பேச்சு:சப்போட்டா

அன்புள்ள சண்முகம், சப்போட்டா கட்டுரை விதையை ஊன்றினேன். பூத்துப் பழுத்துப் புல்லரிக்கச் செய்துள்ளீர்கள். தங்களைப் போன்ற அறிவியல் கண்ணோட்டம் உள்ளவர்களால்தான் தமிழ் மலரும். நன்றி. அன்புள்ள --Sengai Podhuvan 10:44, 28 சனவரி 2012 (UTC)Reply

சப்போட்டா தமிழில் சீமை இலுப்பை என அழைக்கப்படுகின்றது."ஆலையில்லா ஊருக்கு இலுப்பம்பூ சக்கரை" என்பது பழமொழி.--சஞ்சீவி சிவகுமார் 04:47, 31 சனவரி 2012 (UTC)Reply

வணக்கம். இந்தப்பழவகை இலங்கையின் தென்பகுதிகளிலும் வெலிகமை பிரதேசங்களில் கிடைக்கின்றன. (விக்கிப்பீடியாவுக்கான தனது பங்களிப்பை சில பயனர்களால் ஏற்பட்ட மன உலைச்சலின் காரணமாக சிலநாட்களாக நிறுத்தி வைத்திருக்கின்றேன். மீண்டும் விக்கியில் இணைந்துகொள்ளத்தூண்டுகின்றது. ஆதலால் இந்தக்கருத்தை முன்வைத்தேன்.)--Fasly (பேச்சு) 10:22, 13 நவம்பர் 2012 (UTC)Reply

ஆங்கில விக்கியில் இலங்கையில் rata-mi என அழைக்கப்படுகிறது என்று தந்திருக்கிறார்கள். இது சிங்களச் சொல்லா. சிங்களத்தில் எவ்வாறு இது உச்சரிக்கப்படுகிறது? உங்களுக்குத் தெரிந்தால் இதைப் பற்றிக் கட்டுரையில் தரலாமே.--Kanags \உரையாடுக 10:44, 13 நவம்பர் 2012 (UTC)Reply
தகவலுக்காக - பசலிப்பழம் இலங்கையில் சப்போட்டா என அழைக்கப்படுவதைப் பார்த்திருக்கிறேன். --Anton (பேச்சு) 11:18, 13 நவம்பர் 2012 (UTC)Reply

ரட்ட மீ (රට මී) என்ற சொல்லைப் பற்றித் தெரியாது. எனினும், இதற்குரிய சரியான சிங்களப் பெயர் செப்பதில்ல (සැපදිල්ල - sepadilla) என்பதாகும். தென்னிலங்கையில் அப்படித்தான் அழைக்கப்படுகிறது. மாத்தறையில், குறிப்பாக மாத்தறை, வல்கமையிலுள்ள நிப்பொலெக்ஸ் சாயத் தொழிற்சாலைப் பகுதியில் இதன் மிகப் பெரிய மரங்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 11:34, 13 நவம்பர் 2012 (UTC)Reply

சிங்களத்தில் செப்பதில்லா (සැපදිල්ල - sepadilla) என்றே அழைப்பார்கள். தமிழில் சரியான பெயர் என்னவென்று தெரியாது. இந்தப்பழவகை இலங்கையின் மாத்தறை மற்றும் வெலிகம பகுதிகளில் மட்டுமே கண்டிருக்கின்றேன்.--Fasly (பேச்சு) 10:37, 15 நவம்பர் 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சப்போட்டா&oldid=1258739" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சப்போட்டா" page.