பேச்சு:சுந்தரவனக்காடுகள்
மொழிபெயர்ப்பாளர் கவனத்திற்கு
தொகுகீழ்கானும் வாக்கியங்களுக்கு தயவு செய்து பொருள் கூற வேண்டுகிறேன். இவ்வாக்கியங்கள் எவ்வித பொருளும் அற்றவை. இப்படியான மொழி பெயர்ப்புகள் தமிழ் விக்கியின் தரத்தை குறைக்கின்றது. இத்தகைய மொழி பெயர்ப்பு மிகவும் வருத்தத்தக்கது :(
- சுந்தரவனக்காடுகள் உலகத்தில் உப்புதன்மையுள்ள அலைசார்ந்த சதுப்புநில காடுகளில் இது ஒரு பெரிய ஒற்றை தடுப்பாகும்
- சுந்தரவனக்காடு என்ற பெயரை பெங்காலி மொழியில் இலக்கியவடிவில் மொழி பெயர்த்தால்
- இந்த காடு கங்கை நதிக்கரையிலும் மற்றும் இந்தியா, பங்ளாதேஸ், மேற்கு வங்காளம் ஆகிய பரப்புக்கும் இடையே விரிந்து அமைந்துள்ளது,
- இது டெல்டாவின் கடல்பகுதியில் விளிம்பு போல் இருக்கும். வெள்ளம் வரும் பருவகாலங்களில் உள்நாட்டில் உள்ள சதுப்புநில காடுகளில் இருந்து சுந்தரவனக்காடுகளுக்கு ஆற்றுநீர் வரும்.
- 1997 ஆம் ஆண்டில் யூநீஸ்கோ உலக மரபுரிமை எழுத்துப்பதிவில் இது இடம்பெற்றுள்ளது, ஆனால் அந்தசமயத்தில் பங்களாதேஸ் மற்றும் இந்திய பகுதிகளின் சுற்றுப்புறத்தில் வறண்ட வானிலையே தொடர்ந்து உண்டாகும்,
- இந்த பகுதியில் பெங்காலி இனப்பெயருடைய புலிகளும் (பன்தீரா டைக்ரிஸ் டைக்ரிஸ்) , அதுமட்டுமில்லாமல் எண்ணற்ற பறவைகள், புள்ளி மான்கள், முதலைகள் மற்றும் பாம்புகள் ஆகிய உயிரினங்களும் இருப்பதாக தெரிகிறது
- இது ஆபத்தான புலிகளின் முக்கிய வாழ்விடமாகவும் உள்ளது
- ஏசு பிறந்த 200-300-ம் ஆண்டிற்கு முன்பே இந்த பகுதியின் வரலாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- சான்டு சடாகர் பக்மரா என்ற காட்டை தடைசெய்து கேடு விளைவிக்கும் நகரத்தை ஏற்படுத்தினார்.
முதல் இரண்டு பத்திகளில் மட்டும் இருந்து மேற்கூறிய வாக்கியங்களை எடுத்துக்காட்டியுள்ளேன். முழு கட்டுரையை படிக்கும் மன வலிமை என்னிடம் இல்லை :( தற்பொது மேலும் பல கூகுள் மொழி பெயர்ப்பு கட்டுரைகளை பார்க்கும் போது இது ஒரு அர்த்தமற்ற நமது காலத்தை விரயம் செய்யும் செயலாகத் தோன்றுகிறது. இது பற்றி விரைவில் நாம் ஒரு முடிவிற்கு வரவேண்டும். இத்தகைய கட்டுரைகள் நன்மை பயப்பவை அன்று.--கார்த்திக் 06:46, 11 மார்ச் 2010 (UTC)
- சில கூகுள் பயனர்கள் மிக மோசமாக மொழிபெயர்க்கின்றனர். தொலைக்காட்சியில் ஜூனூன் தமிழ் என்ற வகை உருவானதுபோல புதிய தமிழ்? பிறக்கிறது. கூகுள் குழுவின் மோசமான இப்பயனர்களின்(singarajan,sastry..etc) கணக்கை முடக்கினால் என்ன ? --மணியன் 07:22, 11 மார்ச் 2010 (UTC)
தலைப்பு
தொகுதலைப்பு சுந்தரவனம் என்று இருந்தாலே போதுமே. ஏன் "காடுகள்" என்று இன்னொரு முறை வரவேண்டும்? மயூரநாதன் 16:44, 13 மார்ச் 2010 (UTC)
சுந்தரவனக்காடு என்பது அலையாத்திக் காடு அல்லவா? --குறும்பன் 21:53, 13 மார்ச் 2010 (UTC)
- அலையாத்திக் காடுகள் என்பது பொதுவாக சதுப்புநிலக் காடுகளைக் குறிக்கும். சுந்தரி என்ற மரம் விளைவதால் இது சுந்தரவனம் எனப் பெயர் பெற்றது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:42, 5 ஏப்ரல் 2015 (UTC)