பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்

தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:21, 14 மே 2007 (UTC)Reply

இக்கட்டுரையின் தலைப்பை "சிந்துவெளி வரிவடிவம்" என்று மாற்றுவது நல்லது தற்போதைய தலைப்பு சிக்கலாக உள்ளது. வேண்டுமானால் "அரப்பா வரிவடிவம்" என்று ஒரு வழிமாற்றுப் பக்கம் உருவாக்கலாம். தலைப்பிலேயே மாற்றுப் பெயர்களைக் காட்டவேண்டும் என்பதில்லை. ---மயூரநாதன் (பேச்சு) 18:48, 7 சனவரி 2013 (UTC)Reply

தமிழிய மொழி/ திராவிட மொழிக் கருதுகோள்

தொகு

சிந்துவெளி வரிவடிவத்தை ஆய்ந்த பெரும்பாலான அறிஞர்கள் அது முந்து திராவிட மொழி (proto-dravidian) என்றே கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், கட்டுரையில் முந்து தமிழ் (proto-tamil) எனக் கையாளப்பட்டிருக்கிறது. இது மாற்றப்படவேண்டும். பிரஷாந் (பேச்சு) 09:03, 5 மார்ச்சு 2024 (UTC)Reply

//கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்// அதற்கான சான்று / இணைப்பைத் தாருங்கள். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 09:10, 5 மார்ச்சு 2024 (UTC)Reply
பின்வரும் சான்றுகள் சிந்துவெளி வரிவடிவம் முந்து திராவிட மொழியை எழுதப் பயன்பட்டது என்று கருத்தறிவித்த அறிஞர்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வேடுகள் (journals) மற்றும் நூல்களாகும்.
  • என்றி ஈராசு, அவர்கள் முந்து திராவிட மொழி என்ற எடுகோளின் அடிப்படையில் சிந்துவெளி வரிவடிவத்தை வாசிக்க முயன்றுள்ளார் [1].
  • யூரி நாரோசவ், கணினிப் பகுப்பாய்வு அடிப்படையில் இவ்வரிவடிவத்தின் மொழி ஒரு திராவிட மொழியாக இருக்க வாய்ப்புண்டு எனக் கூறியுள்ளார் [2].
  • அசுகோ பார்ப்போலாவும் இதே முடிவுக்கு வந்துள்ளார் [3]. பார்ப்போலாவின் விரிவான ஆய்வு முடிவுகள் 1994ல் வெளியிடப்பட்டது [4].
  • 2014ல் ஐராவதம் மகாதேவன் வெளியிட்ட இன்னொரு ஆய்வேட்டில், சிந்துவெளி வரிவடிவங்களில் மீண்டு வருகின்ற நான்கு குறியீடுகள், "நகரத்து வணிகன்" எனப் பொருள்படும் ஒரு திராவிடச் சொற்றொடர் எனக் கண்டறிந்திருக்கிறார் [5].
  • 2021ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்விதழில் சிந்துவெளி நாகரிகத்துக்குச் சமகாலத்தில் காணப்பட்ட ஏனைய நாகரிகங்களில் பல் மற்றும் யானையைக் குறிக்கப் பயன்பட்ட சொற்களை ஆராய்ந்ததன் மூலம் அவை சிந்துவெளி நாகரிகத்திலிருந்து பெறப்பட்ட சொற்கள் எனவும், அதிலிருந்து சிந்துவெளியில் பேசப்பட்ட மொழி முந்து திராவிட மொழி எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது [6].
சான்றுகளின் பட்டியல்
------------------------
[1] Heras, Henry (1953). Studies in Proto-Indo-Mediterranean Culture. Bombay: Indian Historical Research Institute.
[2] Parpola, Asko (1994). Deciphering the Indus script. Cambridge, New York: Cambridge University Press. Knorozov, Yuri V. (1965), Предварительное сообщение об исследовании протоиндийских текстов [Preliminary Report on the Study of Proto-Indian Texts] (in Russian), Moscow: Institut Etnografii, Akademiya Nauk SSSR
[3] Bryant, Edwin Francis (2001). The Quest for the Origins of Vedic Culture: The Indo-Aryan Migration Debate. Oxford University Press. ISBN 978-0-19-513777-4
[4] Parpola, Asko (1994). Deciphering the Indus script. Cambridge, New York: Cambridge University Press. ISBN 9780521430791.
[5] Mahadevan, Iravatham (2014). "Dravidian Proof of the Indus Script via The Rig Veda: A Case Study" (PDF). Bulletin of the Indus Research Centre (4).
[6] Ansumali Mukhopadhyay, Bahata (2021-08-03). "Ancestral Dravidian languages in Indus Civilization: ultraconserved Dravidian tooth-word reveals deep linguistic ancestry and supports genetics". Humanities and Social Sciences Communications. 8 (1): 1–14.
மேலும், கட்டுரையில் தமிழிய மொழி என்பதற்கான ஆதாரங்களாக எடுத்தாளப்பட்டிருக்கின்ற பெரும்பாலான சான்றுகளில் உண்மையில் சிந்துவெளியின் மொழி முந்து திராவிட மொழியென்றே கருத்துத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. proto-dravidian என்பது முந்து திராவிடம் என்றே மொழிபெயர்க்கப்படவேண்டுமேயொழிய தமிழிய மொழி எனக் கூறமுடியாது. பிரஷாந் (பேச்சு) 07:49, 2 ஏப்பிரல் 2024 (UTC)Reply
Return to "சிந்துவெளி வரிவடிவம்" page.