பேச்சு:நீலம் (மலர்)
அன்புள்ள சண்முகம், தங்கள் திருத்தத்தில் தெளிவு இல்லை. முன்பு இருந்தது போல மீட்டு அமையுங்கள். தமிழ் நம்முடையது. தெளிவு இருக்கட்டும். விளையாட வேண்டாம் எனப் பணிவுடன் வேண்டுகிறேன்.. --Sengai Podhuvan (பேச்சு) 20:41, 28 மார்ச் 2012 (UTC)
- வணக்கம் ஐயா.. ஐயா நான் செய்த மாற்றங்களில் எவ்விதத்திலும் விளையாடவில்லை... இது விக்கிப்பீடியா கொள்கை.. வெளியிணைப்புகள் கட்டுரையின் நடுவில் இருக்க கூடாது. எனவே அதை வெளியிணைப்புகள் பகுதியில் இட்டேன்.. வேண்டுமானால் reference ஆக கொடுக்கலாம்.. பார்க்க WP:EL... அல்லது en:WP:EL.. நன்றி..--shanmugam (பேச்சு) 04:12, 29 மார்ச் 2012 (UTC)
- எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் இட்டுவிட்டுப்போங்கள் அது உங்கள் விருப்பம். விக்கிக்கு உகந்ததும் அதுவே. தெளிவான செய்தியைக் குழப்பி மாற்றியிருக்கிறீர்கள். அதுதான் என்கவலை. நான் எழுதியிருந்த பழைய வாக்கியத்தில் குறை கண்டால் தெளிவு கிடைக்கும்படி திருத்துங்கள். குழப்புதீர்கள். அன்பு மாறாத --Sengai Podhuvan (பேச்சு) 07:06, 29 மார்ச் 2012 (UTC)
- வணக்கம் ஐயா நான் விளையாடியதில் எது குழம்பியுள்ளது என்பதை கூறினால் திருத்திக் கொள்ள உதவியாக இருக்கும்.
- \\எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் இட்டுவிட்டுப்போங்கள் அது உங்கள் விருப்பம். விக்கிக்கு உகந்ததும் அதுவே.\\ என்னுடைய விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் உருவாக்குவது விக்கிக்கு உகந்தது அல்ல.. அனைவரின் கருத்திற்கேற்ப, விக்கியின் கொள்கைகளுக்கு ஏற்றவாறு உருவாக்குவதே விக்கிக்கு உகந்தது என்பது என் தாழ்மையான கருத்து.. எனவே எந்த திருத்தம் தெளிவில்லை என கூறினால் கண்டிப்பாக திருத்திவிடுகிறேன்..மேலும் இப்போதைக்கு அதை வெளியிணைப்புகளுக்கு பதிலாக மேற்கோளாக தந்திருக்கிறேன்....நன்றி --shanmugam (பேச்சு) 09:53, 29 மார்ச் 2012 (UTC)
அன்புள்ள கலாமணி மதனாகரன், தமிழ் மணிகளோடு தொடர்பு கொள்ளும் வாய்ப்பினை உருவாக்கியுள்ளீர்கள்.மகிழ்ச்சி.உங்கள் தொண்டு தொடர்ந்து மலரட்டும். நீலம் (மலர்) கட்டுரை உள்ளது. பாருங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 12:37, 29 மார்ச் 2012 (UTC)
- கனகசீர் செய்துள்ள மாற்றம் சரியாக உள்ளது. பாராட்டுகள்.--Sengai Podhuvan (பேச்சு) 12:46, 29 மார்ச் 2012 (UTC)
- அதைத்தானே ஐயா நானும் மேலே கூறினேன்..வேண்டுமானால் reference ஆக கொடுக்கலாம். என்று.. ஆனாலும் தங்களிடம் இருந்து நான் இக்கட்டுரையில் விளையாடியுள்ளேன் என்றொரு வார்த்தை வரும் வரும் என நான் எதிர்பார்க்கவில்லை ஐயா --shanmugam (பேச்சு) 12:54, 29 மார்ச் 2012 (UTC)
- சண்முகம், இதில் விவாதிப்பதற்கு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் எனது சில கருத்துகள். கட்டுரையில் குறிப்பிட்ட வரிகள் மேற்கோள் இல்லாமல் எழுத முடியாது. அவ்வாறு எழுதினால், யாரும் அதற்கு cn வார்ப்புருவைத்தான் இணைத்திருப்பார்கள். பொதுவன் ஐயா தந்த மேற்கோளை நீக்கி விட்டு நீங்கள் அதனை வெளி இணைப்பாகத் தந்தது தவறு. வேண்டுமானால் reference ஆக கொடுக்கலாம். என்பதும் தவறு, வேண்டுமானால் அல்ல கட்டாயம் அது மேற்கோளாகவே கொடுக்கப்பட வேண்டும். பொதுவன் ஐயா ref வார்ப்புருவை இணைப்பதற்குப் பதிலாக மறந்தோ, அல்லது விக்கித் தொழில்நுட்பம் தெரியாமலோ கட்டுரையினுள்ளேயே வெளியிணைப்பைத் தந்திருக்கிறார். இதனை இத்தோடு விட்டு விடுவோம். நன்றி.--Kanags \உரையாடுக 13:17, 29 மார்ச் 2012 (UTC)
- நன்றி kanags.. ஒரு சிறு தவறுதான்..அதை உணர்ந்து திருத்த முயன்ற போது தாங்களே திருத்தியிருந்தீர்கள்.. மிக்க நன்றி.. :-( (என் பேச்சுப் பக்கத்திலும்.. இங்கேயும் ஐயா கூறியுள்ள சில கருத்துகள்(வார்த்தைகள்) சிறு வருத்தத்தை ஏற்படுத்தியது அவ்வளவுதான்)..சரி விடுங்கள் :-( --shanmugam (பேச்சு) 17:03, 29 மார்ச் 2012 (UTC)
சண்முகம் நன்னோக்கிலேயே தொகுத்துள்ளார். அது வழமையான விக்கி நடைமுறைக்கு மாறி இருந்தால் அதனைக் கனிவாகச் சுட்டிக் காட்டினால் போதும். விளையாட வேண்டாம் போன்ற கடுமையான சொற்களைப் பயன்படுத்துவது பங்களிப்பாளர்கள் மற்றவர்கள் தொடங்கிய கட்டுரைகளை மேம்படுத்த முனைவதில் இருந்து ஊக்கம் குன்றவே செய்யும். நன்றி--இரவி (பேச்சு) 06:44, 30 மார்ச் 2012 (UTC)
Start a discussion about நீலம் (மலர்)
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve நீலம் (மலர்).