பேச்சு:தேவராய சுவாமிகள்
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic இந்த ஆசிரியர் பெயர் தவறு. சான்று தருக
இங்கு 1857ல் பிறந்தாக குறிப்பிடப்படுகிறது. பகுப்பு 16ஆம் நூற்றாண்டு என்று உள்ளது. இவர் பிறந்தது 19ஆம் நூற்றாண்டா அல்லது 16ஆம் நூற்றாண்டா? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:06, 30 மே 2020 (UTC)
இந்த ஆசிரியர் பெயர் தவறு. சான்று தருக
தொகுஆசிரியர் பெயர் தவறு. தமிழ் இலக்கியம் முழுவதும் இடைச்செருகல் அதிகம். அதுபோலவே பால தேவராயன் என்பதற்கு சான்றில்லை.--த♥உழவன் (உரை) 10:43, 15 சூன் 2021 (UTC)
- @Info-farmer: பெயர் தவறு என்று ஆணித்தரமாகக் கூறுகிறீர்கள். அப்படியென்றால் அவரது உண்மைப் பெயர் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா? என்ன பெயர்?--Kanags \உரையாடுக 10:54, 15 சூன் 2021 (UTC)
- ஆம். சான்றை ஆவணமாகக் கேட்டுள்ளேன். ஓரிருநாளில் தருகிறேன். பழைய படைப்பாளி என்பதால் கூடுதல் சான்றினை பிறர் தரக்கூடும் என்பதால் அனைவருக்குமான ஆலமரத்தடியில் அறிவித்துள்ளேன்--த♥உழவன் (உரை) 00:50, 16 சூன் 2021 (UTC)
- இந்த தளத்தில் பல ஆவணங்கள், முருகன்/கௌமாரம் சிறப்பாக உள்ளன. எனவே, அவற்றில் உள்ள ஆவணத்தில் தேவராயன் என்றே உள்ளது. இணைப்பு--த♥உழவன் (உரை) 05:44, 19 ஆகத்து 2021 (UTC)
- @Info-farmer: விருப்பம். திருச்செந்தூர் கந்த சஷ்டி கவசதில் உள்ள 'பாலன் தேவராயன் பகன்றதை' என்னும் வரியில் இருந்து கொண்டு கூட்டி இவரது பெயரை பால தேவராயர் என்று கூறுகிறார்கள். அந்தவரிக்குப் பொருள் சிறுவனான தேவராயன் என்பதே ஆகும். இங்கு இறுதியில் உள்ள பழமுதிர்சோலை கவசத்திலும் கீழிருந்து மேலாக பத்தாவது வரியில் தன் பெயராக தேவராயன் என்பதையே கூறுகிறார். CXPathi (பேச்சு) 15:33, 24 செப்டம்பர் 2021 (UTC)
வல்லூர் தேவராசப்பிள்ளை என்னும் கட்டுரையும் இவரைப்பற்றியதே. -12:49, 29 செப்டம்பர் 2021 (UTC)
- ஆனால், இவர் எழுதியதாகக் கூறப்படும் குசேலோபாக்கியானம் நூலை உண்மையில் எழுதியது மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்கிறார் உவேசா. பார்க்க: பதிமூன்றாம் அத்தியாயம் - பங்களூர் யாத்திரை -CXPathi (பேச்சு) 13:10, 29 செப்டம்பர் 2021 (UTC)
தேவராய சுவாமிகள் என்பவரும் வல்லூர் தேவராசப்பிள்ளை ஆகிய இருவரும் ஒருவர் அல்ல. இருவேறு நபர்கள்.--அருளரசன் (பேச்சு) 13:56, 29 செப்டம்பர் 2021 (UTC)
- தாங்கள் தந்த மேற்கோளில் இருவரும் ஒருவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. என்று உறுதியற்றே கூறப்பட்டுள்ளது. எனவே வேறு மேற்கோள் இருந்தால் நலம்.
- நானும் முடிந்த அளவிற்கு தேடிப்பார்த்தேன் ஐயா. வேறு எதுவும் கிடைக்கவில்லை (தனிப்பட்ட கருத்துக்களைத் தவிர்த்து). ஆசிரியரின் பெயரே கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் தவறாகக் குறிப்பிடப்படும் நிலையில் மேலும் உறுதியான தரவு கிடைக்க வாய்ப்பு குறைவு என்றே நினைக்கிறேன். இரண்டு பெயர்களின் ஒற்றுமையையும், ஊர், தந்தை, ஆசிரியர் ஆகியோர் ஒன்றாகவே இருப்பதாலும் இருவரும் ஒருவராக இருக்க மட்டுமே வாய்ப்பு ஐயா. எனவே, இரண்டு பக்கங்களையும் இணைக்க பரிந்துரைக்கிறேன். மேலதிக தரவுகளை யாராவது அளித்தால் பின்னர் தனிப்பக்கங்களை உருவாக்கிக் கொள்ளலாம். -CXPathi (பேச்சு) 15:45, 29 செப்டம்பர் 2021 (UTC)
- தாங்கள் தந்த மேற்கோளில் இருவரும் ஒருவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. என்று உறுதியற்றே கூறப்பட்டுள்ளது. எனவே வேறு மேற்கோள் இருந்தால் நலம்.