பேச்சு:தலைமையாசிரியர்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Theni.M.Subramani

இலங்கையிலும் தலைமையாசிரியர்தானா? அல்லது வேறு ஏதும் சொற்கள் பழக்கத்தில் உள்ளனவா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:03, 9 சூலை 2013 (UTC)Reply

தலைமையாசிரியரே புழக்கத்தில் இருந்தது. இப்போது அதிபர் என்கிறார்கள்.--Kanags \உரையாடுக 09:34, 9 சூலை 2013 (UTC)Reply

தலைமையாசிரியர் என்பது பள்ளிகளுக்குத்தான் தமிழகத்தில் சொல்கிறார்கள். கல்லூரிகளுக்கு தமிழகத்திலும் பிரின்சிப்பல் அல்லவா.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:16, 26 சூலை 2013 (UTC)Reply

ஆம் தென்காசி, பிரின்சிபால் ????? இதையே இலங்கையில் தமிழில் அதிபர் என்கிறார்கள்.-- :) நிஆதவன் ( உரையாட ) 14:12, 26 சூலை 2013 (UTC)Reply
தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசின் கீழான அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமே தலைமையாசிரியர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கில வழிக் கல்வி அளிக்கும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் இந்திய அரசு பாடத்திட்டத்தின் கீழான பள்ளிகளில் “முதல்வர்” (Principal) என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:02, 26 சூலை 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தலைமையாசிரியர்&oldid=1468013" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தலைமையாசிரியர்" page.