பேச்சு:தொடர்க் குதை
குதை என்ற சொல் புரியும்படியாக இல்லையே! வேறு இணையான சொற்கள் உள்ளனவா? குதை என்பதன் பொருள் என்ன?-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:08, 15 திசம்பர் 2013 (UTC)
- தமிழ் இது இலங்கை கணினி பாடப் புத்தகத்திலிருந்து பெறப்பட்ட சொல். ஆங்கிலம் = port . வேறு சொற்கள் தெரியவில்லை! --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:42, 15 திசம்பர் 2013 (UTC)
- நானாக ஊகித்ததை சொல்கிறேன். குதம் (கூதி) என்பது மனிதரின் உறுப்புகளுள் ஒன்று. நுழைவாயில் போன்றது. அதை ஒட்டி குதை என்ற சொல் வந்திருக்கலாம். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:03, 15 திசம்பர் 2013 (UTC)
- அப்படியும் இருக்கலாம். :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 16:07, 15 திசம்பர் 2013 (UTC)
- இன்று இலங்கையில் கலைச்சொல்லாக்கம் செய்பவர்கள் பொதுவாக சிங்கள மொழிச் சொற்களில் இருந்தே பெறுகிறார்கள் என்று அறிந்தேன். இதுவும் அதில் ஒன்றாக இருக்கலாம்.--Kanags \உரையாடுக 20:06, 15 திசம்பர் 2013 (UTC)
வெறும் ஊகங்களைக் கொண்டு நற்றமிழ்ச் சொற்களுக்குப் பொருள் கொள்வதைத் தவிர்த்தல் நன்று. குதை என்பது ஏற்கனவே வழக்கிலுள்ள சொல். கம்பராமாயணம், கந்தபுராணம் போன்ற இலக்கியங்கள் கையாண்டுள்ள இச்சொல் socket என்ற பொருள் கொண்டது. இது சிங்களச் சொல்லிலிருந்து வந்ததோ, அருவருப்பான சொல்லிலிருந்து வந்ததோ அல்ல. சென்னைப் பல்கலைக்கழத் தமிழ்ப் பேரகராதி உட்பட பல்வேறு தமிழகராதிகள் இதற்கு நற்பொருள் தருகின்றன. இது பல நூற்றாண்டுகளாக வழக்கிலுள்ள தமிழ்ச் சொல். ஒரு சொல்லைப் பற்றித் தெரியாவிடின் அது அப்படி இருக்கலாம், இப்படி இருக்கலாம் என்று ஊகிக்க முன் அதைப் பற்றித் தேடிப்பார்க்க வேண்டுமன்றோ.--பாஹிம் (பேச்சு) 02:07, 16 திசம்பர் 2013 (UTC)
தொடரா தொடர்பா
தொகுஇக்கட்டுரையில் தொடர் என்ற சொல் தொடர்பு (=communication) என்பதற்கு இணையாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கருதுகிறேன். தொடர் என்பது ஒன்றையடுத்து ஒன்று வரும் வரிசை தானே. விளக்க வேண்டுகிறேன். அல்லது serial port, serial devices என்பதற்கான கலைச்சொல்லாக்கமா ? --மணியன் (பேச்சு) 19:29, 15 திசம்பர் 2013 (UTC)
- தொடர் எனும் சொல் தொடர்புக்குப் பதிலாகப் பயன்படவில்லை.serial port- தொடர்க் குதை, serial devices -தொடர்ச் சாதனங்கள். --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 23:43, 15 திசம்பர் 2013 (UTC)