பேச்சு:சிலப்பதிகாரம்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார் in topic வணக்கம்
சிலப்பதிகாரம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சிலப்பதிகாரம் என்னும் கட்டுரை சமணம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சமணம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கட்டுரையை மேம்படுத்துவதற்கான சில கருத்துக்கள் தொகு

சிலப்பதிகாரம், அது எழுதப்பட்ட காலத்தில் இப்பகுதியில் போற்றப்பட்ட பல விழுமியங்கள், வழக்கங்கள் முதலியவற்றை நமக்குத் தருகிறது. எடுத்துக்காட்டாக, கோவலனின் முடிவு அவன் மாதவியுடன் வாழச் சென்றதால் இருக்கலாம். அதாவது, நடைமுறையில் பின்பற்றப்பட்டதோ இல்லையோ, கற்பொழுக்கம் என்பது அந்த காலகட்டத்தில் குறைந்தது ஒரு idealistic விழுமியமாக இருந்திருக்கும். அதனால், இளங்கோ கோவலனுக்கு அம்மாதிரியான முடிவைத் தந்திருக்கலாம். மேலும், மன்னனுக்கான விழுமியமான நீதி தவறாமையைப் பற்றி நாம் பாண்டிய மன்னனின் முடிவின் மூலம் அறிகிறோம். இதுபற்றி எவரிடமாவது ஒரு ஆய்வுப் புத்தகம் இருந்தால் அதிலிருந்து தகவல்களைப் பெற்று இங்கே தரலாம்.

மேலும், கதையின் பண்பாட்டுப் பின்புலம், ஆசிரியரின் வாழ்க்கைப் பின்புலம், தற்குறிப்பேற்ற அணி போன்ற அணிகளைக் கையாண்ட விதம், நடை போன்றவற்றைப் பற்றியும் எழுதினால் ஒரு நல்ல கட்டுரை உருவாகலாம். இலக்கியப் படைப்பைப் பற்றிய நல்ல எடுத்துக்காட்டுக் கட்டுரைகள் பின்வருவன.

-- Sundar \பேச்சு 04:59, 7 டிசம்பர் 2005 (UTC)

முகவரியை வெளியிடாத ஒரு பயனர் கட்டுரையில் இருந்த பல பகுதிகளை நீக்கியுள்ளார். கட்டுரையை முற்றாகத் திருத்தி எழுதவேண்டும். ---மயூரநாதன் 15:06, 8 திசம்பர் 2010 (UTC)Reply
இக் கட்டுரையைச் சிறப்பாக விரித்து எழுதலாம், எழுதவேண்டும். இதைப்பற்றிப் பலர் எழுதியுள்ளனர். நிறைய தகவல்கள் பெறமுடியும். கொஞ்சம் தகவல்கள் சேர்த்துக்கொண்டு நானும் முடிந்த அளவுக்குப் பங்களிப்புச் செய்கிறேன். -- மயூரநாதன் 15:27, 8 திசம்பர் 2010 (UTC)Reply

சிலப்பதிகாரம் எக்காலத்துக்கு உரியது ?? தொகு

-- சிலப்பதிகாரம் வணிகம் மேம்பட்டிருந்த காலத்தில் தோன்றியது.எனவே வணிகம் மேம்பட்டிருந்த களப்பிரர் காலத்தில் தோன்றியது.Natkeeran 03:47, 6 ஆகஸ்ட் 2010 (UTC)

வணக்கம் தொகு

சிலப்பதிகாரத்தின் காலம் குறித்த வி. ஆர். ஆர். தீட்சிதர், ஆர்.கே சண்முகஞ்செட்டியார், எஸ் வையாபுரிப்பிள்ளை ஆகியோரின் ஆராய்ச்சி உரையுடனான புதுமலர் நிலையத்தார் 1946-ல் வெளியிட்ட சிலப்பதிகாரம் எனும் நூலைக் கொண்டு இக்கட்டுரையினைத் தொகுத்துக்கொண்டிருக்கிறேன். மேலும் சிலப்பதிகாரம் குறித்த கருத்துக்ளையும் இணைக்கலாம் என உள்ளேன், நன்றி.--Parvathisri 16:07, 23 அக்டோபர் 2011 (UTC)Reply

நன்றி. இக் கட்டுரை பல கட்டுரைகளாகப் பிரிக்கப்படக் கூடியது. சிலப்பதிகாரத்தில் மெய்யியல் கருத்துக்கள், சிலப்பதிகாரத்தில் சமூகவியல் செய்திகள், சிலப்பதிகாரத்தில் அறிவியல் செய்திகள் என்று பல வாறு பிரிக்கப்படால்ம் என்று நினைக்கிறேன். முதன்மைக் கட்டுரை கதைச் சுருக்கம், நூல் முக்கியத்துவம், காலம், எழுதியவர் போன்ற முதன்மைத் தகவல்களைக் கொண்டிருக்கலாம். --Natkeeran 16:21, 25 அக்டோபர் 2011 (UTC)Reply
வணக்கம். தாங்கள் கூறிய படியே செய்திகளை பல தலைப்புக்ளில் பகுத்து உள்ளேன். பின்வரும் சிலர் இத்தலைப்புகளில் நிறைய செய்திகளைச் சேர்க்க இது வாய்ப்பாக அமையும் அல்லவா? இது எனக்குத் தோன்றாமலே போனது. மேலும் சிலபதிகாரம் கி.பி.8 ஆம் நூற்றாண்டினது என்ற கருத்து கொண்ட உரையொன்று உளது. அதனைக் குறித்த செய்திகளைத் தனித்தலைப்பில் தரலாமா? அல்லது சிலப்பதிகாரம் கட்டுரையிலேயே தாலாமா? உதவுங்கள்- நன்றி.--Parvathisri 17:43, 26 அக்டோபர் 2011 (UTC)Reply

வணக்கம் பார்வதிசிறி. தாங்கள் எழுதும் சிலப்பதிகாரம் உபதலைப்புகள் சிறப்பாயுள்ளன. சிலப்பதிகாரம் கி.பி.8 ஆம் நூற்றாண்டினது பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரம் கட்டுரையில் அமைவதே சரி என நினைக்கிறேன். நன்றி. --சஞ்சீவி சிவகுமார் 22:57, 26 அக்டோபர் 2011 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிலப்பதிகாரம்&oldid=3899567" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சிலப்பதிகாரம்" page.