பேச்சு:கொல்கத்தா
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஜனவரி 30, 2013 அன்று வெளியானது. |
I think Mumbai has more population than kolkatta. The info given in article may not be correct--ரவி (பேச்சு) 18:20, 26 மே 2005 (UTC)
You are right ravi.... Mumbai has the highest population in India.. Source - - ஆனந்த் (பேச்சு) 05:42, 27 மே 2005 (UTC)
"குடித்தொகை" - "மக்கள்தொகை"
தொகு"குடித்தொகை" என்ற சொல் தவறில்லாவிட்டாலும் "மக்கள்தொகையே" பொதுவாக வழங்கும் சொல் எனத் தோன்றுகிறது. -- Sundar 07:04, 27 மே 2005 (UTC)
- குடித்தொகை may be used popularly in srilanka. I have seen mayooranathan using this term in many of his articles.If it is thought it is necessary to replace the term with மக்கள்தொகை, it shall be done --ரவி (பேச்சு) 07:08, 27 மே 2005 (UTC)
- இலங்கையில் குடித்தொகை, மக்கள்தொகை, சனத்தொகை ஆகிய சொற்கள் Population என்பதற்கு ஈடாக வழக்கிலுள்ளன. TVU இணையத் தளத்திலும் குடித்தொகை என்ற சொல் கொடுக்கப்பட்டுள்ளது. சொற்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துகின்ற அல்லது தவிர்க்கும் நடவடிக்கைகளின் போது கவனத்துடன் செயல்படவேண்டும் என்பது எனது கருத்து. ஒரு குறிப்பிட்ட பொருளை இன்னொருவருக்கு உணர்த்துவதற்கு ஒரு மொழியில் ஒரு சொல் அல்லது ஒரு சொற்றொடர்தான் பயன்படுத்தப்படவேண்டும் என்பதில்லை. பொதுவாக வழங்கும் சொல் என்பதற்காக ஒரே சொல்லையே பயன்படுத்த முயல்வது தமிழின் சொல்வளத்தைக் குறைத்துவிடக்கூடும். கலைச்சொல்லாகப் பயன்படுத்தப்படும்போது சரியான வரையறுக்கப்பட்ட பொருளைக் குறிப்பதற்காக ஒரே சொல் எடுத்தாளப்படுவது உண்மைதான். ஆனால் பொதுவாக எழுதும்போது ஒரே பொருளுடைய பல சொற்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. தவிர்க்கப்பட வேண்டிய சொற்களுக்கான சில அடிப்படைகளை நாங்கள் ஏற்படுத்திக்கொள்ளவேண்டியது முக்கியம். என்னைப் பொறுத்தவரை, பொருத்தமற்ற சொற்கள், பிழையான பொருள் தரக்கூடிய சொற்கள், பிறமொழிச் சொற்கள் போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ளலாம். சரியான பொருள்தரும் தூய தமிழ்ச் சொற்கள் பல உருவாகட்டும், தமிழ் வளம் பெறட்டும். Mayooranathan 08:23, 27 மே 2005 (UTC)
உங்கள் கருத்து முற்றிலும் ஏற்புடையதே. "குடித்தொகை" என்பது சிவப்பு இணைப்பாக்கப்பட்டுள்ளதால் நாளை கட்டுரை அப்பெயரில் வருமாதலால் "மக்கள்தொகை" என்று தேடுபவர்களுக்கு கிட்டாது என்று தவறாக எண்ணினேன். மீள்வழிப்படுத்தலாம் என்று தோன்றாமல் போய்விட்டது. மேலும் ஒரு கருத்து இவ்வாறான ("குடித்தொகை" போன்ற) கட்டுரைகளின் துவக்க வரியில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்ற பல சொற்களையும் தடித்த எழுத்துக்களில் குறிப்பிடுவதன்மூலம் இணையத் தேடுபொறிகளில் அட்டவணைப்படுத்தப்பட ஏதுவாகும். -- Sundar 08:31, 27 மே 2005 (UTC)
- சனத்தொகை, தமிழ் சொல் தானா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது. ஜனம் என்ற வட சொல்லிலிருந்து இந்த சொல் வந்திருக்கலாம். மற்றபடி, சொற்பயன்பாடுகல குறித்த உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடே. மயூரநாதனின் கருத்தை நடைக்கையேட்டிலும் சேர்க்கலாம். --ரவி (பேச்சு) 10:07, 27 மே 2005 (UTC)
- சனத்தொகை என்பது தமிழ்ச் சொல் அல்ல. ஜனத்தொகையின் தமிழ்ப் படுத்தலே. இலங்கையில் இச் சொல்லும் புழக்கத்திலுள்ளது என்றுதான் குறிப்பிட்டேன்.Mayooranathan 10:58, 27 மே 2005 (UTC)