பேச்சு:தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014
தேர்தல் கருத்து கணிப்புகளை இப்போது போடவேண்டாம் என்று கருதுகிறேன். ஒவ்வொரு முறையும் இது மாறும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சொல்லுவார்கள். --குறும்பன் (பேச்சு) 17:17, 6 மார்ச் 2014 (UTC)
- வணக்கம், குறும்பன்! கருத்துக் கணிப்புகள் மாறும்; பலரும் பலவிதமாக சொல்வார்கள் எனும் உங்களின் கருத்தினை ஏற்கிறேன். ஆனால், இங்கு அவைகளையும் போட்டுவருவதன் காரணங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்:
- கருத்துக் கணிப்புகள் எப்படி இருந்தன, தேர்தலின் இறுதியில் முடிவுகள் எவ்வாறு இருந்தன என்பதனை தெரிந்துகொள்ள இயலும்.
- தொடக்கத்தில் கருத்துக் கணிப்புகள் எப்படி இருந்தன, தேர்தல் நெருங்கநெருங்க, கூட்டணிகள் முடிவானபிறகு கருத்துக் கணிப்புகள் எப்படி மாறின என்பதனை தெரிந்துகொள்ள இயலும். இதனாலேயே கருத்துக் கணிப்புகள் என்று வெளியாகின எனும் தகவலையும் சேர்த்து எழுதுகிறேன்.
- புள்ளியியலை அடிப்படையாகக் கொண்டுள்ள கருத்துக் கணிப்புகள், தமிழக அரசியலில் எவ்வாறு நம்பகத்தன்மையாக இருக்கிறது என்பதனை தெரிந்துகொள்ள உதவும் ஒரு முயற்சியாக அவைகளை இட்டு வருகிறேன்.
- மேலும் புள்ளியியலில் ஒரு தனிப்பட்ட ஆர்வமும் உண்டு!
- தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் எதையும் நாம் மீறவில்லை; ஊடகங்களில் வருவதை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம்.
- ஆங்கில விக்கியின் இந்தியப் பொதுத் தேர்தல் 2014 எனும் கட்டுரையில் கருத்துக் கணிப்புகள் குறித்து தகவல்களை தொடர்ந்து சேர்க்கிறார்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:27, 7 மார்ச் 2014 (UTC)
- வணக்கம், குறும்பன்! Opinion polling for the Indian general election, 2014 எனும் தனிக் கட்டுரையினையும் காணுங்கள் வேறு ஏதும் மாற்றுக்கருத்து இருப்பின், தெரிவியுங்கள்; சரிசெய்து கொள்ளலாம்; நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:38, 7 மார்ச் 2014 (UTC)
நிலை இன்னமும் முடிவாகவில்லை என்பதில் இன்னமும் என்பதற்கு பதில் தேதியை குறிப்பிட்டால் என்று வரை முடிவாகவில்லை என்று தெரியும்.--குறும்பன் (பேச்சு) 22:10, 8 மார்ச் 2014 (UTC)
- உரியன செய்யப்பட்டது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:28, 10 மார்ச் 2014 (UTC)
நேற்று ஒரு செய்தியாளருடன் பேசிய போது, தேர்தல் தொடர்பான தகவலுக்குத் தமிழ் விக்கிப்பீடியாவை நாடி வருவதாகவும் பல தகவல்கள் பயனுள்ளதாகவும் முழுமையாகவும் உள்ளதாக குறிப்பிட்டார். மகிழ்ச்சியாக இருந்தது. இது தொடர்பாக பங்களித்து வரும் சிவகுரு, குறும்பன், தமிழ்க்குரிசில் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும் :) --இரவி (பேச்சு) 14:17, 17 ஏப்ரல் 2014 (UTC)
- ஆலந்தூர் இடைத்தேர்தல் (இக்கட்டுரையிலேயே எழுதலாமா?) பற்றி எழுத வேண்டும் எத்தனை பேர் இறுதி வேட்பாளர்கள் என்று தெரியவில்லை --பழனியப்பன் (பேச்சு) 00:12, 25 ஏப்ரல் 2014 (UTC)
தலைப்பு மாற்றம் தேவை
தொகுதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் என்றால் தமிழ்நாடு இந்தியாவில் இல்லை போலக் காண்கிறது. எனவே தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது இந்திய நாடாளுமன்றத் தேர்தல் (தமிழ்நாடு) என்று தலைப்பிடுக !
- அனானியின் கருத்து சரியானது. தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் என்றால் தமிழ்நாடு இந்தியாவின் கீழ் அடிமைபட்டிருப்பது போன்றுள்ளது. தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல், 2015 என்றோ, இந்திய நாடாளுமன்றத் தேர்தல் (தமிழ்நாடு), 2015 என்றோ இருக்க வேண்டும். ஏதோ ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் ஒன்றுக்கு வழிமாற்றையும் உருவாக்கலாம். --Mdmahir (பேச்சு) 02:21, 4 செப்டம்பர் 2015 (UTC)