பேச்சு:மலேசிய சுகாதார அமைச்சு

Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by ஞா. ஸ்ரீதர்

சுகாதார அமைச்சகம் (மலேசியா) என மாற்றவும்ஸ்ரீ (talk) 15:17, 2 சூன் 2019 (UTC)Reply

--MarthandanYathamaniam (பேச்சு) 13:41, 12 சூன் 2019 (UTC)இதன் பெயரை மாற்றுவதில் எனக்கு எந்த தடையும் இல்லை. பொதுவாக மலேசிய ஊடகங்களில் மலேசியச் சுகாதார அமைச்சு எனவே இவ்வமைச்சை அழைப்பர். இருந்த போதும், விக்கிப்பீடியாவிற்கு பொருத்தமான தலைப்பாக மாற்றுவதில் தவறு ஏதும் இல்லை.Reply

@MarthandanYathamaniam: இங்கு அமைச்சர் என இருந்தது எனவே இதனை அமைச்சகம் என மாற்ற நினைத்தேன். //பொதுவாக மலேசிய ஊடகங்களில் மலேசியச் சுகாதார அமைச்சு எனவே இவ்வமைச்சை அழைப்பர்// ஆனால் அமைச்சகம் என்ற சொல்லே பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறதே நண்பரே. காண்க பகுப்பு:இந்திய அமைச்சகம் நன்றிஸ்ரீ (talk) 14:28, 12 சூன் 2019 (UTC)Reply

@Gowtham Sampath: உதவவும் நன்றி.ஸ்ரீ (talk) 14:28, 12 சூன் 2019 (UTC)Reply
சுகாதார அமைச்சகம் (மலேசியா) என்பதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன். //பொதுவாக மலேசிய ஊடகங்களில் மலேசியச் சுகாதார அமைச்சு எனவே இவ்வமைச்சை அழைப்பார்கள்// என்றால் இந்த பெயரை வழிமாற்றாக வைக்கலாம். தமிழ்நாட்டில் பொதுவாக அமைச்சு என்பதை விட அமைச்சகம் என்றே பரவலாக அறியப்படுகிறது. அதனால் சுகாதார அமைச்சகம் (மலேசியா) பெயரையே முக்கிய தலைப்பாக வைக்கலாம். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:42, 12 சூன் 2019 (UTC)Reply

நன்றி :@Gowtham Sampath: அந்தப் பயனரின் கருத்தினைக் கேட்டபின்பு நாம் முடிவெடுப்பது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். நன்றி ஸ்ரீ (talk) 14:47, 12 சூன் 2019 (UTC)Reply

இல்லை. தலைப்பை மாற்ற வேண்டாம். இலங்கையிலும் சுகாதார அமைச்சு என்றே பயன்படுத்தப்படுகிறது. மலேசியாவிலும் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. இந்திய வழக்கைப் பின்பற்றித் தலைப்பிட முடியாது. மலேசியா என்பது தமிழர்கள் வாழும் மற்றுமொரு நாடு. அங்குள்ள வழக்கப்படியே அங்குள்ள தலைப்புக்கள் இடப்பட்டாக வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 16:03, 12 சூன் 2019 (UTC)Reply
அமைச்சு (Ministry), அமைச்சகம் (Ministerial building) என்றே பொருள். அஃதாவது அமைச்சகம் என்றால் அமைச்சு அமைந்துள்ள கட்டிடம் என்று பொருள்.--பாஹிம் (பேச்சு) 16:05, 12 சூன் 2019 (UTC)Reply
@Fahimrazick: இலங்கைக்கும், மலேசியாவில் உள்ள தமிழர்களுக்கு அமைச்சு என்பது சரி, அப்ப இந்தியாவில் உள்ள தமிழர்கள் இது அமைச்சகத்தை தான் குறிக்கிறது என்று எப்படி புரிந்துக் கொள்வார்கள். தமிழகத்தில் அமைச்சு என்னும் வார்த்தை திருக்குறளில் மட்டுமே பயன்படுகிறதே தவிற, வேற எதற்கும் பயன்படுத்துவதில்லை என்பதை நினைவில் கொள்க.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:32, 12 சூன் 2019 (UTC)Reply
அப்படியானால் இலங்கையிலுள்ளவர்களும் மலேசியாவிலுள்ளவர்களும் நீங்கள் கூறுவது அமைச்சுக் கட்டிடத்தைக் குறிப்பதாக விளங்கிக் கொண்டாக வேண்டுமா?--பாஹிம் (பேச்சு) 04:29, 13 சூன் 2019 (UTC)Reply

இங்கு அகம் என்பது இடவாகு பெயர். அமைச்சகம் என்றால் அமைச்சு இருக்குமிடம் என்றுதான் விளங்கிக் கொண்டாக வேண்டும். அதுதான் தமிழ்.--பாஹிம் (பேச்சு) 04:30, 13 சூன் 2019 (UTC)Reply

தமிழகத்திலும் அமைச்சு என்பது பயன்பாட்டிலுள்ளதே. பார்க்க 1, 2, 3, 4, 5. இவை திருக்குறளிலிருந்து பெறப்படவில்லை.--பாஹிம் (பேச்சு) 04:36, 13 சூன் 2019 (UTC)Reply
@Fahimrazick: தமிழகத்தில் அமைச்சு என்றால் எதைக் குறிக்கிறது என காண்க --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 04:53, 13 சூன் 2019 (UTC)Reply

நீங்கள் வழங்கிய தொடுப்பில் Ministry என்பதற்கு விளக்கமான பொருள் தரப்பட்டிருக்கிறது.--பாஹிம் (பேச்சு) 05:33, 13 சூன் 2019 (UTC)Reply

அமைச்சு என்றால் பணி செய்தல், உதவியாயிருத்தல், கொடுத்துதவுதல் என்று பொருள். அதாவது இது வேலைசெய்பவர்களை குறிக்கிறதே தவிற அமைச்சரையோ அல்லது அமைச்சகத்தையோ குறிக்கவில்லை.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 05:49, 13 சூன் 2019 (UTC)Reply

அது வேலை செய்பவர்களைக் குறிக்கவில்லை. செய்யப்படும் வேலையைக் குறிக்கிறது. வேலை செய்பவர்கள் ஆட்கள். அவர்கள் Ministry என்ற வரையறைக்குள் வர மாட்டார்கள். செய்யப்படும் வேலையே Ministry - அமைச்சு எனப்படுகிறது. சரியாகப் பொருளுணர்ந்து கூறுவது நல்லது.--பாஹிம் (பேச்சு) 06:51, 13 சூன் 2019 (UTC)Reply

Ministry என்றால் என்ன? அமைச்சுக் கட்டிடமா?--பாஹிம் (பேச்சு) 06:49, 13 சூன் 2019 (UTC)Reply
அமைச்சு என்பதே சரியான பெயர். அமைச்சகத்திற்கு வழிமாற்று தரலாம். மலேசியாவில் அவ்வாறுதான் தமிழில் அழைக்கப்படுகிறதென்றால் அவ்வாறே இருக்க வேண்டும். அமைச்சகம் என்றல் அமைச்சு அலுவலகத்தைக் குறிக்கும்.--Kanags \உரையாடுக 07:39, 13 சூன் 2019 (UTC)Reply
அப்படியென்றால் இக்கட்டுரையில் உள்ள அமைச்சகம் என்பதை நீக்கிவிட்டு, அமைச்சு என்று மாற்றம் செய்து விடலாம்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 08:11, 13 சூன் 2019 (UTC)Reply
தமிழகத்தில் அமைச்சை அமைச்சகம் என்று தான் அழைக்கிறார்கள் என்றால் அக்கட்டுரையில் அப்படியே இருக்கட்டும். ஏன் மாற்ற வேண்டும்?--Kanags \உரையாடுக 08:42, 13 சூன் 2019 (UTC)Reply
அண்ணா, நான் சொல்வது,
  • சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (இந்தியா)
  • சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (மலேசியா)
  • சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (இலங்கை)
  • சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (இங்கிலாந்து)

என பொதுவாக, ஒரே கோர்வையாக தலைப்பை இடலாம் என்று தான் சொல்லுகிறேன். அந்தந்த நாட்டிற்கு தகுந்தார் போல் இத்துறைகளை எப்படி அழைக்கிறார்களோ, அந்த பெயரில் ஒரு வழிமாற்றும் மற்றும் கட்டுரைகளில் இதைப் பற்றி சிறிய விளக்கமும் தரலாம் என்று தான் சொல்கிறேன்.

உதாரணமாக: சுகாதார அமைச்சகம் (மலேசியா) (மலேசிய சுகாதார அமைச்சு என்று மலேசியாவில் அறியப்படுகிறது) மலேசியாவில் சுகாதார திட்டங்களை செயல்படுத்தும் அரசாங்க அமைச்சகம் ஆகும்.

இதுபோல அந்தந்த நாட்டிற்கு தகுந்தாற் போல் மாற்றிக்கொள்ளலாம்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 09:25, 13 சூன் 2019 (UTC)Reply

தவறு, அவ்வாறு தலைப்பிடுவது அந்தந்த நாடுகளின் பெயர்களில் நாம் தலையிடுவது போல் ஆகும். மலேசியாவில் Ministry of Health மட்டும் தான் உள்ளது. குடும்ப நலத்துறை அதில் இல்லை. அந்தநத நாடுகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறதோ அவ்வாறே தலைப்பிட வேண்டும். தமிழர்களல்லாத ஒரு நாட்டில் (உ+ம்: கியூபாவில் உள்ள சுகாதார அமைச்சுக்கு சுகாதார அமைச்சகம் என ஒருவர் கட்டுரை எழுதத் தொடங்கினால் அதனை நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் தமிழர் அதிகம் புழங்கும் ஒரு நாட்டில் அங்கு எவ்வாறு தமிழில் புழங்குகிறதோ அவ்வாறே எழுதப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 09:32, 13 சூன் 2019 (UTC)Reply
சரி அண்ணா, பிறகு உங்கள் விருப்பம். நன்றி.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:43, 13 சூன் 2019 (UTC)Reply

--MarthandanYathamaniam (பேச்சு) 11:27, 13 சூன் 2019 (UTC)இங்கே சில ஊடகங்களில் சுகாதார அமைச்சு என குறிப்பிட்டுள்ள சான்றுகளை சேர்த்துள்ளேன்.Reply

(MREM), M. (2019). ஹேப்படைடிஸ் சி நோயைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சையளித்தல் ஆகியவற்றை மேம்படுத்தும் பொதுநல சுகாதார முயற்சியில் மலேசியா முன்னணி வகிக்கின்றது. Retrieved from http://mrem.bernama.com/viewsm.php?idm=32427

2020 இல் வலியில்லா சிகிச்சை கொள்கை - சுகாதார அமைச்சு இலக்கு ⋆ The Malaysian Times. (2019). Retrieved from http://www.themalaysiantimes.com.my/2020-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95/#

சிங்கப்பூரிலும் சுகாதார அமைச்சு எனவே அழைக்கின்றனர். அதனை கீழே கனவும் சுகாதார அமைச்சு: உயிர்க்கொல்லிக் கிருமியால் 11 பேர் பாதிக்கப்பட்டனர். (2019). Retrieved from https://www.tamilmurasu.com.sg/singapore/story20190410-26777.html

சீனப் புத்தாண்டு விடுமுறை - 1,000க்கும் அதிகமான தனியார் மருந்தகங்கள் திறந்திருக்கும்: சுகாதார அமைச்சு - TamilSeithi News & Current Affairs. (2019). Retrieved from https://seithi.mediacorp.sg/mobilet/singapore/cny-holiday-gps-open/4232554.html


@Gowtham Sampath, Kanags, and Fahimrazick: தங்களது கருத்துகளுக்கு நன்றிகள். எனது சந்தேகங்களைத் தீர்த்தால் எதிர்வரும் காலங்களில் பயன்படும்.
  • மலேசியாவிலும் இலங்கையிலும் அமைச்சு என்று அழைக்கப்படுகிறது எனில் பகுப்பு:இந்திய அமைச்சகம் என்பதனை இந்திய அமைச்சு என மாற்றலாமா?
  • இந்தியாவில் அதன் பெயர் அமைச்சகம் , மலேசியாவில் அது அமைச்சு என அழைக்கப்படுகிறது என கட்டுரைகளில் மாற்றங்கள் செய்யலாமா?
  • மலேசிய அமைச்சகம் என ஒரு வழிமாற்று உருவாக்குவதில் என்ன தவறு?
  • மலேசியா, இலங்கையில் அமைச்சு அல்லது அமைச்சகம் இதில் எது அதிகாரப்பூர்வ சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது? (அரசாணைகளில் பயன்படுத்தப்படுவது)
  • அங்கு அது பயன்படுத்தப்படுவதால் இந்தியாவிலும் (அமைச்சகம் என்று பயன்படுத்தப்படும் போது) அமைச்சு என்றுதான் பயன்படுத்த வேண்டும் என்பது ஏன்?

நீண்ட நாள் பயனர்களான (அனுபவம் ) தங்களின் பதில் என்போன்றவர்களுக்கு பயன்படும் நன்றி --ஸ்ரீ (talk) 13:33, 13 சூன் 2019 (UTC)Reply

எனது கருத்துக்கள் பின்வருமாறு:

  1. Ministry என்பதற்கு அமைச்சு என்பதே சரியான சொல். அமைச்சகம் என்றால் அமைச்சு இருக்குமிடம், அதன் அலுலகம் என்று பொருள். இங்கு அகம் என்பது இடப்பொருள் தருவது. தமிழகம் என்பது போல. இச்சொல்லுக்கு இப்பொருளே சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி போன்ற தமிழகத்திலிருந்து வெளிவரும் அகரமுதலிகளில் வழங்கப்பட்டுள்ளது.
  2. சரியோ பிழையோ அந்தந்த நாடுகளின் தலைப்புக்கள் அவ்வந்நாடுகளில் புழக்கத்தில் உள்ளவாறே தலைப்பிடப்பட வேண்டும். அது தமிழுக்குப் பிழையாக இருந்தால் அல்லது மக்களுக்குக் குழப்பம் தருமாக இருந்தால் தேவைக்கேற்றவாறு வழிமாற்றுக்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
  3. இந்தியாவில் உள்ள நடையை மற்ற நாடுகள் பின்பற்ற வேண்டிய எந்தக் கடப்பாடும் கிடையாது. மற்ற நாடுகளின் நடையை இந்தியர்கள் பின்பற்ற வேண்டுமென்றும் கிடையாது. ஆனாலும், தமிழுக்கு எது சரியானதோ அதையே முன்னிலைப்படுத்தியாக வேண்டும். பயன்படுத்தப்படும் சொல் எதுவென்றும் தெரிய வேண்டும், அதே நேரம் தமிழுக்கு எது சரியென்றும் தெரிய வேண்டும்.
  4. இலங்கையில் உத்தியோகபூர்வமாக அமைச்சு என்றே பயன்படுத்தப்படுகிறது. மலேசியாவில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியல்ல. சிங்கப்பூரில் உத்தியோகபூர்வ மொழி.

மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தெரிவியுங்கள்.--பாஹிம் (பேச்சு) 13:42, 13 சூன் 2019 (UTC)Reply

நன்றி @Fahimrazick: நாங்கள் (நானும் , கௌதமும்) அமைச்சு என்பதை பயன்படுத்தவே கூடாது என நினைக்கவில்லை. ஆனால் அமைச்சகம் என்று ஒரு வழிமாற்று இருந்தால் பரவலாக அறியப்படும் எனும் நோக்கில் கூறினோம். //தமிழுக்கு எது சரியானதோ அதையே முன்னிலைப்படுத்தியாக வேண்டும். பயன்படுத்தப்படும் சொல் எதுவென்றும் தெரிய வேண்டும், அதே நேரம் தமிழுக்கு எது சரியென்றும் தெரிய வேண்டும்.//

இந்தக் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உள்ளது. ஆனால் வழிமாற்று என்பது தமிழைச் சிதைக்காது என்பது எனது கருத்து. நன்றிஸ்ரீ (talk) 13:57, 13 சூன் 2019 (UTC)Reply

Return to "மலேசிய சுகாதார அமைச்சு" page.