பேச்சு:பி. ஆர். பழனிச்சாமி

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by எஸ்ஸார் in topic Untitled
பி. ஆர். பழனிச்சாமி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

தொகு

மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வரின் பெயரையும், பி. ஆர். பழனிச்சாமி என்று எழுத வழியுள்ளதே! தலைப்பை மாற்றக் கோருகிறேன். பினாங்கு ராமசாமி, => பி(னாங்கு). பி(பழனிச்சாமி). ராமசாமி, (நம் வழக்கில்) அல்லது => பி(னாங்கு). ஆர்(ராமசாமி). பழனிச்சாமி (மேற்கத்தைய முறையில்)(தந்தையின் பெயரைத் தன் பெயர் எனும் போது) ஆகவே, தலைப்பை மாற்றுமாறு கோருகிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:05, 19 ஆகத்து 2012 (UTC)Reply

தமிழ்க்குரிசில், பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் பி.ஆர்.பி எனும் பெயர்களில் அறியப்படுபவர் கிரானைட் முறைகேடுகளில் தொடர்புடைய இவர்தான். பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பெயரை இப்படியும் வழங்கலாம் என்பதால் பெயர் மாற்றம் தேவை என்பது சரியானதன்று. அப்படி ஒரு நிலைமை வரும் போது தகுந்த மாற்றங்கள் செய்யலாம். அது வரை இப்பெயர் தொடரட்டும்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 12:47, 19 ஆகத்து 2012 (UTC)  விருப்பம்--Kanags \உரையாடுக 12:20, 20 ஆகத்து 2012 (UTC)Reply

நான் ஆதாரம் தேவை என்பதையும் துப்புரவாக்கம் தேவை என்பதையும் இணைத்ததை நீங்கள் எப்படி இல்லாமலாக்கலாம், தேனி எம் சுப்பிரமணி? முறைப்படி ஆதாரத்தை இணைப்பதுதானே சரி?--பாஹிம் (பேச்சு) 12:09, 20 ஆகத்து 2012 (UTC)Reply

ஆமாம் இவ்வாறான கட்டுரைகள் எழுதும் போது தகுந்த ஆதாரங்கள் தரப்பட வேண்டும். அண்மைய நிகழ்வுகள் என்ற படியால், கூகுளில் தேடினால் கட்டாயம் மேற்கோள்கள் கிடைக்கும்.--Kanags \உரையாடுக 12:23, 20 ஆகத்து 2012 (UTC)Reply
பாஹிம், தாங்கள் முதலில், //இந்நிலத்தில் தோண்டிய போது கிடைத்த கற்கள் விலை உயர்ந்த கருங்கற்களாக (கிரானைட்) இருந்தன.// எனக் குறிப்பிட்டிருந்த இடத்திற்கு ஆதாரம் தேவையில்லை என கருதியே நான் அதை முன்னிலையாக்கினேன். ஆனால், தாங்கள் அதற்கு முன்பு துப்புரவாக்கம் தேவை வார்ப்புருவைச் சேர்த்திருக்கிறீர்கள். நான் அதைக் கவனிக்கவில்லை, இதனால் தங்கள் தொகுப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டது. நான் மீண்டும் துப்புரவு வார்ப்புருவைச் சேர்க்க முயன்ற நிலையில் தாங்களே சரி செய்து விட்டீர்கள். ஆனால், உயர்ந்த கருங்கற்களாக (கிரானைட்) இருந்தன எனுமிடத்தில் ஆதாரம் எதுவும் தேவையில்லை என்றே கருதுகிறேன். தாங்கள் இரண்டாவது சேர்த்த 16 ஆயிரம் கோடி இழப்பு குறித்த செய்திக்கான ஆதாரத்தை இணைத்து விடலாம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:29, 20 ஆகத்து 2012 (UTC)  விருப்பம்--பாஹிம் (பேச்சு) 03:12, 21 ஆகத்து 2012 (UTC)Reply
பாஹிம், பழனிச்சாமி யதார்த்தமாக தோண்டிய இடத்தில் கிரானைட் கற்கள் இருந்தன என்பது பொதுவாக மதுரை சுற்றுவட்டாரங்களில் பரவலாக அறியக்கிடைக்கும் தகவல். கூடுதலாக இந்த ஊழல செய்திகள் கிளம்பியவுடன், பி.ஆர்.பி. குறித்த பின்புல வரலாற்றை வெளியிட்ட செய்தித்தாள்கள் சில இந்த தகவல்களையும் (//தோண்டிய போது கிடைத்த கற்கள் விலை உயர்ந்த கருங்கற்களாக (கிரானைட்) இருந்தன.//) வெளியிட்டன. அதுதான் இங்கே சேர்க்கப்பட்டது. இதற்கான ஆதாரத்தை நீங்களே கூட கூகுள் செய்து இணைக்கலாம். முடிந்தால் :).--எஸ்ஸார் (பேச்சு) 09:00, 21 ஆகத்து 2012 (UTC)Reply
Return to "பி. ஆர். பழனிச்சாமி" page.