மகிந்த ராஜபக்க்ஷ என்ற தலைப்பில் ஏற்கெனவே ஒரு கட்டுரை உள்ளது. எனினும் இதன் உள்ளடக்கம் இப்பொழுது காலம் கடந்ததாகிவிட்டதால். பழைய கட்டுரையை நீக்கிவிடலாம் என்பது எனது கருத்து. Mayooranathan 18:12, 19 நவம்பர் 2005 (UTC)Reply

நீங்கள் குறிப்பிட்டுள்ள பக்கத்தை நீக்காமல் இங்கு வழிமாற்றி உள்ளேன்--ரவி ([[User talk:Ravidreams|பேச்சு)]] 18:49, 19 நவம்பர் 2005 (UTC)Reply

பலஸ்தீனுடனான ஒருமைப்பாட்டிற்கான இலங்கை சபையின் தலைவர். தொகு

இலங்கைப்பிரச்சினையையே தீர்க்காமல் எரிகிற நெருப்பில் எண்ணை வார்ப்பது போன்று செயற்படும் இவரெல்லாம் பலஸ்தீனுடனான ஒருமைப்பாட்டிற்கான இலங்கை சபையின் தலைவராக இருப்பது அவசியம் தானா?. மிக எழிதாகத் தொலைபேசியூடாகத் தீர்ப்பட்டிருக்ககூடிய மாவிலாறுப்பிரச்சினையை பெரிதாக்கி திருகோணமலையை ஓர் யுத்தபூமியாக்கிக் கொண்டிருக்கின்றார். மகிந்தவின் சிந்தனைகள் என்று கூறிக்கொண்டிருந்தால் மாத்திரம் போதாது செயற்திறன் வேண்டும். --Umapathy 18:08, 3 ஆகஸ்ட் 2006 (UTC)

உமாபதி, கட்டுரை உள்ளடக்கங்களைப் பற்றிய கருத்துக்களை இங்கு பகிர்வது மட்டும் தானே பொருத்தமாக இருக்கும். உங்கள் கருத்து சரியாகவே இருப்பினும், பேச்சுப் பக்கத்தில் பகிர்வது அவசியம் என்று நினைக்கிறீர்களா? வேண்டுமானால், நடுநிலை தவறாத விமர்சனக் கருத்துக்களை கட்டுரையில் சேர்க்கலாமே? நன்றி--ரவி 22:20, 3 ஆகஸ்ட் 2006 (UTC)
ரவி தங்கள்ஆலோசனைக் கேற்ப மாற்றப்பட்டுள்ளது. கீழ் வரும் விடயங்கள் தொடர்பாக இலங்கை அதிபர் விளக்கமளிக்கவேண்டும்.
  • இலங்கையில் தற்போது வவுனியாவிற்கு நகரத்தின் வடக்கே ஓமந்தைக்கு வடக்கே இருக்கும் பொருளாதாரத் தடை. இப்பகுதிமக்களில் ஆபிரிக்காவைவிடக் மோசமான நிலையிலுள்ளார்கள். யாழ்ப்பாணம் தவிர்ந்த அநேகமான பகுதிகளில் (கிளிநொச்சி, முல்லைத்தீவு) மின்சாரம் எனபது அரிதாகவே கிடைக்கின்றது. இவ்வாறிருக்கும் போது அவர்கள் பாவிக்கும் பெற்றோல், டீசல், ஏன் மண்ணெண்ணைய்க்குக் (கெரஸின்) கூட மிகக் குறைந்த அளவியே அநுமதிக்கப்படுகின்றது. இப்பகுதிகளில் தொலைத் தொடர்பு என்பதும் அரிதாகவேயுள்ளது.
  • திருகோணமலை மாவிலாறு விடயம் தொலைபேசியூடாகத் தீர்த்துவைக்கக்கூடிய ஓர் எளிதான விடயத்தை எதற்காப் பெரிதுபடுத்தி அரசியல் இலாபம் தேடுகின்றீர்கள்?. மக்கள் தொடர்ச்சியான யுத்ததால் துயரத்தை அநுபவிக்கின்றார்கள் இப்பகுதியில் தொடர்சியாகத் தாக்குதல்கள் இடம்பெறுவதால் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித நேய அமைப்புக்கள் போகவியலாமல் இருக்கின்றனர்.
  • மூதூர்ப்பகுதியில் தொலைத் தொடர்பைத் துண்டித்ததானது மனித நேயமற்ற செயல். துயருற்றிருக்கும் மக்கள் தமது உறவினருடன் உரையாடவே தொலைபேசிகள் பயன்படுகின்றது. தவிரக் காயப் பட்டிருப்பவர்களை அறிவிப்பதற்கும் இவ்வூடகத்தைப் பாவித்தனர்.

--Umapathy 00:55, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

உமாபதி, என் கருத்தை தெளிவாக சொல்லவில்லை என நினைக்கிறேன். தற்போதுள்ள நிலையில், கட்டுரையின் நடுநிலைமையில் எந்த பாதகமுமில்லை. அதனல், pov check வார்ப்புரு இட அவசியமில்லை. ஆனால், நீங்கள் பேச்சுப் பக்கத்தில் பதித்துள்ள கேள்விகள், கருத்துகள் தற்பொழுது இங்கு இடம்பெறத்தக்கன அல்ல. ஏற்கனவே இக்கருத்துக்கள் கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் பட்சத்தில் அது சரியா தவறா என பேச்சுப் பக்கத்தில் உரையாடலாமே தவிர, நேரடியாக இக்கருத்துக்களை பேச்சுப் பக்கத்தில் பதிப்பது, என் கருத்தில், பயனற்றதும் பிழையானதும் ஆகும். ஏனெனில் இப்பக்கத்ததில் விடுக்கப்படும் கேள்விகள் உரிய நபரின் கவனத்துக்கு செல்லப் போவதுமில்லை. அவர் மறுமொழி அளிக்கப் போவதுமில்லை. இது போன்ற உரையாடல்கள், கேள்விகளை எழுப்ப வலைப்பதிவுகள் தான் சரியான இடம் என்பது என் கருத்து. மற்றபடி நீங்கள் எழுப்பியுள்ள கேள்விகளின் நியாயத்துடன் உடன்படுகிறேன். கட்டுரையில் மகிந்தவின் செயல்பாடுகள் என்று ஒரு துணைத்தலைப்பை உருவாக்கி அதில் அவரது செயல்பாடுகளையும் அதற்கு பொது மக்கள், ஊடகங்களிடையே எழுந்துள்ள எதிர்வினைகளையும் எழுதுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கும்.--ரவி 07:27, 4 ஆகஸ்ட் 2006 (UTC)


அக்சன் பாம் தொகு

வழக்கு முடியும் வரை சேர்க்காதிருத்தல் நலம்:

--டெரன்ஸ் \பேச்சு 14:36, 16 நவம்பர் 2006 (UTC)Reply

டெரன்ஸ், வறுமைக்கு எதிரான அமைப்புப் பணியாளர்கள் அதிகாரப்பூர்வ உடையிலேயே அலுவலகத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் நான் 15பேரே கொல்லபட்டதாக அறிந்தேன் பின்னர் தப்பிய இருவர் தகவல்கள் கொடுத்துவிடலாம் என்பதற்காக தேடிக் கொல்லப்பட்டுள்ளதாக அறிகின்றேன். இவ்வமைப்பில் பணிபுரிந்த எனது அலுவலக ஊழியர் ஒருவரின் மகனும் கொல்லப்பட்டுள்ளார். இது வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளது. உலைவாயை மூடினாலும் ஊர்வாயை மூடமுடியாது. நீதிமன்றம் 10-12 வருடங்களின் பின்னர் தீர்பளிக்கலாம் தீர்பளிக்காமலும் போகலாம். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை எல்லாருமே நன்கு அறிவார்கள். நீதிமன்ற விசாரணைகள் திருகோணமலையில் இருந்து அனுராதபுரத்திற்கு விசாரணைகளை மாற்றியுள்னர். திருகோணமலையில் இருந்து சாட்சியளிப்பதற்காக ஐந்தாறு இராணுவச் சோதனைச்சாவடிகளில் இறங்கி ஏறி ஏகப்பட்ட சிரமங்களுக்கு மத்தியில் அனுராதபுரம் வந்து யாரும் சாட்சியளிக்கப்போவதில்லை. இதிலேயே சாட்சிகள் வரக்கூடாது என்ற உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகின்றது. அனுராதபுரத்தில் விசாரிக்கமுடியும் என்றால் ஏன் திருகோணமலையில் விசாரிக்க முடியாது? மூதூர் சம்பவத்தில் இறந்தவர்கள் ஒரு மூதூரைச் சேர்ந்தவர் தவிர ஏனையவர்கள் திருகோணமலை நகரையே வதிவிடமாகக் கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.--Umapathy 15:14, 16 நவம்பர் 2006 (UTC)Reply

6ஆவது அதிபர் தொகு

கட்டுரையில் மகிந்த இலங்கையின் ஐந்தாவது அதிபராகக் குறிப்பிடப்பட்டுள்ளது ஆங்கில விக்கிபீடியாவில் ஆறாவது அதிபராகக் குறிப்பிடப்பட்டுள்ளது அதுவே சரியென நினைக்கின்றேன். தவறேனில் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடவும்.--Umapathy 15:32, 16 நவம்பர் 2006 (UTC)Reply

பாராளுமன்ற உறுப்பினர் தொகு

பாராளுமன்ற உறுப்பினர் பற்றிய தகவல் உள்ளடக்க வேண்டும்.-- மாதவன்  ( பேச்சு ) 10:08, 31 சனவரி 2016 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மகிந்த_ராசபக்ச&oldid=2014803" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மகிந்த ராசபக்ச" page.