பேச்சு:பெர்ட்ரண்டு ரசல்

பெர்ட்ரண்டு ரசல் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இவரின் படிமம் கிடைத்தால் வெளியிடுங்களேன்.--செல்வம் தமிழ் 04:03, 21 ஜூன் 2009 (UTC)

Ginger, நல்ல அருமையான நெடிய கட்டுரை. பயனுடைய கட்டுரை. உங்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள். பெர்ட்ரண்டு ரசல் என்று இருப்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். ‍ரகரம் நெடிலாக -‍ராண்டு என்று இருப்பது எழுத்துப்பிழையா எனத்தெரியவில்லை.--செல்வா 21:09, 21 ஜூன் 2009 (UTC)

நன்றி செல்வா, இன்னும் சில பகுதிகள் உள்ளன. நான் `ராண்டு` போடுகிறேன். எதுவோ, நாம் ஒருசீராக uniformity வைப்பது நலம். நான் எல்லாவற்றையும் `ரண்டு` விற்கு மாற்றுகிரேன். --Ginger 21:54, 21 ஜூன் 2009 (UTC)
நன்றி. --செல்வா 17:00, 22 ஜூன் 2009 (UTC)

செல்வா, மெடாபிசிக்ஸ் என்பதற்கு மொழி பெயர்பு என்ன? நன்றி--Ginger 22:17, 21 ஜூன் 2009 (UTC)

மெட்டாபிசிக்ஃசுக்கு (metaphysics) மேலறிவியல் எனலாம் என்று நினைக்கிறேன். எல்லா இடத்திலும் இல்லாவிட்டாலும் பல இடங்களில் meta-என்னும் முன்னொட்டு, உயர்-மேல்-மீறிய-மேல்கடந்த என்னும் பொருள்களில் ஆளப்படுகின்றது. மேலறிவியல் அல்லது மேல் மெய்யறிவியல் என்று கூறலாம் எனத் தோன்றுகின்றது.--செல்வா 17:00, 22 ஜூன் 2009 (UTC)

உலக தத்துவ்வியலார்களை பற்றி அறிந்து கொள்ள தாங்கள் செய்கின்ற முயற்சி போற்றுதலுக்குரியது. நன்றி--செல்வம் தமிழ் 20:55, 22 ஜூன் 2009 (UTC)

சிறப்பு கட்டுரை

தொகு

Ginger அருமையான கட்டுரையை இயற்றியுள்ளீர்கள், வாழ்த்துக்கள்:). இந்த கட்டுரையில் உள்ள சிகப்பு இணைப்புகள் சரிசெய்யப்பட்டால் இந்த கட்டுரையை சிறப்பு கட்டுரையாக ஆக்க நான் பரிந்துரைக்கிறேன்.--கார்த்திக் 12:23, 23 ஜூன் 2009 (UTC)

நன்றி கார்திக், உங்கள் ஆய்வுகள் ஆக்கமுறையில் ஆகி, டாக்டர் பட்டம் பெற வாழ்த்துகள்--Ginger 08:38, 25 ஜூன் 2009 (UTC)

இஞ்சியாரே (உங்களை அப்படி அழைக்கலாம்தானே?), சிறந்த பன்முக மேதையைப் பற்றிய தகவல்களைத் தொகுத்து எழுதியதற்கு மிக நன்றி. இதிலுள்ள சில எழுத்துப் பிழைகளைக் களைந்து, உரையைச் சிறிது ஆங்காங்கே திருத்தி விட்டால் மிகச்சிறப்பான கட்டுரையாகிவிடும். -- சுந்தர் \பேச்சு 16:53, 26 ஜூன் 2009 (UTC)

நன்றி அழகரே. எப்படிவேண்டுமானாலும் அழையுங்கள். --Ginger 17:26, 26 ஜூன் 2009 (UTC)
:) -- சுந்தர் \பேச்சு 17:36, 26 ஜூன் 2009 (UTC)

பால்யம்

தொகு

சுந்தர்,அந்த பத்தி இளமையை பற்றியது அல்ல. 13-19 தோராயமாக , ஆங்கிலத்தில் adolescance என்று அழைக்கப் படுவதும் இளமையிலிருந்து கொஞ்சம் வேறுபாடுள்ளது. அதனால் youth என்பதற்கு இளமையும், adolescance க்கு பால்யமும் வைத்திருந்தேன்.adolescance என்பது குழந்தைப்பருவத்தை தாண்டி,இளமைக்கு முன்னால் அந்த வயதுக்கேற்ற குழப்பங்கள், கும்மாளங்களை கொண்டது. --Ginger 17:32, 26 ஜூன் 2009 (UTC)

பால்யம் என்பதை குழந்தைப் பருவம் என்ற பொருளில் ஆண்டிருந்தீர்கள் என நினைத்தேன். Adolescence என்பதை விடலைப் பருவம் என மாற்றி விடலாமா? -- சுந்தர் \பேச்சு 17:35, 26 ஜூன் 2009 (UTC)
பேரகராதியில் விடலை இதைப்போல பொருள் இருக்கு

விடலை viṭalai : (page 3656)

விடலை² viṭalai , n. prob. vṛṣa. 1. Youth from 16 to 30; பதினாறு முதல் முப்பதாண்டு வரை யுள்ள பிராயத்தான். (பன்னிருபா. 232.) 2. Strong, powerful man;

பெரும்பான்மையினர் 20/23 வயது மேல் Adolescence அக இருப்பதில்லை.

வேறு எந்த தகுதியான சொல் - அகராதி, இலக்கியங்களில் கிடைக்காவிட்டால், பால்யத்தை பயன்படுத்தலாம்--Ginger 17:47, 26 ஜூன் 2009 (UTC)

அல்லது குமரப்பருவம்=Adolescence எப்படி இருக்கு?--Ginger 17:55, 26 ஜூன் 2009 (UTC)


குழந்தைப் பருவமும் இளமைப் பருவமும் என்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். விடலைப் பருவம், காளைப்பருவம் என்பன ஆண்களுக்குப் பொருந்தும். பேரகராதி குறிப்பிடுவது, காளை= விடை என்பது வ்ரச^பம் (vṛṣa) என்பதாகி விடலை ஆகியிருக்குமோ எனக் கருத்து தெரிவிக்கின்றது. விடை, விடலை என்பன vṛṣa என்பதில் இருந்து வந்தவை அல்ல. குழந்தைப் பருவமும் குமரப்பருவமும் என்றும் எழுதலாம். --செல்வா 21:45, 26 ஜூன் 2009 (UTC)

குழந்தைப் பருவமும் குமரப்பருவமும் என மாற்றிவிடுகிறேன். குமரப்பருவம், இளமைப்பருவம், இதெலெல்லாம் பயன்பாட்டிலேயோ, உண்மையிலேயோ வெட்டு ஒன்று, துண்டு இரண்டு வேறுபாடுகள் இல்லை. ஆனால், படிக்கிரவர்கள், `இளமை` என்றால் ஒரு 22 வயது நபரையும், குமரன் என்றால் ஒரு 15-16 வயது நபரையும் மனப்படம் பிடிப்பார்கள் என்ற நம்பிக்கைதான்--Ginger 22:32, 26 ஜூன் 2009 (UTC)
அப்படியே செய்து விடுங்கள். நன்றி.--செல்வா 02:42, 27 ஜூன் 2009 (UTC)

ஐயங்கள்

தொகு

வெளீணைப்புகள் பகுதியில்: war and non resistance - ””போரும் எருமையின்மையும்””????? புரியவில்லை. விளக்குங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெர்ட்ரண்டு_ரசல்&oldid=1182067" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பெர்ட்ரண்டு ரசல்" page.