பேச்சு:டென்னிசு

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன் in topic தலைப்பு
டென்னிசு என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

வரிப்பந்தாட்டம் என்ற பெயர் பரவலாக இலங்கையில் அறியப்பட்டதா? --Sivakumar \பேச்சு 16:08, 9 ஏப்ரல் 2007 (UTC)

இல்லை. ரென்னிஸ், டென்னிஸ் என்பனவே பயன்படுகின்றன. வரிப்பந்தாட்டம் தமிழகச் சொல்லென்றே தெரிகிறது. --கோபி 16:11, 9 ஏப்ரல் 2007 (UTC)
தமிழகத்திலும் இல்லை. ஒரு வேளை நற்கீரரின் பரிந்துரையாக இருக்க வேண்டும்.--Sivakumar \பேச்சு 16:14, 9 ஏப்ரல் 2007 (UTC)
பயனர்:தொழில்நுட்பம் செய்த மாற்றம் அது. நற்கீரன் அதனை தமிழக வழக்காக நினைத்து மாற்றியிருக்க வேண்டும். எங்கும் பயன்படாத சொல்லை இங்கு அறிமுகப்படுத்துவது தவறானது. ஆகையால் நற்கீரன் டென்னிஸ் என்பதை முன்னிலைப்படுத்தும் மாற்றத்தைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. கோபி 16:20, 9 ஏப்ரல் 2007 (UTC)

நற்கீரன் மறுப்புத் தெரிவிக்காததால் மேற்படி பேச்சிற்கேற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நன்றி. --கோபி 19:47, 14 ஏப்ரல் 2007 (UTC)

டென்னிஸ் தமிழ் என்ன? தொகு

--Natkeeran 19:57, 14 ஏப்ரல் 2007 (UTC)

அதற்கான தமிழ்ப்பதம் எதுவும் பரவலான பயன்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் வரிப்பந்தாட்டம் எங்கும் பயன்படாதது. --கோபி 20:10, 14 ஏப்ரல் 2007 (UTC)

"வரிப்பந்தாட்டம்" என்கிற சொல் "MEGA DELUXE ENGLISH-TAMIL DICTIONARY" (Deluxe Publishers, Sundarapuram, Coimbatore-24), பக்கம் 979ல் காணலாம். வரிப்பந்தாட்டம் என்கிற சொல் இந்நூலைப் பார்த்து இடப்பட்டது. Tennis என்கிற ஆன்கிலச்சொல்லை ஒலிமருவி டென்னிசு (டென்னிஸ்) என்று எழுவதற்கு மாறாக வரிப்பந்தாட்டம் என்றே தமிழில் அழகாக எழுதினால் நன்று. அனைத்துக் கண்காட்சிகளிலும் (சென்னை, பெங்கள்ளூர் புத்தகக் காட்சிகள் உட்பட) அனைத்து நூல்விற்பனையகத்தில் கிடைக்கும் பிரபலமான அகராதியாகும். இப்போது இச்சொல் இணையத்திலும் பரவலாகக் காணப்படுகிறது. இந்நூலில் பல்வேறு நவீன புதியச் சொற்களுக்கு நேரடி தமிழாக்கங்கள் தரப்பட்டுள்ளன. - ராஜ்(தொழில்நுட்பம்)

வரிப்பத்தாட்டம் என்னும் சொல் சரியான பொருள் தரவில்லையே? தமிழ்ச்சொல்லை ஆளவேண்டும் என்னும் விழைவை நானும் போற்றுகின்றேன். பொருத்தமும் பார்க்கவேண்டும் அல்லவா? மேலும் சில வேற்றுமொழிச் சொற்களை அப்படியே ஏற்று முதலில் வழங்கலாம். ஆப்பிள், கீவீப் பழம், அன்னாசி, பேட்மிண்ட்டன், டென்னிசு முதலிவற்றை சற்றேறக்குறைய அப்படியே ஆளலாம். ஆனால் கூடைப்பந்து, கால்பந்து (காற்பந்து), வளைதடியாட்டம் (field hockey), மட்டைப்பந்தாட்டம் அல்லது துடுப்பாட்டம் முதலியவற்றை பெயர்த்து ஆள்கிறோம். டென்னிசு என்பதை வலைப்பந்தாட்டம் (நடுவே வலைத் தடுப்பு இருப்பதாலும், வலைமட்டையைப் பயன்படுத்தி ஆடுவதாலும்) எனலாம்.பேட்மிண்ட்டன் என்பதை. இறகு ஆட்டம் எனலாம், ஆனால் இதனை ஏற்கனவே பூப்பந்தாட்டம் என அழகாக வழங்குகின்றோம். இவ்விளையாட்டைப் பூணேயாட்டம் என்றும் கூடக் கூறலாம், ஏனெனில் மகாராட்டிராவில் உள்ள பூணே என்னும் நகரில் (Poona or Pune) விளையாடத் தொடங்கியதாகக் கூறுவர். அதாவது விளையாட்டோடு சிறப்பான தொடர்புடைய வகையில் சொல் உருவாக்க வேண்டும். வரிப்பந்தாட்டம் என்பது நிறைவு தருவதாக இல்லை. --செல்வா 16:01, 4 ஏப்ரல் 2010 (UTC)
தமிழ் விக்சனரியில் tennis என்பதற்கு வரிப்பந்தாட்டம் எனக் கொடுக்கப்பட்டுள்ளது. --மணியன் 16:11, 4 ஏப்ரல் 2010 (UTC)

1960 களில் இருந்தே தமிழகத்தில் பள்லிகளிலேயே பூப்பந்தாட்டம் எனும் பெயர் வழக்கில் இருப்பதால் இத்தலைப்பை வழிமாற்றுத் தலைப்பாக்கி பூப்பந்தாட்டம் எனும் புதுத் தலைப்பில் இதன் உள்ளடக்கத்தை இடலாம். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:39, 10 செப்டம்பர் 2016 (UTC)

 
டென்னிசு பந்தின் வரிவடிவம்
மேலே குறிப்பிட்டபடி பூப்பந்தாட்டம் என்பது ஏற்கெனவே Ball Badminton என்பதற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் டென்னிசு பந்து பூ போன்று மென்மையானதல்ல. அதிலிருக்கும் வரி அல்லது கோடுகளைக் கொண்டே வரிப்பந்தாட்டம் எனப்பட்டது. படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போல வரிகளைக் கொண்டிருபதால் வரிபந்து அல்லது பிறைக்கோட்டுப் பந்து எனலாம். எனவே வரிப்பந்தாட்டம் அல்லது பிறைக்கோட்டுப் பந்தாட்டம் என்பது பொருத்தமாக இருக்கும். --மணியன் (பேச்சு) 23:35, 11 செப்டம்பர் 2016 (UTC)

டென்னிசு ஆட்டம் குறித்த கலைச்சொற்கள் தொகு

இங்கு டென்னிசு ஆட்டம் குறித்த ஆங்கிலசொற்களுக்கான தமிழக்கங்கள் ஒருங்கிணைக்கபட்டு உரையாடலாம்.தொடர்புடைய கட்டுரைகளில் சீரான சொல் பயன்பாட்டிற்கு இது வாய்ப்பளிக்கும். எண்ண ஒழுங்கில்லா வரிசையில் எனது பரிந்துரைகள்:

ஆட்டம்/போட்டிகள் தொகு

  • Championship = சாதனைப்போட்டி
  • Champion = சாதனையாளர்
  • grand slam tournaments=பெருவெற்றிப் போட்டிகள்
  • ATP ranking = டென்னிசு விளையாட்டாளர் சங்க தரவரிசை
  • WTP ranking = மகளிர் விளையாட்டாளர் சங்க தரவரிசை
  • seeding/seed=வாய்ப்பெண் வழங்கல்/வாய்ப்பெண்
  • mixed doubles=கலவை இரட்டையர்

ஆட்டநிகழ்வு தொகு

  • game=ஆட்டம்
  • set=தொகுப்பு
  • match=போட்டி
  • score=வெற்றிப்புள்ளிகள்
இதை வெற்றிப்புள்ளிகள் என்பதை விட புள்ளிகள் எனலாம். winning score என்பதை வெற்றிப்புள்ளிகள் எனலாம். --குறும்பன் 19:21, 15 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • Love=சுழி
  • love all = எல்லாம் சுழி
  • service/serve(n)= இடுகை (முதல் இடுகை,இரண்டாம் இடுகை,முதலில் பந்தை இடு)
  • break=முறிவு
  • tie break=சமநிலை முறிவு
  • deuce = சமன்
  • breakpoint= முறிவுப்புள்ளி
  • setpoint=தொகுப்புப் புள்ளி
  • matchpoint=போட்டிப் புள்ளி
  • instant replay= உடனடி நிகழ்பட ஆய்வு

--மணியன் 11:32, 14 செப்டெம்பர் 2010 (UTC) One-handed backhand என்பதை எப்படி அழைப்பது?--குறும்பன் (பேச்சு) 21:52, 30 சனவரி 2014 (UTC)Reply

தலைப்பு தொகு

ஏன் இன்னும் ஆங்கிலத் தலைப்பு? டென்னிசு என்னும் போது Dennis என்னும் பெயரே ஞாபகத்துக்கு வருகிறது.--பாஹிம் (பேச்சு) 03:59, 15 திசம்பர் 2012 (UTC)Reply

வரிப்பந்தாட்டம் என தலைப்பை மாற்றலாம். கட்டுரையில் Tennis என்பதை ஆங்கில அடைப்புக் குறிக்குள் போட்டு எழுதலாம்.−முன்நிற்கும் கருத்து Winnan Tirunallur (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
யாராவது எதிர்ப்புத் தெரிவிக்காவிடில் தலைப்பை வரிப்பந்தாட்டம் என மாற்றலாம்.--Kanags \உரையாடுக 22:44, 30 ஆகத்து 2015 (UTC)Reply
நான் மேலேயுள்ள உரையாடலை முழுமையாகப் படிக்கவில்லை. சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள்.--Kanags \உரையாடுக 03:08, 31 ஆகத்து 2015 (UTC)Reply
வரிப்பந்தாட்டம் என்ற பெயர் ஏன் வந்ததெனத் தெரியவில்லை. Tennis என்பது hold, receive, take போன்ற பொருள்களையுடைய tenez என்ற பழம்பிரான்சியச் சொல்லிலிருந்து தோன்றியதால், அதனையொத்துக் கலைச்சொல் ஆக்கலாம். --மதனாகரன் (பேச்சு) 03:15, 31 ஆகத்து 2015 (UTC)Reply
ஓடியோடி விளையாடுவதால், வரிப்பந்தாட்டம் (வரி-ஓடு) என்று பெயர் வந்திருக்கலாமோ? --மதனாகரன் (பேச்சு) 03:18, 31 ஆகத்து 2015 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டென்னிசு&oldid=2298763" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "டென்னிசு" page.