பேச்சு:தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்
https://ta.wiktionary.org/s/e1f என்ற பகுப்பு போல, ஊடகங்களுடன் மேம்படுத்த வேண்டும்.--≈ த♥உழவன் ( கூறுக ) 17:01, 19 சூலை 2013 (UTC)
தலைப்பு
தொகுஒற்றை எழுத்துச் சொற்கள் என்றால் ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்றவாறு எழுத்துக்களின் எண்ணிக்கை ஒற்றையாக உள்ள சொற்களென்று பொருள். எனவே, இதன் தலைப்பு தமிழிலுள்ள ஓரெழுத்துச் சொற்கள் என்றிருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 17:40, 19 சூலை 2013 (UTC)
- பாஹிம், ஒற்றை எழுத்துச் சொற்கள் ஒரு எழுத்திலான சொற்களைத்தானே குறிப்பிடுகிறது. ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்பது ஒற்றைப்படை எண்கள் என்று குறிப்பிடப்படுகிறது என நினைக்கிறேன். இருப்பினும், தாங்கள் பரிந்துரைத்துள்ள தலைப்பு தமிழிலுள்ள ஓரெழுத்துச் சொற்கள் என்பது நன்றாக இருக்கிறது. இத்தலைப்பை முதன்மைத் தலைப்பாக்கிக் கொண்டு, தமிழில் உள்ள ஒற்றை எழுத்துச் சொற்கள் எனும் தலைப்பை வழிமாற்றாகப் பயன்படுத்தலாம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 18:00, 19 சூலை 2013 (UTC)
தேனியாரே, ஒற்றைப்படை என்று நாம் குறிப்பிட்டால் ஒவ்வொன்று, மும்மூன்று, ஐவைந்து, ஏழேழு ... என்றவாறு வரும். ஒற்றை என்றால் ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு ... என்றமையும். ஓரெழுத்து என்றால் ஒன்று மட்டும் என்று பொருள். எனவே, இது தமிழிலுள்ள ஓரெழுத்துச் சொற்கள் என்ற தலைப்பிற்கு வழிமாற்றின்றி நகர்த்தப்பட வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 06:46, 21 சூலை 2013 (UTC)
- ஓரெழுத்தொருமொழி = ஒர் எழுத்து ஒரு மொழியாய் நிற்கும் நிலைமை - தொல்காப்பியக் குறியீடு.
- ஈரெழுத்தொருமொழி = ஈர் எழுத்து ஒரு மொழியாய் நிற்கும் நிலைமை - தொல்காப்பியக் குறியீடு.
எண்ணிச் செயல்படுவோம் --Sengai Podhuvan (பேச்சு) 00:29, 23 சூலை 2013 (UTC)
- செங்கை ஐயா கூறியது போல ஓரெழுத்தொருமொழி என்பதை ஏற்கலாம். தமிழ் இலக்கணத்தில் அவ்வாறே பயன்று வந்தமையால் தமிழில் உள்ள ஒற்றை எழுத்துச் சொற்கள், தமிழிலுள்ள ஓரெழுத்துச் சொற்கள் என்பதை தவிர்த்து ஓரெழுத்தொருமொழி சொற்களின் பட்டியல் என்று தலைப்பிட்டாலும் தமிழர்களால் அறிந்து கொள்ளுதல் இயலும் என்றே நினைக்கிறேன். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:59, 23 சூலை 2013 (UTC)