்பத்தில் சரியாகச் செய்துவிட்டு மீண்டும் போகப் போக தரம் குறையலாம் என்பது இதில் உள்ள சிக்கலாகக் கருதப்படலாம், இருப்பினும் இனி மொழிபெயர்ப்பு செய்யப்படும் கட்டுரைகளை மொழிபெயர்ப்பாளர்கள் மிகுந்த சிரத்தையுடன் செய்வார்கள், அவர்களும் கண்டிப்பான மறுஆய்வு முறைகளை நடைமுறைப்படுத்துவார்கள், அதுமட்டுமின்றி கண்டிப்பான தரக் கட்டுப்பாட்டு முறைகளைக் கொண்டு அவை விக்கி சமூகத்தாராலும் கண்காணிக்கப்படும், ஆகவே தரம் பற்றிய சிக்கல்கள் இவ்வழியில் ஏற்படாது என நம்பலாம்.
மேலும் தரப்பிரச்சனைகளுக்கு இலக்குப் பணிச்சுமை ஒரு முக்கியமான காரணம் என்பதால், இனி குறைவான அளவிலேயே கட்டுரைகள் மொழிபெயர்க்கப்படும் சூழல் நிலவுவதால், மொழிபெயர்ப்புக்கும் மறுஆய்வு மற்றும் திருத்தத்திற்கும் அதிக நேரம் கிடைக்கும் என்பதால் இதனாலும் தரம் மேலும் மேம்படும்.
சுருக்கமாக இப்போது மொழிபெயர்ப்பாளர்களின் தரம் என்ன என்பதை இப்போது அவர்கள் செய்யும் கட்டுரைகளைக் கொண்டே மதிப்பிட வேண்டும் என்பதே எனது கருத்து. தொடர்ந்து அதே சிறந்த தரத்தை நிலைத்திருக்கச் செய்வது அவர்கள் பொறுப்பு, மேலும் கட்டுரைகள் குறைவாகவே உருவாக்கப்படும் என்பதால் அக்கறையுள்ள விக்கி சமூகத்தாரும் அவ்வப்போது தோராய அடிப்படையில் கட்டுரைகளை மதிப்பீடு செய்து பரிந்துரைகளை வழங்கலாம். இதனால் தொடர்ந்து தரமிக்க கட்டுரைகள் தமிழ் விக்கிக்குக் கிடைக்கும் நல்ல வாய்ப்புள்ளது.
அதற்கு மொழிபெயர்ப்பாளர்களே முதல் பொறுப்பானவர்கள். அவர்கள் தங்கள் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும், மேலும் பல மறுஆய்வு சுற்றுகளுக்குப் பின்னரே விக்கியில் கட்டுரைகள் பதிவேற்றப்பட வேண்டும். விக்கி சமூகத்தார் அதற்குப் பின்னான தர மதிப்பீடுகளையும் தோராய முறையில் அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும்.
மூத்த விக்கியர்களின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் எதிர்பார்க்கிறேன்.
நன்றி! அன்புடன் --சாந்த குமார் 09:30, 30 செப்டெம்பர் 2010 (UTC)
சாந்த குமார், மொழிபெயர்ப்பாளர்களுக்கு இருந்த நெருக்கடி புரிகிறது. இருந்தாலும், இனி வரும் கட்டுரைகளைக் கொண்டு அல்லது இதற்கு ஒரு நுழைவுத் தேர்வு போல் வைத்து தேர்வு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. விக்கி வழமைகளில் கூட ஏற்கனவே உள்ள செயல்பாடுகளை வைத்துத் தான் நடவடிக்கை எடுக்க இயலும். ஏற்கனவே உள்ள கட்டுரைகளைக் கொண்டு எப்படி சிறப்பாக மதிப்பிடலாம் என்பது குறித்த உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன்--இரவி 11:08, 1 அக்டோபர் 2010 (UTC)
- இரவி, உங்கள் கருத்தில் இருந்து மாறுபடுவதற்கு வருந்துகிறேன். சாந்த குமார் கூறியது எனக்கு ஏற்புடையது. அவர் கூறியது நேர்மையானதாக, அறமானதாகவே நான் உணர்கிறேன். அவர் கூறியுள்ளதில் உள்ள உண்மையைக் காண வேண்டுகிறேன். வேண்டுமென்றால் இரண்டுக்கும் நடுப்பட்ட நிலையாக பழைய கட்டுரைகள் சிலவற்றையும் புதிய கட்டுரைகள் சிலவற்றையும் மதிப்பிடலாம். ஏன் புதிய கட்டுரைகளை மதிப்பிடல் கூடாது என்று எனக்கு விளங்கவில்லை. நம் தரக் கட்டுப்பாடு பற்றி அவர்கள் நன்கு உணராமல் இருந்திருக்கலாம்தானே. அருள்கூர்ந்து இவற்றை நேர்பட எண்ணிப்பாருங்கள். சாந்த குமார் கூறியதில் நேர்மை-அறன்மை இருப்பதாகவே நான் கருதுகின்றேன். --செல்வா 13:21, 1 அக்டோபர் 2010 (UTC)
- செல்வா, புதிய கட்டுரைகளை வைத்து மதிப்பிடுவதை விட பேசாமல் எல்லாரையும் தொடர்ந்து மொழிபெயர்க்கச் சொல்லி விடலாம். நமக்கு வேலையாவது மிஞ்சும். ஒரு நெருக்கடி நிலையில் வைக்கப்படும் தேர்வில் எல்லாரும் இலகுவாக தடை தாண்டி விடுவார்கள் என்பதே என் புரிதல். உண்மையிலேயே விக்கி கட்டுரைகள் தரமாக இருக்க வேண்டும், தங்கள் தொழிற் பணி சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்போது கூட பழைய கட்டுரைகளைத் திருத்துவதில் ஈடுபாடு காட்டலாமே? தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் மேல் தவறில்லை. ஆனால், இத்திட்டம் தொடர்ந்தாலன்றி கூகுளோ மொழிபெயர்ப்பு நிறுவனங்களோ இருக்கிற கட்டுரைகளைத் திருத்துவதில் எந்த வித ஆர்வமும் காட்டாது என்பது தெளிவு. விக்கிப்பீடியாவின் நடை பற்றிய புரிதல் இன்மை போன்ற காரணங்களை ஏற்க முடியாது. விக்கி வழிமுறைகளை விட்டடாலும் கூட, பொதுவாக எந்த ஒரு ஊடகத்திலுமே அச்சிட முடியாத அளவுக்குப் பல கட்டுரைகள் குறைந்த தரத்தில் உள்ளன. பணிச்சுமை அதிகம் என்றால், கூடுதல் பணியாளர்களை அமர்த்தி இருக்க வேண்டும். அல்லது, எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு பணியை மட்டும் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இதுவே நேர்மையும் அறமும் உள்ள ஒரு தொழில் நிறுவனத்துக்கு அழகாக இருக்கும். இப்போது ஒரு பிரச்சினை என்று வரும்போது மட்டுமே பதறுகிறார்கள். தாங்கள் வெளியே இருந்து பார்ப்பதால் மிகவும் நன்னம்பிக்கை வைக்கிறீர்கள். நேரடியாக கூகுளுடன் பேச்சுவார்த்தையில் உள்ளவர்களுக்கே எந்த அளவு மண்டை காய்ச்சல் என்று தெரியும் :) --இரவி 14:06, 1 அக்டோபர் 2010 (UTC)
- சாந்த குமார், புதிதாக எழுத விட்டு மீண்டும் அதை தரமறிய காலம் கடந்து விட்டது. நீங்கள் கூறிய பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டே இப்போது உங்கள் பங்களிப்புகளை மதிப்பிடப் போகிறோம். பணிச்சுமை, விக்கி முறைகளை அறியாமை - இதையும் தாண்டி ஒரு மொழிப்பெயர்ப்பாளரின் தகுதியை மதிப்பிட எளிதாக முடியும். மீண்டும் நீங்கள் பலதை எழுதி, அதை நாங்கள் படித்து பார்த்து, உங்கள் நிறுவனங்களும் கூகுளும் எங்கள் விமர்சனங்களை ஏற்று. இதெல்லாம் ந்டைமுறைக்கு ஒத்து வரும் என்று எனக்கு நம்பிக்கையில்லை. இதுவரை உள்ளதை வைத்து எடை போட முடியுமென நான் உறுதியாக நம்புகிறேன். டூல் கிட்டின் ஜுனூன் தமிழையும், விக்கி நிரலாக்கத்தையும் தவிர்த்து எளிதாக ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு தான் எழுதுவது புரிந்துள்ளதா என்று என்னால் எளிதாக் தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே புதிது தேவையில்லை பழையதே போதும்--சோடாபாட்டில் 14:53, 1 அக்டோபர் 2010 (UTC)
கருத்துகளுக்கு அனைவருக்கும் நன்றி. எது சிறந்ததோ அதைச் செய்யலாம்..!
அன்புடன் --சாந்த குமார் 05:14, 6 அக்டோபர் 2010 (UTC)
மொழிபெயர்ப்பாளர் மதிப்பீட்டுப் பணிக்கு நடுவர்கள் தேவை
தொகு15+ மொழிபெயர்ப்பாளர்களின் 50+ கட்டுரைகளை மதிப்பிட தன்னார்வலர்கள் தேவை. ஒவ்வொரு கட்டுரையையும் இருவர் மதிப்பிடுவர் என்பதால் 100+ கட்டுரைகள் என கணக்கில் கொள்ளலாம்.
ஒருவரின் மதிப்பீடே சாய்வான தாக்கத்தை ஏற்படுத்தி விடாமல் இருக்க நிறைய தன்னார்வலர்கள் ஈடுபடுவது நன்று. ஒருவர் 6 கட்டுரைகளை ஒரு வார காலத்துக்குள் திருத்த முடியுமானால் நன்று.--இரவி 13:42, 7 அக்டோபர் 2010 (UTC)
- --குறும்பன் 14:41, 7 அக்டோபர் 2010 (UTC)
- மதிப்பீட்டுப் பணி ஏற்க முன்வருகிறேன்.--பவுல்-Paul 15:08, 7 அக்டோபர் 2010 (UTC)
- நானும் ஈடுபட விரும்புகிறேன்.--அராபத்* عرفات 15:38, 7 அக்டோபர் 2010 (UTC)
- +1 --சோடாபாட்டில் 16:08, 7 அக்டோபர் 2010 (UTC)
- ஆறு கட்டுரைகள் என்றால் இயலும். சுந்தர் \பேச்சு 05:23, 12 அக்டோபர் 2010 (UTC)
மதிப்பீட்டுப் பணி முடிவுகள்
தொகுமதிப்பீட்டுப் பணி முடிவுகளை இங்கு காணலாம்.
மதிப்பீட்டு வழிமுறைகளை உரையாடி இப்பணியில் ஈடுபட்டோர்: குறும்பன், அராப்பத், சுந்தர், இரவி, பவுல், சோடா பாட்டில்
குறிப்புகள்:
- ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரின் மூன்று கட்டுரைகளை மூன்று வெவ்வேறு நடுவர்கள் மதிப்பிட்டனர். இதில் ஒரு கட்டுரை மொழிபெயர்ப்பாளரே தன்னுடைய சிறந்த கட்டுரை என்று பரிந்துரைத்தது. மற்ற இரு கட்டுரைகள் எழுந்தமானமாக நாம் தேர்ந்து எடுத்தவை.
- குறிப்பிட்ட கட்டுரையை எழுதியவர் தொடரலாமா வேண்டாமா என்பதற்கு ஆம் / இல்லை என்ற பதில் பெறப்பட்டது. ஆம் = 1 மதிப்பெண். இல்லை = 0 மதிப்பெண். மூன்றில் இரண்டு மதிப்பெண்ணாவது பெற்றவர் தொடரலாம். மதிப்பெண்களோடு கருத்துகளும் பகிரப்பட்டன. அவற்றைப் பிறகு நேரம் கிடைக்கும் போது பதிவேற்றுகிறேன்.
- மொத்தம் 11 மொழிபெயர்ப்பாளர்கள் மதிப்பிடப்பட்டுள்ளனர். போதிய தரவுகள் கிடைக்காததால் 4 மொழிபெயர்ப்பாளர்களை மதிப்பிட முடியவில்லை.
- கடந்த சூலை மாதம் வரைக்கும் கூட எழுதியது ஒருவர், கூட்டாகப் பதிவேற்றியது இன்னொரு பெயரில் என்று மாற்றி மாற்றிச் செயல்பட்டிருக்கிறார்கள். எனவே, அவர்களையே நீங்கள் எழுதிய கட்டுரைகள் பட்டியலைத் தாருங்கள் என்று கேட்டு மதிப்பிட்டிருக்கிறோம். ஏனெனில், விக்கியில் உள்ள பெயர்கள் அடிப்படையிலேயே செயல்பட்டால் நன்றாக எழுதியவர்கள் நீக்கப்படலாம். மோசமாக எழுதியவர்கள் தெரிவாகலாம். இதன் காரணமாக, மதிப்பீட்டில் உள்ள பெயரும் கட்டுரை வரலாற்றில் உள்ள பெயரும் வேறு வேறாக இருக்கலாம்.
- மொழிபெயர்ப்பாளர்கள் தாங்களே பரிந்துரைத்த பல கட்டுரைகள் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. ஆனால், அவர்களின் அனைத்துக் கட்டுரைகளிலும் இத்தரம் வெளிப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்று அவர்களே விளக்கினால் நன்றாக இருக்கும். எனக்குத் தோன்றுவன: 1. தாங்கள் பரிந்துரைத்த கட்டுரை அளவுக்கு மற்ற கட்டுரைகளின் துறையில் புலமையின்மை 2. பணி நெருக்கடி 3. அசட்டை.
- திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட பல கட்டுரைகள் உண்மையில் திருத்தப்பட வில்லை. சிகப்பு இணைப்பு நீக்கம், சில சிறிய தொகுப்புகள் மட்டுமே செய்துள்ளனர். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மொழிபெயர்ப்பாளர்களே கட்டுரைத் திருத்தங்களையும் மேற்கொள்வார்கள் என்பதே கூகுளோடு கொண்ட புரிதல். குறைந்த எண்ணிக்கையிலேயே இவர்கள் உள்ளதாலும், ஏற்கனவே திருத்தங்களில் போதுமான முன்னேற்றம் காணாததாலும் திருத்தப் பணிக்கு கூகுளையே நம்பிக் கொண்டிராமல் நாமே முடிவெடுத்துச் செயற்படுத்த வேண்டும். புதிய கட்டுரைகள் உருவாக்கம் நிறுத்தப்பட்ட இடைப்பட்ட காலத்தில் பெரிய அளவில் திருத்தப்பணிகள் நடந்ததாகத் தெரியவில்லை. இத்திட்டமும் அதன் மூலமான போதுமான பண வரத்தும் இல்லாமல் வணிக அடிப்படை மொழிபெயர்ப்பு நிறுவனங்கள் இதில் ஈடுபடா என்றே எதிர்பார்க்கிறேன்.
- கூகுள் திட்டம் குறித்த நடுநிலையான கருத்துகள் கூறும் பலரும் இத்திட்டத்தின் வேலைப்பளுவில் உதவுவதில்லை :) தவறில்லை. ஏனெனில், நானும் பல திட்டங்களில் கருத்து கூறி விட்டு ஒன்றும் செய்ய இயலாமல் இருந்திருக்கிறேன். ஆனால், நமக்கு இருக்கும் ஆள் வளத்தைப் பொருத்தும் நமக்கான திட்டங்களைத் தொடர வேண்டும்.
- இந்த மதிப்பீட்டுத் தாள் பற்றிய அனைவரின் கருத்தையும் அறிந்த பிறகு, வரும் திங்களன்று கூகுளுக்கு முடிவுகளை அனுப்பி வைக்கலாம். கூடவே, புதிதாக மொழிபெயர்க்க வேண்டிய 25 கட்டுரைகளையும் அனுப்பி வைக்கலாம்.--இரவி 20:18, 28 அக்டோபர் 2010 (UTC)
தேவைப்படும் தலைப்புகள்
தொகுஆங்கில விக்கி சிறப்புக் கட்டுரைகளில் இருந்து பெரும்பான்மை தமிழருக்குப் பயனுள்ளதாக அமையக்கூடிய 25 தலைப்புகளை யாராவது தெரிவு செய்து தந்தால், முதற்கட்டமாக அவற்றை மொழிபெயர்த்துத் தருமாறு கூகுகளைக் கேட்டுக் கொள்ளலாம். --இரவி 08:39, 28 செப்டெம்பர் 2010 (UTC)
- டூல்செர்வரில் விக்கித்திட்ட வாரியாக பிரித்தெடுக்கும் வழியும் உள்ளது. இதையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்--சோடாபாட்டில் 08:59, 28 செப்டெம்பர் 2010 (UTC)
என் (செல்வா) பரிந்துரைகள்:
- en:Saffron (குங்குமப்பூச் செடி)
- en:History of timekeeping devices (காலங்காட்டிகளின் வரலாறு)
- en:Shielded metal arc welding (காப்புடைய மின் பற்றுவைப்பு)
- en:Water fluoridation (நீரில் ஃவுளூரைடு சேர்ப்பு/கரைப்பு)
- en:Bengali Language Movement (கட்டுரை உள்ளது ஆனால் விரிவாக்கலாம்: பார்கக் வங்காள மொழி இயக்கம்)
- en:History of the Yosemite area (கலிபோர்னியா யோசெமிட்டி வரலாறு)
- en:Malcolm X (கட்டுரை உள்ளது விரிவாக்கலாம்)
--செல்வா 03:43, 30 செப்டெம்பர் 2010 (UTC)
சோடாபாட்டில் பரிந்துரைகள்:
- en:Lothal (லோத்தல்)
- en:Vijayanagara Empire (விஜயநகரப் பேரரசு --- உள்ளது ஆனால் விரிவாக்கலாம் )
- en:Iravan (அரவான்)
- en:Lion (சிங்கம் --- உள்ளது ஆனால் விரிவாக்கலாம்)
- en:Ganesha (பிள்ளையார் --- உள்ளது ஆனால் விரிவாக்கலாம்)
- en:Cricket World Cup (துடுப்பாட்ட உலக்கிண்ணம் --- உள்ளது ஆனால் விரிவாக்கலாம்)
- en:Political integration of India (இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு)
- en:Execution by elephant (யானைக் காலால் இடறி மரணதண்டனை)
- en:Big Bang (பெரு வெடிப்புக் கோட்பாடு --- உள்ளது ஆனால் விரிவாக்கலாம்)
- en:Atom (அணு --- உள்ளது ஆனால் விரிவாக்கலாம்)
--சோடாபாட்டில் 05:43, 30 செப்டெம்பர் 2010 (UTC)
- --- அப்புறம் உள்ளது நான் எழுதியது. --குறும்பன் 22:13, 30 செப்டெம்பர் 2010 (UTC)
அராபத் பரிந்துரைகள்:
- en:International Phonetic Alphabet - (கட்டுரை உள்ளது ஆனால் விரிவாக்கலாம்)
- en:Marwari horse
- en:Iridium - (கட்டுரை உள்ளது ஆனால் விரிவாக்கலாம்)
- en:Space Shuttle Challenger disaster
- en:Death Valley National Park
- en:Kaziranga National Park
- en:Eye (cyclone)
- en:Tourette syndrome
- en:Knights Templar
- en:Cynicism
- en:On the Origin of Species
--அராபத்* عرفات 19:46, 30 செப்டெம்பர் 2010 (UTC)
இரவியின் பரிந்துரைகள்
- en:Autism - மதியிறுக்கம் கட்டுரையை விரிவாக்கலாம்.
- en:Lung cancer - நுரையீரல் புற்றுநோய்
- en:Fairy tale - மாயக் கதைகள்?
- en:Emu - ஈமு
- en:Hippocrates - ஹிப்போகிரட்டீஸ் கட்டுரையை விரிவாக்கலாம்.
கூகுள் கட்டுரைகளை/மொழிபெயர்ப்பாளர்களை மதிப்பீடு செய்தல்
தொகுரவி, மின்னஞ்சல் வழி நீங்கள் அனுப்பிய பதில் கிடைக்கப்பெற்றேன். நன்றி. நீங்கள் கூறியதுபோல, உரையாடலை இப்பக்கத்தில் தொடர்கிறேன்.
மடோனா (பொழுதுபோக்கு கலைஞர்) கட்டுரையை வாசித்தேன். பொதுவாக, மொழிபெயர்ப்பு நல்ல முறையில் அமைந்துள்ளது. மொழிபெயர்ப்பாளர் தம் பணியைத் தொடர்ந்து செய்வது பயனுள்ளதாய் இருக்கும்.
அதே நேரத்தில், பல ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்ப்பாளர் அப்படியே தமிழ் எழுத்தில் தந்துள்ளார். சில எடுத்துக்காட்டுகள்: ஆல்பம், சிங்கிள்ஸ், த்ரில்லர், காமெடி, சார்ட் (chart), கார்ட்வீல்ஸ் (cartwheels), ஹேண்ட்ஸ்டாண்ட்ஸ் (handstands), மங்கி பார்ஸ் (monkey bars), ஸ்கர்டை டக் செய்வது (ஆங்கிலத்தில் சிறிது மாறுபட்டுள்ளது), நேரடி A - மாணவி, நடன ஸ்காலர்ஷிப், வெய்ட்ரஸ் (waitress), டாக்ஸி, டேடிங் (dating), போஸ் (pose), ரீமிக்ஸ் (remix), மடோனாவின் 15-foot (4 m)சிலை.
மேலே காட்டியது போன்ற பலவற்றைத் தமிழில் கூறும் முயற்சி கட்டுரையில் தெரியவில்லை.
எனவே, தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தும்படி மொழிபெயர்ப்பாளரைக் கேட்பது தேவை. --பவுல்-Paul 14:18, 18 அக்டோபர் 2010 (UTC)
புதிய கட்டுரைகள்
தொகுநாம் கொடுத்த பின்வரும் 25 கட்டுரைகள் மொழிமாற்றம் செய்யத் தொடங்கி விட்டார்கள். பொதுவெளியில் உருவாக்கினால் அதனை பயனர்வெளியில் நகர்த்தியுள்ளேன். இவற்றைப் பற்றிய கருத்துகளை அக்கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்களில் தாருங்கள்.--சோடாபாட்டில் 07:40, 17 நவம்பர் 2010 (UTC)
- Saffron -
பயனர்:Rexani/குங்குமப்பூச் செடி- reviewed and corrected - History of timekeeping devices - பயனர்:Rexani/காலங்காட்டிகளின் வரலாறு
- Water fluoridation -பயனர்:Thangata/நீரில் ஃவுளூரைடு சேர்ப்பு/கரைப்பு
- Political integration of India - பயனர்:Rameshta/இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு
- Iravan - பயனர்:Thangata/அரவான்
- Lung cancer - பயனர்:Rameshta/நுரையீரல் புற்றுநோய்
- Fairy tale - விசித்திரக் கதைகள் (ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்டது; இச்சுற்றில் திருத்தம் மட்டும் செய்யப்படும்)
- Emu - பயனர்:Rexani/ஈமு
- Cynicism - பயனர்:Rexani/விட்டேத்தித்தனம்
- Execution by elephant - பயனர்:Rameshta/யானைக் காலால் இடறி மரணதண்டனை
- Eye (cyclone) - பயனர்:Rexani/கண் (சூறாவளி)
- Tourette syndrome - பயனர்:Rameshta/டூரெட் நோய்க்குறியீடு
- Knights Templar - பயனர்:Thangata/தேவாலய புனித வீரர்கள்
- History of the Yosemite area - பயனர்:Shanthalan/கலிபோர்னியா யோசெமிட்டி வரலாறு
- History of Tamil Nadu - பயனர்:Thangata/தமிழ்நாட்டின் வரலாறு
- Hippocrates - பயனர்:Marimuthu/இப்போகிரேட்டசு
- Chromatophore - பயனர்:Tamil sarva/நிறந்தாங்கி
- Shrimp farm - பயனர்:Marimuthu/இறால் பண்ணை
- Guinea pig - பயனர்:Chandrashekar/கினிப் பன்றி
- Parallel computing - பயனர்:Chandrashekar/இணைக் கணிப்பீடு
- Enzyme kinetics - பயனர்:Chandrashekar/நொதி இயக்கவியல்
- Major depressive disorder - பயனர்:Tamil sarva/பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு
- Tooth development - பயனர்:Chandrashekar/பல் வளர்ச்சி
- Binary star - பயனர்:Marimuthu/இருமை நட்சத்திரம்
- Formation and evolution of the Solar System - பயனர்:Marimuthu/சூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும்
மதிப்பீடு/திருத்தங்கள்
தொகுஒவ்வொரு மொழிபெயர்ப்பாளருக்கும் ஒரு கட்டுரை வீதம் மதீப்பீடு செய்யப்படும். அதனைக் கொண்டு பிற கட்டுரைகளை அவர்கள் திருத்த வேண்டும்.
- Saffron -
பயனர்:Rexani/குங்குமப்பூச் செடி- reviewed and corrected - Iravan - பயனர்:Thangata/அரவான் - நடந்து கொண்டிருக்கிறது (சோடாபாட்டில்)
- Formation and evolution of the Solar System - பயனர்:Marimuthu/சூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும்
- Guinea pig - பயனர்:Chandrashekar/கினிப் பன்றி
- History of the Yosemite area - பயனர்:Shanthalan/கலிபோர்னியா யோசெமிட்டி வரலாறு
- Chromatophore - பயனர்:Tamil sarva/நிறந்தாங்கி
- History of the Yosemite area - பயனர்:Shanthalan/கலிபோர்னியா யோசெமிட்டி வரலாறு
திட்டம் கைவிடப்படல்
தொகு- மார்ச் 2011ல் இத்திட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு மொழிபெயர்ப்பு நிறுவனத்தின் பணியாளர்கள் புதிய கட்டுரைகள் இல்லாததால், பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்று தெரிய வந்தது.
- மார்ச் 2011 லும் மே 2011 லும் கூகுள் திட்ட மொழிபெயர்ப்பாளர் என்று தன்னைக் காட்டிக் கொண்ட அடையாளமற்ற பயனர் விக்கிப்பீடியர்களை ஏசி இதனை உறுதி செய்தார்.[1] [2]
- ஜூன் 5, 2011ல் திட்டம் கைவிடப்படப்பட்டதாக கூகுள் இந்தியா செயலதிகாரி டிம்பிள் பாட்ரா தெரிவித்தார்.
“ | "We are in the process of closing down the wikipedia indic language
translation project. We had initiated this project to bootstrap the creation of indic content and encourage consumption in indic languages. Having accomplished the same over the past 2 years we would now like the community to continue contributing. Please feel free to reach out to us if you have other proposals on how we can create more local content in India" - Dimple Batra, Google India [3] |
” |
- ஜூன் 22, 2011ல் கூகுள் மொழிபெயர்ப்பில் இந்திய மொழிகள் இடம்பேற்ற ஆல்ஃபா பதிப்பு வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
திட்டம் கைவிடப்பட்ட இந்நிலையில் மையவெளியில் உள்ள சுமார் 1200 கட்டுரைகளையும் பயனர்வெளியில் உள்ள 25 கட்டுரைகளையும் குறித்து பின்வரும் வேலைகளைச் செய்ய வேண்டும்
- மிக மோசமான கட்டுரைகளை அறவே நீக்க வேண்டும் / அல்லது குறுங்கட்டுரைகளாக்க வேண்டும்
- சில நல்ல கட்டுரைகள் உள்ளன அவற்றைத் திருத்தி பின்னர் அவற்றில் இருந்து கூகுள் வார்ப்புருவை நீக்கி விடலாம் (குறிப்பாக இரண்டாம் கட்டத்தில் உருவான 25 கட்டுரைகள்)
கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை என்ன செய்வது?
தொகுஅவற்றை நீக்க வேண்டாம் என்பது எனது கருத்து. எத்துணை குறைபாடுகள் இருந்தாலும் அக்கட்டுரைகளைத் துப்புரவு செய்து, செம்மையாக்கி, விக்கியாக்கம் செய்தால் பல மணி நேர உழைப்பு வீண்போகாமல் காத்திடலாம். --பவுல்-Paul 15:30, 11 சூலை 2011 (UTC)
- செய்யலாம் பவுல். நீக்கம் என்பது கடைசி கட்ட தெரிவே. அதற்கு முன்னர் திருத்தி செம்மைப்படுத்த முடியுமெனில் கண்டிப்பாக அவற்றைத் தான் செய்ய வேண்டும். சிலர் இவ்வேலையைத் தொடங்கியுள்ளோம். அவ்வாறு திருத்தப்படும் கட்டுரைகள் இப்பகுப்பில் உள்ளன- [[பகுப்பு:திருத்தப்பட்ட கூகுள் கட்டுரைகள்]]. மொத்தம் சுமார் 1250 கூகுள் கட்டுரைகள் உள்ளன. 10 இல் திருத்தம் முடிந்துள்ளது. --சோடாபாட்டில்உரையாடுக 15:39, 11 சூலை 2011 (UTC)
- நீக்கவேண்டாம் என்பது எனது கருத்தும். ஏற்கெனவே இவை திருத்தப்பட வேண்டியவை என வார்ப்புரு மூலம் அறிவித்திருப்பதால் அவசரம் ஏதுமில்லை. ஆனால் இவற்றை தரம் பிரித்து குறுங்கட்டுரையாக்க திடமனம் வேண்டும். சில பகுதிகளை அப்படியே நீக்கவேண்டி யுள்ளது. நான் ஒன்றிரண்டு முயன்று தள்ளிப் போட்டுவிட்டேன். இந்த 1250 கட்டுரைகளில் சிலவற்றிற்கு முன்னுரிமை அளிக்க முடியுமானால் அவற்றை ஒரு குழுவாக திருத்துவதும் விக்கி மராத்தன் நிகழ்வுகளில் இவற்றைச் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொள்வதுமே விரைவாக இவற்றை முடிக்க வழிகோலும். --மணியன் 17:01, 11 சூலை 2011 (UTC)
- நானும் பவுல், மணியன் கருத்துகளை வழிமொழிகின்றேன். முன்னுரிமை தருவதாயின், மருத்துவம், பொருளியல் (பொருளாதாரம்), அறிவியல், தொழில்நுட்பம் போன்ற மேலும் நிலைத்தப் பயனை உடைய கட்டுரைகளைத் திருத்தலாம். கேளிக்கை உலகப் புகழாளர், நடிகை-நடிகர் போன்றவற்றைப்பற்றிய கட்டுரைகளைப் பின்னர் செய்யலாம் (இவற்றில் சிலவற்றைச் சுருக்கவும் செய்யலாம்). --செல்வா 21:59, 11 சூலை 2011 (UTC)
- நீக்கவேண்டாம் என்பது எனது கருத்தும். ஏற்கெனவே இவை திருத்தப்பட வேண்டியவை என வார்ப்புரு மூலம் அறிவித்திருப்பதால் அவசரம் ஏதுமில்லை. ஆனால் இவற்றை தரம் பிரித்து குறுங்கட்டுரையாக்க திடமனம் வேண்டும். சில பகுதிகளை அப்படியே நீக்கவேண்டி யுள்ளது. நான் ஒன்றிரண்டு முயன்று தள்ளிப் போட்டுவிட்டேன். இந்த 1250 கட்டுரைகளில் சிலவற்றிற்கு முன்னுரிமை அளிக்க முடியுமானால் அவற்றை ஒரு குழுவாக திருத்துவதும் விக்கி மராத்தன் நிகழ்வுகளில் இவற்றைச் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொள்வதுமே விரைவாக இவற்றை முடிக்க வழிகோலும். --மணியன் 17:01, 11 சூலை 2011 (UTC)
செய்யலாம், முடிக்கலாம் என்று கூறாமல், அனைவரும் அவரால் இயன்ற பங்களிப்பாக இதனைச் செய்ய முன்வாருங்கள். நம்மைத் தவிர யாரும் இதனைச் செய்யப்போவதில்லை. புதிதாக எதுவும் ஒரே நாளில் முடிந்துவிடாது. எனவே, நம்மில் உள்ள தேர்ந்த பயனர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு கூகுள் குப்பைக் கட்டுரையையாவது திருத்தம் செய்ய முன்வரவேண்டுகிறேன். இங்கு யாரையும் நான் வற்புறுத்த முடியாது. இது தன்னார்வத் தொண்டேயன்றி வேறில்லை. எனவே, இதனை எனது அழைப்பாக எடுத்துக் கொண்டு தேர்ந்த பயனர்களும் ஆர்வமுள்ளோரும் வரவேற்கப்படுகின்றனர். நமது நடவடிக்கையைச் செயலில் உடனடியாகக் காட்டுவோம். :) என்னோடு சேர்ந்து உரைதிருத்தம் மேற்கொள்ள இச்செய்தியைப் பார்க்கும் அனைவரையும் அழைக்கிறேன். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:46, 12 சூலை 2011 (UTC)
நான் கூகுள் மொழிப்பெயர்ப்பு திட்டத்தின் மூலமாக விக்கி பயனராக இருப்பவன், கூகுள் கட்டுரைகள் மட்டுமல்லாது இதர பல கட்டுரைகளில் காணும் தவறுகளையும் திருத்தி வருகிறேன், நான் கூகுள் மொழிபெயர்ப்பு திட்டத்தின் இறுதி காலங்களில் தான் இணைந்தேன் இருந்தபோதிலும் சுமார் 70 கட்டுரைகள் வரை மொழிபெயர்த்துள்ளேன், இறுதியில் தாங்கள் தேர்வு செய்த மொழிபெயர்பாளர் பட்டியலிலும் என் பெயர் இடம்பெற்று சில கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளேன், இப்போது தாங்கள் கூகுள் குப்பைகளை சீர்படுத்த முனைந்திருக்கும் இவ்வேளையில் நீங்களே தேர்வு செய்த இந்த குறிப்பிட்ட மொழிபெயர்ப்பாளர்களின் கட்டுரைப் பட்டியலைப் பெற்று அதனிலிருந்து தேவையான தலைப்புகளுக்கான கட்டுரைகளை சீர்திருத்தம் செய்தால் கால விரையம் குறையும் என நம்புகின்றேன். தேவையெனில் நான் மொழிபெயர்த்த கட்டுரைகளின் பட்டியலை அனுப்புகிறேன் அவற்றில் பல பல்வேறு நபர்களின் பெயர்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. - சந்திரசேகர்
- நன்றி சந்திரசேகர். நீங்கள் குறிப்ப்ட்ட படி தேர்வு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களின் கட்டுரைகள் பிற மொழிபெயர்ப்பாளர்களின் கட்டுரைகளை விட திருத்த எளிதானவையாகவும், வேலை குறைவானவையாகவும் உள்ளன. நீங்கள் மொழிபெயர்த்த கட்டுரைகளின் பட்டியலை (பிறரது பெயர்களில் பதிவேற்றப்பட்டவையும்) உங்கள் பயனர் பக்கத்தில் இடுங்கள், திருத்துபவர்கள் பயன்படுத்திக் கொள்கிறோம்.--சோடாபாட்டில்உரையாடுக 05:32, 13 சூலை 2011 (UTC)