பனை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
பனை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தமிழில், தொல்காப்பியர் வரையரையின் படி அகக்காழனவே மரமென்ப, புறக்காழனவே புல்லென்ப. காழ் என்பது உறுதியானது. புல்லுக்கு புறத்தே உறுதியாய் இருக்கும் மரத்திற்கு அகத்தே உறுதியாய் இருக்கும், மூங்கில் பனை என்பன புல்லினம் தான், ஆனால் பேச்சு வழக்கில் மூங்கில் மரம் என்கிறோம். தமிழர்களின் நிலைத்திணையியல் அறிவு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்புவரை முன்னணியினது. விரிவஞ்சி விடுகிறேன். கீழா நெல்லி என்பது அரை அடி முக்கால் அடி வளரும் ஒரு சிறு செடி(காமாலைக்கு மருந்தாவது), அதனை அறிவியலின் படி நெல்லி மரத்தை சேர்ந்தது என செடிநூலார் சொல்வர்.எப்படி இதனை கிழா நெல்லி எனப்பெயரிட்டார்கள் எறு எண்ணிப்பாருங்கள். தமிழர்களுடைய, மீன் பற்றிய அறிவும், செடிகொடிகள் பற்றிய அறிவும், உயிரங்களைப்பற்றிய அறிவும், மிக அண்மைக்காலம் வரை உலகமுன்னணியில் இருந்தது. வெறும் வெற்றுரை அல்ல.--C.R.Selvakumar 14:47, 13 ஜூன் 2006 (UTC)செல்வா

மிகவும் பயனுள்ள செய்தி. நன்றி செல்வா! --சிவகுமார் 14:53, 13 ஜூன் 2006 (UTC)

தொல்காப்பியர் மரபியலில் (ஓரறிவு உயிர் பற்றி):

புறக் காழனவே புல்லெனப் படுமே (பாடல் 630)
அகக் காழனவே மரமெனப் படுமே (பாடல் 631)

மேலும் புல் வகையின் உறுப்புகள் பற்றி (பாடல் 632):

தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பாளை என்றா
ஈர்க்கே குலையே செர்ந்த பிறவும்
புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்.

மரவகையின் உறுப்புகள் பற்றி அடுத்த பாடலில் சொல்லுகிறார்:

இலையே முறியே தளிரே தோடே
சினையே குழையே பூவே அரும்பே
நனையே உள்ளுறுத் தனையவை எல்லாம்
மரனொடு வரூஉம் கிளவி என்ப.

இரண்டிற்கும் பொதுவானது பற்றி அடுத்த பாடலில் சொல்லுகிறார்.

காயே பழமே தோலே செதிளே
வீழ்ழோடு என்றாங்கு அவையும் அன்ன.

--C.R.Selvakumar 14:57, 13 ஜூன் 2006 (UTC)செல்வா

தோடே என்று இருக்க வேண்டும்--C.R.Selvakumar 15:01, 13 ஜூன் 2006 (UTC)செல்வா

பாடல் 632ல் பிறவும் (பிறவே அல்ல) என்று இருக்கவேண்டும்.--C.R.Selvakumar 15:04, 13 ஜூன் 2006 (UTC)செல்வா

அருமை. தொல்காப்பியத்தை இவ்வளவு ஆழமாகக் கற்றுள்ளீர்கள். -- Sundar \பேச்சு 12:50, 14 ஜூன் 2006 (UTC)

தொல்காப்பியக் காலத்திலேயே மரம், புல் இரண்டுக்குமிடையே இவ்வளவு தெளிவாக வேறுபாடுகள் விளக்கப்பட்டிருக்க, இக்காலத்தில் நாங்கள் எல்லாவற்றையும் மரம் என்று ஒரே சொல்லில் சொல்லிவிடுகிறோம். இக்காலத்து நவீன துறைசார் தமிழர்கள், பழந்தமிழ் நூல்களையும் படித்துத் தற்காலக் கருத்துருக்களுக்கு இசைவான பல சொற்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும். செல்வா, உங்கள் எடுத்துக்காட்டுகளுக்கு நன்றி. Mayooranathan 16:09, 14 ஜூன் 2006 (UTC)

செல்வா, நீங்கள் விரிவஞ்சி விளக்காமல் விட்ட கருத்துக்களை தனி ஆய்வுக்கட்டுரைகளாகத் க்கட்டுரைகளாகத் தந்தால் மிகவும் பயன்மிக்கதாய் இருக்கும். இது மாதிரி கட்டுரைகளில் விக்கிபீடியாவில் இடம்பெறுவது தமிழ்ச்சூழலில் தக்கதும் அவசியமானதுமாகும்.--ரவி 08:51, 15 ஜூன் 2006 (UTC)


நண்பரே மிக முக்கியமான பனை கள்ளை விட்டு விட்டீர்களே? கள் பற்றி எழுத கூடாது என த. விக்கி. சொல்லி உள்ளார்களா?

நான் விளையாட்டுக்குத்தான் கேட்கிறேன்....

ஆனாலும் ஏன் கள் இடம் பெறவில்லை?

நன்றி மகிழ்நன்--Munaivar. MakizNan 02:15, 14 ஜூலை 2009 (UTC)

கட்டுரை இணைப்பு தொகு

இக்கட்டுரை இணைத்தல் குறித்த கருத்தை பனை மரம் (தமிழ் நாடு) என்ற தலைப்பின் கீழ் உள்ள உரையாடலில் கொடுத்துள்ளேன். நன்றிகளுடன். --சிங்கமுகன் 17:35, 24 ஆகத்து 2011 (UTC)Reply

இங்கிருக்கும் ஆசியப் பனை கட்டுரைக்குப் பொருத்தமான தகவல்களை மட்டும் அங்கே இடம் மாற்றுகின்றேன்.--கலை 14:23, 30 ஆகத்து 2011 (UTC)Reply

பனையின் பாலின வேறுபாடு தொகு

பனையின் பாலின வேறுபாடு என்பதில் பல நுண்ணிய கருத்துகள் உள்ளன. கட்டுரையாளர், தமிழின் அறிஞர் பேரவையால் மதிக்கப்படும் ஒருவர். --உழவன் (உரை) 16:12, 25 நவம்பர் 2018 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பனை&oldid=2605420" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பனை" page.