பேச்சு:புறநானூறு

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan in topic நன்றி
புறநானூறு என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்

தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:56, 14 மே 2007 (UTC)Reply


எட்டுத்தொகை என்பது தொகுக்கப்பட்ட 8 நூல்களைக் குறிக்கும். அவை சங்க காலத்தவை.

1 கடவுள் வாழ்த்துப் பாடல்கள்.

8 தொகுப்புகளுக்கும் 8 கடவுள் வாழ்த்துப் பாடல்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய தொகுப்பு

நூல் - பாடப்பட்டுள்ள கடவுள் - பாடியவர் அகநானூறு - சிவன் - பாரதம் பாடிய பெருந்தேவனார் | ஐங்குறு நூறு - சிவன் - பாரதம் பாடிய பெருந்தேவனார் | கலித்தொகை - சிவன் - நல்லந்துவனார் | குறுந்தொகை - முருகன் - பாரதம் பாடிய பெருந்தேவனார் | நற்றிணை - மாஅல் - பாரதம் பாடிய பெருந்தேவனார் | புறநானூறு - சிவன் - பாரதம் பாடிய பெருந்தேவனார் | பரிபாடல் - மாஅல் - (பாடியவர் பெயர் தெரியவில்லை)| பதிற்றுப்பத்து - சிவன் - (பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை,தம் தொகுப்பு 'சங்க இலக்கியம்' பதிப்பில் இதனைக் கடவுள் வாழ்த்துப் பாடலாகக் காட்டியுள்ளார். 1920 வே. சாமிநாதையர் பதிப்பில் இப்பாடல் சேர்க்கப்படவில்லை. தொல்காப்பியம் பொருளதிகாரம் நூற்பா 26-ன் உரையில் நச்சினார்க்கினியர் காட்டும் பாடல் பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்துப் பாடலாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுவதாகவும் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2 எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்தவர்கள் பற்றிய தகவல்கள்
அகநானூறு | தொகுத்தவர் - மதுரை உப்பூரிகுடிகிழான் மகனாவான் உருத்திர சன்மன் | தொகுக்கச் செய்தவன் - பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. ஐங்குறு நூறு | தொகுத்தவர் - புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் | தொகுக்கச் செய்தவன் - யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை கலித்தொகை | தொகுத்தவர் - நல்லந்துவனார் | தொகுக்கச் செய்தவன் - புலப்படவில்லை குறுந்தொகை | தொகுத்தவர் - புலப்படவில்லை | தொகுக்கச் செய்தவன் - பூரிக்கோ நற்றிணை | தொகுத்தவர் - புலப்படவில்லை | தொகுக்கச் செய்தவன் - பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி பதிற்றுப்பத்து, பரிபாடல் (பரிபாட்டு), புறநானூறு (புறம், புறப்பாட்டு, புறம்புநானூறு) - ஆகிய மூன்று நூல்களுக்கும் இந்த விவரங்கள் புலப்படவில்லை.
3 எட்டுத்தொகை நூல்கள் - பெயர்க் காரணம்
அகநானூறு (நெடுந்தொகை) | பாடலடிகள் - 13 முதல் 31 | அகத்திணைப் பாடல்கள் 400 கொண்டது நற்றிணை | பாடலடிகள் - 9 முதல் 12 | அகத்திணைப் பாடல்கள் 400 கொண்டது குறுந்தொகை | பாடலடிகள் - 4 முதல் 9 | அகத்திணைப் பாடல்கள் 400 கொண்டது ஐங்குறுநூறு | அகனைந்திணைப் பாடல்கள் 500 கொண்டது | 10 பாடல்களுக்கு ஒரு தலைப்பு, பத்துத் தலைப்புகளில் 100 பாடல்கள் ஒரு திணை, இப்படி 5 திணைக்கும் 500 பாடல்கள் | 5 புலவர் கலித்தொகை | அகத்திணைப் பாடல்கள் 150 கொண்டது. | 5 புலவர்கள் - 5 திணைகள் புறநானூறு | புறத்திணைப் பாடல்கள் 400 கொண்டது | பதிற்றுப்பத்து | 10 சேர வேந்தர்கள் மீது 10 புலவர்கள் ஒவ்வொருவரும் 10 பாட்டுமேனிப் பாடப்பட்ட நூல். முதல் பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கவில்லை பரிபாடல் | 150 பரிபாடல்களைக் கொண்டது இந்தத் தொகுப்புநூல். இவற்றுள் 22 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. டாக்டர் உ. வே. சாமிநாதையர் 1956-ம் ஆண்டுப் பதிப்பில் பரிபாடல் திரட்டு என்னும் தலைப்பில் 11 பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை பிற நூல்களுக்கு எழுதப்பட்ட உரைகளுக்கு இடையே மேற்கோள் பாடல்களாக உள்ளவை. திரட்டு ஊகம். சங்கப் பாடல்களில் இது ஒன்றே இசைத்தமிழ் நூல்.

எண்ணுவோம்

தொகு

'வெட்சி நிரை கவர்தல்' எனத் தொடங்கும் பாடல் சங்கப்பாடலோ, புறப்பொருள் வெண்பாமாலைப் பாடலோ அன்று. எட்டுத்தொகை நூல்களை 'நற்றிணை, நல்ல குறுந்தொகை' எனத் தொடங்கும் பாடல் தொகுத்துக் காட்டுவது போல புறத்திணைகளை விளக்கும் தொகுப்பு வாய்பாட்டுப் பாடல். எனவே கட்டுரை சீர்செய்யப்பட்டுள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 05:52, 8 மார்ச் 2013 (UTC)

நன்றி

தொகு

உன்னிப்பாக எழுத்துப்பிழை திருத்தி உதவியுள்ள செல்வகுருநாதனுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 23:54, 22 சூன் 2013 (UTC)Reply

ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையில் மாற்றங்கள் தேவை

தொகு

சங்க இலக்கியமாம் புறநானூற்றை ஒரு சங்கி இலக்கியம் போல் சித்தரித்து ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரை அமைந்திருக்கிறது. ஆர்வம், துறை அறிவு, ஆங்கில விக்கிப்பீடியா அனுபவம் உள்ளவர்கள் உரிய மேம்படுத்தல்களைச் செய்ய வேண்டுகிறேன் இரவி (பேச்சு) 22:14, 20 செப்டம்பர் 2023 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புறநானூறு&oldid=3794760" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "புறநானூறு" page.