பேச்சு:துரோண பருவம்

துரோண பருவம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பருவம்

தொகு

பர்வம்??--203.13.3.92 03:01, 30 சூன் 2014 (UTC)Reply

இங்கே பார்க்கவும். ---மயூரநாதன் (பேச்சு) 03:44, 30 சூன் 2014 (UTC)Reply
மயூரநாதன், அதனைக் கேட்டது நான் தான். (அலுவலகக் கணினியில் புகுபதிகை செய்வது சிரமமாக உள்ளது). பர்வம் தமிழ்ச் சொல் மாதிரித் தெரியவில்லை. இதற்கு நல்ல தமிழ்ச் சொல் கட்டாயம் இருக்கும். பர்வம் என்பது பகுதி என்பதைக் குறிக்குமா? மகாபாரதம் கட்டுரையில் மகாபாரதம் 18 பர்வங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன எனக் கூறப்படுகிறது. ஆனால், பர்வம் என்ற சொல்லைப் பற்றிய விளக்கம் எதுவும் இல்லை. நான் இதனை முதற் தடவையாகக் கேள்விப்படுகிறேன். பருவம் என்பதே பர்வம் என்கிறார்களா? ஆங்கில விக்கியிலேயே parva என்பதற்கு அடைப்புக் குறிக்குள் book என விளக்கம் தருகிறார்கள். அவ்வாறு எளிய தமிழில் ஒரு விளக்கம் தந்தால் நல்லது.--Kanags \உரையாடுக 08:55, 30 சூன் 2014 (UTC)Reply
சிறீ, பர்வம் என்பது தமிழ் அல்ல. ஆனால், இதற்குச் சரியான தமிழ் என்னவென்று தெரியவில்லை. சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியில் இந்தச் சொல்லும் இந்தப் பொருளில் இல்லை, அதேவேளை parva என்பதற்கான தமிழ்ச் சொல்லும் காணப்படவில்லை. நான் மேலே தந்துள்ள இணைப்பில் உள்ள மொழிபெயர்ப்பிலும், வேறு சில கட்டுரைகளிலும் பர்வம் என்ற சொல்லே பயன்பட்டுள்ளது. இராஜாஜியின் மகாபாரதத்தில் அவர் என்ன சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் என்று தெரியவில்லை. நல்ல தமிழ்ச் சொல் கிடைத்தால் மாற்றிவிடலாம். ---மயூரநாதன் (பேச்சு) 17:55, 30 சூன் 2014 (UTC)Reply
பருவம் என்று படித்ததாக நினைவு. உதாரணம்: விராட பருவம். இங்கும் பாருங்கள்--நந்தகுமார் (பேச்சு) 18:43, 30 சூன் 2014 (UTC)Reply
நன்றி நந்தகுமார். துரோண பருவம் என்றே மாற்றி விடலாம்.--Kanags \உரையாடுக 09:43, 1 சூலை 2014 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:துரோண_பருவம்&oldid=3797309" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "துரோண பருவம்" page.