பேச்சு:தட்பவெப்பநிலை
Climate, Weather ஆகிய ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களாகக் காலநிலை, வானிலை போன்ற சொற்கள் மாற்றி மாற்றிப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் தற்காலப் பொருளைத் துல்லியமாக விளங்கவைப்பதற்கான தமிழ்க் கலைச் சொற்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இக் கட்டுரையில், அ.கி.மூர்த்தி எழுதிய அறிவியல் அகராதி என்னும் கலைச்சொல் தொகுதியைப் பின்பற்றி Climate என்பதற்கு தட்பவெப்பநிலை என்னும் சொல்லையும், Weather என்பதற்கு வானிலை என்னும் சொல்லையும் பயன்படுத்தியுள்ளேன். மயூரநாதன் 05:03, 26 டிசம்பர் 2008 (UTC)
- பேச்சு:இந்தியாவின் தட்பவெப்ப நிலை <- இப்பக்கத்தைப் பார்க்கவும். தட்பவெப்பநிலை என்பது climate என்பதற்குச் சரியான சொல். --செல்வா 15:03, 26 டிசம்பர் 2008 (UTC)
காலநிலை என்னும் பதமே சரியானது.=
தொகுவானிலை என்பது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தற்போது நிலவும் சீதோஷண நிலமையாகும். நீண்ட காலத்திற்கு ஒரு பிரதேசத்தில் காணப்பட்ட வானிலை அம்சங்களின் தொகுப்பே காலநிலை எனப்படும். இப்பதங்களே இலங்கையில் காலம்காலமாகப் பயன்படுத்துகின்றோம். அத்துடன் காலநிலை வெப்பநிலையால் மாத்திரம் நிர்ணயிக்கப்படுவதல்ல. ஈரப்பதம், ஒளிச்செறிவு போன்ற காரணிகளும் உண்டு. எனவே இக்கட்டுரையின் தலைப்பை காலநிலை என்று மாற்றுவதே சிறந்தது.−முன்நிற்கும் கருத்து G.Kiruthikan (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
=ஆதாரங்கள்
தொகு- தரம் 1 தொடக்கம் 11 வரையான இலங்கை அரசின் புவியியல் பாடப்புத்தகங்கள்
- இலங்கையில் வெளியிடப்படும் சுற்றாடல் தொடர்பான இதழ்கள்−முன்நிற்கும் கருத்து G.Kiruthikan (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.