பேச்சு:புதிய சைபீரியத் தீவுகள்

கட்டுரை பெயர் மாற்றம் தொகு

வணக்கம். தாங்கள் பங்களித்த நவசிபீர்ஸ்க்குத் தீவுகள் என்பது புதிய சைபீரியத் தீவுகள் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:41, 17 நவம்பர் 2019 (UTC)Reply

@Parvathisri: நன்று, சில குழப்பங்கள் உள்ளன. அவற்றைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேங்கைத் திட்டம் முடிந்தபின் வினவுகின்றேன், நன்றி. --Stymyrat (பேச்சு) 08:36, 22 நவம்பர் 2019 (UTC)Reply

தலைப்பு மாற்றம் தொடர்பான வினா தொகு

பின்வரும் பக்கங்களில் எல்லாம் நியூ என்ற சொல்லுக்கு மாற்றாக புது அல்லது புதிய என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.

  • New Zealand – நியூசிலாந்து
  • New Calidonia - நியூ கலிடோனியா
  • New Brunskwick - நியூ பிரன்சுவிக்
  • New Hampshire - நியூ ஹாம்சயர்
  • New Jersey - நியூ செர்சி
  • New Mexico – நியூ மெக்சிகோ
  • New York state - நியூ யோர்க் மாநிலம்
  • Newfoundland (island) - நியூபவுண்ட்லாந்து (தீவு)

மேலும் திசையைச் சுட்டும் சில எடுத்துக்காட்டுகள்

  • North Carolina - வட கரொலைனா
  • North Dakota - வட டகோட்டா
  • South Carolina - தென் கரொலைனா
  • West Virginia - மேற்கு வர்ஜீனியா
  • Northern Territory – வட ஆள்புலம்

ஆனால்

ஏன் இந்த மாறுபட்ட நிலைப்பாடு?

மேலும், இந்தப்பக்கத்திற்கு ஒப்பான பிற பக்கங்களும்

என்றுதான் உள்ளனவே அன்றி புதுசிபீர்சுக், புதுப்பட்டிண மாகாணம், கீழைப் புதுப்பட்டிண மாகாணம் என்று இல்லை.

இவ்வாறிருக்க நவசிபீர்ஸ்க்குத் தீவுகள் என்றிருந்த இப்பக்கத்தின் தலைப்பு புதிய சைபீரியத் தீவுகள் என மாற்றப்பட்டு அதற்கு வழிமாற்றும் அமைக்கப்பட்டதன் காரணம் என்ன என்றும் தெளிவாக்க வேண்டுகிறேன். நன்றி!! --Stymyrat (பேச்சு) 08:13, 19 மே 2020 (UTC)Reply

இதன் உள்ளூர்ப் பெயர் "Новосиби́рские Oстрова" நவசிபீர்சுக்கியே ஓசுத்ரவா. இதனை ஆங்கிலத்திலும், மற்ற மொழிகளிலும் தங்கள் தங்கள் மொழிகளிலேயே மொழிபெயர்த்துத் தலைப்பிட்டுள்ளார்கள். நாமும் தமிழில் புதிய சைபீரியத் தீவுகள் எனத் தலைப்பிடுவதில் தவறில்லை. மேலும், இந்தப் பெயர் (நவசிபீர்சுக்கியே ஓசுத்ரவா) தமிழில் அதிகம் புழங்கிய பெயருமில்லை. கூகுள் தேடுதலில் பாருங்கள். இதனால் நாமே தமிழில் எழுதிப் புழக்கத்திற்கு விடலாம். நீங்கள் மேலே குறிப்பிட்ட பல பெயர்கள் பன்னெடுங்காலமாகத் தமிழில் புழங்கிய சொற்கள். அவற்றை மாற்றுவது இலகுவாக இராது. இவ்வாறான சிறிய தமிழில் அதிகம் அறியப்படாத பெயர்களுக்குத் தமிழில் பெயர் வைத்துப் பரப்புவோம். நன்றி.--Kanags \உரையாடுக 09:36, 19 மே 2020 (UTC)Reply
Return to "புதிய சைபீரியத் தீவுகள்" page.