பேச்சு:மலாயா
மலாயா (Malaya) என்பது தென்கிழக்காசியா உள்ள மலாய் தீபகற்பம் தொடர்பான பல்வேறு வரலாற்று மற்றும் தற்போதைய அரசியல் பிராந்தியங்களைக் குறிக்கின்றன. மலாயா பற்றி விக்கியில் உள்ள (அல்லது எழுதப்பட வேண்டிய) கட்டுரைகள்:
- பிரித்தானிய மலாயா (en:British Malaya (18-ஆம் நூற்றாண்டு – 1957)
- மலாயா ஒன்றியம் (en:Malayan Union (1946–1948)
- மலாயா கூட்டமைப்பு (1948–1963)
- தீபகற்ப மலேசியா அல்லது மேற்கு மலேசியா (மலாயா மாநிலங்கள் 1963–இன்று) - இவை முன்னாள் மலாயா கூட்டமைப்பின் மாநிலங்களும் மண்டலங்களும்
@Ksmuthukrishnan: வணக்கம், மலாயா என்ற இக்கட்டுரை இவற்றில் எதைப் பற்றியது? இதனை மலாயா கூட்டமைப்புடன் இணைக்கலாமா?--Kanags \உரையாடுக 04:42, 23 மே 2021 (UTC)
@Kanags: வணக்கம் சகோதரரே. மலாயா கட்டுரை 10 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப் பட்டது. மலாயா எனும் பெயரில் ஒரு கட்டுரை தேவை என்பதற்காக, ஆங்கில விக்கிப்பீடியாவைச் சார்ந்து மலாயா கட்டுரை தயாரிக்கப் பட்டது.
ஆங்கில விக்கிப்பீடியாவில் மலாயா கட்டுரையை இப்போது 4 பிரிவுகளாகப் பிரித்து விட்டார்கள். என்ன செய்யலாம்? அப்படியே விட்டு விடவும் முடியாது.
தற்சமயத்திற்கு மலாயா கட்டுரையை, மலாயா கூட்டமைப்பில் சேர்க்கலாம். பின்னர் நேரம் கிடைக்கும் போது ஆங்கில விக்கிப்பீடியாவைப் போல 4 தனித்தனிக் கட்டுரைகளாகத் தயாரித்து விடுகிறேன். நன்றிங்க.--மலாக்கா முத்துக்கிருஷ்ணன் \பேச்சு--ksmuthukrishnan 08:53, 23 மே 2021 (UTC)