பேச்சு:பதி வைத்தல்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Thamizhpparithi Maari
இக்கட்டுரையின் தலைப்பினை பதியனிடல் என்று மாற்றலாம். பதியன் அல்லது பதியனிடல் என்ற சொற்கறையே மக்களும், உழவியல் துறையினரும், தோட்டக்கலைத்துறையினரும், வனவியலாரும் பயன்படுத்துகின்றனர்.--Thamizhpparithi Maari (பேச்சு) 17:23, 5 நவம்பர் 2013 (UTC)
- என் இளவயதில் தாயார் கூறக் கேட்டிருக்கிறேன். பதியம்போடுதல் என்பார். பதியனிடல் என்று மாற்றலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:33, 5 நவம்பர் 2013 (UTC)
- பதியம்போடுதல் என்ன சொல் பேச்சு வழக்கில் உள்ளது உண்மையே, பதி வைத்தல் என்று நான் கேள்விப்பட்டதில்லை, பதியனிடல் என்பதையே துறை வல்லுநர்கள் பயன்படுத்துகின்றர். தங்கள் கருத்துரை/ பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.--Thamizhpparithi Maari (பேச்சு) 18:33, 5 நவம்பர் 2013 (UTC)
- என் இளவயதில் தாயார் கூறக் கேட்டிருக்கிறேன். பதியம்போடுதல் என்பார். பதியனிடல் என்று மாற்றலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:33, 5 நவம்பர் 2013 (UTC)
- இலங்கையில் பாடநூல்கள் உட்பட பதி வைத்தல் பயன்படுத்தப்படுகின்றது. வழிமாற்று ஒன்றை இடலாம். பார்க்க விவசாய விஞ்ஞான செயன்முறைக் கைநூல் --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:12, 7 நவம்பர் 2013 (UTC)
- அன்பு சஞ்சீவி வணக்கம். பதியன் குறித்து கூகிள் தேடுபொறியில் தேடியபோது, பதி வைத்தல் என்ற சொல் எங்குமே இல்லை, விக்கிப்பீடியா தவிர்த்து (தங்களின் பதிவைத்தவிர, பதி வைத்தல் என்ற சொல் பயன்பாட்டில் இல்லை. என் கருத்துப்படி பதிவைத்தல் என்பது இலங்கையின் மொழி வழக்கெனக் கருதுகின்றேன். நான் வேளாண் அறிவியல் படித்தவன் என்னும் முறையில் சொல்கின்றேன்; பதிவைத்தல் என்னுஞ்சொல் தமிழகத்தில் எங்குமே புழக்கத்தில் இல்லை. சான்றாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணையதளம் பதியன் என்ற சொல்லையே பயன்படுத்தி உள்ளது. பதி வைத்தல் என்னும் சொல் ஈழத்தமிழ் வழக்கென்றும், பதியன் என்பதை தமிழகத்தமிழ் வழக்கென்றும் குறிப்பிடலாம் என்பதென் கருத்து; பின்னூட்டங்கள் வரவேற்கப்பெறுகின்றன.--Thamizhpparithi Maari (பேச்சு) 08:44, 7 நவம்பர் 2013 (UTC)
- பதி என்ற சொல் வேறுபட்ட பொருளில்(பெரும்பாலும் தலைவன்), தமிழ்இலக்கியங்களில் பல்லாயிரகணக்கான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (எ.கா)
- புறநானூறு: பதி முதல் பழகா பழங்கண் வாழ்க்கை
- பொருநராற்றுப்படை: செல்வ சேறும் எம் தொல் பதி பெயர்ந்து என
- பெரும்பாணாற்றுப்படை: மறை காப்பாளர் உறை பதி சேப்பின்
- பதினெண்கீழ்க்கணக்கு: பதி பாழ் அக வேறு புலம் படர்ந்து
- பரிபாடல்: உரிதினின் உறை பதி சேர்ந்து ஆங்கு
- பதிற்றுப்பத்து: பல் ஆயமொடு பதி பழகி
- நற்றிணை: புள்ளு பதி சேரின் உம் புணர்ந்தோர் காணினும்
- மலைபடுகடாம்:செல்வேம் தில்ல எம் தொல் பதி பெயர்ந்து என
- குறுந்தொகை:உறை பதி அன்று இ துறை கெழு சிறுகுடி
- குறிஞ்சிப்பாட்டு:விசும்பு ஆடு பறவை வீழ் பதி படர
- கலிங்கத்துப்பரணி:பதி படர்ந்து இறைகொள்ளும் குடி போல பிறிது உம் ஒரு
- அகநானூறு:தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி
- மதுரைக்காஞ்சி: கொழும் பதிய குடி தேம்பி
- சைவசித்தாந்தத்தின் தத்துவமாகவும் (பசு, பதி, பாசம்) பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பதியம் என்ற சொல், வேளாண்முறையை மட்டுமே குறிக்கிறது. எனவே, கட்டுரையின் பெயரில் மயக்கநிலையை மாற்ற, இரு நாட்டு வழக்கு சொல்லுக்கு ஏற்ப தலைப்பை மாற்றுதல் நலம்.--≈ த♥உழவன் ( கூறுக ) 08:36, 8 நவம்பர் 2013 (UTC)
- தகவலுழவன் பதி என்னுஞ் சொற்கள் குறித்த நீங்கள் அளித்துள்ள விளக்கங்கள் எமக்கு தமிழின் மேலான ஆர்வத்தையும் அன்பையும் ஆழமாக்குகின்றன.--Thamizhpparithi Maari (பேச்சு) 17:13, 8 நவம்பர் 2013 (UTC)