பறவை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
பறவை என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பறவைகளின் தமிழ்ப்பெயர்கள்

தொகு

கொடுக்கப்பட்டுள்ள ஆய்வுக்கட்டுரையில் 116 பறவைகளின் தமிழ்பெயர்களும் அவற்றின் அறிவியல் பெயர்களும் உள்ளன. நாம் அவற்றை பறவைகள் பட்டியல் கட்டுரையில் பதிவேற்றலாம். --சிவகுமார் \பேச்சு 13:17, 7 பெப்ரவரி 2008 (UTC)

மிகப் பயனுடைய இணைப்பு. நன்றிகள் சிவகுமார்! பல பறவைகளின் பெயர்களை பி.எல். சாமி அவர்கள் எழுதிய சங்க இலக்கியத்தில் பறவையின விளக்கம் என்னும் நூலில் உள்ளவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். சரியாக உள்ளன. பி.எல் சாமி இப்பொழுது நம்மிடையே இல்லை ஆனால் அவர்கள் எழுதிய நூல்கள், கட்டுரைகள் யாவும் முதன்மையானவை. சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம் (முந்தைய பதிப்பில் நிலைத்திணை விளக்கம் என்று இருந்தது), சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம் (தற்பொழுது என்னிடம் இல்லை), ஆகிய மூன்று நூல்களும் சாய்வின்றி நடுநிலை நிற்கும் சிறந்த ஆய்வுநூல்கள். பறவைகளின் வலசை (migration) பற்றிய செய்திகளும் பறவைகளின் பழக்க வழக்கங்கள் பற்றிய செய்திகளும் (சங்க இலக்கியத்தில் உள்ளவை) அருமையாக தொகுத்தும், புது ஒப்பீட்டு ஆய்வுகளும் செய்தும் எழுதியுள்ளார். --செல்வா 23:04, 15 மார்ச் 2008 (UTC)

தமிழில் பறவைப் பெயர்கள் என்னும் பெயரில் டாக்டர். க. ரத்னம் எழுதிய நூலொன்றை ஒரு ஆண்டுக்கு முன்னர் சென்னையில் வாங்கினேன். நானூற்றுக்கு மேற்பட்ட பறவை இனங்களின் ஆங்கிலப் பெயர்களும், அறிவியற் பெயர்களும், அவற்றுக்கு இணையாகத் தமிழில் வெளிவந்த பல நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட, ஒவ்வொன்றுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ்ப் பெயர்களும் உள்ளன. நல்ல பயனுள்ள தொகுப்பு. மயூரநாதன் 20:42, 2 ஏப்ரல் 2008 (UTC)

இந்தப் பெயர்ப் பட்டியலை வலையேற்றினால் பயனுள்ளதாக இருக்கும். செல்வா குறிப்பிட்டது போல பூக்கள், தாவங்களுக்கான பெயர்களும் ஒரு ஆய்வு நூலில் உண்டு. --Natkeeran 22:06, 2 ஏப்ரல் 2008 (UTC)
தமிழம்.நெட் என்னும் தளத்தில் இந்நூல் (தமிழில் பறவைப் பெயர்கள்) பதிவேற்றப்பட்டுள்ளது. பார்க்க. --சிவக்குமார் \பேச்சு 15:05, 24 மே 2010 (UTC)Reply

எட்வர்டு நிக்லாசு என்ற ஆங்கிலேயர் பி.பான்னல் என்ற நெல்லைத் தமிழர் உதவியுடன் சேகரித்து பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் இதழ்களில் வெளியிட்ட பறவைகளின் பொதுவழக்குத் தமிழ்ப்பெயர்கள், தியடோர் பாசுகரன் எழுதிய சோலைபாடியும் கானமயிலும் கட்டுரை வழியாக.[1]

சுந்தர் \பேச்சு

மேற்கோள்

தொகு
  1. பாசுகரன், சு. தியடோர் (2006). இன்னும் பிறக்காத தலைமுறைக்காக. சென்னை: உயிர்மை பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-89912-01-1.

மேலும் ஒரு இணைப்பு

தொகு

இந்தப் பக்கத்தில் பல்வேறு பறவைகளின் அறிவியல் பெயரினையும் சில இந்திய மொழிகளில் (தமிழ் உட்பட) அவற்றின் பெயர்களையும் கொடுத்துள்ளனர்.--சிவக்குமார் \பேச்சு 18:37, 7 அக்டோபர் 2008 (UTC)Reply

நன்றி சிவக்குமார்! அருமையான இணைப்பு! --செல்வா 19:24, 7 அக்டோபர் 2008 (UTC)Reply
அந்தக்கோப்பு இப்போது அங்கு இல்லை. பழைய பதிப்பை இங்கு இணையப்பரணில் பெறலாம். -- சுந்தர் \பேச்சு 12:20, 19 மே 2014 (UTC)Reply

சொல்+நடை பயன்பாடு

தொகு

"Mammalian niche" (பாலூட்டிகளின் சூழற்கூறு?) போன்ற தொடர்புடைய தகவல்களை விரித்து எழுதும் ஆவல் உள்ளது. ஆனால் பட்டாம்பூச்சி கட்டுரையிலுள்ளதுபோல் இயல்பான நடையும் சொல் பயன்பாடும் வர மறுக்கின்றன. :-( -- சுந்தர் \பேச்சு 04:55, 16 மார்ச் 2008 (UTC)

+Order --> வரிசை

தொகு

முதற்பக்கத்தில் திடீர் என்று இட்டுவிட்டதால், கருத்தாட நேரம் இல்லை. எனவே Order என்பதை வரிசை என்று கட்டுரையின் இறுதியில் உள்ள பறவை வரிசைகளில் சேர்த்துள்ளேன்.--செல்வா 20:22, 24 மார்ச் 2008 (UTC)

பாராட்டுக்கள்

தொகு

கட்டுரை, படங்களில் கொஞ்சும் தமிழைக் காண மகிழ்ச்சி. சுந்தர், செல்வா, மயூரனாதனுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்--ரவி 00:34, 2 ஏப்ரல் 2008 (UTC)

புள், குரீஇ

தொகு

யாரோ ஒருவர் (H.K. Arunஆ?) ஆதாரம் தேவை என்று குறிப்பு ஒட்டியிருந்தார். இப்பெயர்கள் பறவைப் பொது. அதாவது பொதுவாக பறவையைக் குறிக்கும் பெயர்கள். கழகத் தமிழ் அகராதி, சென்னை பல்கலைக்கழக அகராதி, பழைய நிகண்டுகள் (பிங்கலம்) போன்றவற்றுள் காணலாம். குரீஇ என்னும் சொல் புறநானூறு காலத்தில் இருந்து வழங்கும் பெயர். குரீஇ என்பது Passerine என்னும் Passeriformes வரிசையைக் குறிக்கும் இனமாக இருக்கும் என்று எண்னவும் இடம் தருகின்றது, ஆனால் பறவைப்பொது என்பதே உறுதியாகத் தெரிவது. புள் என்பதும் பறவைப்பொது. கழகத் தமிழ் அகராதி போன்றவற்றைப் பார்க்கவும்.--செல்வா 13:10, 28 ஏப்ரல் 2008 (UTC)

செல்வா, இந்த மேற்கோள்களைக் கட்டுரையில் சேர்த்துவிடுங்களேன். -- சுந்தர் \பேச்சு 14:59, 28 ஏப்ரல் 2008 (UTC)

க.ரத்தினத்தின் தமிழ்நாட்டுப் பறவைகள் புத்தகத்தைப் பற்றிய வலைப்பதிவுக் கட்டுரை

தொகு

இங்கே பார்க்கவும். --செல்வா 15:54, 14 திசம்பர் 2010 (UTC)Reply

பறவைகளும் வேடந்தாங்கலும்

தொகு

பறவைகளும் வேடந்தாங்கலும் என்னும் நூலி்ல் மா. கிருட்டிணன் அவர்கள் பயன்படுத்தியுள்ள சொற்கள்:

  • கோட்டான் - Barn owl or Screech owl
  • இராசாளி - Bonelle's Eagle
  • கன்னிக்கிளி - Lorikeet
  • ஊர்க்குருவி - அடைக்கலாங்குருவி - சிட்டுக்குருவி
  • உழவாரக்குருவி - தலையில்லாக் குருவி - House Swift
  • கரிக்குருவி - கரிச்சான் - காரி - கருவாட்டு வாலி - King Crow
  • கல்லுக்குருவி - Pied Bush-chat
  • கற்கௌதாரி - Common sand grouse
  • கீச்சாங் குருவி - Shrike
  • குறுங்காடை - Bustard Quail
  • கூளி - Tawny Eagle
  • கொண்டைக் கரிச்சான் - Racket-tailed Drongo
  • கொண்டைக் குருவி - கொண்டைக் கிளாறு - Bulbul
  • சோளப்பட்சி - சூறைக்குருவி - Rosy paster
  • தவிட்டுப்புறா - Liitle brown dove
  • தினைக்குருவி - Munia
  • நுண்ணிச்சிறை - Ashy Wren babbler
  • பச்சைக்காடை - பொன்னாந்தட்டான் - Pitta
  • பஞ்சுருட்டான் - Green Bee-eater
  • பனங்காடை - பாலக்குருவி - Roller

--சிவக்குமார் \பேச்சு 14:02, 16 ஏப்ரல் 2012 (UTC)

பயனுள்ள பதிவு, சிவா. கரிச்சான்குருவியைப் போய் காகம் என்கிறாரே என்று ஐயுற்றுத் துழாவியபோது King Crow என்பது Black Drongo-வின் மறுபெயர் எனத் தெரிந்து கொண்டேன். நன்றி. -- சுந்தர் \பேச்சு 14:17, 16 ஏப்ரல் 2012 (UTC)
நன்றி, சுந்தர். ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள //கரிச்சான்குருவியைப் போய் காகம் என்கிறாரே // எங்குள்ளது எனத் தெரியவில்லை.--சிவக்குமார் \பேச்சு 10:31, 17 ஏப்ரல் 2012 (UTC)
மேலே 'king crow' என்றுள்ளதை ஒருவகைக் காகம் என்று நினைத்து விட்டேன். அதனால் எழுந்த குழப்பமே, சிவா. வேறொன்றுமில்லை. -- சுந்தர் \பேச்சு 11:36, 17 ஏப்ரல் 2012 (UTC)
ஓ அப்படியா. சரி, சுந்தர்.--சிவக்குமார் \பேச்சு 13:16, 17 ஏப்ரல் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பறவை&oldid=2697706" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பறவை" page.