பேச்சு:புணர்ச்சி விகாரம்

அன்புள்ள பிரபாகரன்
ஆர்வம், எழுச்சி, நோக்கம் நன்று
பாராட்டுகள் சொல்லோடு சொல் புணர்வது புணர்ச்சி

நால்கு - நான்கு
முயற்சி
போன்றவை சொல்லுக்குள் ஏற்படும் திரிபுகள். இவற்றை மாற்றிவிடுங்கள்.

இயல்+திரம்=என்பன வோன்றவை குழப்பம் தருபவை.
நீங்கள் உங்கள் கருத்துகளைச் சேர்க்கவேண்டுமானால் தெளிவான சான்றுகளைச் சேருங்கள். இன்றேல் அவற்றை விடுத்து இலக்கண உரையாசிரியர்கள் தந்துள்ள எடுத்துக்காட்டுக்களையே சான்றாக முன்வையுங்கள். இன்றேல் இலக்கணத்தில் பிழை நேரும்.

தமிழுக்குப் பிழை நேர்ந்தால் அது நமக்குந்தானே
அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 23:42, 6 மார்ச் 2014 (UTC)

நன்றி ஐயா...இதோ இக்கணமே மாற்றிவிடுகிறேன்... --ச.பிரபாகரன் (பேச்சு) 07:40, 7 மார்ச் 2014 (UTC)
ஐயா, ஒர்+று=ஒன்று, கல்+று=கற்று, நல்+று=நன்று, ஆள்+டு=ஆண்டு ஆகிய திரிபுகளுக்கு வருமொழி முதலெழுத்தில் சொற்கள் தொடங்காததால் உதாரணங்கள் இல்லை...இவற்றை நீக்கலாமா அல்லது பிற திரிபுகள் எனப் புதிய அட்டவணை ஒன்றை உருவாக்கி அதில் இடலாமா?...--ச.பிரபாகரன் (பேச்சு) 08:05, 7 மார்ச் 2014 (UTC)
ஐயா, ஓர் உதவி தேவை
  1. நால்+கு=நான்கு
  2. தென்+கு=தெற்கு
  3. கேள்+பு+அது=கேட்பது
ஆகியவற்றிற்கு, வேறு உதாரணங்கள் கிடைக்குமா?...--ச.பிரபாகரன் (பேச்சு) 08:25, 7 மார்ச் 2014 (UTC)

ஒருசொல்

தொகு

ஒரு சொல்லுக்குள் நிகழ்வதைத் திரிபு என்போம். நன்னூலார் கருத்துப்படி இது விகாரம்.
நன்னூல் காட்டும் விகுதிகளை எண்ணுவோம்
நல் என்பது பண்பைக் குறிக்கும் அடிச்சொல் நல்+(அ)து=நன்று - டாக்டர் மு.வ. கண்ட விளக்கம். நல்+மை=நன்மை
கல்+அல்=கல்லல் = தோண்டுதல், கல்+தல்=கற்றல் - இவற்றில் வரும் அல், தல் போன்றவை தொல்காப்பியர் கருத்துப்படி இடைச்சொற்கள். நன்னூல் இவற்றை விகுதி எனக் காட்டுகிறது.

ற் மொழிமுதல் ஆகாது. அந்தக் குத்து வரிசையை நீக்குங்கள்.

இவை அடிச்சொல், வேர்ச்சொல் பற்றிய ஆராய்ச்சி
இந்த ஆராய்ச்சி புணர்ச்சி பற்றிய செய்திகளில் இல்லாமல் இருப்பதே நன்று
பெயர், வினை ஆகிய இரண்டு சொற்கள் தனித்து நின்று பொருள் தருபவை. இவற்றுக்கு இடையே நிகழ்வது புணர்ச்சி.
தமிழைப் படி - தமிழ்+ஐ=தமிழை, +கு=தமிழுக்கு, +கண்=தமிழின்கண் - என வேற்றுமை உருபுகளாகிய இடைச்சொற்களோடு நிகழும் மாறுபாடுகளைத் தொல்காப்பியர் புணர்ச்சி என்னாது உருபியல், வேற்றுமை மயங்கியல் எனக் குறிப்பிட்டுள்ளதை எண்ணுவோம்.

குழப்பம் வேண்டாம்
ஒரு சொல்லுக்குள் நிகழும் மாற்றங்களை இங்கு விலக்குவோம்.--Sengai Podhuvan (பேச்சு) 20
09, 7 மார்ச் 2014 (UTC)
விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா...--ச.பிரபாகரன் (பேச்சு) 04:14, 8 மார்ச் 2014 (UTC)
  • எந்திரம் போன்ற சொற்களை நீக்குங்கள்
  • ட ற எழுத்துக்களுக்கு உருவாக்கப்பட்ட குத்து வரிசைக் கட்டங்களை நீக்குங்கள்.
  • நன்றி --Sengai Podhuvan (பேச்சு) 23:05, 8 மார்ச் 2014 (UTC)
மாற்றிவிட்டேன் ஐயா... --ச.பிரபாகரன் (பேச்சு) 09:39, 9 மார்ச் 2014 (UTC)

நன்று

தொகு

மகிழ்ச்சி
தென்+கு=தெற்கு என்பதையும் மாற்றுங்கள்
வாழ்த்துக்கள் --Sengai Podhuvan (பேச்சு) 22:01, 9 மார்ச் 2014 (UTC)

ஐயா, ஓர் உதவி தேவை
  1. நால்+கு=நான்கு
  2. தென்+கு=தெற்கு
  3. கேள்+பு+அது=கேட்பது
ஆகியவற்றிற்கு, வேறு உதாரணங்கள் தெரியவில்லை. உதாரணங்கள் கிடைக்குமா?...--ச.பிரபாகரன் (பேச்சு) 14:14, 10 மார்ச் 2014 (UTC)

இலக்கண நூல்களுக்கு எழுதப்பட்ட உரை நூல்களில் மண்டிக் கிடக்கின்றன.
படியுங்கள். மொழியியலில் தெளிவு பெறுவீர்கள்.

மேலே நீங்கள் குறித்துள்ள மூன்றும் தவறானவை
விளக்கில் பெருகும். --Sengai Podhuvan (பேச்சு) 10:39, 11 மார்ச் 2014 (UTC)
நன்றி ஐயா. தென்+கு=தெற்கு, கேள்+பு+அது=கேட்பது ஆகிய உதாரணங்களை மாற்றிவிட்டேன். நால்+கு=நான்கு என்பதற்கு வேறு உதாரணம் தேடிக்கொண்டு இருக்கிறேன். --ச.பிரபாகரன் (பேச்சு) 15:06, 12 மார்ச் 2014 (UTC)

காட்டு

தொகு
திருத்திக் காட்டியுள்ளேன்
பிறவற்றையும் செய்யுங்கள்
வாழ்த்துக்கள் --Sengai Podhuvan (பேச்சு) 20:44, 12 மார்ச் 2014 (UTC)
நன்றி ஐயா...மாற்றிவிட்டேன்... --ச.பிரபாகரன் (பேச்சு) 06:10, 13 மார்ச் 2014 (UTC)
  • நன்றி
  • பாராட்டுகள்
  • நால்+கு=நான்கு - இதனையும் நீக்குங்கள் --Sengai Podhuvan (பேச்சு) 05:24, 14 மார்ச் 2014 (UTC)
வணக்கம் ஐயா, நால்+கு=நான்கு என்ற உதாரணத்தை நீக்கிவிட்டேன். அதற்கு பதிலாக நல்+கொடை=நன்கொடை எனும் உதாரணத்தைச் சேர்த்துள்ளேன். --ச.பிரபாகரன் (பேச்சு) 06:50, 14 மார்ச் 2014 (UTC)
  • உயிர் முன் உயிர் (உயிரோடு உயிர்) - இதன் கட்டங்களை மட்டும் நிரப்புங்கள். காட்டப்பட்டுள்ளது போல் சிறப்பு-வகையாக வருவனவற்றை மட்டும் சேர்க்கலாம்.

இதனை அடுத்து

  • உயர்திணை முன்
  • விரவுத்திணை முன்

என்னும் பாகுபாகளும்

  • வேற்றுமைப் புணர்ச்சி
  • அல்வழிப் புணர்ச்சி

என்னும் பாகுபாடுகளும் ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொருமொழி, இரண்டிறந்திசைக்கும் தொடர்மொழி என்னும் பாகுபாடுகளும் காட்டப்பெறுதல் வேண்டும். முடிந்தவரையில் செய்யலாம்.

  • தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள் அஃறிணை மேலன மட்டுமே. --Sengai Podhuvan (பேச்சு) 06:19, 14 மார்ச் 2014 (UTC)
வணக்கம் ஐயா, நீங்கள் கூறியதைப் போலவே செய்வோம் ஐயா...--ச.பிரபாகரன் (பேச்சு) 06:52, 15 மார்ச் 2014 (UTC)

பிரபாகரன் தொண்டுக்குப் பாராட்டுகள் --Sengai Podhuvan (பேச்சு) 20:31, 14 மார்ச் 2014 (UTC)

நன்றி ஐயா...--ச.பிரபாகரன் (பேச்சு) 06:58, 15 மார்ச் 2014 (UTC)

புழக்கத்தில் உள்ள தமிழில் எடுத்துக்காட்டுகள் தந்திருப்பது அருமை. --Sengai Podhuvan (பேச்சு) 22:30, 15 மார்ச் 2014 (UTC)

அட்டவணை மாற்றம்

தொகு
  • எடுத்துக்காட்டுகள் அட்டவணையில் குத்துவரிசை 4 மட்டும் உள்ளதால் எழுத்தைப் பெரிதாக்கும்போது மடிந்து காட்டுகிறது.
  • உயிர்முன் உயிர் அட்டவணையில் குத்துவரிசை பலவாக இருப்பதால் எழுத்துக்களை 100 அளவில் பார்க்க இயலவில்லை. சிறிதாக்கிப் பார்க்கவேண்டிய நிலை உள்ளது.
  • இதனை இரண்டு மடியாக மாற்றுங்கள்
  • உயிர்முன் உயிர் 1 (ஊ வரை)
  • உயிர்முன் உயிர் 2 (எ முதல்)

சிறிய எழுத்துக்கள் படிப்பவர்களுக்கு ஏந்தாக இரா. --Sengai Podhuvan (பேச்சு) 21:57, 22 மார்ச் 2014 (UTC)

ஐயா, நீங்கள் கூறிய படி மாற்றிவிட்டேன். --ச.பிரபாகரன் (பேச்சு) 03:59, 23 மார்ச் 2014 (UTC)

அடுத்த பாகுபாடு

தொகு

ஐயா, நீங்கள் கூறியது போலவே அடுத்தது உயர்திணை முன், அஃறிணை முன், விரவுத்திணை முன் எனும் பாகுபாடுகளைச் சேர்க்கலாம் எனவுள்ளேன். --ச.பிரபாகரன் (பேச்சு) 04:08, 23 மார்ச் 2014 (UTC)

அடுத்த - பெயரெச்சம் - ஒற்று மிகாது. திருத்தியுள்ளேன்

Return to "புணர்ச்சி விகாரம்" page.